2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23
‘மகா மார்பிள்ஸ்’ கம்பெனி வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. வாசலில் மாவிலைத் தோரணம் மற்றும் அலங்கார வளைவுகளும்… கண்ணைக் கவரும் வண்ணம் கட்டியிருந்த மலைச் சாமான்களும்… எல்லோரையும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது.
அந்த பக்கம் வந்த ஒருவர்.. “மாரி உங்க கம்பெனில என்னப்பா விசேஷம்? உங்க கம்பெனி பேர் கூட மாறப் போகுதாமே அது யாரு புதுசா வர்றாங்க…”
“அண்ண! எங்க கம்பெனிக்கு புது எம்.டி வராங்க.. அவங்க ஒரு லேடி .. இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடுவாங்க .. நாங்க அவங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறதுக்கு ரெடி பண்ணிகிட்டிருக்கோம்…இப்ப நேரம் ஆயிடுச்சு நாளைக்கு விவரமா சொல்றேன்” என்றபடி ஓட்டமும், நடையுமாக உள்ளே ஓடினான் மாரி.
சற்று நேரத்தில் ஒரு பெரிய படகு கார் வந்து நிற்க அதிலிருந்து கீழே இறங்கினாள் அவள் ..மடிப்புக் கலையாமல் கட்டியிருந்த சில்க் காட்டன் சாரி அவளுடைய அழகை இன்னும் கம்பீரமாக காட்டியது ..கழுத்திலே சின்ன முத்துமாலை… கைகளிலே ஓரிரு வைர வளையல்கள்… காதிலே அணிந்திருந்த வைரத்தோடு வர்ணங்களை வாரி இறைத்தது ..தலையை வாரி அழகாக கொண்டையிட்டு அதில் ஒரு சின்ன பூச்சரத்தை சூடி இருந்தது… அவளை தேவதையாக காட்டியது…
கம்பெனி நுழைவாயிலில் அவளுக்காக காத்திருந்த மேனேஜர் பொக்கேயுடன் ஓடிவந்தார்.. வண்ணமலர்களைக் கையிலே கொடுத்து “வாழ்த்துகள் அம்மா” என்றார்.
அடுத்து வந்த ஒரு பெண் மேலதிகாரி, அவளை வணங்கி, ஒரு பட்டு சால்வையைப் போர்த்த.. எல்லோருடைய வாழ்த்தையும் ஏற்றுக்கொண்டு, இருபுறமும் லேசாக கையசைத்தபடி, உள்ளே நுழைந்தாள் அவள் …பாதையின் இருபுறமும், பெண்கள் சந்தனம், குங்குமம், கற்கண்டு, மலர்கள், தீபம் என ஏந்தியபடி நிற்க ..ஒரு புன்னகையுடன் அவைகளை ஏற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தவள், மேலே ஏறிட்டுப் பார்த்தாள்.
‘மகா மார்பிள்ஸ்’ என்று கருப்பு கிரானைட்டில் பதிக்கப்பட்டிருந்த பொன் நிற எழுத்துக்களை கண்ணுக்குள் உள்வாங்கிக்கொண்டு…படியை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் மகா என்கிற மகாலஷ்மி.
தொழிலாளர்கள் அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பி ..வாழ்த்தொலிகள் கூறி, மலர் தூவி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க… மகா தனது கம்பெனியின் எம்.டி ஆக உள்ளே நுழைந்தாள். நேராக தன் அறைக்குச் சென்றாள்.
அங்கே பெரியவர் ஈஸ்வரின் படத்துக்கு பெரிய பூ மாலை அணிவித்து, இருபக்கமும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க இருகை கூப்பி தன் தந்தையை வணங்கினாள்.
‘அப்பா இவ்வளவு தடைகளைத் தாண்டி.. நான் இந்த இடத்தில் இன்று நிற்கிறேன் என்றால் அது உங்களுடைய ஆசீர்வாதமும், பல நல்ல உள்ளங்களின் மானசீகமான வாழ்த்துக்களும் தான்.’ அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.
ஒரு நிமிட பிராத்தனைக்குப் பின், வெளியே வந்தவள் தொழிலாளர்கள் கூடி நின்ற வெளி அரங்கத்திற்கு வந்தாள்.
அப்போது அங்கு வந்து நின்ற காரிலிருந்து டிக்கி திறக்கப்பட அதில் இருந்த வீல் சேரை முருகன் எடுத்து வெளியே வைத்தான். கார் கதவை திறந்து, அதன் உள்ளே அமர்ந்திருந்த ராம்குமாரை தன் இரு கைகளால் தூக்கி, வீல்சேரில் அமர்த்தி, அதைத் தள்ளிக் கொண்டே மேடைக்கு அருகே வந்தான்.
ராம்குமாரை அந்தக் கோலத்தில் பார்த்த தொழிலாளர்கள் மனம் கசிந்து கை கூப்பினர். தொழிலாளர்கள் அனேகருக்கு வந்தனா விஷயம் தெரியாததால் .. கை கால்கள் இழுக்கப்பட்டு, வாய் கோணி, பேச்சு வராமல் இருந்த அவனைப் பார்க்க அவர்கள் உள்ளம் பரிதாபத்தில் நிரம்பியது. தானே மேடையிலிருந்து கீழே இறங்கிப் போய் வீல் சேரைத் தள்ளிக் கொண்டு மேடைக்கு ராம்குமாரை கூட்டி வந்தவள்..மைக்கை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
“உங்கள் முதலாளி ராம்குமார் அவர்களின் இந்த நிலை நாம் யாருமே எதிர்பாராதது. எவ்வளவோ வைத்தியங்கள் பார்த்தும் அவரது உடல்நிலையில் இதை விட முன்னேற்றம் கிடைக்கவில்லை . வீல் சேரில் அமர வைத்து தான் அவரை அழைத்து வர வேண்டிய நிலைமை…என் மனம் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறது. ‘இந்த’ மகா மார்பிள்ஸ்’ என் தந்தையால் தொடங்கப்பட்டு, என் கணவர் நல்லபடியாக நிர்வகித்து வந்தார். இப்போது அவருடைய சுமையை நான் வாங்கிக் கொண்டு, இந்த நிர்வாகத்தை நான் கவனிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.”
“சுமார் 500 குடும்பங்கள் இந்த மகா மார்பிள்ஸை நம்பியிருக்கும் நிலையில், இதை அப்படியே விட்டு விடுவது என் தந்தைக்கு நான் செய்யும் துரோகமாக நினைக்கிறேன். என் கணவரும் அதை ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன் .”
‘அடப்பாவி! நான் கோட்டும் சூட்டுமாக கம்பீரமாக உலா வந்த இந்த இடத்தில்…இன்று என்னை வீழ்த்தி வீல்சேரில உட்கார வைத்து கூட்டிக்கொண்டு வந்து பேச வேற செய்றியா?’ என்று ராம்குமார் மனதில் ஆத்திரம் கிளம்ப ,அவன் வாய் ‘ஊ..ஊ.. என்ற சப்தத்தை எழுப்பியது.
மகா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “இதோ பாருங்கள் என் கணவரும் இதை தான் ஆமோதிக்கிறார். இனி அவர் நிர்வகித்து வந்ததைவிட இன்னும் சிறப்பாக அவர் ஆசியுடன் இந்த கம்பெனியை நடத்துவேன். மேலும் சில அறிவிப்புகளை உங்களுக்கு வெளியிட இருக்கிறேன்
தொழிலாளர் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை நான் எடுத்துள்ளேன். நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்து இந்த மகா மார்பிள்ஸ் உற்பத்தியை பல மடங்கு உயர்த்த உதவி செய்வீர்கள் என்று நினைக்கிறேன். 500 தொழிலாளிகள் வேலை செய்யும் இக்கம்பெனி விரைவில் 2000 தொழிலாளிகள் வேலை செய்யும் மாபெரும் கம்பெனியாக மாற வேண்டும்… அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்களா?”
“கொடுப்போம்.. கொடுப்போம்” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது ..
மேலும் விரைவில் “மகா மார்பிள்ஸ் அண்ட் கிரானைட்ஸ்” என இக்கம்பெனி பெயர் மாறும்… கிரானைட்ஸ் பிஸினஸும் சேர்ந்து நாம் செய்யப் போகிறோம். கிரானைட்ஸ் தயாரிப்புக்கென 2 யூனிட்டுகள் இனி தனியாக ஆரம்பிக்கப்படும். இன்னும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். “
“இனி உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும். மேலும் தொழிலாளர் ஆரோக்கியம் கருதி ஒவ்வொரு மாதமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தேவைப்படுவோருக்கு மருந்துகள் கம்பெனி சார்பில் வழங்கப்படும்.”
“இன்னும் பெண்களுக்கு பல சிறப்பு சலுகைகளை விரைவில் அறிவிக்க உள்ளேன்” என்று கூற கரகோஷம் விண்ணைப் பிளந்தது. பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராம்குமார் கண்களில் அனல் பறந்தது.
மேலும் மகா, “வாரம் ஒரு நாள் அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5-6 மணி தொழிலாளர்கள் என்னை சந்தித்து தங்கள் குறைகளை நேரடியாக கூறலாம் …அதேபோல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5-6 மணிக்கு பெண் தொழிலாளர்கள் தங்கள் குறைகளை நேரடியாக என்னிடம் கூறலாம் ..”
மகா பேசப்பேச தொழிலாளர்கள் உற்சாகம் கூடி வாழ்த்தொலி எழுப்பினார். கரகோஷம் விண்ணை எட்டியது.இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது ..
அதுசரி.. மகா எப்படி இந்த சதியிலிருந்து தப்பித்தாள்? ராம்குமார் எப்படி அதில் மாட்டிக் கொண்டான்?..பதில் மகாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் இருக்க.. அதை அறிந்து கொள்ள அவர் மனம் துடித்தது ..
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings