2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24
விழா முடிந்து ராம்குமாரோடு வீடு திரும்பினாள் மகா ..மனம் நிறைந்திருந்தது. அப்பாவின் படத்திற்கு முன் நின்றவள் ‘அப்பா! என்மனம் நிறைவா இருக்கு ..இப்ப தான் என் வாழ்க்கை சரியான பாதையில் திரும்பியிருக்கு. ரொம்ப நாளைக்கு பிறகு என் மனசுல அமைதி திரும்பியிருக்கு’
அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்குமார்.
அவன் அருகில் வந்தாள் மகா, “என்னங்க.. என்னென்னமோ நடந்து போச்சு. நடந்ததெல்லாம் கனவுல நடந்த மாதிரி இருக்குதில்ல… எப்படி நடந்தது… என்ன நடந்ததுனு யோசனை பண்ணிகிட்டு இருக்கீங்களா? பேச முடியாது.. நடக்க முடியாது.. ஆனால் யோசிக்க முடியும் தானே? நல்ல யோசிச்சுப் பாருங்க ..உங்களுக்கு விளங்கலைன்னா நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன்” என்றாள். அருகில் இருந்த சேரை நகர்த்தி அவன் முன் போட்டு உட்கார்ந்தாள்.
“குமார் அத்தான்!! என்ன அப்படி கூப்பிடுறேனு பார்க்கிறீங்களா? நினைவிருக்குதா நாம சின்ன பிள்ளையா இருக்கும்போது நான் உங்கள அப்படித்தான் கூப்பிடுவேன். நீங்க என்ன ‘மக்கு மகா… மக்கு மகா…’னு விளையாட்டா கூப்பிடுவீங்க. அப்பல்லாம் நீங்க விளையாட்டுல ஜெயிக்கணும்ங்கறதுக்காகவே நான் விட்டுக் கொடுத்து தோத்திருக்கேன். ஆனா ஒன்னு புரிஞ்சுக்கனும் சார்.. நான் இப்ப ‘மக்கு மகா’ இல்லை… உங்ககிட்ட வாழ்க்கை விளையாட்ல தோக்கறதுக்கு சின்னப் பிள்ளையும் இல்லை .”
“சின்னப் பிள்ளையா இருந்த போதும் சரி …கல்யாணமான பிறகும் சரி.. நான் உங்க மேல உயிரையே வைச்சிருந்தேன். . எங்க அப்பாவுக்கப்புறம் அந்த ஸ்தானத்துல நீங்க இருந்து என்ன பார்த்துக்குவீங்கன்னு நம்பினேன். அந்தக் கண்மூடித்தனமான அன்புக்கும், நம்பிக்கைக்கும் பலனை நான் ரொம்பவே அனுபவிச்சுட்டேன் கடந்த சில மாதங்களாக ..”
“நான் உங்க மேல நான் வைச்சிருந்த நம்பிக்கை கண்ணாடி பாத்திரம் மாதிரி.. அதை ஜாக்கிரதையாகக் காப்பாத்திகிட்டு வந்தேன். ஆனா நீங்க கீழே போட்டு உடைச்சிட்டீங்க. இனிமே அது எப்படி ஒட்டும்? உடைந்த கண்ணாடி ஒட்டாது. நீங்க என்ன தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்க மாட்டீங்கன்னு தீவிரமா நம்பினேன். என்னுடைய அன்பு உங்களுக்கு பெருசா தெரியல… ஏன்னா நீங்க முதல்லயிருந்தே நேசிச்சது மகாவை இல்ல.. மகா மூலமா வரக்கூடிய சொத்தை…”
“நீங்க அடிக்கடி பெங்களூர் போனப்பவே உங்க பேர்ல சந்தேகம் வந்தது. ஆனா உங்க மேல வெச்ச கண்மூடித்தனமான அன்பு எதையும் தப்பா என்னை யோசிக்க விடல ..”
“அதுவும் என்னால ஏத்துக்கவே முடியாத ஒரு விஷயம்.. நீங்க அந்த வந்தனாவை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது. இந்த வீட்ல அவளோட சந்தோஷமா இருக்கனும்னு நெனச்சது. என் அப்பா கட்டிய இந்த வீடு எனக்கொரு கோயில். இந்தப் புனிதமான வீட்டை நீங்க அசிங்கப்படுத்தினது தான் எனக்கு தாங்க முடியாத கோபத்தை கொடுத்துச்சு.”
“நீங்க எந்த அளவுக்கு உங்க சுயபுத்தியை இழந்து காமத்தில் மூழ்கி கிடக்கிறீங்கன்னு புரிஞ்சுது. காமம் எவ்வளவு தூரம் உங்க கண்ணை மறைச்சிருந்தா உங்களுக்கு நம்ம குழந்தை கூட பெருசா தெரியல …உங்களுக்குத் தேவையானதெல்லாம் வந்தனா கூட ஒரு ஜாலியான வாழ்க்கை.. அதுக்கு சந்தோஷமா செலவழிக்கிறது இந்த மகாவோட சொத்தும் பணமும்”
“உங்களுடைய குறிக்கோளே பணம் தானே.. ஆனால் மகா உங்க வாழ்க்கையில இடைஞ்சலாக இருக்கக் கூடாது. அதுக்கு நீங்க இந்த அளவுக்கு போவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. நான் விவாகரத்து கொடுக்கிறதுக்கு தயாராக இருந்தபோது கூட நீங்க அதுக்கு ரெடியா இல்ல…”
“நான் எங்க அப்பா ரூமிலேயே அடைந்து கிடந்தேன். நீங்க ஏமாத்துற துக்கத்த தாங்க முடியாம தவிச்சது உண்மைதான். ஆனால் நிதானமா, தெளிவா, யோசிச்சு பார்க்கும்போது நான் ரொம்ப ஜாக்கிரதையா இல்லைன்னா என்னுடைய உயிருக்கு ஆபத்து வரலாம் என்பது மட்டுமல்லாமல் ….மகா மார்பிள்ஸ் கூட என் கையை விட்டுப் போயிடலாம்னு தோனுச்சு”
“எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு, சம்பாதிச்சு, கட்டி காப்பாத்துன இந்த சொத்தை அவர் விரும்பியபடி ஏழைகளுக்கும் தர்மத்திற்கும் போகனுமேயொழிய, எவளோ ஒருத்தியோட நீங்க சந்தோஷமா காம களியாட்டம் போடுறதுக்கு பயன்படக் கூடாது அப்படிங்கிறதுல நான் தீர்மானமா இருந்தேன். என்னுடைய வாழ்க்கை எனக்கு பெருசா தெரியல, என் வயித்துல வந்த குழந்தை கலைஞ்சப்ப கூட முதல்ல வருத்தப்பட்டாலும் பிறகு மனச தேத்திக்கிட்டேன் ..”
“என்னுடைய வாழ்க்கையின் மீதி காலத்தை குடும்பம், குழந்தைன்னு இல்லாமல் எங்க அப்பா ஆசைப்படி எளியவர்களுக்கு சேவை செய்வதில் இருக்கனும்னு யோசிச்சேன் … “
“அதே போல மகா மார்பிள்ஸை பெரிய லெவலுக்கு கொண்டு வரணும்ங்கற வெறி எனக்குள் எழுந்தது. உங்க கண்ணு முன்னாடியே நான் வாழ்ந்து காண்பிக்கனும்.. நீங்க நெனச்சிகிட்டிருந்த மாதிரி நான் ஒன்னும் கையாலாகாதவ இல்லை.. உங்களை மீறி என்னால விஸ்வரூபம் எடுக்க முடியும்னு காண்பிக்கனுங்கற வெறி ..”
“நான் சொன்னபடியே வாழ்க்கையில உயர்ந்து காண்பிப்பேன். நீங்க என்ன பார்த்து பொறாமைபடுவதைத் தவிர உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றாள் ஆக்ரோஷத்தோடு.
ராம்குமார் ஒரு வினோத சத்தத்தை எழுப்ப.. “எப்படி உங்களுக்கு இப்படியாச்சுனு தானே கேட்கிறீங்க… நான் எப்படி தப்பிச்சேன்னு தானே கேட்குறீங்க… சொல்றேங்க…” என்றாள் மகா கொதிப்போடு.
“நான் தப்பிச்சது அந்த கருமாரியம்மன் அருளாலயும்… என்ன சுத்தி இருக்கிற சில நல்ல அன்பு மனுஷங்களால தான்…”
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings