2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38
காவ்யாவும், ஜெய்யும் ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தை பதிவு செய்ய.. சாட்சி கையெழுத்தாக ஆதர்ஷ் நண்பர்கள் ஜெய்க்கு இருவரும்.. காவ்யாவுக்கு இருவரும் கையெழுத்திட்டனர். ஆதர்ஷ் கவனமாக தன்னுடைய கையெழுத்தை தவிர்த்தான். ரிஜிஸ்டர் ஆபீஸில் உள்ளே போகாமல் வெளியே நின்று கொண்டான் ….
பின் அனைவரும் வழக்கமாக அவர்கள் சந்திக்கும் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட கிளம்பினர் ..”ஒரு வழியாக கல்யாணம் முடிஞ்சுருச்சு நிம்மதிதான்” என்றான் ஆதர்ஷின் நண்பன் திவாகர் ..
“இல்ல திவா நம்ம இப்போதைக்கு எதுவுமே பெருமூச்சு விட முடியாது ..இவங்க ரெண்டு பேரையும் பிளைட் ஏத்துற வரைக்கும், எந்த இடத்தில வேணாலும் நமக்கு பிரச்சனை வரலாம்.”
” ஆதர்ஷ் ஒவ்வொரு விஷயத்தையும் நீ யோசிச்சு தான் பிளான் பண்ற.. அதனால இதுல சொதப்புறதுக்கு வாய்ப்பு எதுவும் கிடையாதுன்னு நினைக்கிறேன்..”
அவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம்….
மாயா வீட்டில் படுத்தவாறே ‘இந்நேரம் காவ்யா அவள் காதலித்தவனை கல்யாணம் செய்திருப்பாள் ..பாவம் அவள் மனதும் நன்றாகப் புரியுது. ஒரு வருடம் பழகின உறவை விட்டுப் பிரிய முடியாமலும், காதலித்தவனை மறக்க முடியாமலும், திணறிக் கொண்டிருக்கிறாள். அத்தானைப் போல் ஒரு பெருந்தன்மையான மனிதரால் மட்டுமே ஒரு வருடமாக தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல், காவ்யாவையும் விட்டுக் கொடுக்காமல் முடியும் . அத்துடன் அவளுடைய காதலுக்காக இவ்வளவு போராடுகிறார்.
இனி பாவம் அத்தான் வாழ்க்கை என்னாகும்? அவருக்கு இது ஒரு பெரிய தலைகுனிவா ஆயிடும். இதனால இரு குடும்பத்திலும் என்ன பிரளயங்கள் நடக்குமோ? … நினைக்கும் போதே அவளுடைய மனசு குருவிக்குஞ்சாய் பதறியது …காலை சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே ஓட்டி விட்டாள். இப்போது அம்மா திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். சாப்பிட்டுவிட்டு, ரூமுக்கு வந்த போது போன் அடித்தது ..
“அம்மா …மாயா அம்மா சீக்கிரம் வாங்க இங்க …இங்க ஐயாவுக்கும், பெரியம்மாவுக்கு ஒரே சண்டையா இருக்கு. என்னனு தெரியல. ஆதர்ஷ் ஐயாவுக்கு போன் பண்ணா அவர் போனை எடுக்க மாட்டேங்கறாரு” என்று பதறினாள் பார்வதி. “ஐயா கோபத்துல சாமான்களையெல்லாம் எடுத்து உடைக்கிறார். எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா..”
என்ன ஆச்சு மாமாவுக்கு இவங்க விஷயம் தெரிஞ்சிருக்குமோ? தெரிய வாய்ப்பில்ல அதுக்காகவே நான் அங்க போகல ..நிச்சயம் வேறு ஏதாவது விஷயமாக இருக்கும்.. போவோமா வேண்டாமா என்று ஒரு கணம் தடுமாறினாள். சரி போய்த் தான் பார்ப்போம். அம்மாவிடம் சொன்னால் பயப்படுவாள் ..அதனால் சொல்லாமல் கிளம்பினாள் அத்தை வீட்டுக்கு ..
############
ரிஜிஸ்டர் ஆபிஸில் காவ்யாவும், ஜெய்யும் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு, வெளியே போன பிறகு ரிஜிஸ்ட்ரார்கு சட்டென்று நினைவு வந்தது. ‘இது பரமேஸ்வரன் ஐயா மருமகள் தானே’ என்று. எதற்கும் உறுதிப்படுத்திக் கொள்ள தன் மகனை போனில் அழைத்தார் ..
“என்னப்பா எந்த நேரம்?”
“நான் ஒரு போட்டோ வாட்ஸ் அப்பில் உன் நம்பருக்கு அனுப்பியிருக்கிறேன். அது யாருன்னு பார்த்து எனக்கு உடனே போன் பண்ணு” என்று சொன்னார்.
“அப்பா எதுக்கு இவ்வளவு பதட்டமாக பேசுகிறார்..” என்று யோசித்தவாறே ..அந்த போட்டோவை பார்த்தவன் அதிர்ச்சியானான். மணக்கோலத்தில் இருந்தது காவ்யா ..உடனே தன் அப்பாவிற்கு போன் பண்ணினான் சதீஷ் ..ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸிலிருந்து.
“அப்பா இது பரமேஸ்வரன் அய்யாவுடைய மருமக.. சின்னவர் ஆதர்ஷ் வைஃப் …இவங்க எப்படி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டு ரிஜிஸ்டர் பண்ணினாங்க. இது எப்ப நடந்தது? ஐயாவுக்கு தெரியுமா? விஷயம் கன்ஃபார்ம் தானா?” படபடப்போடு பேசினான் சதீஷ்.
“அட ஆமாம்பா…இவங்க யாருன்னு எனக்கு நினைவுக்கு வரல. வந்திருந்தா உடனே உனக்கு கண்டிப்பா அப்பவே போன் பண்ணியிருப்பேன். இவங்க இப்பதான் ஒரு அரைமணி நேரம் இருக்கும் மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணிட்டு போயிட்டாங்க. கூட நாலஞ்சு பையன்களும் வந்திருந்தாங்க. ரெண்டு மூணு பொண்ணுங்க இருந்தாங்க.”
“ஆதர்ஷ் சாருக்கு இது தெரியுமாப்பா?”
“அவரை நான் பாக்கல தம்பி.. அவர் வந்த மாதிரி தெரியல ..உள்ளே வந்த பையன்கள் எல்லாம் இதுவரை பார்க்காத பையன்கள் தான். அவருக்குத் தெரியாமத் தான் இது நடந்திருக்கும் “
“சரிப்பா நீங்க போன வைங்க.. இந்த விஷயத்தை அய்யாகிட்ட சொல்லனும்” உடனே பரமேஸ்வரனுக்கு சதீஷ் போன் பண்ணினான்.
“ஐயா.. ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு…”
“என்ன சதீஷ்.. ஏதாவது பிரச்சனை இல்லையா.. பிராப்ளம் இருத்தா ஆதர்ஷ் தான் இருப்பானே.. அவனை கூப்பிட்டு கேளு” என்றார் எரிச்சலோடு.
“இல்லைய்யா இத எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியல. நம்ம சின்ன மேடம் இருக்காங்களே” என்று இழுத்தான் சதீஷ். அவனுக்கு எப்படி சொல்ல என்று வாய் வரவில்லை ..
“சீக்கிரம் சொல்லு சதீஷ்! அவளுக்கு என்ன?” ஏதாவது ஆக்ஸிடென்ட் ஆகி இருக்குமா? என்று அவர் மனம் பதறியது.
“அம்மா.. இன்னொரு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்றதுக்கு எங்கப்பா ரிஜிஸ்ட்ராரா இருக்கிற ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்தாங்களாம் .அத ..அத.. எப்படி சொல்றது.. உங்ககிட்டன்னு தெரியல ..ஆதர்ஷ் சாருக்கு இது தெரியுமான்னு தெரியல..அவருக்கு போன் பண்ணினேன் அவர் போனை எடுக்கல ..”
“என்னடா சொல்ற..?” என்று அவர் போட்ட கூச்சலில் ருக்மணி ஓடிவந்தாள் .”.நீ சொல்றது நிஜமா? உன்னை சுட்டு பொசுக்கிடுவேன்… யாரைப் பத்தி.. என்ன பேச்சு பேசுற ..”
“ஐயா.. ஐயா… மன்னிச்சிடுங்க.. நான் ஒரு சில போட்டோக்களை உங்க வாட்ஸப்க்கு அனுப்புறேன். நீங்க பாத்துட்டு பேசுங்க.. தயவுசெய்து என்னை தப்பா நினைக்காதீங்க” என்றவன் போனை கட் பண்ணிட்டு ,வாட்ஸ் அப்பில் அவர்கள் கல்யாண போட்டோவையும், ரிஜிஸ்டர் பண்ணிய டாக்யூமண்ட் போட்டோவையும் அவருக்கு அனுப்பி வைத்தான்.
வாட்ஸ் அப்பில் போட்டோக்களை பார்த்த பரமேஸ்வரன் கோபம் உச்சத்தை அடைந்தது .
“ருக்மணி எங்கடி உன் மருமக?” என்று கத்தினார் ..அப்படியே போனை ஓங்கி அடித்தவர் …அருகில் இருந்த பீங்கான் ஜாடியை தூக்கி கண்ணாடி டீப்பாய் உடைத்தார். அப்படியும் ஆத்திரம் தீரவில்லை…
அதற்குள் சத்தம் கேட்டு அவர் கார் டிரைவர் ஓடி வந்தான் …
“கோபால்.. நம்ம பரட்ட செல்வத்துக்கு போன் போடு ..அந்தக் கழுதை காவ்யா எங்க போய் இருந்தாலும் இழுத்துட்டு வரச் சொல்லு ..அவ கூட இருக்கிற பயலே போட்டுத் தள்ளச் சொல்லு. எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த கழுதை இந்த வீட்டுக்குள்ள வந்தாகனும் ..”
அதற்குள் ருக்மணி ஓடிவந்து பதறிப் போய் நிற்க, “என்னடி பார்த்துக்கிட்டு நிக்கிறே… நீ மருமகளை கவனிச்சுக்கற இலட்சணம் இதுதானா ..அந்தக் கழுதை வேற எவன் கூடவோ ஓடிபோயிருக்கா… திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு போயிருக்கா…”
“அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லைங்க… யாரோ எதையோ சொன்னங்கன்னு சொல்லிட்டு நீங்க கோபப்படாதீங்க..” என்றாள் ருக்மணி. இந்த தடவை அவள் பயப்படவில்லை.
“காவ்யா நல்ல பொண்ணு.. அப்படி எல்லாம் செய்யமாட்டா.. யாரோ ஏதாவது சொன்னா உடனே நம்பிடறதா?”
ருக்மணியின் முடியை பிடித்து “பளார் பளார்” என்று கன்னத்தில் அறைந்தார்.
“இன்னும் அந்த கழுதைக்கு சப்போர்ட் பண்ணி பேசுற. அவ யோக்கியதையத்தான் ஒருத்தன் போட்டோ எடுத்து அனுப்பியிருக்கானே…..இந்தக் குடும்ப மானத்தைக் குலைக்க நினைத்தால்…. அந்த ஓடுகாலி நாய சும்மா விடமாட்டேன். உன்னையும் சும்மா விடமாட்டேன். ரெண்டு பேரையும் சுட்டுத் தள்ளிட்டுத்தான் மறு வேலை” என்றவர் வேகமாக போய் தன் அறையில் இருக்கும் ரிவால்வரை எடுத்து வந்தார்.
“ஐயய்யோ… என்ன பண்ணப் போறீங்க? தயவுசெய்து வேண்டாங்க. என்னன்னு விசாரிப்போம். கொஞ்சம் பொறுமையா இருங்க… கோபப்படாதீங்க. இது மத்தவங்க வீட்டு விஷயம் இல்ல.. நம்ம மருமகள் விஷயம். அவங்க அப்பா அம்மாவுக்கு நாம பதில் சொல்லனும். என்னன்னு அவகிட்ட கேட்போம் .விஷயத்தை தெரிஞ்சுகிட்டு, அதுக்கப்புறம் நீங்க என்ன தண்டன வேணாலும் கொடுங்க அவசரப்பட்டு துப்பாக்கிய தூக்காதீங்க.”
“முதல்ல உன்னையும், உன் மகனையும்தான்டி கொல்லனும்.. புள்ள பூச்சி மாதிரி இருந்துகிட்டு, ஒரு பொண்ண சரியா கண்காணிக்க துப்பில்ல… அவ வீட்டவிட்டு ஓடிப் போற வரைக்கும்..”
அந்த நேரம் பார்த்து மாயா உள்ளே வர, “அத்தை” என்று அழைத்தவரே ஓடிச்சென்று கீழே விழுந்து கிடந்த அத்தையைத் தூக்கினாள்.
உடனே பரமேஸ்வரன் கோபம் மாயா மேல் திரும்பியது …
“வாடி என் மருமகளே.. இப்ப நான் உண்மைய வரவழைக்கிறேன். உனக்கு தெரியாம எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. கண்டிப்பா உனக்கு என்ன நடந்திருக்கும்னு தெரிஞ்சிருக்கும். நீ இப்ப சொல்ல போறியா இல்லையா?” என்றவர் மாயாவின் முடியைப் பிடித்து அவளை சுவரோடு மோதினார். கன்னத்தில் “பளார் பளார் “என்று அறைந்தார்.
“ஐயோ மாமா.. எனக்கு ஒன்னும் தெரியாது. நான் சும்மா வீட்டுக்கு வந்துட்டு போவேன். அத்தையை பார்த்துட்டு போவேன். காவ்யா நல்லா பேசுவா அவ்வளவுதான். எனக்கு அவ விஷயம் ஒண்ணுமே தெரியாது”
“நேற்றுவரை இழைஞ்சுகிட்டுதானடி இருந்தீங்க.. இப்ப தெரியாதுன்னு சொன்னா எப்படி? நான் இப்படி கேட்டா சொல்ல மாட்டீங்க..” என்றவர் ..
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சாட்டையை எடுத்து ருக்மணிதேவியை பளார் பளார் என்று அடித்தார் ..மாயா குறுக்கே புகுந்து தடுத்தாள் ..சாட்டையைப் பிடுங்கினாள்.
“மாமா உங்களுக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா? எங்க உள்ள கோபத்தை யாருகிட்ட காண்பிக்கிறீங்க… நீங்க இப்படி பண்றதனாலதான் உங்களுக்கு தெரியாம பல விஷயங்கள் நடக்குது. என்னைக்காவது வீட்ல இருக்கிறவங்க மனச பத்தி நீங்க யோசிச்சு பாத்தீங்களா? அத்தான் மனசிலே என்ன இருக்குன்னு கேட்டிருக்கிங்களா? காவ்யா மனசுல என்ன இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? ..யாரைப்பத்தியும் கவலைப்படாம உங்க அராஜகத்தை நடத்திக்கிட்டு இருக்கீங்க… அதுக்கு சாரதா வேணா பலியாவா… காவ்யா பலியாக மாட்டா. எங்க அப்பாவை கொன்ன மாதிரி இன்னொரு காதலனையும் காதலையும் கொன்னுட்டு நீங்க சந்தோஷமா நூறு வருஷம் வாழுங்க” என்றாள்
“அப்படி வாடி வழிக்கு.. அப்போ உனக்கு விஷயம் தெரியும்.. சொல்லு …இப்ப ரெண்டு பேரும் எங்க இருக்காங்க? எந்த கோயில்ல கல்யாணமாச்சு? இப்ப எங்க போக போறாங்க? இப்ப நீ சொல்ற..சொல்லலைன்னு சொன்னா உங்க அத்தைய உயிரோடு பாக்க முடியாது .உன் கண்ணு முன்னாடியே அவளை சுட்டுக் கொன்னுடுவேன். உனக்கு கண்டிப்பா எல்லா விஷயம் தெரியும்ங்கறது எனக்கு தெரிஞ்சு போச்சு. இப்ப நீ உண்மையை சொல்றியா இல்ல உங்க அத்த உன் கண்ணு முன்னாடியே சாகட்டுமா?”
மாயா மாமாவின் காலில் விழுந்தாள்.
“மாமா தயவு செய்து அத்தைய ஒன்னும் பண்ணிடாதீங்க.. அவங்க ஒரு பாவமும் செய்யல.. எந்த விஷயமும் அவங்களுக்குத் தெரியாது ..அவங்கள நீங்க கொடுமைப்படுத்துறதுல எந்த நியாயமும் இல்லை ..”
“அப்ப சொல்லு எங்க கல்யாணம் ஆச்சு.. இப்ப ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னு சொல்லு.. ஏற்கனவே என் ஆட்கள் தேட போயிட்டாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த கழுதையை இழுத்துட்டு வந்து போடுவாங்க …அவங்க எங்கேன்னு சொன்னா நீ தப்பிச்ச… இல்லன்னா உங்க அத்தை உன் கண்ணு முன்னாடியே சாவா”
“சத்தியமா எனக்கு தெரியாது மாமா. காவ்யா இப்படி செஞ்சது எப்படிங்கறது எனக்கு சத்தியமா தெரியாது..” என்று சொல்ல
“சொல்ல மாட்டேன்னா நீ இருந்து ஒரு பிரயோஜனமுமில்ல” என்று சொன்னவர் பிடி இறுக்கியது.
“மாயா நீ தள்ளிப்போ… நீ உன் வீட்டுக்குப் போ.. இங்கிருந்து போயிடு ..போயிடு” என்றாள் ருக்மணி பதட்டத்தோடு .
“உங்க அத்தை இப்ப சாவா…பாத்துட்டு உங்க வீட்டுக்குப் போ”
ருக்மணியினுடைய முடியை பிடித்து இழுத்து வந்து சோபாவில் தள்ளி பிறகு துப்பாக்கியை அவள் முன்னே நீட்ட மாயா ஓடிவந்து …
“தயவுசெய்து வேணாம் மாமா.. ப்ளீஸ் மாமா.. அத்தை ஒன்னும் பண்ணிடாதீங்க..” என்றவள் துப்பாக்கியை பிடுங்க முயற்சிக்க அவர் ..
“சீ.. தள்ளி போடி நாயே ..” என்றும் மாயாவை கீழே தள்ளிவிட்டு கோபம் தலைக்கேற திரும்பத் துப்பாக்கியை எடுத்து ருக்மணியை சுட போன போது…மாயா எழுந்து ஓடினாள். மாமாவை தடுத்தாள். திரும்ப துப்பாக்கியைப் பிடுங்க முயற்சித்தாள்.. ஆனால் அதற்குள் துப்பாக்கியின் விசை அழுத்தப்பட்டு திரும்பத் திரும்ப.. மூன்று தடவை வெடித்தது .ரத்தம் தரையெங்கும் சிதறியது.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாரு “வீல்’ என்று அலறி தரையில் மயங்கி விழுந்தாள்.
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings