சஹானா
கவிதைகள் சிறுகதைகள்

கவிதை வடிவில் ஒரு கரிசல் காட்டுக் கதை (பகுதி 2) – ✍ சசிகலா எத்திராஜ்


பகுதி 1 வாசிக்க 

பொன்னை  அனலில்உருக்க
மஞ்சகுழம்பா வான் மின்ன 
ஆதவனின் முகமோ 
வெண்ணிலவு வரவால் 
சிவந்து மறைந்தோ
ஆணின் வெட்கம் போல

கரிசல் கழனியில் பூத்து
மஞ்சள் பூவாய் மலர்ந்த
வெண்பஞ்சை போல
மென்மையாய் வடித்தானோ 
அழகியவள் முகத்தை 

இவ்வூரில் இப்படியொரு 
அழகியப் பெண்ணாம் 
வானத்திலிருந்து இறங்கிய
தேவதை வடிவாம் 
செவ்வந்தியின் அழகிற்கு
மயங்காதோர் யாருண்டோ

'ஏண்டாபா உன்ற பொண்ணா
அழகு மொத்தத்தையும் 
ஆண்டவன் ஒருத்திக்கே 
அளவில்லாம குடுத்துட்டான் போல 
இப்படியொரு அழகுக்கு 
எங்கிருந்து மாப்ள பாக்க 
சீமையிலிருந்து ராசாதான் 
பாக்கோணும் இவளுக்கென'
போவோர் வருவோர் சொல்ல 

பெற்ற மகளின் அழகில் 
பெருமிதம் கொண்ட பெற்றோராம் 
ராக்கப்பனும் அம்புஜமும்
திகைத்து தான் போயினர் சற்று 

எந்தச் சீமையில
எங்கிருக்கானோ ராசானு 
பொண்ணுக்கேத்த மன்னவன
குடிகூத்தியா இல்லாத
குடியானவனத் தேடி 
ராக்கப்பனும் அம்புஜமும் 
திணறித் தான் போயினர் சற்று 

செவ்வந்தி பெண்ணவளோ 
வனப்பான தேகமும் 
காட்டுச்கொடியா வளந்த 
கரிய நெடும் கூந்தலது 
முழங்காலைத் தாண்டி கிடக்க

கரிசல் மண்ணின் நிறத்தையும்
அரையடி கூந்தலையும்
கொண்ட பெண்டுகெல்லாம்
தீங்கனலாக பெருமூச்சுவிட

இளவட்ட பயலுவளோ 
பார்வையிலே துகிலிரிக்க
எனக்கா உனக்கா போட்டியிட்டு
இளவட்டக்கல்லை தூக்கி அலைய

தீட்சண்ய விழிகளில் 
தீயாய் எரித்திடும்
சீதையின் வழி வந்தவளாய்  

துகிலிரிக்கும் துச்சாதனின்
பார்வையை எரித்திடும் 
பாஞ்சாலி வம்சத்தவளாய் 
செவ்வந்தி பெண்ணவள் 
செஞ்சாந்து பொட்டிட்டு நின்றாள் 

எள்ளுவயலை  ஒருமிக்க
அறுத்து சாவடியில் போடும் 
ஆம்பளைக்கு பொம்பளை சளித்தவளில்லை
சாகசப் பேச்சதை தகர்த்து
காரியத்தில் கண்ணான சாகசக்காரி

ஏளனமும் செருக்குமின்றி
அழகை துச்சமாய் எண்ணி
கற்பு நெறியில் காத்திருக்கும்
காரிகைக்கு ஆம்பாடையானா
வாய்ப்பானா காத்தவராயன்

கண்கொண்டு அவனை 
காரிகையவள் நோக்குவாளா
வீம்பு பேசும் வீரனை 
வீழி வீச்சால் வெட்டுவாளா...

#ad

         

         

#ad 

              

          

(கதை தொடரும் – புதன் தோறும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: