2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39
சாப்பிட்டு முடித்த ஆதர்ஷ், சீக்கிரம் ஏர்போர்ட்டுக்கு கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினான்.
“இங்க இருக்கிற சென்னை ஏர்போர்ட்தானப்பா நிதானமா போலாமே” என்றான் ஜெபா.
“ஜெய்.. சென்னையிலிருந்து நீங்க சிங்கப்பூர் போகல.. உங்களுக்கு டிக்கெட் போட்டிருக்கிறது பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து ..”
“அதர்ஷ் நாங்க சென்னை ஏர்போர்ட்னு நினைச்சுகிட்டு இருக்கோம். சென்னையில இல்லையா?”
“இல்ல. எங்க வீட்டு சுவருக்கும்…கம்பெனி சுவருக்கும் காது உண்டு. யார் மூலமாவது நம்முடைய திட்டம் தெரிஞ்சிடக்கூடாதுன்னு நான் திட்டமிட்டு… அதற்கு மாறாகவே எல்லோரிடமும் சொல்லி வைத்தேன். உண்மையான பிளான் திவாகருக்கு மட்டும்தான் தெரியும் .திவா ஏர்போர்ட்க்கு மூர்த்தி கூட வருவான்.. நீங்க இப்பவே கிளம்புங்க..
அப்புறம் காவ்யா உன்னுடைய காரைப் பற்றி கவலைப்படாத நீங்க எல்லாருமே இப்போ அரேஞ்ச் பண்ற கேப்ல பெங்களூர் கிளம்புங்க…காவ்யாவுடைய காரை சென்னை ஏர்போர்ட் பார்க்கிங் ப்ளேஸ்ல ஜெபா நிறுத்திடுவான். அப்படியே தேடினாலும் அவங்க சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல தான் தேடுவாங்க. நீங்க அதுக்குள்ள பெங்களூர் போயிடலாம்.. கிளம்புங்க உடனே… இவ்வளவு தூரம் வந்துட்டோம் ..இன்னும் கொஞ்ச நேரம் பெங்களூர் ஏர்போர்ட்ல யார் கண்ணுலயும் படாம இருந்துக்கோங்க”
“அதர்ஷ் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல” என்ற காவ்யா அவன் காலில் விழுந்தாள். நீங்க சொன்ன மாதிரியே ஒரு சகோதரிக்கு செய்ற மாதிரி எனக்கு ரிஸ்க் எடுத்து இவ்வளவும் செஞ்சிருக்கீங்க”
“அப்புறம் காவ்யா! இந்த அண்ணனோட கிப்ட்னு உனக்கு எதுவும் வாங்கல. இந்தா உன்னுடைய பெங்களூர் பிளைட் டிக்கெட்” என்றவன் ..அவள், அவன் திருமணத்தின் போது போட்ட மோதிரத்தை கழற்றி ஜெய் கைகளில் அணிவித்தான். “சந்தோஷமா போயிட்டு வாங்க”
அவர்கள் பெங்களூர் கிளம்ப, மற்றவர்கள் வீடு திரும்பினர் ..ஆதர்ஷ் வீட்டிற்கு கிளம்பினான். வழியில் ..போனை எடுத்துப் பார்த்தான் ..அதுவரை யார் கால்லையுமே அட்டெண்ட் பண்ணக் கூடாது என்று மொபைலை சைலண்ட் மோட்ல போட்டிருந்தான். பார்வதியிடமிருந்து போன் ..நிறைய மிஸ்டு கால்….. பாரு எதுக்கு என்னை கூப்பிட்டாள்?
எப்பவோ அம்மாவுக்கு உடம்பு சரியில்லாதபோது தன் நம்பரை அவளுக்கு ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்திருந்தான் ..திரும்ப கூப்பிட்டுப் பார்த்தான். பாரு போன்னை எடுக்கவில்லை. சரி இன்னொரு பதினைந்து நிமிடத்தில் தான் வீட்டிற்கே போய் விடலாமே என்று நினைத்தான்.
மனம் நிம்மதியாக இருந்தது ..இனி பிரச்சனை இருக்காது. அதற்காகவே திவாகரிடம்’ யாரும், யாருக்கும் போன் பண்ண வேண்டாம் ..ஏதாவது பிரச்சனை வந்தால் மட்டும் கூப்பிடு’ என்று ஒரு புது போனில், புது சிம் போட்டு, அந்த நம்பரை கொடுத்திருந்தான்.
வீட்டிற்குள் கார் நுழைய …வாசலில் போலீஸ் ஜீப் ..நிறைய போலீஸ்.. பெரிய கூட்டம் கூடியிருந்தது ..என்ன நடந்தது? ஒரு நிமிடம் அவன் இதயத் துடிப்பு நின்று பின் துடித்தது ..வீடே அலங்கோலமாக இருந்தது .
வீட்டின் ஹாலில் அம்மா ஒரு பக்கம் அழுதுகொண்டிருந்தாள்.. பாரு தரையிலமர்ந்து பெருங்குரலில் அழுது, அரற்றிக் கொண்டிருந்தாள் ..தரையில் ரத்த வெள்ளத்தில் அப்பா …அவனைப் பார்த்ததும் மாயா ஓடி வந்தாள் அவள் கைகளில் இரத்தக்கறை..
“அத்தான் என்னை மன்னிச்சிடுங்க ..நான் மாமாவை கொன்னுட்டேன் ..நான் ஒரு கொலைகாரி.. கொலைகாரி.. அத்தான் .. என்ன மன்னிச்சிடுங்க” என்று கதறிக்கொண்டே காலில் விழுந்தாள் ….
ருக்மணி “அடிப்பாவி பெண்ணே! இந்த வீட்டையே சுத்தி சுத்தி வந்தியே.. கடைசியில கொலைகாரப் பட்டம் வாங்குறதுக்கா இப்படி வந்த ..என் உயிர காப்பாத்தப் போய் நீ இப்படி மாட்டிகிட்டயே. ..உன் வாழ்க்கையே வீணாயிடுச்சேடி உங்க அம்மா வாழ்க்கையை உயிரோடு இருந்து கெடுத்தாரு.. உன் வாழ்க்கையை செத்து கெடுத்துட்டாரு உங்க மாமா ” என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள் ..
ஆதர்ஷ் செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றான். என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு நிகழ்வை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
உறைந்து போய் நின்ற அவனிடம், “சார்! அவங்களே ஒத்துக்கிட்டாங்க, .நாங்கள் அவங்களை கைது பண்ணுகிறோம்” என்று மாயாவை விலங்கு போட்டு காவலர்கள் அழைத்து செல்ல. செய்வதறியாமல் திகைத்துப் போய் அவளைப் பார்த்தவாறு நின்றான் ஆதர்ஷ். அழுதுகொண்டே மாயா போலீஸ் ஜீப்பில் ஏறினாள்.
கோர்ட் கூடியது. குற்றவாளிக் கூண்டில் நின்ற மாயா, எந்த உண்மையையும் மறைக்காமல் நடந்ததை நடந்தபடி கூறினாள். மாமாவின் சாவுக்கு தானே காரணம் என்பதை ஒத்துக் கொண்டாள்.
விதவை கோலத்தில் அமர்ந்திருந்த அத்தையைப் பார்க்க அவள் மனம் மிகவும் வருந்தியது. அவள் அருகில் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்ததும் மாயா மனம் நொறுங்கிப் போனாள்.
உள்நோக்கத்துடன் பண்ணாததாலும், அவளே ஒத்துக் கொண்டதாலும், ஒரு கொலையை தடுக்க முயற்சித்த போது நடந்த விபத்து என்பதாலும், குறைந்தபட்ச தண்டனையாக அவளுக்கு 3 வருட சிறை தண்டனை கிடைக்க, ருக்மணி தேவியும், சாரதாவும் உடைந்து போனார்கள்.
ஒரு வருடம் கழித்து…
பெயிலில் வெளிவந்த மாயாவுக்கும் – ஆதர்ஷுக்கும் அன்று திருமணம். மிக எளிமையாக திருநீர்மலையில். திருமணம் முடிந்து இருவரும் ருக்மணிதேவி மற்றும் சாரதாவின் காலில் விழுந்து வணங்கினார்கள்.
“அத்தை கவலைப்படாதீங்க மாயா இன்னும் இரண்டே வருஷத்துல வெளியே வந்ததிடுவா.. அப்புறம் உங்க கண்ணு முன்னாடி நாங்க சந்தோஷமா வாழப் போறோம். பழையபடி அவ இந்த வீட்டுல சுத்தி வருவா. அவள சந்தோஷமா வச்சுக்கறது என் பொறுப்பு”
“அவள் என் மனைவி, இந்த வீட்டு மருமகளாக, ஈஸ்வர பவனத்துக்குள் நுழையும்போது, மணமகளே மருமகளே வா வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா வா அப்படின்னு நானே பாட்டுப் பாடி வரவேற்பேன். அப்புறம் ஒரு வருஷத்துல நீங்க பேரனையோ, பேத்தியையோ கொஞ்சுவீங்க. வேணா ஒண்ணு செய்யறோம், ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க, ரெட்ட குழந்தையை பெத்துக் கொடுக்கிறோம், ஆளுக்கு ஒரு பிள்ளையை வளருங்க. என்ன மாயா நான் சொல்றது சரிதானே” கனத்த சூழலை எளிதாக்க ஆதர்ஷ் கலகலப்பாக பேச, மாயா வெட்கத்துடன் தலையசைத்தாள்.
அவளிடம் இருந்த படபடப்பு, கலகலப்பு, எல்லாம் அடங்கிப் போக, ஒரு மௌனமான தபசியாக காணப்பட்டாள். பெயில் முடிந்து சிறைக்குக் கிளம்பினாள் மாயா. அனைவரும் கண்ணீருடன் விடை கொடுத்தனர்.
“பருவம் என்னும் காற்றிலே..
பறக்கும் காதல் தேரிலே..
ஆணும் பெண்ணும் மகிழ்வார்..
சுகம் பெறுவார்.. அதிசயம் காண்பார் ..
நாளை உலகின் பாதையை இன்றே
யார் காணுவார் ?
ஆசையே அலை போலே ..
நாமெல்லாம் அதன் மேலே ..”
மாயாவின் உதடுகள் பாடலை முணுமுணுத்தது.
மாயா சீக்கிரம் அந்த வீட்டில் கலகலப்பாக வளைய வருவாள், எல்லோருக்கும் சந்தோஷம் தருவாள் என்ற நம்பிக்கையுடன் ருக்மணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அதே நேரம் சிங்கப்பூரில், காவ்யா தன் குழந்தையின் காதில் அதன் பெயரை சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் குழந்தைக்கு அன்று தொட்டில் இடும் விழா. அங்கு உள்ள நண்பர்கள் சூழm காவ்யா தன் குழந்தையின் காதில் மெல்ல “ஆதர்ஷ்” என்றாள். ஜெய்யும் அதேபோல் கூற, தொட்டிலில் கிடந்த ஆதர்ஷ் அவர்ளைப் பார்த்து சிரித்தான்.
குழந்தையை மனமார வாழ்த்தி நாம் அவர்களிடமிருந்து விடை பெறுவோம் 🌻🌻🌻🌻
💝💝💝💝💝💝💝 காதல் அலை ஓய்ந்தது 💝💝💝💝💝💝💝💝
நன்றி..
வணக்கம் 🙏🙏🙏🙏
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
எனது அருமை நண்பர்களே வணக்கம் 🙏
பல்வேறு பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி.. என்னுடைய தொடரை தொடர்ந்து படித்து… ஊக்கமளித்த அன்பு தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ..🙏🙏🙏
இதனை உதட்டிலிருந்து கூறவில்லை உள்ளத்திலிருந்து கூறுகிறேன் உங்கள் அன்பும் ஆதரவும் ❤ ❤ ❤ இல்லையெனில் என்போல் எழுத்தாளர்களுக்கு எழுதுவது சாத்தியமில்லை. உங்கள் ஊக்கமே எங்கள் பேனாவின் மை ..👏👏👏 மீண்டும் என் நன்றியை தெரிவித்து விடைபெறுகிறேன் வணக்கம் 🙏🙏🙏
தி.வள்ளி, திருநெல்வேலி
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings