2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37
காவ்யா கண்ணீருடன் தலையசைத்து மாயாவுக்கு விடை கொடுத்தாள்…
“நாளைக்கு காலைல கிளம்பிடுவேன் “என்றாள்.
அவள் இரு கையையும் பிடித்துக் கொண்ட மாயா…
“காவ்யா உனக்கு என் வாழ்த்துக்கள் ..நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஒரு வருஷ காலம் என்றாலும், நம்ம ரெண்டு பேரும் ரொம்ப மனசளவுல நெருங்கிவிட்டோம். காலம் போடும் கணக்கை ஏற்றுக் கொள்ளத்தான் வேணும்.” முதல் முறையாக கலகலப்பாக எப்போதுமிருக்கும் மாயாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. குரல் தழுதழுத்தது..
“அப்ப நான் போயிட்டு வரேன் மாயாக்கா… தயவுசெய்து நான் சொன்னத யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.. ஆதர்ஷ் திரும்பத் திரும்ப யாரிடமும் சொல்லக் கூடாதுன்னு என்னிடம் உறுதியாகச் சொன்னார். எனக்கு மனசு கேட்கலை.. உங்ககிட்ட சொல்லிட்டேன்.. மாமாவுக்கும், எங்கப்பாவுக்கும் தெரிஞ்சா அவ்வளவுதான்..அதனால தயவுசெய்து இதை உங்களுக்குள்ளேயே வைச்சுக்கோங்க” என்றாள்.
சரியென தலையசைத்தாள். காவ்யாவிடம் விடைபெற்றுக் கொண்டு கனத்த இதயத்துடன் கிளம்பினாள் மாயா …
ஜெய்யிடம் பேசி தன் மனக்குமுறலை கூறலாம் என்று நினைத்தால் ஜெய் நம்பர் மாறி இருந்தது ..அவன் அவளை தொடர்பு கொள்ளவும் இல்லை. ஆதர்ஷ் அறிவுறுத்தலின்படி இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள் காவ்யா…
அன்று ஒரு நாள்.. 24 மணி நேரம்…பல யுகங்களாக கழிந்தது. இரவு கொஞ்ச நேரம் அத்தையிடம் பேசிவிட்டு அவள் காலை மெல்ல அமுக்கி விட்டாள் காவ்யா ..அப்படியே அத்தைக்குத் தெரியாமல் அந்த கையை கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.
ருக்மணிதேவி “சரிம்மா காவ்யா நீ போய் படுத்துக்கோ “
அவள் ரூமுக்கு வந்து படுத்ததும் ஆதர்ஷ் எழுந்து வந்தான். “காவ்யா எல்லாம் ரெடியா வச்சு கார்ல வச்சுட்டியா? நாளைக்கு காலையில ஷார்ப்பா 8.30 மணிக்கு கிளம்பிடுவோம். முதல்ல நான் கிளம்பிடறேன் .தெருமுனையில காரை நிறுத்திட்டு வெயிட் பண்றேன். நீ உன் கார்ல பின்னாடியே வந்திடு..அப்படியே என் காரை ஃபாலோ பண்ணிகிட்டு வந்திடு. கோயிலுக்கு போயிடுவோம் ..ஜெய் அங்க வந்துடுவாரு. அப்புறம் கிளம்பும்போது நீ பட்டுப் புடவை கட்டிகிட்டு கிளம்பினால் சந்தேகம் வரும். அதனால சாதாரண டிரஸ்ஸிலேயே கிளம்பி வா..”
மறுநாள் காலை எழுந்து குளித்து, ரெடியாகி ,சாமி ரூமுக்கு போய் விளக்கேற்றி சாமி கும்பிட்டாள் ..
பாரு..”அண்ணி சாப்பாடு ரெடி.. சாப்பிடுகிறீங்களா?” என்று கேட்டாள். பரமேஸ்வரன் சாப்பிட்டுவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தார். அதை பார்த்தவள்..
“நான் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடுறேன் பாரு” என்றாள் …சற்று நேரத்தில் பரமேஸ்வரன் வெளியே கிளம்பி போய் விட ..அவசர அவசரமாக காலை சாப்பாட்டை முடித்தாள் காவ்யா ..அதற்குள் ஆதர்ஷ் சாப்பிட்டு விட்டு கிளம்பிப் போய் விட்டான்.
காவ்யா ருக்மணி தேவின் அறைக்குப் போய், “அத்தை போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு.. கீழே வந்து “பாரு போய்ட்டு வரேன்” என்றாள்.
“அண்ணி.. நீங்க ஷாப்பிங் போறீங்களா? அப்படியே முடிஞ்சா வரும்போது ஒரு கிலோ நெய் மட்டும் வாங்கிட்டு வாங்க ” என்றாள் ..
“சரி” என்று தலையசைத்துவிட்டு காரைக் கிளப்பினாள்.
காம்பவுண்டை கடக்கும்போது. அந்த ‘ஈஸ்வர பவன’த்தின் தன்னுடைய கடைசி நாள் என்று நினைத்துக் கொண்டாள். சொன்னதுபோல தெருமுனையில் ஆதர்ஷ் காத்திருக்க.. அவன் காரை பின்பற்றியே சென்றாள். ஆனால் கார் திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் செல்லவில்லை…
“திருப்போரூர் முருகன் கோவிலுக்கு போலையா?” செல்போனில் ஆதர்ஷைக் கேட்க ..
“காவ்யா கல்யாணம் வேற ஒரு கோயில்ல” என்று குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டு சென்றான் ஆதர்ஷ்.
காவ்யா ஒன்றும் பேசாமல் அவன் காரைப் பின்தொடர்ந்தாள். கார் குன்றத்தூர் கோவிலில் நிற்க, ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த கோவிலில் கூட்டம் அதிகமில்லை .ஆதர்ஷின் நண்பர்கள் பெரிய பட்டாளமே காத்திருந்தார்கள் ஜெய் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் ரெடியாக காத்திருந்தான்.
“ஜெய்” என்று காரை நிறுத்தியவள் ..இறங்கிப்போய் ஓடோடிச் சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் ..
“சிஸ்டர் நேரமாகுது நாம மேல போவோம். ஐயர் உங்களுக்காகத் தான் வெயிட்டிங் ..”
மேலே போனவள் பிரமித்தாள். ஒரு கல்யாணத்திற்கு உண்டான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது விளக்குகள் ..மனை வெற்றிலை, பாக்கு, பழம், பூ, தாம்பாள சாமான்கள், பூ ஆரங்கள் என்று எல்லாமே ரெடியாக காத்திருந்தன.
ஆதர்ஷ் ஒரு பட்டுப்புடவையை கொடுத்து, “காவ்யா! அதோ அங்க ஒரு சின்ன ரூம் இருக்குது. அங்க போய் புடவையை மாத்திக்கிட்டு வா.”
ஆதர்ஷ் பிரெண்ட் ஜெபா, திவாகர் ,இருவருடைய வைஃப்களும் வந்திருந்தார்கள்.
அவர்கள், “நாங்கள் காவ்யாவை ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றோம்” என்று சொல்லி அவளுடன் நடந்தார்கள் ..சற்று நேரத்தில் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த நகைகளை அணிவித்து மணப்பெண் அலங்காரத்தை அழகாக செய்து முடித்து அவளை கூட்டி வந்தனர் .
ஐயர் மந்திரங்கள் சொல்ல.. ஜெய் அருகில் காவ்யா அமர்ந்தாள்…ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க, நாதஸ்வரம் முழங்க, காவ்யா கழுத்தில் ஜெய் தாலி கட்டினான். சுற்றி உள்ள எல்லோரும் மலர்களை தூவி வாழ்த்தினர். ஆதர்ஷ் மனத்தில் மிகப்பெரியதொரு நிம்மதி வந்தது.
இருவரும் மணமேடையை மூன்று முறை சுற்றி வந்தனர்.பின் இருவரும் ஆதர்ஷ் காலில் விழுந்து வணங்க, “இது என்ன ப்ரோ ..என்ன வயசானவன் ஆக்கிட்டீங்க.. ப்ளீஸ் ப்ளீஸ் எழுந்திருங்க ..ரெண்டு பேரும் சந்தோஷமா இன்னைக்கு மாதிரி என்னைக்கும் மனநிறைவோடு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழனும்” என்று வாழ்த்தினான் மனதார.. தன் கண்ணில் துளிர்த்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் லேசாகத் துடைத்துக் கொண்டான்.
அங்கிருந்த பெண்களுக்கெல்லாம் திவாகர் மனைவி மஞ்சள், குங்குமம், சந்தனம் கொடுத்தாள்..
ஐயர் “இருவரும் போய் சுவாமியை தரிசனம் பண்ணிட்டு வாங்க…” என்றார் ..
ஆதர்ஷ் அவர்களிடம்…” சாமி கும்பிட்டுட்டு சீக்கிரம் வாங்கப்பா… ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ரிஜிஸ்ட்ரார் நமக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்காரு ..சீக்கிரம் போகனும்” என்று அவசரப்படுத்தினான்.
சுவாமி தரிசனம் முடிந்ததும் … எல்லோரும் கிளம்பி நேராக ரிஜிஸ்டர் ஆபீஸ் போனார்கள்.
“வாங்க சார்.. ரிஜிஸ்ட்ரார் உங்களுக்காக காத்துகிட்டு இருக்காரு”
“வாங்க …வாங்க சீக்கிரம் இவ்வளவு நேரம் ஆயிடுச்சா! உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன் “என்றவர்.
காவ்யாவைப் பார்த்து திடுக்கிட்டார் .’இந்த பொண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே… ரொம்ப வேண்டிய வீட்டுப் பொண்ணாச்சே நினைவுக்கு வர மாட்டேங்குதே’ என்று யோசித்தார் …???
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings