in

நேர்மறை சக்தி (சிறுகதை) – ✍ சித்து அம்மாசி, சேலம்

நேர்மறை சக்தி (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

நீல நிற அனார்கலி குர்தியில் பிறை நிலவும் நட்சத்திரமும் சிதறிக் கிடந்தன. வெள்ளை லெக்கின்ஸூம், வெள்ளைநிற காட்டன் துப்பட்டாவும் அந்த குர்திக்கு மிக பொருத்தமாக இருந்தது.

உடலின் வளைவுகளை ஆபாசமாக காட்டாமல் அழகாக காட்டியது அந்த ஆடை. இயற்கையான அழகிற்கு மெருகூட்ட செயற்கை பூச்சு தேவை இல்லை. இருப்பினும், கண்களை எடுப்பாக காட்ட ஐலைனர், மஸ்காரா போட்டு, கற்றை கூந்தல் காற்றில் சிதையாமல் இருக்க சிறகை விரித்த நீல நிற பட்டாம்பூச்சி க்ளிப் கொண்டு கூந்தலை சிறை பிடித்தாள்‌ ஸ்வரந்திகா.

இளஞ்சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசி, லாவண்டர் பூக்களின் நறுமணத்தை பரப்பும் வாசனை திரவத்தை உடலில் பூசி, ஆளுயர கண்ணாடியில் முழு உடலையும் அங்குலம் அங்குலமாக ரசித்து விட்டு ரூமில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.

தன் இஷ்ட கடவுளைப் பிரார்த்தித்து விட்டு கிளம்ப எத்தனித்தான்.

“சின்னம்மா சாப்பிடாம எங்க கிளம்பிட்டீங்க?” என வீட்டின் வேலைக்காரி பொன்னி விசாரித்தாள்.

ஸ்வரந்திகா அவ்வீட்டின் இளவரசி அவளின் தாய் தந்தைக்கு ஒரே செல்ல மகள்.

“சாரி பொன்னிமா. இன்னிக்கு ப்ரண்ட்ஸ்ஸ மீட் பண்ண போறேன். எனக்கு பிரேக்ஃபாஸ்ட் வேண்டாம் பொன்னிமா”

ஸ்வரந்திகா பேரழகி, சிறந்த புத்திசாலி, பல திறமைக்கு சொந்தக்காரி. மருத்துவம் படிக்கும் மாணவி. படிப்பில் கெட்டிக்காரி. குணத்திலும் சிறந்தவள்.

பொன்னியை வேலைக்காரி என பாகுபாடு பார்த்ததே  இல்லை. “பொன்னிமா, பொன்னிமா” என வாய் நிறைய அழைக்கும் அழைப்பில் பொன்னி உருகித்தான் போவாள்.

“அப்பா, அம்மா காலைல ஒரு மேரேஜ் பங்க்ஷன் கிளம்பிட்டாங்கமா. நீங்க ப்ரெண்டு வீட்டுக்கு போக போறீங்கனு சொல்லிட்டுத்தான் போனாங்க. சாப்பிட்டு போய்ட்டு வாங்க. காலைல சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும். படிக்க போறதா வேற சொல்றீங்க  தயவு பண்ணி சாப்பிட்டு போங்க மா”‌ என்றாள் பொன்னி.

“அச்சோ பொன்னிமா, இதுக்கு எதுக்கு ரெக்வஸ்ட் பண்றீங்க. எனக்கு பசிக்கல பொன்னிமா, ஆல்ரெடி டைம் ஆயிடுச்சு. எனக்காக அவங்க வெயிட் பண்ணுவாங்க, நான் போகணும் ப்ளீஸ்”

“சரிமா பத்ரமா போயிட்டு வாங்க”

“ஐயோ பொன்னிமா, ஏன் டல்லாயிட்டீங்க? சரி ஒன்னு பண்ணலாம். பால் எடுத்துட்டு வாங்க, குடிச்சிட்டு கெளம்புறேன் சரியா?” என்றாள்.

“சரிமா” என வாய் நிறைய புன்னகையுடன் ஐந்து நிமிடத்தில் பாலை நீட்டினாள் பொன்னி.

அதை வாங்கி வேகமாக குடித்துவிட்டு “போயிட்டு வரேன்  பொன்னிமா” என்றாள்.

“நல்லதுமா, பத்திரமா போயிட்டு வாங்க

தலையில் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு ஸ்கூட்டியை முறுக்கி பறந்தாள். அவள் செல்லும் வழியை விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள் பொன்னி.

‘எந்த கள்ளகபடமும் இல்லாத பொண்ணு. மனுஷங்க மனச மதிக்க தெரிஞ்ச பொண்ணு. இறைவா இந்த பொண்ணு ஆயுசுக்கும், நிம்மதியா சந்தோஷமா வாழனும்’னு மனசார வாழ்த்தினாள் பொன்னி.

என்றும் இல்லாத அழகுடன் இருந்தாள் ஸ்வரந்திகா. அதற்கு காரணம் நிஷாந்த். நிஷாந்த் பக்கத்து மாநிலத்தில் வசிக்கும் தொழிலதிபரின் மகன். இணையவழி நண்பன். பழகிய வரையில் சிறந்தவன். அழகில் ஆணழகன். வர்த்தக துறையில் பட்டம் பெற்றவன்.

இணையத்தின் மூலமாக அறிமுகமாகி அவனின் வார்த்தைகளின் மீது நன்மதிப்பு வந்து இணையத்தில் தன்படத்தில் மட்டுமே கண்டவள். இன்று அவனை நேரில் சந்திக்கச் செல்கிறாள்.

நிஷாந்த் மீது காதல் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும், ஏதோ ஓர் ஈர்ப்பு. அனைத்தும் சரிவர சென்றால் அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கலாம் என்பது ஸ்வரந்திகாவின் எண்ணம்.

முதல் முறை அவனை நேரில் பார்க்கச் செல்வதால் தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்தாள். அவனுக்கே செய்த அலங்காரங்கள் தான் அத்தனையும்.

ஒரு ரெஸ்டாரன்டில் லஞ்ச் அரேஜ் செய்திருந்தான். பீச் பக்கத்தில் இருக்கும் அந்த ரெஸ்டாரண்ட் அட்ரஸை கூகுள் மேப்பில் சர்ச் நோட்டிபிகேஷன் போட்டுவிட்டு மொபைலை ஸ்டாண்டில் வைத்து விட்டு அது கூறும் வழிகளை ப்ளூ டூத்தில் கேட்டுக் கொண்டு ஸ்கூட்டியில் போய் கொண்டிருந்தாள்.

நிஷாந்திடமிருந்து கால் வந்தது.

“ஹலோ, வேர் ஆர் யூ ஸ்வரந்தி”

“சாரிப்பா, சண்டேனால நல்லா அசந்து தூங்கிட்டேன். ஸோ தட் லேட்”

“நோ இஸ்ஸூஸ், கம் ஃபாஸ்ட்”

“யா ஷூர், வித் இன் தேர்ட்டி மினிட்ஸ் ஐ வில் பீ தேர்‌”

சிறிது தூரம் சென்றவுடன் வண்டி நிலை தடுமாறியது. சுதாரித்து நின்றாள். ‘என்னவாயிற்று’ என கீழிறங்கி பார்த்தாள். வண்டி டயர் பஞ்சர். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. சுற்றிலும் ஒரு கடையை கூட காண முடியவில்லை.

‘ஓ காட், என்ன ஏன் இப்படி சோதிக்கற? மை சிட்ச்சூவேஷன் கெட்டிங் டூ பேட். சரி நிஷாந்த்க்கு இன்பார்ம் பண்ணிடலாம்’ என மொபைல் எடுத்து அவனுக்கு கால் செய்தாள்.

“யா.‌..டெல் மீ ஸ்வரந்தி”

“சாரி நிஷாந்த், வர வழியில வண்டி டயர் பஞ்சர் ஆயிடுச்சு. பக்கத்துல எதும் மெக்கானிக் ஷாப்பும் இல்ல. சண்டேனால லீவ் போல. ஈப் யூ டோண்ட் மைண்ட் இன்னும் ஒரு தேர்ட்டி மினிட்ஸ் வெயிட் பண்றியா, நான் ஆட்டோ புடிச்சி வர ட்ரை பண்றேன்”

“ஆர் யூ ஜோக்கிங் ஸ்வரந்தி. லஞ்ச் டைம்க்கு வர சொன்னேன். நீ நைட் டின்னர்க்கு கூட வரமாட்ட போல”

“ஐயம் ரியலி சாரி. என் சிட்ச்சூவேஷன் அப்படி இருக்கு. வாட் கேன் ஐ டூ”

“ஸ்டாப்பிட் நான் சென்ஸ் ஸ்வரந்தி. ஸ்கூல் பசங்க மாதிரி காரணம் சொல்லாத. ஐ ஹேவ் இம்ப்பார்ட்டண்ட் மீட்டிங் இன் ஈவ்னிங். யூ நெவர் நோ த வேல்யூ ஆஃப் மை டைம். ஐ திங், உனக்கு என்ன பாக்க விருப்பம் இல்லனு நெனக்கிறேன்”

“அப்படிலாம் இல்ல நிஷாந்த், நீங்களா எதும் கற்பனை பண்ணிக்காதீங்க”

“தென் எப்படி, நீதான் சொல்லு பார்ப்போம்”

“ஒன் இயரா பேசற, ப்ராங்கா என்ட்ட எதும் பேசி இருப்பியா. அட்லீஸ்ட் கேஷீவல் போட்டோஸ் அனுப்பி இருப்பியா, எப்ப பாரு பாஸ்போர்ட் சைஸ்ல ஒரு போட்டோ. எதுல நீ என்ன நம்புன‍, இப்பவும்  நான் ரொம்ப டார்ச்சர் பண்ணவும் நேர்ல பாக்க ஓகே சொன்ன, இப்ப அதுக்கும் மனசு மாறிடுச்சு போல, புதுசு புதுசா கதை விடற”

“நிஷாந்த் நீங்களா இப்படி பேசுறீங்க? ஏன் இப்படி பேசுறீங்க?”

“உன்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டேன், அதான் இப்படி பேசறேன்”

“இப்படிலாம் பேசுனா நிஜமாவே நான் உங்கள பாக்க வர மாட்டேன்”

“ஓ மேடம் அதையும் நீங்கதான் முடிவு‌ பண்ணுவீங்களோ. நான் இனி வெயிட் பண்ண போறது இல்ல. நான் கெளம்பறேன், இனி என்ட்ட பேச ட்ரை பண்ணாத”

“நிஷாந்த் லிஸன் டூ மீ, ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட் மீ” என பேசி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அதற்குள் ஸ்வரந்திகாவின் அம்மாவும், அப்பாவும் மேரேஜ் பங்க்ஷன் முடித்து விட்டு வரும் வழியில் ஸ்வரந்திகாவை கண்டனர். ஸ்வரந்திகா டென்ஷனாக இருப்பதை கண்டு காரிலிருந்து இறங்கி விவரம் கேட்டனர்.

“எனி ப்ராப்ளம் ஸ்வரந்தி?” என ஸ்வரந்திகாவின் தந்தை வினவினார்

“யெஸ் டாட், வண்டி டயர் பஞ்சர்”

“இங்க எங்கடி உங்க பிரண்ட்ஸ் இருக்காங்க?” என ஸ்வரந்திகாவின் தாய் வினவினார்.

“நியூ ப்ரண்ட்  வீட்ல குரூப் ஸ்டடி மா”

“சரி வா நான் உன்னை ட்ராப் பண்றேன்” என்று ஸ்வரந்திகாவின் தந்தை கூற

“இல்லப்பா ரொம்ப டயர்டா இருக்கு, வீட்டுக்கு போகலாம்” என கூறி விட்டாள்.

“ஓகேடா கெட் இன், டிரைவர்‌ நீ ஸ்வரந்திகாவின் ஸ்கூட்டியை ரெடி பண்ணி எடுத்துட்டு வா. நான் டிரைவ் பண்ணிக்கிறேன்” என ஸ்வரந்திகாவின் தாயும், தந்தையும் முன் சீட்டில் அமர, ஸ்வரந்திகா பின் ஷீட்டில் அமர்ந்து நிஷாந்த்க்கு மெஸஜ் செய்தாள்.

“சாரி நிஷாந்த். நான் உங்கள நம்பாம இல்ல. நீங்க என்ன தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. இட்ஸ் ஓகே, உங்க கோவம் கொறஞ்சதும் பேசுங்க.  அப்பா, அம்மா என்ன பிக்கப் பண்ணிட்டாங்க, நான் கெளம்பிட்டேன். ஐ அம் ரியலி சாரி” என க்ரெயிங் ஸ்மைலியை போட்டு மெசேஜை தட்டி விட்டாள்.

நிஷாந்த் அவளை நன்கு புரிந்து கொண்டவன். எனவே அவன் தனது சூழ்நிலையை புரிந்து கொள்வான். அவன் பேசிய வார்த்தைகளை எண்ணி வருத்தப்பட்டாலும், எனக்காக சிரமப்பட்டு வந்து ஏமாற்றம் கண்டதால் கோபத்தில் இருக்கிறான் சரியாகிவிடும் என எண்ணினாள்.

வாரம் கடந்தது. அனைத்து இணைய கணக்கிலும் அவளை ப்ளாக் செய்திருந்தான். அழகிய மலரவள் மனவருத்தத்தில் வாடி வதங்கி சோர்ந்து போனாள்.

“ஸ்வரந்தி வர வர இறைவனை வணங்கறதே இல்ல. என்னடி உன் பிரச்சன?” என ஸ்வரந்திகாவின் தாய் வினவினாள்.

“ஐ ஹேட் காட்மா, எனக்கு புடிச்ச எதையுமே கடவுள் செய்யலமா” என்று என்று கத்தினாள்.

“என்னடி ஆச்சு உனக்கு? நானும் ஒரு வாரமா பாக்குறேன், எதிலயுமே இன்டரஸ்ட்‌ இல்லாம இருக்க. என்ன ப்ராப்ளம் அம்மாட்ட சொல்லுடி”

“நத்திங்மா. லாஸ்ட் வீக் நியூ ப்ரண்ட் வீட்டுக்கு போறதா சொன்னேன் இல்லமா. அன்னைக்கு கடவுள்ட்ட ப்ரே பண்ணிட்டுதான் போனேமா. இந்த ப்ரண்ட்ஷிப் லைஃப் லாங் வரனும்னு. பட் அன்னைக்கு வண்டி பஞ்சர் ஆனதால என்னால போக முடியல. அந்த நியூ ப்ரண்ட் என்ன அவாய்ட் பண்றான்மா. இந்த கடவுள் அன்னைக்கு எல்லாத்தையும் சரியா பண்ணி இருந்தா எவ்ளோ நல்லா இருந்து இருக்கும். கடவுள் என்ன ஏமாத்திட்டாருமா”

“கடவுள் யாரையும் ஏமாத்தறது இல்ல ஸ்வரந்தி. கடவுள் நமக்கு பிடிச்சது கொடுக்கலைன்னா நம்மள ஏமாத்திட்டதா அர்த்தம் இல்ல. அது நமக்கு சரியானது இல்ல, வேற எதுக்கோ நம்மள தயார் பண்றாருனு அர்த்தம். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும்மா. கடவுள் நமக்கு எது சரியோ அத கண்டிப்பா நமக்கு குடுப்பாரு”

ஸ்வரந்திகாவின் அப்பா தீவிரமாக நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.

“பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்து மோசடி செய்த வாலிபன் கைது. பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்ற வாலிபன்” என நியூஸ் வாசித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்வரந்திகாவிற்கு அதிர்ச்சியில் கிட்டதட்ட இரத்தம் உறைந்து விட்டது.

“ஆம்… கடவுள் நாம் விரும்பியதை தருகிறாரோ இல்லையோ, நிச்சயம் நமக்கு சரியானதை  தருவார்” என ஸ்வரந்திகா தனக்கு தானே கூறிக்கொண்டிருக்க

“அதைத்தான் நானும் சொன்னேன்” என ஸ்வரந்திகாவின் அம்மா கூற

சுயநினைவிற்கு வந்தவளாய், “ஆமாம்மா… வாங்க போய் கடவுளை வணங்கலாம்” என துள்ளிக்குதித்து ஓடினாள்.

கடவுளை முழு மனதாரப் பிரார்த்தியுங்கள். உங்களுக்கு  சரியானது நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். பிரார்த்தனை என்பது நேர்மறை சக்தியை கூட்டும். நேர்மறை சக்தி உங்களின் எதிர்மறை சக்திகளின் வீரியத்தை குறைக்கும். மற்றவர் மகிழ்வில் மகிழ்ச்சி காணுங்கள். மனதார பிரார்த்தியுங்கள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. ஆம் உண்மைதான்.
    பிரார்த்தனைக்கு பலம் அதிகம்
    மிகவும் நன்றாக இருந்தது உங்களின் கதை.
    எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 16) – ✍ விபா விஷா, அமெரிக்கா

வல்லபி ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை