கனவின்றி காலம்
போகுமா கண்ணில்…
வினையின்றி வாழும்
மானுடமா நெஞ்சமதில்….
நம்பிக்கையின்றி வாழ்வில்
வெற்றிடங்கள்
இன்றில்….
பயனின்றி பாரும்
நாடுமோ பயணமதில்….
அலையின்றி கடலோரம்
ஆசுவாசம் தோன்றில்….
நிலையின்றி
போகாதோ விருட்சங்களுமே
நிழலால்…
விழியின்றி தூக்கம்
பகலான கானலால்…
வழியின்றி வறட்சியாய்
அருவியாய் நெஞ்சினில் ….
பயணங்களின்றி
பார்க்குமோ வில்லின்
வியர்வையால்….
துளிகளின்றி மழையும்
துயரங்களின் தவிப்புகளில்….
மயக்கங்களின்றி வழிபாதை
கரைசேர்க்குமோ
இயற்கையில்…
நதியின்றி நாணலின்
காற்றின் தவிப்பில்…
உறவின்றி ஓடுமோ
மேடுபள்ளமும் வாழ்வில்…
நனவின்றி நாளெல்லாம்
வெற்றிக்கொடி
கட்டமுடியுமோ?….
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings