in ,

சிட்டுவும் சின்ன தங்க மீனும் (சிறுவர் கதை) – ✍ ஆர்த்தி சுவேகா

சிட்டுவும் சின்ன தங்க மீனும் (சிறுவர் கதை)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கிராமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு ஊர் தான் நாகூர். அழகிய தர்கா அருமையான பெரியாச்சி அம்மன் கோவில்  என அற்புதமான ஊர். அதிகம் இஸ்லாமியர் வசிக்கும் ஊர்.

இந்த ஊருக்கு ஒரு பெருமை உண்டு, திரு.ஈ.எம்.ஹனீப்பா அவர்களை நமக்கு கொடுத்த பெருமை பெற்ற  ஊர்.

அது அந்த ஊரின் கடை கோடியில் குயவர் தெரு. அந்த தெருவின் கடைசியில் ஒரு துரெளபதியம்மன் இடிந்த நிலையில் ஆலயம். அதன் பின்பறம் தன் கிளைகளை பரப்பி ஆயாசமாக நிற்கும் ஆலமரம்

அந்த மரம் தான் அந்த சுற்று வட்டார மக்களின் வாடகையில்லா குடில். வாகனங்களுக்கும் இளைப்பாறும் இடம், கால்நடைகள் உறங்கவும், வேலை செய்யும் தாய்மார்களின் குழந்தைகளின் தூளி தொங்கும் இடமாகவும் இருக்கிறது

அது மட்டுமா, குருவிகளின் சரணாலயம். பறவைகள் அனைத்தும் இனப்பெருக்கம் செய்ய வீடு கட்டி கிளைகளில் அழகான குட்டி குட்டி குருவி குஞ்சுகளை எட்டி பார்க்க கீச் கீச் என்ற ஒலி காற்றில் கலந்து அனைவரையும் இசையில் ஆழ்த்தும் ஓர் இனிய மரம் அது

அந்த ஆலமரத்தில் இருந்த ஒரு சிட்டுக் குருவி கூடு, அதில் பொறித்த சிட்டுகள். அதில் ஒரு குட்டி சிட்டு கண் திறந்து கிச் கிச் என கத்தியது.

பசி… அந்த குட்டி சிட்டுவின் தாய் சிட்டு குருவி இறை எடுக்க போயிருந்ததால், அந்த குட்டி படபடவென முளைத்து லேசாக இறகு விட்டிருந்த இறக்கையை அடிக்க, சட்டென மரத்தின் கூட்டில் இருந்து கீழே விழுந்து விட்டது

அது விழுவதை கண்ட மரத்தின் ஆல இலை ஒன்று பறந்து வந்து ஏந்திக் கொண்டது தன் மீது.

“சிட்டு சிட்டு… நீ குட்டியா இருக்கே, உனக்கு பறக்க தெரியாது. அதனால எம்மேல நல்லா உட்கார்ந்துக்கோ, ஊரை சுற்றி காட்டறேன்” என்றது இலை

“அய்யோ இலையக்கா இலையக்கா, எனக்கு பசிக்குது. அம்மா இன்னும் வரல, அதான் எட்டி பார்த்தேன் கீழ விழுந்துட்டேன். நல்லவேளை அடிபடல, நீ வந்து புடிச்சி கிட்டே. உனக்கு நன்றி” என்றது

“பசிக்குதா… வா உன்னை பழ தோட்டத்திற்கு அழைச்சிட்டு போறேன், அங்க நீ பழம் கொஞ்சம் சாப்பிடு. பிறகு என்னோட தோழிய காட்டறேன்”

“உன் தோழியா யாரு?”

“அதுவா… தங்க மீன். வாரீயா?”

“ம்ம் ஆனா… அம்மா வரதுக்குள்ள என்னை கொண்டு வந்து இங்க விடுவியா இலையக்கா?”

“உம் சீக்கிரம் வந்துடலாம் வா, ஏறி நல்லா புடிச்சிக்கோ”

இலையின் மீது சிட்டு அமர்ந்து கொள்ள, இலை பறக்க ஆரம்பித்தது. அழகாக இந்த ஊரு உலகை வேடிக்கை பார்த்தபடி ஜாலியாக சென்றது வேடிக்கை பார்த்தபடி சிட்டு

நேராக ஒரு பெரிய வீட்டின் ஜன்னல் அருகே நிறுத்தி இறக்கி விட்டது. இலையக்கா

அந்த ஜன்னல் வழியாக எட்டி பார்க்க, அங்கே ஓர் மீன் தொட்டி. அந்த மீன் தொட்டியில் ஏகப்பட்ட தங்க மீன்கள் துள்ளிக் கொண்டிருக்க, ஒரு மீன் மட்டும் வெளியே வருகிறது

“இலையக்கா வந்திருக்கியா, அது யாரு சிட்டு குட்டியா. சரி சரி நாம ஊர் சுற்றி பார்க்கலாம்” என கூறி இலை மீது சிட்டுவும் தங்க மீன் குட்டியும் அமர்நதுக் கொள்ள, இலை பறக்க ஆரம்பித்தது

நேராக கடற்கரைக்கு சென்றது. கடல் பகுதியில் மணலில் விளையாடி விட்டு, “நான் கடலை பார்க்க வேண்டும் ஆகாயத்திலிருந்து” என சிட்டுவும் தங்க மீனும் சொல்ல, மீண்டும் இருவரையும் சுமத்துக் கொண்டு பறக்கிறது இலை

கடலின் மேற்பரப்பில் பறந்துக் கொண்டிருக்க, “அழகாக இருக்கிறது மீனக்கா, நீ இந்த கடல்ல போயிடேன். இங்க நிறைய்ய தண்ணி இருக்கு நீ நல்லா நீந்தி விளையாடலாமே”

“அய்யோ வேணடாம், இந்த கடல் ஆபத்து. நா அந்த பெரிய வீட்டு கண்ணாடி தொட்டிகுள்ளயே இருந்துக்கறேன். அது தான் எனக்கு பாதுகாப்பு”

“ஏன் இப்படி சொல்றே?”

“ஆமா அதோ பாரு மீனவர்கள் மீன் பிடிக்க வலை போடறாங்க, அதில நாங்க பிடி படுவோம். பொறிச்சி மனுஷங்க சாப்பிட்டுடுவாங்க எங்களை”

“அய்ய்யோ அப்படியா?”

“ஆமா என்னை போல இருக்கும் சிறிய மீன்களை பெரிய மீன்கள் தின்று விடும். அதனால் தான் நாங்க அழகிய கண்ணாடி தொட்டியிலேயே வளர்வது தான் பாதுகாப்பு”

“சரி தான்”

“இந்த கடல் தாய்’க்கு அதிக இடையூறு கொடுத்தால் இந்த மக்களை பழி வாங்கிடும் சுனாமி போல”

“ஓ… அப்படியானா இந்த கடல் தாயை பாதுகாக்க வேண்டுமா?”

“ஆமாம், அதே போல தான் எங்கள் நிலையும்” என்றது இலையக்கா

“என்ன இலையக்கா சொல்றே?”

“ஆமா சிட்டு, ரோடு போட பெரிய மரங்கள் இடைஞ்சலா இருக்குனு எங்களையும் வெட்டி    போட்டுடறாங்க. பெரிய கார்ப்பரேட் கம்பெனி கூட வருதாம்”

“அட கடவுளே… உங்களையும் வெட்டி போடறாங்களா?”

“ஆமா சிட்டு, நாங்க இல்லைன்னா சுத்தமான காற்று கிடையாது, ஆக்ஸிஜன் குறைந்து போகும். மழை பெய்யாது, அப்புறம் என்ன தண்ணீர் பஞ்சம் மின் உற்பத்தி குறைவு என பல கஷ்டங்கள் இந்த நாட்டு மக்களுக்கு உண்டாகும் தெரியுமா?”

“இதெல்லாம் உனக்கே தெரிஞ்சிருக்கு, இந்த மனிதர்களுக்கு தெரியாதா? ஏன் இந்த மனிதர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருக்கிறார்கள்”

“அப்படி இல்லை சிட்டு, மனிதர்களில் சில நல்லவர்களும் உண்டு. அப்துல் கலாம் மாதிரி விவேக் சார் மாதிரி”

“அவங்க என்ன செய்தாங்க?”

“அவங்க நிறைய்ய மரம் நட்டாங்க. அவங்க சுவாசம் இழந்து போயிட்டாங்க, ஆனா மற்ற மனிதர்கள் சுவாசிக்க மரம் நட்டு விட்டு போயிருக்காங்க”

“ஓ அப்படியானா நல்லவங்க உண்டு தானே”

“ம்ம் உண்டு தான், ஆனாலும் நாம் பாதுகாப்பா இருந்துக்கனும். சிட்டு உனக்கு தெரியுமா உங்க இனம் அழிஞ்சிகிட்டு வருது என்று”

“அய்யய்யோ நாங்க அழிஞ்சிடுவோமா?” என அழ ஆரம்பித்தது சிட்டு குட்டி, “எப்படி நாங்க அழியறோம்னு சொல்றே?”

“இந்த மரங்களை அழிச்சிட்டு மரங்கள் மாதிரியே மின் மரங்களை நட்டு வச்சுட்டாங்க, அதில் வரும் மின் கம்பிகளில் அடி பட்டு இறப்பது சிட்டு குருவியும் பறவை இனங்களும். அதனால அழிவை நோக்கி”

“அதுக்கு என்ன செய்யறது? எனக்கு பசிக்குது, ம்ம்…. எனக்கு அம்மா வேணும், நா எங்க அம்மாவை பார்க்கனும். எனக்கு பயமா இருக்கு, எங்க இனம் அழிஞ்சிட்டா நா என்ன செய்வேன்”

“அய்யோ சிட்டு, இப்ப உடனே நீ ஒன்றும் ஆகிட போறதில்ல, நீ பயப்படாதே. அழாதே சிட்டு, உன்னை பத்திரமா கொண்டு போய் விடறேன்”

கண்களை துடைத்துக் கொண்ட சிட்டு கேட்டது, “நாங்க அழியாம இருக்க வழி இல்லையா?”

“இருக்கு, எல்லா அழிவுக்கும் ஒரு வழி உண்டு. அதை புரிந்து மனிதன் தான் செயல் பட வேண்டும்”

“சொல்லு இலையக்கா, என்னா வழி?”

“சொல்றேன் கேளு… முதலில் இயற்கைய அழிக்க கூடாது, மரங்களை வெட்ட கூடாது. குளங்களை தூர் வாரனும், கழிவுகளை சுத்திகரிப்பு பண்ணனும். இந்த டெலிபோன் மரங்கள் அழிக்க முடியாத அளவுக்கு மனிதனோடு இன்றியமையாததா ஆகி விட்டதால, பறவைகளை சரணாலயங்களில் வளர்க்கலாம்.

சிட்டு குருவிகளுக்கு  தனியாக இடம் அமைக்கனும், அல்லது ஒவ்வொரு வீடுகளிலும் மீன் தொட்டி வச்சிருப்பது போல சிட்டு குருவி வளர்க்க வேண்டும். காடுகளை அழிக்கறேன்னு பனை மரங்களை கூட அழிச்சிட்டாங்க, மீண்டும் புது வசந்தம் போல மரங்கள் வளர்க்கபட்டால் எல்லாம் அழகாக இருக்கும்.

நம்ம அரசாங்கம் வீடு கட்டி தருவது மாதிரி நிலம் கொஞ்சமா வீட்டுக்கு வீடு கொடுத்து விவசாயம் செய்ய சொல்லி வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து காட்ட சொல்லனும். அப்ப தான் இதுக்கெல்லாம் விடிவு காலம் வரும் சிட்டு”

மூவரும் பேசிக் கொண்டே அந்த பெரிய வீட்டருகே வந்து விட்டனர். ஐன்னலில் இறக்கி விட, தங்க மீன் துள்ளி ஓடி கண்ணாடி பெட்டிக்குள் அடைக்கலமாகி துள்ளி குதிக்க ஆரம்பித்தது

“டாட்டா” கூறி விட்டு  இலையக்காவும் சிட்டு குட்டியும் புறப்பட்டனர். தங்க மீனை பிரிந்த பிறகு, சிட்டுவுக்கு சோகமாகி விட்டது

சிட்டுவுக்கு இவ்வளவு நேரம் பசிக்காத வயிறு பசிக்க ஆரம்பித்தது.

“இலையக்கா பசிக்குது”

“அதோ அத்தி மரம், இறக்கி விடறேன் பழம் சாப்பிடறியா?”

“வேண்டாம் எனக்கு சாப்பிட தெரியாது, அம்மாகிட்ட அழைச்சிகிட்டு போ இலையக்கா” என்றது

சரியென இருவரும் கிளம்பினர். ஆலமரம் வந்து விட்டது,  சிட்டுவை அதனருகே இறக்கி விட்டது இலை

இறங்கிய சிட்டு மெதுவாக தத்தி தத்தி  மரத்தின் மீது ஏறி தனது கூட்டில் போய் அமர்ந்து கொண்டது

இலையக்கா பறந்து காற்றில் மறைந்து குப்பையில் விழுந்தது

“அய்யய்யோ இலையக்காவுக்கு என்ன ஆச்சி, அவங்களை காற்று அழைச்சிட்டு போயிடுச்சே” என சிட்டு அழ ஆரம்பிக்க

சிட்டுவின் அருகே இருந்த ஆலமரக் கிளையில் மற்றோர் இலை, “நாங்கள் ஒன்று காய்ந்து விட்டால் ஒன்று முளைத்து விடுவோம். மனிதர்களும் எங்களை போல தானே ஒருவர் இறந்தால் இனனொருவர் பிறந்து விடுவார், ஆனா அவங்க மனிததன்மையோடு நடந்துகிட்டு இந்த இயற்கை வளங்களையும் பாதுகாத்தா நாட்டுக்கும் நலம், அனைத்து உயிர்களுக்கும் நலம் பயக்கும்” என்றபடி இலைகள் காற்றில் அசைந்து தாலாட்டு பாட, மரக்கிளையில் கூட்டில் உறங்கி போனது சிட்டு குட்டி

சற்று நேரத்தில் தாய் குருவி உணவுடன் வந்து விட்டது

இப்படி தான், ஒன்றை சார்ந்த ஒன்றாக மனித வாழ்வு. இதை அறியாமல், அறியாமை மிக்க மக்கள் இயற்கையை அழிக்கிறார்கள். இது மாற வேண்டும், இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்

#Ads – Kids Story Books – Deals from Amazon 👇

 

#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. இலையும் சிட்டுவும் தங்கமீனும் அழகான பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது ஆர்த்தி. அழகான குழந்தைகளுக்கான கதை.

  2. சிறப்பான சிறுவர் கதை
    சிறந்த நீதிபோதனை சொல்லும்
    சமூக அக்கறை உள்ள கதை
    வாழ்த்துகள்

  3. கற்பனை அழகானது என்பதை எழுத்தாளர் நிரூபித்துள்ளார்..இலையக்காவும் சிட்டுவும் ஊர் சுற்றி வந்து இயற்கையை காக்க எச்சரிக்கை மணி இடுகிறார்கள்..குழந்தைகள் வாசித்து மகிழ வேண்டிய சின்னஞ்சிறு கதை..வாழ்த்துகள்.
    எழுத்தாளர்
    ரபியா

கம்பிகளுக்குப் பின்னால் (சிறுகதை) – ✍ கண்ணன்

இரவென்னும் வானவில் (சிறுகதை) – ✍ பரத் ஸ்ரீனி