in

முள்ளு முருங்கை இலை வடை Recipe by ஆர். பிருந்தா இரமணி, மதுரை

முள்ளு முருங்கை இலை வடை

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தேவையானவை:

  • இட்லி அரிசி – 1 கப்
  • முள்ளு முருங்கை இலை – 20
  • ஜீரகம் – 1 டீஸ்பூன்
  • மிளகு – 20
  • உப்பு – தேவையானது
  • கடலை எண்ணெய்/ – பொரிக்க
  • சமையல் எண்ணெய்

செய்முறை:

  • அரிசியைக் களைந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
  • இலையை நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட்டு, சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்துக் வைக்கவும்.
  • ஊறியதும் அரிசி, முள்ளு முருங்கை இலை பிய்த்து வைத்தது, ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
  • ஒரு காட்டன் துணியில் அரைத்த மாவைப் போட்டு ஒற்றி எடுத்தால் மாவில் உள்ள தண்ணீர் எல்லாம் துணியில் உறிஞ்சி விடும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • சூடானதும் மாவைச் சிறுஉருண்டைகளாக எடுத்து, வடை போல் தட்டி எண்ணெய்யில் போடவும் .
  • இரு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்தால் முள்ளு முருங்கை இலை வடை ரெடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீ ……..பிகா ! (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை

    ஆகாயப் பூக்கள் (சிறுகதை) – ✍ மலர் மைந்தன், கல்பாக்கம்