in ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 22) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2     அத்தியாயம் 3     அத்தியாயம் 4

அத்தியாயம் 5    அத்தியாயம் 6     அத்தியாயம் 7     அத்தியாயம் 8

அத்தியாயம் 9   அத்தியாயம் 10    அத்தியாயம் 11    அத்தியாயம் 12

அத்தியாயம் 13   அத்தியாயம் 14   அத்தியாயம் 15   அத்தியாயம் 16

அத்தியாயம் 17   அத்தியாயம் 18   அத்தியாயம் 19   அத்தியாயம் 20

அத்தியாயம் 21

பிளவுபட்டிருக்கும் தன் மேலுதட்டையும், கீழுதட்டையும் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டு, ஓடத் தயாரானான்.

ஒன்….டூ…த்ரீ…

நிதானமாய் ஒடி, பின் மிதமாய் வேகத்தை அதிகப்படுத்தி, சட்டென்று உச்ச வேகத்திற்குச் சென்று, தாண்ட வேண்டிய இடம் வந்ததும்…. யாரும் எதிர்பாராத வண்ணம், அப்படியே மடங்கி விழுந்தான்.

விழுந்தவன் தானாகவே எழுந்து நிற்க முயற்சித்து, முடியாமல் மறுபடியும் தரையில் விழுந்தான்.

காத்திருந்த மருத்துவக் குழு  “மள…மள”வென்று வந்து ஸ்ட்ரெக்சரில் அவனைக் கிடத்தித் தூக்கிச் சென்றது.

தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த இல்லத்து மாற்றுத் திறனாளிகள், “ஐயோ…” என்று கத்த, வாட்ச்மேன் வடிவேலுவும், டேவிட்டும் “த்சொ…த்சொ” என்று அங்கலாய்க்க,

“ஒண்ணுமில்லைங்க… திடீர்னு வேகமெடுத்ததுல கால் இடறி விட்டிடுச்சு போலிருக்கு… அதான் பையன் விழுந்திட்டான்!… இப்ப மறுமடியும் வருவான் பாருங்க” என்றாள் சரஸ்வதி நம்பிக்கையின் சிகரமாய்.

ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்ப்பித்தது கோகுதாஸ் அவர்களிடமிருந்து வந்த மொபைல் கால்.

“அது ஒண்ணுமில்லை மிஸ்டர் ஆறுமுகம்…. ராஜாப்பயல் சரியாய்த்தான் செய்தான்… முதல்ல ஸ்லோவா ஆரம்பிச்சு… அப்புறம் லைட்டா ஸ்பீடை அதிகம் பண்ணி…. கடைசில ஜம்ப் பண்ண வேண்டிய இடத்துக்கு நான்கடி முன்னாலிருந்தே ஹை ஸ்பீடுக்கு மாறணும்!… கரெக்டாப் பண்ணினான்…. பட்… அன்ஃபார்ச்னேட்லி… லெக் ஸ்லிப் ஆகி விழுந்திட்டான்!”

“மறுபடியும் வந்திடுவான் தானே சார்?” ஆறுமுகம் ஆர்வத்தோடு கேட்டார்.

“ஸாரி ஆறுமுகம்,,, லெக் ஸ்லிப் ஆனதுல லைட்டா ஃபிராக்ஸர் ஆகியிருக்கு… ஸோ… பெங்களூர் போட்டில இனி கலந்துக்க வாய்ப்பில்லை!…. பார்ப்போம்… மும்பை போட்டில ஏதாவது சான்ஸ் இருக்கா?ன்னு பார்ப்போம்” கோகுல்தாஸ் சொன்னதும்

தன் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இட்ஸ் ஓ.கே.சார்…” என்றபடி இணைப்பைத் துண்டித்தார் ஆறுமுகம்.

“சார் என்னாச்சு சார்… நம்ம ராஜா மறுபடியும் இன்னிக்கு வருவானா சார்?” ஆர்வமாய்க் கேட்டான் கோபி.

“ம்ஹும்… ராஜாவுக்கு இனி அடுத்த போட்டி மும்பைலதானாம்… பரவாயில்லை… அடுத்து ஹை-ஜம்ப் போட்டிக்காக நம்ம ஈஸ்வரன் வர்றான்… அவனைப் பார்ப்போம்” ராஜா குறித்த பேச்சை அதற்கு மேல் வளர விடாமல் அடுத்த போட்டி குறித்த அறிவிப்பை நினைவூட்டினார் ஆறுமுகம்.

மகனின் தோல்வி மனதை சங்கடப்படுத்தி விட, அந்த இடத்தை விட்டு அகன்றாள் சரஸ்வதி. கோபி மட்டும் ஆர்வம் குறையாமல் ஈஸ்வரனின் ஹை-ஜம்ப் போட்டியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பதினேழு வயதிற்குரிய வளர்ச்சி இல்லாமல், ஏழு வயதுச் சிறுவனைப் போலிருக்கும் ஈஸ்வரன் உயரம் தாண்டும் போட்டியில் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினான். தகுதித் தேர்வில் வெகு எளிதாக ஜெயித்தான்.

“அப்பாடா” என்று நெஞ்சில் கை வைத்துச் சொன்ன ஆறுமுகம்… “நாம அனுப்பிய அஞ்சு பேர்ல மூணு பேர் தேர்வாயிட்டாங்க… ரெண்டே பேர்தான் தேர்வாகலை… இது நார்மல் தான்!… இதுல நாம பெருமைப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா?… மூணு பேர் ஜெயிச்சிருக்காங்க… ஒருத்தர் ரெண்டு ஈவெண்ட்டுல ஜெயிச்சிருக்கார்… ஆக மொத்தம் நான்கு ஈவெண்ட்ல நாம வின் பண்ணியிருக்கோம்!…”சொல்லிய ஆறுமுகம் தானே கை தட்டலைத் துவக்கி வைக்க, எல்லோரும் கை தட்டி மகிழ்ந்தனர்.

“சார்… மும்பைப் போட்டி எப்ப சார்?” கோபியின் சகா ஒருத்தன் ஆர்வமாய்க் கேட்க,

“எனக்கு சரியாய்த் தெரியலைப்பா… கோகுல்தாஸ் போன் பண்ணுவார்… அப்புறம் சொல்றேன்”

எல்லோரும் கலைந்து சென்ற பின் தன் அறைக்கு வந்த ஆறுமுகம், கோகுல்தாஸை அழைத்தார், “சார்… ராஜாவுக்கு இப்ப எப்படியிருக்கு?” கேட்டார்.

“ஸாரி டு ஸே திஸ் மிஸ்டர் ஆறுமுகம்… ராஜாவுக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு…. அவன் இந்த வருஷ பாராலிம்பிக்ஸ்க்கு போகாம இருப்பது நல்லது”

“ஏன் சார் இப்படிச் சொல்றீங்க?” சோகமாய்க் கேட்டார் ஆறுமுகம்.

“டெஸ்ட் ரிப்போர்ட்ஸைப் பார்த்ததுல…. ராஜாவுக்கு எலும்பு ரொம்ப வீக்காயிருக்கு… அதாவது நார்மல் ஸ்ட்ராங்கை விட ரொம்பவே குறைவாயிருக்கு!… அதனால் அவனுக்கு எலும்பு முறிவு என்பது சீக்கிரமே ஏற்பட்டு விடும்”

“அடக்கடவுளே!” என்று அங்கலாய்த்த ஆறுமுகம், “இதை எப்படிக் க்யூர் பண்றது சார்?” கேட்டார்.

“ம்ம்ம்… எலும்புக ஊக்கம் பெறுவதற்குன்னு ஸ்பெஷல் டிரீட்மெண்ட் குடுக்கணும்!… அப்படிக் குடுத்து அவனோட எலும்புகளை நல்லா ஊக்கம் பெற வெச்சிட்டா… அவனை ரெண்டாயிரத்து இருபத்தியாறுல நடக்கப் போற பாராலிபிக்ஸ் போட்டில கலந்துக்க வைக்கலாம்!… இப்ப சாத்தியமில்லை” என்றார் கோகுல்தாஸ்.

ஆறுமுகம் எதுவும் பேசாமல் அமைதி காக்க, “மிஸ்டர் ஆறுமுகம் கவலைப்படாதீங்க… இந்த வருஷம் அஞ்சு பேரை மட்டும் அனுப்பிய நாம்… அடுத்த பாராலிம்பிக்ஸ்க்கு சுத்தமா அம்பது பேரைத் தயார் பண்ணிடுவோம்… என்ன?”

“ஓ.கே…சார்” என்றபடி இணைப்பிலிருந்து வெளியேறிய ஆறுமுகம், “இதை எப்படி சரஸ்வதிகிட்டே சொல்றது?… அவளும் கோபியும் தங்கள் மகன் பாராலிம்பிக்ஸ்ல கோப்பையை ஜெயிச்சு இந்த நாட்டுக்கே பெருமை தேடித் தருவான்னு நெனச்சிட்டிருந்தாங்களே… அவங்க கிட்டப் போய் இதைச் சொன்னா… எப்படித் தாங்குவாங்க?”

“சார்… உள்ளார வரலாமா?” கோபியின் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தார் ஆறுமுகம்.  சரஸ்வதியும் உடன் வந்திருந்தாள்.

“ம்… வாங்க உட்காருங்க”

இருவரும் அமர்ந்ததும், “என்ன கோபி… நம்ம ராஜா இப்படி டிஸ் குவாலிஃபை ஆயிட்டான்னு வருத்தமாயிருக்கா?” நாகரீகமாக ஆரம்பித்தார் ஆறுமுகம்.

“வருத்தம்தான் சார்!… ஆனாலும்… ஸ்போர்ட்ஸ்ல இதெல்லாம் சாதாரணம்தானே சார்?… வெற்றியையும், தோல்வியையும் ஒரே மாதிரிப் பார்க்கிறவன்தான் சார்…. உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்” என்றான் கோபி.

“சார்… வெற்றி என்பது உன்னை உலகிற்கே அறிமுகப்படுத்தும்… ஆனால் தோல்வி மட்டும் தான் உன்னை உனக்கே அறிமுகப்படுத்தும்ன்னு அன்னிக்கு டி.வி.ல ஒருத்தர் சொல்லிட்டிருந்தார் சார்… அதுதான் சார் நெஜம்!… இப்ப நம்ம ராஜாவோட பிரச்சினைகளை நமக்கு அறிமுகப்படுத்தியது அந்தத் தோல்விதானே சார்?” இயல்பாய்ப் பேசிய சரஸ்வதியை ஆச்சரியமாய்ப் பார்த்தார் ஆறுமுகம்.

அவர் அப்படிப் பார்ப்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சரஸ்வதி, “நம்ம ராஜா ரெண்டாயிரத்து இருபத்தியாறு போட்டியில் கொடி நாட்டுறான் சார்… நாம் இப்ப மத்த பசங்களோட விளையாட்டைப் பார்ப்போம் சார்” என்றாள்.

“ரொம்ப சந்தோஷம்ம்மா”

மறுநாள் காலை, கோகுல்தாஸ் அழைத்தார்.

“மிஸ்டர் ஆறுமுகம்… இந்த வருட பாராலிம்பிக்ஸ் போட்டிக… செப்டம்பர்ல நடப்பதினால் சீக்கிரமே செலக்‌ஷன் டெஸ்ட்டுகளை முடிக்கணும்ன்னு “பாராலிம்பிக்ஸ்  கமிட்டி ஆஃப் இண்டியா” ஆர்டர் போட்டிருச்சு… அதனால…”

“சொல்லுங்க சார்… அதனால….?..”

“பெங்களூர்ல தேர்வாக உங்க பசங்க மூணு பேரும் அப்படியே மும்பைக்கும்… டெல்லிக்கும் போக வேண்டியிருக்கும்,… தேர்வாகாத மாரிமுத்துவும், ராஜாவும் இங்க வந்திடுவாங்க!…”

“ஓ.கே.சார்” என்ற ஆறுமுகம், நேரே கோபியிடம் சென்று, கோகுல்தாஸ் சொன்ன விஷயங்களைச் சொல்லி விட்டு, “இங்க பாருங்க கோபி… பெங்களூர்ல தேர்வாகாமத் திரும்பி வர்ற நம்ம பசங்களை யாரும் கேலியோ… கிண்டலோ பண்ணக் கூடாது…. அவங்க வந்து இறங்கியதும் மகிழ்ச்சியோட வரவேற்கணும்!… வெற்றியோ… தோல்வியோ களத்துல இறங்கிட்டு வந்திருக்காங்களே… அதுவே பெரிய சாதனையல்லவா?…” என்றார்.

“நிச்சயம் சார்” என்றான் கோபி.

சொன்னது போலவே மறுநாள் வந்திறங்கிய மாரிமுத்துவிற்கும், ராஜாவிற்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்து, அவர்களிருவரும் அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளை இப்போதிருந்தே துவங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் ஆறுமுகம்.

*****

அடுத்த ஐந்து நாட்களில் மும்பையில் நடைபெற்ற போட்டிகளின் ஒளிபரப்பு தொலைக்காட்சியில் இல்லாத காரணத்தால் கோகுல்தாஸின் கைப்பேசி அழைப்பை மட்டுமே நம்பியிருந்தார் ஆறுமுகம்.

அவருடைய மொபைல் ஒலிக்கும் போதெல்லாம் ஆர்வத்தோடு எடுப்பார்.  அது வேறு ஏதோவொரு அழைப்பாய் இருக்கும்.  “ச்சை… ஏன் இன்னும் அவரிடமிருந்து எந்தத்த் தகவலும் வரலை?… ஒருவேளை… நம்ம பசங்க எல்லோருமே சொதப்பிட்டாங்களா?”

இரவு வரை காத்திருந்தார் ஏமாற்றமே மிஞ்சியது.  “அப்பச் சரி… மொத்தமா ஊத்தி மூடிட்டானுக போலிருக்கு நம்ம பசங்க”

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 16) – ரேவதி பாலாஜி

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 39) – தி.வள்ளி, திருநெல்வேலி