2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33
‘ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ்’ பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆதர்ஷ் தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்தான். கையெழுத்துப் போட வேண்டிய முக்கியமான பைல்களையெல்லாம் பார்த்து கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான்.
புதிதாக வேலையில் சேர்ந்த பி.ஏ. நீரஜா அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு கெட்டிக்காரனாகத் தான் இருந்தான்.
“சார் ப்ரொடக்ஷன் சைட்ல இன்னைக்கு விசிட் பண்ணனும். யூனிட் விசிட் பண்ணி ரெண்டு வாரம் ஆயிடுச்சு” என்றான்.
“அஸ்வின் நானே யோசிச்சிட்டு தான் இருந்தேன் இன்னைக்கு விசிட் பண்ணிடுவோம்” என்றான். முக்கியமான வேலை முடிந்த பிறகு இருவரும் ப்ரொடக்ஷன் யூனிட்டுக்கு கிளம்பினார்கள் ..
புரோடக்க்ஷன் யூனிட்டை சுற்றி வரும்போது நீரஜா கம்ப்யூட்டரில் உட்கார்ந்து ஒர்க் பண்ணிக் கொண்டிருந்தாள் ..
அவனைக் கண்டதும் “குட் மார்னிங் சார்” என்ற விஷ் பண்ண..
” குட்மார்னிங்” என்று பதிலுக்கு விஷ் பண்ணினான் ஆதர்ஷ் ..பின் அருகில் சென்று..
” மிஸ் நீரஜா! லாஸ்ட் மன்த் ப்ரொடக்க்ஷன் ஸ்டேட்டஸ் எல்லாம் என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்பிடுங்க” என்றான் .மேலும் சில டீட்டைல்ஸ் கேட்க.. கம்ப்யூட்டரை அவன் பக்கம் திருப்பி அதை விளக்கினாள்..”
அப்போது” நீரஜா ஆபீஸ் முடிஞ்சதும் நான் வழக்கமா பிரண்ட்ஸை சந்திக்கப் போவேனே அந்த காபி ஷாப்புக்கு வந்துடுங்க.. சில விஷயம் பேச வேண்டியதிருக்கு” என்றான் மெதுவான குரலில்.
அங்கிருந்து நகர.. புரொடக்ஷன் மேனேஜர் அக்கவுண்ட்களை எல்லாம் காண்பித்தார். இவையெல்லாம் கவனித்துக் கொண்டே ஆதர்ஷ் மனம் வேறு விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தது.
நீரஜாவுக்கு ஒரு நிமிடம் திக்கென்றிருந்தது. ஏற்கனவே பட்டபாடு போதும். பெரிய இடத்து விவகாரம் தன் நடுத்தர குடும்பத்திற்கு உதவாது என்று ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்க.. இப்பொழுது ஆதர்ஷ் தன்னை சந்திக்க விரும்புகிறார்.
எதற்காக இருக்கும்? அவருக்கு தான் திருமணமாகிவிட்டதே. தாங்கள் சந்தித்துப் பேசுவது தெரிந்தால் கூட காவ்யா அப்பாவும் ..ஆதர்ஷ் அப்பாவும் சும்மா விடமாட்டார்கள் ..முன்பாவது அவருக்கு பி. ஏ வாக இருந்ததால் ஆபீஷியல் விசிட் என்று சொல்லலாம் ..
எண்ணங்கள் குழப்பங்கள் அவளை ஆட்டுவித்தது. மாலை அவன் கூறியபடி காபி ஷாப்புக்கு சென்றாள். நினைவாக அப்பாவுக்கு வர ஒரு மணி நேரம் லேட் ஆகும் என்று கூறிவிட்டுச் சென்றாள்.
காத்திருந்தான் ஆதர்ஷ் …”என்ன நீரஜா எப்படி இருக்கீங்க?” அவளைப் பார்த்ததும் மனதுக்குள் பழைய ஏக்கம் தலைதூக்க.. அதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.
“நான் தான் சார் உங்களை கேட்கனும். ஹவ் இஸ் யுவர் மேரேஜ் லைப் ..காவ்யா மேடம் ரொம்ப நல்ல பொண்ணு ..ரொம்ப பாசமான பொண்ணு ..”
“பைன் நீரஜா.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ..அதை உங்ககிட்ட சொல்ல தான் இங்கே வரச் சொன்னேன். நான் சொல்ல வந்தத முதல்ல சொல்லிடறேன் ..நான் சொல்றத மட்டும் நீங்க அப்படியே ஃபாலோ பண்ணுங்க. ஏன்னு மட்டும் தயவுசெய்து கேட்காதீங்க.”
“சொல்லுங்க சார் ..உங்க உதவியால தான் குடும்பம் எந்த பிரச்சினையும் இல்லாம ஓடிகிட்டிருக்கு ..அண்ணனும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டான். அதனால இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”
“நீரஜா நான் சொல்றது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம்.ஆனா இப்ப விளக்கி எதுவும் சொல்ல முடியாது. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு அதற்கான பதில் கிடைக்கும்” பலமான பீடிகையுடன் ஆரம்பித்தான்..
“நீங்க இந்த மாத கடைசியில் வேலைய ரிசைன் பண்ணிடுங்க!”
நீரஜாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. தான் வேண்டாம் என்று நினைத்தபோது அண்ணனும், இவரும் சேர்ந்து தான் தன்னை வற்புறுத்தி திரும்ப கம்பெனியில் சேர்த்தார்கள். இப்போது ரிசைன் பண்ண சொல்கிறாரே.
“அதிர்ச்சியாகாதீங்க! பொறுமையா கேளுங்க.. நீங்க இங்க ரிசைன் பண்ணிட்டு என்னுடைய பிரண்ட்டோட பொறுப்பில மும்பையில் இதேபோல ஒரு கம்பெனியில உங்களுக்கு ஒரு நல்ல வேலை காத்துகிட்டிருக்கு .இப்ப நான் குடுக்கிற சம்பளத்தை விட ரெண்டு மடங்கு சம்பளம். பாதுகாப்பான வேலை .அவன் பொறுப்பில் உங்க குடும்பத்த நீங்க அங்கு கூட்டிட்டு போயிடுங்க. உங்களுக்கு வீடு பார்த்து கொடுத்து செட்டில் பண்றது எல்லாமே என் பிரண்டு பாத்துக்குவான். மேலும் தம்பி தங்கைக்கு பரீட்சை முடிந்ததும், டீசி வாங்கிடுங்க. அங்க உள்ள ஸ்கூல்ல சேர்ந்து அவங்க படிக்கட்டும்.
ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், நீங்க எங்க போறீங்கங்கறத உங்களுடைய ரொம்ப க்ளோஸ் பீபிள் கிட்ட கூட சொல்லாதீங்க. கேட்டா வடக்க வேலை கிடைச்சிருக்கு அதனால குடும்பத்தை கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிடுங்கள். அடுத்த மாசம் உங்க தம்பி, தங்கச்சிக்கெல்லாம் பரீட்சை முடிந்ததும் இந்த விஷயத்தை வீட்ல சொன்னாப் போதும். சொல்லி ஒரு வாரத்துக்குள்ள நீங்க வேக்கேட் பண்ணி கிளம்பி போயிடுங்க. ஆனா நீங்க பயப்பட வேண்டாம் என்னை நம்பி போகலாம். உங்களுக்கு முழு உதவியும் என்னுடைய நண்பன் பாத்துக்குவான்.”
“ஏன் இந்த திடீர் முடிவு என்று நான் தெரிஞ்சுக்கலாமா சார்?”
“நீரஜா சில விஷயங்கள் என் கைய கட்டி போட்டிருக்கு. இப்ப உங்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஒரு காரியத்த.. காரணத்தோடு தான் சொல்லுவேன்ங்கறது உங்களுக்கு நல்லாத் தெரியும். அதனால தயவுசெய்து கேள்வி கேட்காமல் நீங்க அடுத்தமாதம் கிளம்புறதுக்கு ரெடியாயிருங்க. இந்த மன்த் எண்ட் ரெசிக்னேஷன் கொடுத்திடுங்க”.
புரியவில்லை என்றாலும் அவன் சொல்வதற்கு தலையாட்டினாள் நீரஜா. ஏதோ ஒரு காரணம் இருக்குது. அது என்ன என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவனுடன் பழகியதால் அவன் சொல்வதற்கு தயக்கமின்றி தலையசைத்தாள்.
அவளுடைய ஆச்சரியத்திற்கு அன்று இரவு பேசிய அண்ணன் ஜெய் “சார் சொல்றபடி நீங்க போயிடுங்க.. அவரு ஒரு காரணமாத்தான் சொல்றாரு. நம்ம நல்லதுக்கு தான் சொல்றாரு. அதனால உனக்கு எந்த கஷ்டமும் வராது. என்னுடைய நண்பர்களும் சிலபேர் மும்பையில இருக்காங்க அவங்களும் உங்கள நல்லா கவனிச்சிக்குவாங்க ..
ஆதர்ஷ் சொல்வது சரிதான். இப்போதைக்கு ஒரு மாதத்திற்கு இதை யாரிடமும் சொல்லாதே. நீ ரிசைன் பண்ணிடு. ஷைலு வினய், எக்ஸாம் முடிஞ்ச பிறகு டீ.சி எல்லாம் அப்ளை பண்ணிட்டு..அதுக்கப்புறமா கிளம்ப முன்னாடி அப்பாகிட்ட சொல்லிக்கலாம். நான் அப்பாகிட்ட பேசி அப்பாவை கன்வின்ஸ் பண்ணிடுறேன். நல்ல சம்பளம்.. ஃப்ரீ குவார்ட்டர்ஸ்.. நிறைய சலுகைன்னு சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.” என்று சொல்ல நீரஜா நிம்மதியானாள்.
ஆதர்ஷ் திட்டமிட்டு ஒவ்வொரு காயாக நகர்த்த ஆரம்பித்திருக்கிறான் என்பது ஜெய்யால் புரிந்துகொள்ள முடிந்தது
பரமேஸ்வரனும், ராம் சந்த்தும், மாலினி தேவியும், வரப்போகும் அனிவர்சரி பார்ட்டியை எப்படி கொண்டாடவது, தங்கள் பிசினஸ் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள யாரை எல்லாம் கூப்பிடுவது என்ற சிந்தனையில் இருக்க.. ருக்மணிதேவி குல தெய்வத்திற்கு கிடாவெட்டி பொங்கலிட்டாள். தன் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வர வேண்டுமென வேண்டிக் கொண்டிருந்தாள்.
காவ்யா பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தாலும் ஒருவித டென்ஷனில் இருந்தாள் .. ..சாரதாவும் ருக்மணியும் மாயாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க வழக்கம்போல எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாயா சுற்றிக் கொண்டிருந்தாள்.
ஆளாளுக்கு ஒரு நினைப்பில் இருந்து கொண்டிருக்க…. ஆதர்ஷ் மட்டும் நிதானமாக எப்போதும் போல சலனமற்று தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். யார் எண்ணங்கள் நிறைவேறிடும்.. யார் திட்டங்கள் வெற்றி பெறும்… எல்லாம் படைத்தவன் கைகளில்…
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings