in ,

நைட் டிரைவ்❤ (சிறுகதை) – ✍ கருணா, கோவை

நைட் டிரைவ்❤(சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 127)

து ஒரு ஞாயிறு மதியம்

சுதீர் தன் குடும்பத்தோடு மதிய உணவருந்தி விட்டு வீட்டின் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்த போது, அவரின் 10 வயது பேரன் ஆதி அவரருகே வந்து “தாத்தா, நீயும் பாட்டியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்களாமே. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நீங்க பாட்டிய மொதல் எப்ப பாத்தீங்கன்னு சொல்லுங்களேன்” என்று சொல்லிக் கொண்டே சுதீர் அருகில் அமர்ந்தான்.  

சுதீரின் மருமகளும், “ஆமா மாமா, எனக்கும் அந்த கதைய கேக்கணும்ன்னு இருக்கு. நீங்க அத்தைய உருகி உருகி காதலிச்சீங்கன்னு அவரும் அடிக்கடி சொல்லுவாரு. அந்த கதைய கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று கூறிக்கொண்டே மருமகளும், மகனும் கதை கேக்க ஆர்வமாக சுதீர் அருகே வந்து அமர்ந்தார்கள்

இதைக் கேட்டதும் சுதீர் முகத்தில் பிரகாசமும், புன்னகையும் ஒரு சேர மலர்ந்தது. மனைவியை பற்றி பேசுவதென்றால் அவருக்கு அலாதி பிரியம். 76 வயதில் கூட, மனைவி மேல் அப்படி ஒரு காதல் அவருக்கு

மனதில் பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டே பேசத் தொடங்கினார் சுதீர்

அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு. நாங்க நண்பர்கள் எல்லாம் சேந்து ஹோட்டலுக்கு சாப்பிட போய் இருந்தோம். அப்போ தான் எங்களுக்கு பக்கத்து டேபிளில் அவளை பார்த்தேன்

பாத்த கணமே மனசுக்குள்ள ஏதோ சந்தோசம். அது என்னனு இப்பவும் சொல்லத் தெரியல, ஆனா அன்னைக்கு அவள பாத்த அந்த முதல் நிமிஷத்த இப்போ நினைச்சாலும் மனசுல அழகான ஒரு உணர்வு

எதேச்சையா முதல் முறை பாத்த அவள் முகத்தை அப்பறம் அடிக்கடி பாக்க தோணுச்சு. அது ஏன்னு சொல்லத் தெரியலை. ஆனா அடிக்கடி அவளோட டேபிள் பக்கம் தான் கண்ணு போச்சு. டேபிள் பக்கம்ன்னு சொல்றத விட, அவள் முகத்தோட பக்கம்ன்னு சொன்ன சரியா இருக்கும்” என்று சொல்லி, ஒரக் கண்ணால் அவர் மகனைப் பார்த்து புன்னகைத்தார் 

அந்த புன்னகையோடே மீண்டும் தொடர்ந்தார். 

“உங்க அம்மாவும் அவளோட நண்பர்களோட வந்திருந்தா. எல்லாத்துக்கும் ஏதோ பெரிய ப்ராஜெக்ட்க்கு வழிமுறை சொல்ற மாறி ஆர்டர் போட்டுட்டு இருந்தாள். அவளோட நண்பர்களும், இவ சொல்ற எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு இருந்தாங்க. 

அப்படி என்னதான் பேசறா இவனு எனக்குள்ள ஒரு ஆர்வம், அதனால கொஞ்சம் காதை தீட்டி அவ பேசறத கேக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் தெரிஞ்சுது யாருக்கோ அன்னைக்கு நைட் பர்த்டே கொண்டாட பிளான் பண்ணிட்டு இருக்காங்கனு, அதுவும் நைட் 12 மணிக்கு மெரினா பீச்ல

இதை எல்லாம் கேட்டதும் அப்படி யாருக்கு இவள் இவ்ளோ சீரியஸ்ஸா பிளான் பண்றான்னு எனக்குள்ள ஒரு ஆர்வம். ஒரு வேளை பாய் பிரண்டா இருக்குமோன்னு எனக்குள்ள திக்குன்னுச்சு. அது ஏன் அவளுக்கு பாய் ப்ரண்ட்னா எனக்கு ஷாக் ஆகணும்னு அப்ப புரியல.  

சரி ,எது எப்படியோ டின்னர் முடிஞ்சதும் அவளையும் அவ நண்பர்களையும் பின் தொடரணும்னு மனசுக்குள்ள முடிவு பண்ணிட்டேன். அதே முடிவோட என் நண்பன் சரவணன்கிட்ட இன்னைக்கு டின்னர் முடிச்சதும் நாம ரெண்டு பேர் மட்டும் மெரினா பீச் போறோம்ன்னு சொன்னேன். 

என் நண்பனுக்கு ஒரே ஆச்சர்யம், “நீயா பீச் போலாம்னு சொல்ற, அதுவும் நைட்ல. இப்படி எல்லாம் நீ சொல்ற ஆள் இல்லையே. எப்பவுமே டின்னர் முடிச்சதும் வீட்டுக்கு போய் தூங்கற ஆளாச்சே நீ”னு கேட்டான்

என்ன சொல்றதுன்னு தெரியாம “இல்ல இன்னைக்கு ஏதோ தோணுச்சு”னு சொல்லி சமாளிச்சேன்

அப்படியே எங்க ரெண்டு குரூப்பும் பேசிக்கிட்டே சாப்பிட்டுட்டு இருந்தோம். கிட்டத்தட்ட எங்க ரெண்டு குரூப்பும் ஒரே டைம்ல டின்னர் முடிக்க, நானும் சரவணனும் எங்க நண்பர்கள்கிட்ட ஏதோ ஒரு காரணம் சொல்லி அப்படியே தனியா வந்துட்டோம். 

அதே சமயம் அவளும் அவ நண்பர்களோட ஹோட்டல்ல இருந்து வெளிய வந்து அவளோட நண்பன் வண்டில ஏறிக்கிட்டா. அவங்க வண்டிய ஸ்டார்ட் பண்ணதும் நானும் என் காரை ஸ்டார்ட் பண்ணி அவங்க குரூப்ப பின் தொடர ஆரம்பிச்சேன். 

என் நண்பன் சரவணனுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சுருச்சு நான் ஏன் மெரினா போகணும்ன்னு சொன்னேன்னு. 

உடனே “என்னடா புதுசா பொண்ணை எல்லாம் பாலோ பண்றே” என்றான். 

“தெரியல சரவணன், எனக்கும் புதுசா இருக்கு”னு சொல்லவும்

“நீ நடத்துடா” னு சிரிச்சான் 

மெரினால நைட் 12 மணிக்கு நண்பர்கள் சகிதமா அவள் நடுவுல நின்னுட்டு இருந்தாள். எங்கடா அண்ணாவையும் அண்ணியையும் காணோம். அண்ணிகிட்ட கரெக்ட்டா இங்க வர சொன்னியான்னு அவள் கேக்கும் போதே, ஒரு ஆணும் பெண்ணும் அங்கு வந்து சேந்தாங்க. 

அவங்க தான் இவ சொன்ன அண்ணா அண்ணின்னு புரிஞ்சுது. அப்பவும் மனசுக்குள்ள யாருக்கு இந்த பர்த்டே கொண்டாட்டம். இவளுக்கு யாரு மேல அவ்ளோ அக்கறை, அன்புன்னு தெரிஞ்சுக்க எனக்குள்ள ஒரே துடிப்பு

இதை எல்லாம் யோசிச்சுகிட்டே எப்படியாச்சும் அவகிட்ட பேசணும்ன்னு இருந்தப்போ தான், அங்க அவகூட என் காலேஜ் நண்பன் கார்த்திக்கை பார்த்தேன்

இது தான் சாக்குனு, “டேய் கார்த்திக்”னு கூப்பிட, அந்த கும்பலே என்னை பாத்துச்சு, அவளும் பாத்தா

அப்பறம் அப்படியே அவன் கூட பேசிட்டே நானும் சரவணனும் அவளோட நண்பர்கள் கும்பலோட இணைஞ்சுட்டோம். 

அப்படியே பேச்சுவாக்குல கார்த்திக்கிட்ட கேட்டேன் “யாருக்குடா பர்த்டே?”னு. 

 அவள் அண்ணானு சொன்னவரை காட்டி “இவருக்குத் தான்”னு சொன்னான் கார்த்திக்

அப்போ மனசுல வந்துச்சே ஒரு மகிழ்ச்சி, சொல்ல வார்த்தை இல்லை. ஆனா எதையும் வெளிலக் காட்டிக்காம “அப்படியா சரி”னு சொல்லிட்டு அமைதியாகிட்டேன்

அப்படியே உங்க அம்மாவ காட்டி, “இந்த பொண்ணு அண்ணானு சொல்லிச்சு. அவர் தங்கச்சியா இந்த பொண்ணு”னு நான் கேட்க 

சரவணன் மெதுவா என் காதோரம் வந்து “ரொம்ப டீடெயில்ஸ் விசாரிக்கற போல”னு சொல்லி கிண்டலா சிரிச்சான்

“ஆமா அவளுக்கு அண்ணன் தான், ஆனா கூட பொறந்தவன் இல்லை. அவ வீட்டுக்கு ஒரே பொண்ணுடா. இவனுக்கு சொந்தம்ன்னு யாரும் இல்லை. ஆபீஸ்ல பேசி பழக்கம். அப்போ அண்ணானு கூப்பிட ஆரம்பிச்சு, இப்ப இவங்க பாசம் பாசமலர் படத்தையே மிஞ்சிரும் போல”னு  சொல்லி கார்த்திக் சிரிக்க, நானும் சிரிச்சு வெச்சேன். 

நேரம் ஆக ஆக எனக்கு அவகூட பேசணும்ன்னு ஆர்வம் ஜாஸ்தியாச்சு. 

அப்பறம் அப்படியே பேச்சுவாக்குல “ஏன்டா பிரெண்ட்ஸுக்கு எங்களை இண்ட்ரடியூஸ் பண்ண மாட்டியா?”னு நான் கேக்க

“அதுக்கு என்னடா குடுத்துட்டா போச்சு”னு கார்த்திக் என்னையும் சரவணனையும் அங்க இருந்த பத்து பேரையும் ஒரு ஒருத்தரா அறிமுகம் செஞ்சு வெச்சான்

“நீ யாருக்காக கேட்டியோ, அது தெரியாம கார்த்திக் மொத்த குரூப்பையும் இன்ட்ரோ குடுக்கறான்டா”னு சரவணன் முணுமுணுக்க

“டேய் நீ சும்மா இருடா”னு அவன் கால மிதிச்சேன்.   

கடைசியா தான் உங்க அம்மாவை இன்ட்ரோ குடுத்தான். “பேரு சரண்யா, நல்ல பொண்ணுடா, அப்படினு சொல்லலைன்னா அடிப்பா”னு சொல்லி அவன் சிரிக்க 

அவள் அவனை மொறைச்சுட்டே, “அவன் இப்படி தான், என்னை கிண்டல் பண்ணாட்டி தூக்கமே வராது”னு சொல்லி சிரிச்சுட்டு. என்னை பாத்து “ஹாய்”னு சொன்னா

நானும் “ஹாய்”னு சொல்ல, மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம். ஒரு வழியா பேசிட்டேன்னு.   

கார்த்திக் அதே சமயம் “உண்மைய சொல்லணும்ன்னா ரொம்ப நல்ல பொண்ணுடா. யாராவது மேல அன்பு வெச்சுட்டா அவ்ளோ தான், அவங்களுக்காக என்ன வேணா செய்வா”னு சொல்ல, அப்போ அவளோட மொத்த அன்பும் எனக்கு கிடைக்கணும்னு தோணுச்சு. 

அது ஏன் அப்படி தோணுச்சுன்னு இப்போ வரைக்கும் புரியல, ஆனா அப்படி தோணுனது சரின்னு மட்டும் தெரியும்

அப்படியே எல்லாம் பேசி முடிச்சு, கேக் எல்லாம் கட் பண்ணி முடிக்க மணி 12:40 ஆகிருச்சு. சரி எல்லாரும் வீட்டுக்கு போலாம்ன்னு கிளம்ப, இவள் மட்டும் “நைட் டிரைவ் போலாமா?”னு அவள் நண்பர்கள்கிட்ட கேட்டா. 

அவளோட எல்லா நண்பர்களும் “நாளைக்கு போலாமே ப்ளீஸ், இன்னைக்கு எல்லாருக்கும் டையார்டா இருக்கோம்”னு சொல்ல, இவளும் சரின்னு அரைகுறை மனசோட சொல்லிட்டு, எனக்கும் பை சொல்லிட்டு, கார்த்திக் கூட கிளம்பினாள்

அப்போ நான் போய் அவகிட்ட “உங்க வீடு எங்கே?”னு கேக்க 

“அண்ணாநகர்ல ஹாஸ்டல்ல இருக்கேன்”னு சொன்னாள்

“ஏன் ஹாஸ்ட்டல்?”

“சொந்த ஊரு கோயம்பத்தூர், இங்க வேலை பாத்துட்டு இருக்கேன்”னு சொல்லிட்டு, கார்த்திக் கூட பைக் ஏறப் போனாள். 

அப்ப தான் ஞாபகம் வந்தவனாய், “டேய் கார்த்திக், உன் வீடு இங்க தானேடா பக்கத்துல, எங்க வீடு அண்ணாநகர்ல தான, நான் வேணா டிராப் பண்ணிடவா, உன் பிரின்ட்க்கு ஓகேனா” நான் சொல்ல

“சரண் உனக்கு ஓகே வா”னு கேட்டான் கார்த்திக்

அவளுக்கும் என்ன தோணுச்சோ “ஓகே”னு சொல்லிட்டா

அப்பறம் நானும், சரவணனும், அவளும் என் கார்ல கிளம்பினோம்.போற வழில சரவணனை அவர் வீட்ல ட்ராப் பண்ணிட்டு ஒரு நிமிஷம் காரை நிறுத்தினேன்

“ஏன் காரை நிறுத்திட்டீங்க?”னு அவ கேட்டாள். 

அப்போ எனக்குள்ள ஏதோ தோண, அவகிட்ட கொஞ்சம் தயங்கி “நைட் டிரைவ் நான் கூட்டிட்டு போகவா?”னு கேட்டேன். 

அவளும்  “சரி”னு சொன்னா

எனக்கு ஆச்சரியமும், சந்தோஷமும் ஒன்னு சேர அவகிட்ட கேட்டேன், “அது எப்படி இன்னைக்கு தான் பாத்தோம், அதுக்குள்ள நைட் டிரைவ் என்னோட வர ஓத்துக்கிட்டீங்க? என் மேல அவ்ளோ நம்பிக்கையா?”னு கேக்க

“இல்ல, என் மேல எனக்கு அவ்ளோ நம்பிக்கை. என்னை மீறி யாரும் என்னை எதுவும் பண்ண முடியாதுன்னு ஒரு தைரியம்”னு சொல்லி அழகா சிரிச்சா. 

“ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு”னு நானும் சொல்லிட்டு சிரிச்சேன். 

“தைரியமும் தான், அதோட ஹோட்டல்ல இருந்தே நீங்க என்னைத் தான் பாத்துட்டு இருந்தீங்க. இங்க மெரினா கூட என்னை பாக்கத் தான் வந்தீங்க. அப்பறம் கார்த்திக்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொன்னது கூட என்கிட்ட பேசத் தான்னு எனக்குத் தெரியும்” னு சொன்னாளே பாக்கணும். 

எனக்கு என்ன சொல்றதுனு தெரியாம திருதிருனு முழிக்க, “பரவாயில்லை நீங்க எனக்காக இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க, என்கிட்ட பேச இவ்ளோ மெனக் கெட்டுருக்கீங்க,அதனால உங்களையும் நம்பலாம்னு தோணுச்சு. அதான் ஓகே சொல்லிட்டேன்”னு சொல்லி கிண்டலா ஒரு சிரிப்பு சிரிச்சா

நானும் என்ன பதில் சொல்றதுனு தெரியாம கொஞ்சம் அசடு வழிஞ்சுட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணேன்

அப்பறம் அன்னைக்கு நைட் முழுக்க சென்னைய சுத்தி சுத்தி வந்தோம். நிறைய பேசினோம். அவளை பத்தி நானும், என்னை பத்தி அவளும் நிறைய தெரிஞ்சுக்கிட்டோம்

ECR ரோடு போனோம், ஜெமினி பிரிட்ஜ் போனோம், நைட் ரெஸ்டாரண்ட் போனோம், அப்பறம் காரணமே இல்லாம வண்டிய நடுவுல நிறுத்தி கொஞ்ச நேரம் மௌனமா இருந்தோம்

ECR ரோட்ல போகும் போது ஒரு சைடு கடல் அலை ஆர்ப்பரிக்க, இவ அதை குழந்தை மாறி ரசிக்க, நான் இவளை ரசிக்க, அந்த மௌனமான இரவில் கூட என் மனசுக்குள்ள ஒரே ஆர்ப்பாட்டமா இருந்துச்சு. அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. 

அப்பறம் ஜெமினி பிரிட்ஜ் மேல போகும் போது கார கொஞ்சம் நிறுத்த சொன்னா. எதுக்குன்னு புரியாம நான் நிறுத்த, காரவிட்டு இறங்கி ஊர் உறங்கும் அந்த நேரத்துல இவ நட்சத்திரங்களோட ஏதோ மாநாடு நடத்தற மாறி இரவையும் வானத்தையும் அவ்ளோ அழகா ரசிச்சுட்டு இருந்தா. 

நானும் இவள் அழகை ரசிச்சுட்டு இருந்தேன். அது புரிஞ்சுதா இல்லையான்னு தெரியல, ஆனா திடீர்ன்னு ஏதோ ஞாபகம் வந்தவளாய் “ரொம்ப ரசிச்சிட்டோம் போல, வாங்க போலாம்”னு சொன்னா

எதுக்கு சொன்னான்னு வழக்கம் போல எனக்கு புரியல. 

அப்பறம் நைட் ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டு கொஞ்ச நேரம் அப்படியே ஏதேதோ கதைகள் பேசிட்டு இருந்தோம். அவ பேசறதே கேட்டுட்டே இருக்கலாம் அவ்ளோ அழகா பேசுவா. அவ தமிழ் பேசறதே அவ்ளோ தெளிவா இருக்கும், அழகா இருக்கும் கொஞ்சம் கம்பீரமாவும் இருக்கும்.  

பேசிக்கிட்டே மணி பாத்தப்போ தான் எங்களுக்கே தெரிஞ்சுது, 4 மணி நேரத்துக்கு மேல சுத்திருக்கோம் பேசிருக்கோம்னு. 

பின் ஏதோ யோசித்தவளாய், “மணி 5 ஆகிருச்சே”னு சொன்னாள்

“ரூம்க்கு கொண்டு போய் விடணுமா?”னு நான் மனசே இல்லாம கேக்க

“இல்ல சூரிய உதயம் பாக்கணும், பெசன்ட் நகர் பீச் கூட்டிட்டு போறீங்களா?”னு கேட்டா. 

“இது என்ன கேட்டுகிட்டு, கூட்டிட்டு போங்கன்னு சொன்னா கூட்டிட்டு போறேன்”னு உற்சாகமாய் காரை ஸ்டார்ட் பண்ணி பெசன்ட்நகர் பீச் போனோம்

ரெண்டு பேரும் சேந்து நின்னு சூரிய உதயத்தை ரசிச்சுட்டு இருக்கும் போதே, எங்களுக்குள்ள எங்களுக்கே தெரியாம காதல் உதயமாகிட்டு இருந்துருக்கு

சூரியனை ரசிச்சோமா இல்லை எங்க காதலை உணர்ந்தோமான்னு தெரியாம, ரெண்டு பேரும் ஒருவர் அருகே ஒருவராய் நின்னுட்டு இருந்தோம்

அப்பறம் அடுத்த நாள் அவளை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடும் போது மணி காலைல 7

இறக்கி விட்டதும் “நைட் டிரைவ்க்கு தேங்க்ஸ்”னு சொல்லிட்டு, போக மனம் இல்லாம மெதுவா அவ திரும்ப, எனக்குள்ள மின்னல் மாறி ஏதோ தோணுச்சு 

“ஒரு நிமிஷம்”னு சொல்லி அவள் பக்கத்துல போய், “இனிமே நைட் டிரைவ் எப்பவுமே சேந்து போலாமா?”னு கேட்டுட்டு, அவ என்ன பதில் சொல்லுவாளோன்னு ஒரு பயத்தோட அவ பதிலுக்கு காத்திருந்தேன்

“நைட் டிரைவ் மட்டுமில்ல, இனிமே எங்க போகணும்னாலும் சேந்து போவோம்” னு சொன்னா. 

அதை கேட்டதும் என் மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுது. இனம் புரியாத ஒரு சந்தோசம் எனக்குள்ள.

அப்ப தான் என் மனசுல மட்டுமில்ல, அவ மனசிலையும் எனக்குள்ள இருந்த அத்தனை காதலும் அன்பும் இருந்துருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்

“அன்னைல இருந்து என்னை விட்டு பிரியாம இருந்தவ, என்ன நினைச்சாளோ நம்ம எல்லாத்தையும் விட்டுட்டு போய்ட்டா” என்று  சொல்லும் போதே, சுதீர் கண்களில் கண்ணீர்

கண்ணீரை துடைத்துக் கொண்டே “கல்யாணத்துக்கு பிறகு ஒரு நாள் கேட்டேன் உங்க அம்மாகிட்ட, அது எப்படி அன்னைக்கு நான் கேட்டதும் யோசிக்காம நைட் டிரைவ் வந்தே? கேட்டதும் எனக்கு ஓகே சொன்னே?”னு 

உடனே உங்க அம்மா “அது எப்படி என்னை பாத்ததும் பின்னாடி வந்தீங்க? பாத்த அன்னைக்கே நைட் டிரைவ் போலாம்னு கேட்டீங்க? அன்னைக்கே எப்பவும் சேந்து இருக்கலாமான்னு கேட்டீங்க? அப்படித் தான் இதுவும்”னு சொல்லி எப்பவும் போல அழகா சிரிச்சா. 

“எவ்ளோ டென்ஷன் இருந்தாலும், அவ முகத்த பாத்தா போதும் எல்லாம் சரி ஆகிரும். எத்தனையோ முறை நான் சோந்து போனப்ப எல்லாம் எனக்கு நம்பிக்கை குடுத்தது, எல்லா சந்தர்ப்பத்துலயும் சிரிக்கும் அவ முகம் தான்”

“இப்பக் கூட, ஹால்ல மாட்டிருக்கே அவ சிரிச்ச முகத்தோட ஒரு புகைப்படம், இன்னைக்கும் நான் சோந்து போகும் போதெல்லாம் தேத்தறது அந்த சிரிப்பு தான்”னு கண்ணீரும் புன்னகையுமா சொன்னாரு சுதீர்

சூழ்நிலையின் கனம் மனதை அழுத்த, மகனும் மருமகளும் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தார்கள். பேரனும் கூட, ஏதோ கேட்க வாய் திறந்து, பின் மௌனமானான்

அதே சமயம், மதிய உணவு முடித்து அப்படியே தூங்கிப் போன சுதீரின் 4 வயது பேத்தி, எழுந்து நேரே சுதீரிடம் வந்தாள். 

“தாத்தா, இன்னைக்கு என்னை நைட் டிரைவ் கூட்டிட்டு போறியா?” என கேட்ட பேத்தியிடம், தன்  மனைவி சரண்யாவின் சாயலைக் கண்டார் சுதீர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

அவளுக்கு தீயென்றும் பெயருண்டு (சிறுகதை) – ✍ சாய் வைஷ்ணவி, திருச்சி மாவட்டம்

அழகு ❤ (சிறுகதை) – ✍ ஞா.கலையரசி, புதுச்சேரி