in

திசையறியா பயணம் (நாவல் – இறுதிப் பகுதி) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

திசையறியா பயணம் (இறுதிப் பகுதி)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அத்தியாயம் 1  அத்தியாயம் 2   அத்தியாயம் 3   அத்தியாயம் 4   அத்தியாயம் 5

டைசியில் ஓநாய் கூட்டத்தில் சிக்கிய ஆடு போன்று தன்னுடைய நிலைமையாகி விட்டதாக நினைத்து துடிதுடித்தாள்.

ஒரு உருவம் பூஜாவை நெருங்கி வந்து அவளது தோள்பட்டையைத் தொட்டதும், “அம்மா….” என்று துடித்துப் போய் கத்தி விட்டாள் பூஜா.

“பூஜா… பூஜா…” என்று பதற்றத்துடன் பூஜாவைத் தட்டி எழுப்பினார் முத்தம்மாள்.

“அம்மா…. அம்மா…” கதறிக் கொண்டே பயத்தில் மீண்டும் கூச்சலிட்டாள் பூஜா.

“என்னடி இப்படி உயிரே போகுற மாதிரி கத்துற? எதுவும் கெட்ட சொப்பனம் கண்டியா?”

மணியை பார்த்தாள், நள்ளிரவு பனிரெண்டு மணியாக இருந்தது. இப்போது சொப்பனத்தைக் கூறினால் அம்மாவிற்கு தூக்கமே வராது என்று மனதில் நினைத்து, “அதெல்லாம் ஒன்னுமில்லம்மா…. நீ தூங்கும்மா” என்று கூறிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள் பூஜா.

முத்தம்மாளும் அவளுடைய தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அவருடைய இடத்திற்கு சென்று உறங்கி விட்டார்.

றுநாள் காலைப் பொழுது விடிந்தது. எப்போதும் நேரமே எழுந்திருக்கும் பூஜா, இன்றைக்கு என்று பார்த்து சற்று கால தாமதமாக விழித்தாள்.

“என்னடி இன்னைக்கு வெளிநாட்டுக்கு போகுற நினைப்பு இருக்கா? இல்லையா? மதியம் ப்ளைட்டுனு சொன்ன”

“நான் வெளிநாட்டுக்கு போகலம்மா….”

“என்ன சொல்லுற பூஜா? நிஜமாத்தான் சொல்லுறீயா…”

“ஆமாம்மா…”

“நேத்து ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையாடி?”

“அதெல்லாம் பிரச்சனையில்லம்மா… என் மனசுக்கு போக வெளிநாட்டுக்கு வேண்டாம்னு தோனுது.”

“எதுவும் பிரச்சனைனா மனசை விட்டு வாய் திறந்து சொல்லுடி.”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லம்மா… கொஞ்சம் கடை வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன்” என்று வேகமாக கூறிவிட்டு கடைக்கு புறப்பட்டுச் சென்றாள் பூஜா.

கடைக்குச் செல்லும் வழியெல்லாம் அன்று அலுவலகத்திலிருந்து அழுது கொண்டே சென்ற அந்தப் பெண்ணின் நிலைமை கண்டு சிந்தித்து கொண்டே சென்றாள்.

திடீரென்று பூஜா செல்லும் வழியை மறைத்து ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது. ஏற்கனவே பல குழப்பத்தோடு சிந்தித்து கொண்டே செல்லும் பூஜாவிற்கு வழியை மறித்து நிற்கும் ஸ்கூட்டியில் இருக்கும் மனிதரைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது.

ஸ்கூட்டியிலிருந்த மனிதர் தன்னுடைய ஹெல்மெட்டை கழற்றியதும், அவரைப் பார்த்ததும் பயத்தில் பதறிக் கொண்டிருந்த பூஜாவின் முகமும் மனமும் சாந்தமடைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

வந்திருபவர் வேறு யாருமில்லை சிந்துவின் கணவர் சரத் தான்.

“என்ன சார் நீங்களா? நீங்க ஏன் சார் என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?”

“பூஜா! நான் சொல்லுற விஷயம் உனக்கு ரொம்ப தர்ம சங்கடமான செய்தியா இருக்கும். அதற்காக என்னை தப்பா எடுத்துக்காதம்மா. என்னை உன் உடன்பிறவா சகோதரனா நினைச்சுக்கோம்மா. தயவு செய்து அந்த வெளிநாட்டு வேலைக்கு மட்டும் போகாதம்மா. உன் வாழ்க்கையே மோசம் போயிரும்.

சிந்து ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டு என்ன செய்யுறோம் ஏது செய்யுறோம்னு தெரியாம இந்த மாதிரி வேலை பார்த்துக்கிட்டு இருக்காம்மா. நான் இரண்டு வாரமா இதைப் பத்தி ஏதாவது துப்பு கிடைக்குமானு அங்க வேலை செய்யுறவுங்ககிட்ட எல்லாம் விசாரிச்சு பார்த்தேன். எனக்கு அப்படி எந்த தகவலும் கிடைக்கல.

நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல வேலைப் பார்த்த சங்கவி எதார்த்தமா நேத்து ரோட்டுல சந்திச்சேன். அந்தப் பொண்ணு முகத்துல பழைய கலகலப்பே இல்லம்மா. என்னைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுக ஆரம்பிச்சுட்டாம்மா. திடீருனு அழுகவும் எனக்கு ஒன்னுமே புரியல.

வெளிநாட்டுல இருந்து எப்போ வந்த சங்கவி? எதுக்கும்மா இப்படி அழுகுற? இப்படி ரோட்டுல நின்னு நீ அழுகுறதை பார்த்தா அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க தப்பா நினைப்பாங்கம்மா என்று நான் சொன்னதும்

“நான் ஏழையா பிறந்தது தப்பா சார்?”னு கேட்டாள்.

“எதுக்கும்மா இப்போ இதெல்லாம் கேட்குற? அதான் உனக்கு சிந்து வெளிநாட்டுல நல்ல வேலை வாங்கிக் கொடுத்ததா சொல்லிருந்தாளே…”

“அவுங்க ஒரு பொண்ணா இருந்துகிட்டு இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் செய்யுற அளவுக்கு எப்படி சார் அவுங்களுக்கு மனசு வந்தது. உங்க வீட்டுல எத்தனை வருஷம் நாய் மாதிரி விசுவாசத்தோட வேலை பார்த்திருக்கேன் என்று ஆரம்பித்தில் அவள் அந்தக் கேள்வியை கேட்டதற்கான அர்த்தம் அவள் வெளிநாட்டில் அனுபவித்த நரக வேதனையை கேட்டதும் தான் புரிந்ததும்மா பூஜா.அந்தப் பொண்ணு பட்ட கஷ்டத்தை  கேட்டதும் நான் இப்படி ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு தூக்கு மாட்டி தற்கொலை செஞ்சுகலாம்னு தோணுதும்மா”

இந்த செய்தியைக் கேட்டதும் பூஜா, எந்தவித பதற்றமில்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து சரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

இவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள், “நீங்க ஏன் சார் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. இனிமேல் எந்த பொண்ணோட வாழ்க்கையும் பாதிக்காத மாதிரி மேடமுக்கு புத்திமதி சொல்லுங்க” என்று கூறி அவ்விடம் விட்டு கடந்து சென்றாள்.

பூஜாவின் பதில் சரத்திற்கு மிகவும் வியப்பாக இருந்தது. சங்கவியைத் தேடி அவளுடைய வீட்டிற்கு சென்றாள். அவள் வீட்டிற்கு முன் ஒரே அழுகை சத்தம். அதில் இரண்டு குழந்தைகள் “அம்மா…. அம்மா… எழுந்திரும்மா…” என்று கதறி அழுது கொண்டிருந்தது.

தூரத்திலிருந்து அதைப் பார்த்த பூஜாவின் இதயம் பிஞ்சு குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டு துடித்துடித்து போனாள்.

அங்கிருந்தவர்களிடம் விசாரித்து பார்த்ததில் சங்கவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள். அச்செய்தியை கேட்ட பூஜா  நிலைக்குலைந்து கீழே விழுந்துவிட்டாள்.

அருகிலிருந்தவர்கள் அவளைத் தூக்கிவிட்டு தண்ணீர் கொடுத்தனர். அரைமணி நேரத்திற்கு பிறகு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்தாள் பூஜா.

பூஜாவைப் பார்த்ததும், “என்னடி இது அலங்கோலம்?” என்று அவரது தலையிலடித்து அழுது கொண்டே கேட்டார் முத்ததம்மாள்.

பிஸிற்கு வந்த காவல்துறை அதிகாரி, மேனேஜர் சங்கரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினார்.

சங்கவி தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமான மேனேஜர் மற்றும் சிந்துவின் மீது புகார் அளித்திருக்கிறாள்.

“என்னை போன்ற ஆதரவற்ற எந்த பெண்களுக்கும் இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கி மாட்டி கொள்ளக் கூடாது” என்பதற்காக தான் சார் உங்களிடம் வந்து கூறியிருக்கிறேன் என்று கையெடுத்து கும்பிட்டு அழுதாள். வெளிநாட்டில் அவள் பட்ட அவஸ்தையெல்லாம் கேட்டு கதி கலங்கி விட்டார் காவல்துறை அதிகாரி.

“உன் நிலைக்கு காரணமான நபர்களை சும்மா விட மாட்டேன்ம்மா. உன் பேரு வெளில தெரியாதபடி நான் பார்த்து கொள்கிறேன்ம்மா….” என்றார் காவல்துறை அதிகாரி.

அங்கிருந்து கிளம்பிச் சென்றவளுக்கு தன்னுடைய கடந்த கால கசப்பான சம்பவங்கள் மூளையை குத்தி குடைந்து எடுத்து விட்டது.

மானத்தை இழந்து இப்படி வாழ வேண்டுமா? இனி இவ்வுலகில் நடைப்பிணமாக வாழ முடியாது என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டாள்.

யாரைக் காப்பாற்றுவதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றாளோ, வெளிநாட்டில் நான்கு வருஷம் அனுபவித்த சித்தரவதை அவளுடைய குழந்தைகளின் நினைவையே முற்றிலும் மறக்க செய்துவிட்டது.

தன்னை கைது செய்ய வரும் செய்தி கேட்ட சிந்து, ஊருக்கு தெரிந்தால் தன் மானமே போய்விடும் என்றெண்ணி வேகமாக வீட்டின் மாடிக்கு ஓடிச் சென்று மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தாள். அவளுடைய உயிர் தப்பியது, ஆனால் கோமாவிற்கு சென்று விட்டாள்.

பூஜா செய்த செயலைக் கண்டு முத்தம்மாளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு பெண்ணுக்கு மிகவும் அழகு சேர்ப்பது சிகை அலங்காரம் தான். அதையே இழக்க துணிந்துவிட்டாள் பூஜா. மொட்டை போட்டுக் கொண்டாள்.

“என்னடி இது கோலம்?”

“இனிமேல் யாரும் என்னை நெருங்கி வர்றதுக்கு யோசிப்பாங்களம்மா… என் மச்சானுக்கு மட்டுமே நான் அழகா தெரியனும் நினைச்சு தான் இந்த முடியையே பாதுகாத்து வளர்த்தேன். மச்சான் செத்த பிறகு கண்ட கண்ட தெரு நாயெல்லாம் என்னை மோப்ப பிடிக்க இதுவும் ஒரு காரணம் தானம்மா.”

“ஊருல நாலு பேரு அப்படி இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கு எதுக்குடி உன்னை தண்டிச்சுக்கிற… எங்கடி போய்ட்டு வந்த? எதுக்கு திடீருனு இப்படி வந்து நிக்குற”

தான் வேலைக்கு செல்ல இருந்த இடத்தில் உள்ள ஆபத்துகளையும் சங்கவியை பற்றியும் கூறினாள் பூஜா.

“நேத்து ஆபிஸ்ல இருந்து வரும் வழியில நான் வெளிநாட்டுக்கு போகுற செய்தி கேள்விப்பட்டு என்னை தேடி வந்திருக்காங்க. சங்கவி தான் எல்லா உண்மையும் எனக்கு சொன்னாங்க” என்று கூறினாள்.

“நல்லவேளை பூஜா, அந்தக் கடவுள் தான் உன்னை காப்பாத்திருக்காரு.”

“என்னை காப்பாத்துன கடவுள் ஏன்ம்மா சங்கவிய காப்பாத்தல? பச்சகுழந்தைங்க பெத்த தாயை இழந்து ரோட்டுல கதறி அழும்போது எப்படி இருந்தது தெரியுமா? ஏழையா பிறந்தா நமக்கு எந்த உணர்வும் இருக்க கூடாதா? நாம்ம என்னை காரு பங்களா வாங்கி வசதியா இருக்கவா ஆசைப்படுறோம். நம்ம பிள்ளைங்க வயித்துக்கு மூனுவேளை சோறு கிடைக்கனும் தானம்மா போராடுறோம். ஆம்பள துணையில்லாட்டி ஒரு பொண்ணை இந்த சமூகம் எப்படி வேணும்னாலும் ஆட்டிப் படைக்குமா? இனி நான் எங்கேயும் ஓடி ஒளிய மாட்டேன். ஒரு பொண்ணு நினைச்சா எதையும் சாதிச்சு காட்ட முடியும்னு நான் வாழ்ந்து காட்டப் போறேன்ம்மா” என்றாள் பூஜா.

அவளைப் போன்ற கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களது ஒத்துழைப்புடன் ஒரு மெஸ் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வந்தாள் பூஜா. அதே நேரத்தில் பெண்களை தற்காத்து கொள்வதற்கான கலையை அவளும் அவளோடு சேர்ந்து வேலைப் பார்க்கும் அனைவரும் கற்றுக் கொண்டனர்.

திசையறியா பயணத்தில் சிக்கிக்க கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கை பயணத்தின் சரியான திசையைக் கண்டுபிடித்த பயணிக்கத் தொடங்கினாள் பூஜா.

பூஜாவுடைய வாழ்வில் மீண்டும் புதிய தொடக்கம் ஆரம்பமானது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாயின் மடியில் (சிறுகதை) – ✍ பீஷ்மா

    உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 2) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை