2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35
காவ்யாவின் பரீட்சை ஆரம்பித்தது .அடுத்து வந்த இரண்டு வாரங்களும். அவளுக்கு படிக்கவும் ..காலேஜ் போய் எக்ஸாம் எழுதி விட்டு வரவும் சரியாக இருந்தது .நல்லவேளையாக ஒவ்வொரு எக்ஸாம்க்கும் நடுவே ஒன்று அல்லது இரண்டு நாட்கள் லீவு இருந்ததால், படிக்க வசதியாக இருந்தது. அந்த ரெண்டு வாரமும் அனேகமாக அவள் ரூமிலேயே தான் இருந்தாள். பாரு அப்பப்போ வந்து அவளுக்கு காபி, ஜூஸ், டீ என்று ஏதாவது கொடுத்து விட்டுப் போவாள்.
நைட் படிப்பதற்கு வசதியாக, பிளாஸ்கில் டீயும், சாப்பிட ஏதாவது பழங்களும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போவாள் …நேரம் கிடைக்கும்போது ஒரு பத்து நிமிடங்கள் அத்தையிடம் போய் நலம் விசாரித்து விட்டு வருவாள் காவ்யா. பரீட்சை நடப்பதால் மாயாவும் அதிகமாக வரவில்லை. அப்படியே வந்தாலும் அவள் பரீட்சை எழுத போயிருக்கும் நேரம் வந்து அத்தையிடம் பேசிவிட்டுப் போவாள்.
அன்று கடைசி பரீட்சை ..அவள் பரீட்சை எழுதி விட்டு வர, வீட்டில் ரெடியாக மாயா காத்துக் கொண்டிருந்தாள் ..
“ஹேய் காவ்யா எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சா.. சூப்பர்..”
“என்ன மாயாக்கா.. பாட்டைக் காணோம். நீங்க பாட்டோட வரவேற்பீங்கன்னு நினைச்சேன்” என்று சிரித்தாள்..
“என்னப் பாட சொல்லாதே..
நான் கண்டபடி பாடி புடுவேன் ..
அதைக் கேட்டா மடையனுக்கும்
ஞானம் பிறந்துடும் ..
மூடிக்கிடக்கும் சில கண்ணும்
தொறந்திடும் ..”
“எப்பா ..எப்பா.. போதும் ..போதும் ..எந்த மடையனுக்கும் ஞானம் பிறக்க வேண்டாம் ..விடுங்க..தாயே ..”என்றாள்.
“காவ்யா நீ எக்ஸாம்ஸ முடிச்சதை செலிப்ரேட் பண்ண வேண்டாமா? நாம அத்தானை சீக்கிரம் வரச் சொல்லி பீச்சுக்கு போவோமா?” என்றாள் ….
“என்ன.. என்ன.. பிளான் போட்டுகிட்டிருக்கீங்க ரெண்டு பேரும்? ” என்று கேட்டபடியே ஆதர்ஷ் வர ..
“ஹேய்ய்..அத்தான் வந்துட்டாங்க “
“அத்தான்.. அத்தான்..ப்ளீஸ் நாம மூணு பேரும் பீச்சுக்குப் போவோமா? காவ்யா எக்ஸாம் முடிஞ்சிருச்சி .. நாம அதை செலப்ரேட் பண்ணலாம். பீச்சுக்குப் போய் சுண்டல், ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு … ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு.. வர்ற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வரலாம்” என்றாள் ஆர்வமாய் …
“ஓ..எஸ்.. போகலாம். எனக்கு இன்னிக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சிருச்சு. தற்செயலாக நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். இப்பவே கிளம்புங்க ..”
பீச்சில் காவ்யாவும்,மாயாவும் வழக்கம்போல் ஆட்டம் போட, அதை அமைதியாக பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.
“எப்படிதான் இந்த சாமியாரை சகிச்சுகிட்டிருக்கியோ?எதுக்கும் வராது இந்த அத்தான்” ஆதர்ஷை திட்டினாள் மாயா .
இருவரும் கைகோர்த்தபடி அலையில் கால் நனைத்து விளையாடினார்கள். ..ஆதர்ஷ் அவர்களுக்கு வழக்கம்போல் ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான்…
மாயா தள்ளி கிடந்த தன் செருப்பை எடுக்க நகர,
“காவ்யா மெரினா பீச் லாஸ்ட் விசிட் ..நீ உன் ஜெய்யோட ஸ்பெண்ட் பண்ணிய இடத்தையெல்லாம் நல்லாப் பார்த்துக்கோ..இதற்கு அடுத்தது சிங்கப்பூர் தான். பாரின் பீச்சில் சுண்டல் கிடைக்காது உனக்கு ..”என்று கிண்டல் பண்ணினான்.
காவ்யா கண்கலங்கியது.
“நோ.. நோ செண்டிமெண்ட்ஸ்.. மாயா வர்றா..”
“நல்லவளா இருக்கிறது தப்பு இல்ல.. ஆனா நீ ரொம்ப நல்லவளா இருக்க காவ்யா” என்று சிரித்தான்..
“நீங்க மட்டும் என்ன? உங்களுடைய ஒவ்வொரு செயலும் எனக்கு முள்ளா மனசக் குத்துது ..”
மூவரும் அன்றைய பொழுதை சந்தோசமாக கழித்துவிட்டு வீடு திரும்பினர்.
இரவு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் காவ்யா. மனது அலை பாய்ந்து கொண்டிருந்தது ..ஆதர்ஷ் சொன்னது அவளுக்கு ஏனோ நினைவுக்கு வந்தது .’சொல்லாமலே சில காதல் மனதில் தங்கிவிடும்’ என்றாரே ..அப்படியென்றால் இவர் மனதிலும் ஏதேனும்..யாரேனும் ஒரு பெண் இருக்கிறாளா? அதனால்தான் எதிலும் பற்றில்லாமல் நடந்து கொள்கிறாரா? ‘
நீரஜா அவர் மனதை கவர்ந்திருக்கிறாளா. இது எப்படி? யாரிடம் கேட்பது? கேட்டாலும் அவர் உண்மையை எப்படி சொல்லுவார் ..நீரஜாவை கடத்திச் சென்றபோது, காப்பாற்ற துடித்த துடிப்பு நினைவுக்கு வந்தது ..எது வந்தாலும் தன்னுடைய விஷயம் முடிந்த பிறகு, ஜெய்யுடன் சேர்ந்த பிறகு, இதைப்பற்றி பேச வேண்டும். அப்படி ஒரு காதல் இருவருக்கும் இடையே இருக்கும் பட்சத்தில்.. இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் .
ஆதர்ஷ் மனதிலிருந்த வெற்றிடம் நீரஜாவுக்கானது என்று அவளுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது …நித்ரா தேவி அவளை ஆட்கொள்ள அப்படியே உறங்கிப் போனாள் ..
இரவு சரியான தூக்கமின்மை ..பரிட்சைக்கு படித்த அலுப்பு.. எல்லாம் சேர, மறுநாள் காலை அவள் எழுந்திருக்கும் போது மணி 8…ஆதர்ஷ் எழுந்து குளித்து கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் …
“குட்மார்னிங் காவ்யா” …” குட் மார்னிங்” சொன்ன காவ்யா எழுந்து பிரஷ் பண்ணிவிட்டு காபி கப்போடு வந்து ரூம் சோபாவில் உட்கார்ந்தாள் ..
“காவ்யா ஒரு முக்கியமான விஷயம் …நாளைக்கு நம்ம டிவோர்ஸ் கேஸ் கோர்ட்டுக்கு வருது..ஒரு ஒன்பது மணிக்கு ரெடியா இரு..நம்ம 10 மணிக்கு கோர்ட்ல இருக்கனும்” என்றான் ..தலையசைத்தாள் காவ்யா
மறுநாள் கோர்ட்டில் இவர்களுடைய கேஸ் முதலாவதாக வர .. ‘பரஸ்பர சம்மதத்தின் பேரில் அவர்கள் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக கூற..’ கோர்ட் அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.
ஆதர்ஷ் கோர்ட்டில் இருந்தவாறே கம்பெனிக்கு கிளம்பிப் போக, காவ்யா வீடு வந்து சேர்ந்தாள் ..ஹாலில் ருக்மணிதேவி உட்கார்ந்திருந்தாள் ..
“என்னம்மா காவ்யா இந்த வேகாத வெயில்ல வெளியில போயிட்டு வர.. முகம் எல்லாம் சிவந்து கிடக்கு… பாரு காவ்யாவிற்கு கொஞ்சம் ஜில்லுனு மோர் கரைச்சு கொண்டு வா ..”
“வேணாம் அத்தை.. வர்ற வழியில இளநீ குடிச்சோம். ஒன்னுமில்ல அத்தை கொஞ்சம் தலை வலிக்குது. போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்.”
“சரிம்மா நீ ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு “என்றாள் ருக்மணி.
ரூமுக்குப் போய் கட்டிலில் படுத்தாள், அவளையுமறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. அவர்களிடையே இருந்த ஒரு வருட திருமண ஒப்பந்தம் இதோ இன்று முடிவுக்கு வந்துவிட்டது. இனி அவளுக்கும் இந்த வீட்டிற்கும் எந்தவித ஒட்டும் உறவும் கிடையாது. ஆதர்ஷுடன் மனைவி என்ற ஸ்தானத்தில் வாழாவிட்டாலும் அந்தக் குடும்பத்தில் மருமகளாக வாழ்ந்தது ..மறுக்க முடியாத உண்மை ..
ஆதர்ஷ் பெருந்தன்மையுடன் இதை செய்தாலும் ..நானும் ஜெய்யும் கல்யாணம் செஞ்சுகிட்டு ஊரைவிட்டு போன பிறகு ஆதர்ஷூக்கு எவ்வளவு அவமானம் …ஊரே “ஆதர்ஷ் மனைவி அவரை விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டா”ன்னு தான் பேசுவாங்க …
ருக்மணி அத்தை, சாரதா பெரியம்மா, மாயா அக்கா, எல்லாரும் எவ்வளவு வருத்தப்படுவார்கள் ..கூடவே இருந்து குழி பறிச்சிட்டான்னு என்னை சபிக்கத் தான் செய்வாங்க ..இந்த பாரு கூட நொடிக்கு நூறு தரம்’ அண்ணி அண்ணி’ன்னு சுத்திகிட்டு வருவா .எல்லார் மனசையும் நான் கஷ்டப்படுத்தப் போறேன். என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்..ஆனா இந்தக் குடும்பத்தை இக்கட்டான நிலைமையில கொண்டு வந்துவிட்டு விட்டேன் ..
ஒரு விதத்தில் பரமேஸ்வரன் மாமாவும் ஒரு காரணம்.அவர் கிட்ட எதையும் மனசு விட்டு பேச முடியாது..அதனால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டிய சூழல் .ஆதர்ஷ் நிலைமையும் பாவம்தான் ..
மனம் பலவாறாக சிந்தித்து குழம்பியது.ஒரு வருடத்திற்கு முன் திருமணத்தின் போது இதே முடிவை அவர்கள் மூவரும் சேர்ந்து எடுத்த போது மனம் கலங்கவில்லை. இப்போது ஒரு வருடம் இவர்கள் எல்லாரிடமும் பழகிய பிறகு..இவர்கள் பாசத்தை அனுபவித்த பிறகு இந்த பிரிவு.. மனது வலித்தது.
அந்த குடும்பம் தந்த பாசச் சுமை அவள் மனதை அழுத்த மனதில் உள்ள பாரமெல்லாம் கண்ணீராய் கரைந்தது …காலம் அவள் கண்ணீருடன் நின்று விடுமா என்ன…அது தன் போக்கில் வேகமாய் நகர்ந்து கொண்டுதான் இ ருந்தது.
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings