பயணம் ஆரம்பம்
திருமணமான புதிது என்பதால், மே 15 2017 அன்று, முதல் சுற்றுலாவுக்கு கொடைக்கானல் சென்றோம்
மொத்தம் 4 பேர் ஒரு கார் புக் செய்து கொண்டு, பயணத்தை தொடங்கினோம்
இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் அதை மனதில் கொண்டு சுற்றுலாவை நல்லமுறையில் சுற்றி பார்த்து விட்டு வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறிய அறிவுரைகளை கேட்டு கவனமாக கிளம்பினோம்.
கொடைக்கானல் ஏரி (Kodaikanal Lake)
நாங்கள் கொடைக்கானல் சென்று சேர்ந்த போது, நேரம் மதியம் 12 மணி. ரெப்ரஸ் ஆகி சாப்பிட்டு விட்டு, சற்று இளைப்பாறி விட்டு, மாலை தான் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்
நாங்கள் முதலில் சென்ற இடம், கொடைக்கானல் ஏரி
நாங்கள் சென்றது மாலை என்பதால், பனிமேகங்கள் சூழத் தொடங்கியது. அதனால் சுற்றியுள்ள கடைகளை மட்டும் வேடிக்கைப் பார்த்து விட்டு அறைக்கு திரும்பி விட்டோம்
அடுத்த நாள் காலை 10 மணியளவில் மீண்டும் கொடைக்கானல் ஏரி சென்றோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில், பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத்துறையின் படகுகள் உள்ளன.
ஏரியின் அருகே மிதி வண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.
போட்டிங் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்
பசுமைப் பள்ளத்தாக்கு (Green Valley)
அடுத்து நாங்கள் சென்ற இடம், பசுமைப் பள்ளத்தாக்கு
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பள்ளத்தாக்கு. இதன் உயரம் 1500மீ
வானிலையைப் பொறுத்து, இங்கிருந்து வைகை அணையை காணலாம். இதில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து இறந்ததும் உண்டு
குணா குகை (Guna Cave)
அடுத்த நாள் “குணா குகை” சென்றோம். பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. கமல்ஹாசன் நடித்து வெளியான “குணா” படத்தில் இந்த குகை இடம் பெற்றதால், இதனை “குணா குகை” என்கின்றனர்
அதற்கு முன்னர், இந்த குகை பிசாசின் சமையலறை (Devil’s kitchen) என்றழைக்கப்பட்டது
சில வருடங்களுக்கு முன்னர், குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி
பைன்காடுகள் (Pine Forest)
அடுத்து பைன்காடுகள் சென்றோம். இந்த ஊசியிலைகாட்டை, 1906ம் ஆண்டு, பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்
கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில், மலைப் பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார்.
இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. சுற்றிலும் எங்கும் மரங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன
வெள்ளி நீர் வீழ்ச்சி (Silver Falls)
அடுத்த நாள் ‘வெள்ளி நீர் வீழ்ச்சி’ சென்றோம். கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர் வீழ்ச்சி.
கடல் மட்டத்தில் இருந்து, 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி, பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும்.
கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55மீ. பார்ப்பதற்கு நன்றாக இருந்தது
மலர் கண்காட்சி
இறுதியாக நாங்க சென்ற நாங்கள் சென்ற இடம், மலர் கண்காட்சி. அது கோடைகாலம் என்பதால், மலர் கண்காட்சி அமைத்திருந்தனர்
வண்ண வண்ண மலர்களை கண்களில் நிரப்பிக் கொண்டு, பயணத்தை முடித்து கும்பகோணத்திற்கு திரும்பினோம்.
Gift your better half these Romance Novels for Valentines Day👇
GIPHY App Key not set. Please check settings