2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36
அன்று ஞாயிற்றுக்கிழமை சோம்பலாக விடிந்தது, ஆனால் ஆதர்ஷ் மட்டும் பரபரப்பாக இருந்தான். யார் யாருக்கோ போன் பண்ணிக் கொண்டிருந்தான். அவனுடைய அறை கதவு தாளிடப்பட்டு இருந்தது. சாப்பிட மட்டுமே கீழே இறங்கினான். காவ்யாவிற்கு என்ன ஏது என்று புரியவில்லை. அதே நேரம் அவனிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அன்று இரவு அவனே காவ்யாவை அழைத்தான்.
“காவ்யா நான் சொல்வதை கவனமாக கேளு. இன்னைக்கு ராத்திரியே உன்னுடைய முக்கியமான டாக்குமெண்ட்ஸ், சர்டிபிகேட் ..ஐடி ப்ரூப் எல்லாவற்றையும் உன்னுடைய காலேஜ் பேக்கில் எடுத்து வைத்துக் கொள் காவ்யா. யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது ..ஜெய் கிளம்பிட்டாரு ..நாளைக்கு வந்துடுவார் ..நாளை திங்கட்கிழமை ..புதன்கிழமை திருப்போரூர் முருகன் கோவிலில் உனக்கும் ஜெய்க்கும் கல்யாணம் …அன்னைக்கு நைட் உங்களுக்கு சிங்கப்பூர் பிளைட் ..உன்னுடைய விசா பிராசஸ் ஆகி வந்துடுச்சு. உன் லேப்டாப்…மத்த முக்கியமான விஷயங்களை மட்டும் எடுத்து வைத்துக் கொள் ..மற்ற எதையும் பற்றியும் கவலைப்படாதே. எல்லாம் சிங்கப்பூர் போய் வாங்கிக் கொள்ளலாம் ..என்ன காவ்யா நான் சொல்றது உனக்கு புரிஞ்சுதா..நீ ஒண்ணுமே சொல்லலையே “
காவ்யா சரியென்று தலையசைத்தாள்…
“இத்தனையிலும் ஒரு நல்ல விஷயம் உங்க அப்பா, அம்மா டெல்லி போயிருக்கிறது. அவங்க எப்படியும் வர நாலு நாளாகும் ..இது நமக்கு பெரிய ரிலீப்..ஒரு சைடு சமாளிச்சாப் போதும். புதன்காலையில 10-11.30 மணி மூகூர்த்தம் .ஜெய் நேரே கோயிலுக்கு வந்துடுவாரு. நீ கிளம்பி உன் பிரெண்ட் வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு, கோயிலுக்கு வந்திடு. உன்னுடைய பேக்கைக் கூட முதல் நாளே காருக்குள்ள வச்சிடு. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதும்.. நேரா ரிஜிஸ்டர் ஆபீஸ்ஸுக்குப் போய் மேரேஜ்ஜை ரிஜிஸ்டர் பண்றோம் ..ஐடி ப்ரூப் எல்லாம் ரெடியா ஹேண்ட்பேக்ல வச்சுக்கோ ..”
“ஜெய் எங்க தங்குறாரு ஆதர்ஷ்..” தயக்கத்துடன் கேட்டாள் காவ்யா.
“அவங்க ஃபேமிலி எல்லாம் வெளியூர் போயிட்டாங்க.. அதனால அவரை என் பொறுப்பில் ஒரு ஹோட்டல்ல தான் தங்க வைக்கப் போறேன். அது எந்த ஹோட்டல்னு தயவு செய்து கேட்காத. முடிகிற வரைக்கும் என்கிட்ட எதுவுமே கேட்காத… நான் சொல்றத மட்டும் பாலோ பண்ணு.”
இவர் வெளியே சாதாரணமாக காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் பயங்கர டென்ஷனில் இருக்கிறார் என்பது காவ்யாவுக்குப் புரிந்தது. தான் அவருக்கு செய்யக் கூடிய உதவி எந்த கேள்வியும் கேட்காமல் அவர் கூறுவதை அப்படியே செய்வதுதான் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆதர்ஷ் கூறியபடியே தன்னுடைய காலேஜ் பேக்கில் முக்கியமான சர்டிபிகேட் ..வேலைக்கான ஆர்டர்.. ஐடி ப்ரூப் லேப்டாப்..சார்ஜர்.. என முக்கியமானவற்றை எடுத்துக் கொண்டாள் ..அப்படியே எதற்கும் உதவட்டும் என்று தன் கையிலிருந்த பணத்தையும், தன் அம்மா வீட்டு நகைகளை மட்டும் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.
ஆதர்ஷ் வீட்டில் போட்ட நகைகளை கழற்றி ஒரு டப்பாவில் வைத்து மூடினாள். நினைவாக தாலி சங்கிலியையும் கழற்றி அந்த டப்பாவில் வைத்து மூடி பீரோவில் வைத்துப் பூட்டினாள். தாலிச்செயின் போல தான் வாங்கி வைத்திருந்த இன்னொரு செயினை கழுத்தில் மறைவாக போட்டுக் கொண்டாள் தாலியை கழட்டும் போது கை நடுங்கியது ..மானசீகமாக ருக்மணிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.
மறுநாள் திங்கட்கிழமை ஒரே படபடப்பாக இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் ரூமுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.அன்றைய பொழுது கழிந்தது.
செவ்வாய்க்கிழமை ..மாயா காலையிலேயே வந்தாள்.
“ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகினில் வரலாமா ..
வருவதும் சரிதானா ..
உறவும் முறை தானா …
இளவரசி காவ்யா அவர்களே ..ஏன் இந்த மௌனம் .என்பாடல் தங்களுக்கு பிடிக்கவில்லையா? “
காவ்யா அதற்கும் பதில் பேசாமல் புன்னகையை மட்டுமே பதிலாய்த் தந்தாள் ..அதுவும் கஷ்டப்பட்டு புன்னகைத்தாள்.
மாயா அவள் சோர்ந்த முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்டாள்.
“என்ன காவ்யா ரொம்ப டல்லா இருக்க? ஏதாவது ப்ராப்ளமா? அத்தை கூட சொன்னாங்க நேத்து ஃபுல்லா நீ ரூமிலேயே தான் இருந்தேன்னு.என்ன ஆச்சு? ஏன் மூட் அவுட் ..?அத்தான்கிட்ட ஏதாவது சண்டை போட்டியா …?”
“அப்படி எல்லாம் இல்ல அக்கா ..”
“சரி..வா.. தோட்டத்தைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வருவோம். பூவைவெல்லாம் பார்த்தா நீயும் பிரஷ்ஷாயிடுவே” என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு தோட்டத்துக்குள் நடந்தாள் …
இருவரும் தோட்டத்தில் இருந்த கல் பென்ஞ்சில் உட்கார்ந்தார்கள் ..
“அத்தை முன்னால கேட்க வேண்டாம்ன்னு தான்.. நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். என்ன பிரச்சினை காவ்யா உன்னை ஒரு வருஷமா எனக்கு நல்லா தெரியும். உன் மனசுல இருக்கறதை முகம் பிரதிபலிக்கும். ஏதோ ஒரு பெரிய போராட்டம் உனக்குள்ள இருக்குது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த முகச் சோர்வு ..என்ன உன் கூடப் பிறக்காத சகோதரியாக நினைச்சுகிட்டு மனசுவிட்டுப் பேசு.. என்ன பிரச்சினை உனக்கு ..?”
ஆதர்ஷ் அவ்வளவு எச்சரித்தும் காவ்யாவால் உணர்வுகளை அடக்க முடியவில்லை ..குமறி குமறி அழுதாள் ..பதறிப்போன மாயா அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள் ..
“மாயாக்கா.. என் கூட பிறந்த கூட சகோதரி கூட இவ்வளவு பாசமா இருக்க மாட்டா… நீங்க இவ்வளவு அன்பா இருக்கறீங்க… உங்ககிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல நீங்க ஒருத்தியாவது என் மனசுப் புரிஞ்சுக்கோங்க ..ஆதர்ஷ் கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொன்ன விஷயத்தை நான் உங்களிடம் பகிர்கிறேன்” என்று ஆதியோடு அந்தமாக அவளிடம் அனைத்தையும் கூறி முடித்தாள்.
அதிர்ந்து போனாள் மாயா ..அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை .இப்படி ஒரு விஷயம் ஆதர்ஷ் – காவ்யா வாழ்க்கையில் நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.
காவ்யா சொன்ன விஷயத்தைக் கேட்டு உறைந்து போய் இருந்த மாயா… சற்று நேரத்தில் சுதாகரித்துக் கொண்டு,“காவ்யா நடந்தது நடந்து போய்விட்டது. ஆதர்ஷ் அத்தான் பேரில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது .அத்தான் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார். இனி நீ செய்யக்கூடியது அத்தான் சொல்வதை அப்படியே கேட்டு உன் வாழ்க்கையை அமைத்துக் கொள் ..உன் நல்ல குணத்துக்கு நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருப்பே ..நான் எதுவுமே தெரியாதது போலவே இருந்துடுறேன். நீயும் என்னிடம் சொல்லியதை வெளியே சொல்லாதே. இதை என் மனது ஏற்க கொஞ்ச நேரம் ஆகும். அதனால் நான் வீட்டுக்குப் போகிறேன். நான் இப்ப அத்தையைப் போய் பார்த்தா அத்தை ஏதாவது என் வாயை கிளறுவாங்க… அத்தை என்னைக் கேட்டா அம்மா போன் பண்ணா அதனால நான் வாசலோட போயிட்டேன்னு சொல்லிடு. …”
காவ்யா கண்ணீர் வழிய, மாயாவின் கைகளை பிடித்துக் கொண்டாள் …மனம் பிரஷ்ஷாக தோட்டத்திற்கு வந்த அந்த இரண்டு இளம் மலர்களும் வாடி நின்றன…
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings