2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32
“நம்ம ஊரு சிங்காரி
சிங்கபூரு வந்தாளாம் …
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ..
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் .
ஹே..ஹே..ஹே..ஹே…
மன்மதன் வந்தானாம் ..
நல்ல சங்கதி சொன்னானாம் …
காவ்யா.. நல்ல சங்கதி சொன்னானா? “
மாயா காவ்யாவை இழுத்து அணைத்துக் கொண்டே ஸ்டெப் போட்டு ஆடினாள் ..
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி தேவிக்கு சிரிப்புதான் வந்தது. அன்னைக்கு மாமாகிட்ட அவ்வளவு வாங்கி கட்டியும் இன்னும் ஏதாவது மாறி இருக்காளா? “
“என்னம்மா காவ்யா ஹனிமூன் ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது? …ஜாலி தானா.. ஒரே மஜாவா இருந்திருக்கும். ஆனா இந்த அத்தான் ஒரு சாமியாரே ..இவருக்கு ரொமான்ஸ் எல்லாம் அவ்வளவு வராது..காவ்யா இந்த சாமியாரை நீ கொஞ்சம் மாத்தலைனா ..அத்தை எத்தனை ஹனிமூன் அனுப்பினாலும் பிரயோஜனம் கிடையாது ..நீ அந்த சாமியார் விசுவாமித்திரர் இருந்தாரே, அவரை ஒரு பொண்ணு மேனகாவோ.. மேகலாவோ.. மயக்கினாளே! அந்த மாதிரி நீயும் அத்தானை மயக்கினாத் தான் உண்டு..”
“சே…சே…. என்ன பேச்சு இது.. வயசு பொண்ணு பேசுற பேச்சா .. கொஞ்சமேனும் வெட்கம் இருக்கா?” என்றாள் ருக்மணிதேவி.
“அத்தை நீங்க ரூமுக்கு போங்க.. இது வயசு பொண்ணுக பேசுற விஷயம்.. இதுல வயசானவங்களுக்கு வேலை கிடையாது. காவ்யா பேரனோ ,பேத்தியோ பெத்து கொடுக்கும் போது அதை கொஞ்சிகிட்டிருக்கிறது மட்டும் தான் உங்க வேலை …”
“சரிதாண்டி. நீயாச்சு… அவளாச்சு..” என்ற ருக்மணிதேவி ரூமுக்கு நடந்தாள்.
“சொல்லு காவ்யா.. உன் சிங்கப்பூர் டிரிப்பெல்லாம் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்துச்சு மாயாக்கா.. ..நிறைய இடம் சுத்திப் பார்த்தோம். நிறைய ஷாப்பிங் பண்ணினோம்.கொஞ்சம் இருங்க..” என்றவள் உள்ளே போய் மாயாவுக்கு வாங்கி வந்த கோட்டு.. ஹேண்ட்பேக்… டிரஸ்..எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள் .
“ஏய் ..ரியலி சூப்பரா இருக்குது! ரொம்ப நாளா எனக்கு இதுபோல ஃபாரின் ஹேண்ட்பேக் வேணும்னு ரொம்ப ஆசை. ஓவர் கோட்டும் கலர் சூப்பரா இருக்கு..”
“மாயாக்கா கொஞ்சம் அசசரீஸ் (Accessories) எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ எடுத்துக்கோங்க” என்று எல்லாவற்றையும் காண்பித்தாள்.
“அப்புறம் இந்த பர்ஸ் சாரதா பெரியம்மாவுக்கு. இத அவங்ககிட்ட கொடுத்திடுங்க…”
“ஹேய் சூப்பர் காவ்யா ..செம ஷாப்பிங் பண்ணியிருக்க போல… கீழே..பாரு.. ஒரு பேக் காண்பித்து, நீ அவளுக்கு வாங்கிட்டு வந்தேன்னு ரொம்ப சந்தோஷமா சொன்னா … ரியலி சூப்பர்! பாருவைக் கூட மறக்காம ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்திருக்க பாத்தியா …?”
“அதெல்லாம் சரி காவ்யா .. நீ உன்னுடைய ரொமான்டிக் போட்டோஸ் எல்லாம் காண்பிக்கவே இல்லையே? நீயும் அத்தானும் எடுத்துகிட்டது …அதை எப்ப ரிலீஸ் பண்ணுவ?”
சுரீர் என்றது காவ்யாவிற்கு.. அதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.. முதல் நாள் மூன்று பேரும் எடுத்த ஃபோட்டோஸ் தான் இருந்தது ..அடுத்த இரண்டு நாட்கள் அவள் ஜெய்யுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோஸ் தான் இருக்கு ..இந்த போட்டோ விஷயம் மாயா கேட்பாள் என்பது மறந்தே போய்விட்டது ..
“அது மாயாக்கா.. எடிட் பண்ணி அப்புறமா உங்க நம்பர்க்கு அனுப்புறேன். விடியற் காலையில வந்தது ரொம்ப டயர்டா இருந்துச்சு.. அதனால போனை சார்ஜ் கூட போடல.. சார்ஜ் இல்லை” என்றாள் தட்டுத்தடுமாறி..
போட்டோவை கேட்டதும் இவள் ஏன் பேயறைஞ்சது போல மாறிட்டாள் என்று யோசித்தாள் மாயா ..ஒருவேளை அத்தான் கூட ரொம்ப ரொமாண்டிக்கா போட்டோஸ் எடுத்திருப்பா.. அதான் காண்பிக்க கூச்சப்படுறா. காவ்யா எவ்வளவு சந்தோஷமாக இருக்கறா.. எந்தப் பிரச்சினையும் இருக்காது ..மற்ற எண்ணங்களை புறந்தள்ளினாள் மாயா.
“இன்னைக்கு காலேஜ்கு கட்டா காவ்யா?”
“இல்ல மாயாக்கா மத்தியானம் போகனும்.அரை நாள் லீவு சொல்லியிருக்கேன். ரொம்ப டயர்டா இருந்துச்சு.. வந்து உடனே கிளம்ப முடியல.. அதனால இப்ப 12 மணிக்கு சாப்பிட்டுட்டு கிளம்பனும்.”
“ஓகே.. ஓகே.. அப்ப நீ போய் குளிச்சிட்டு கிளம்பு.. நான் அத்தை கிட்ட பேசிட்டு இருந்துட்டு வர்றேன் ..இல்ல போறேன் நீ காலேஜ் போ நான் நாளைக்கு சாயங்காலம் நிதானமா வர்றேன் ..”
“நீங்க அத்தை கிட்ட பேசிக்கிட்டு இருங்க மாயாக்கா… நான் காலேஜ் போகும் போது உங்கள வீட்ல டிராப் பண்ணிட்டே போறேன் “
“ஓகே டன் ..”
அடுத்து வந்த நாட்களில் காவ்யா பரீட்சை நெருங்கி வர, மும்மரமாக படிக்க ஆரம்பித்தாள் ..காலேஜில் கேம்பஸ் இன்டர்வியூவில் நிறைய கம்பெனிகள் வர ஆரம்பித்தது. இண்டர்வியூவுக்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். சிங்கப்பூரில் பிராஞ்ச் இருக்கும் கம்பெனியாக பார்த்தே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணினாள்.
அன்று பரமேஸ்வரன் வெளியே கிளம்பிக் கொண்டிருக்கும் போது ராம் சந்தும், மாலினி தேவியும் வந்தார்கள் ..
“வாங்க சம்மந்தி! வாங்க! உள்ளூர்ல இருக்கீங்கன்னு பேரு ஒரேடியாக ஆளையே காணோம் …”
“பாரு! நீ போயி ருக்கு கிட்ட சொல்லி, வரச்சொல்லு.. சம்மந்தி வந்திருக்காங்கன்னு சொல்லு …”
பாரு போய் சொன்னதும் ருக்மணிதேவி கீழே இறங்கி வந்தாள். ” வாங்க சம்பந்தி! ரொம்ப நாளாச்சு உங்களப் பாத்து நானே காவ்யா கிட்ட சொல்லிகிட்டிருந்தேன். அப்பா அம்மாவ வர சொல்லுன்னு ..”
பரமேஸ்வரன்..” ருக்கு அவங்களுக்கு காலை டிபன் ரெடி பண்ணு .”
“எங்க காவ்யாவை காணும்? ..”
“அவளும், ஆதர்ஷூம் எங்கயோ வெளில போயிருக்காங்க.. காவ்யா ஏதோ புக்ஸ் வேணும்னு கேட்டா.. அதனால ரெண்டு பேரும் இப்பத்தான் போனாங்க..நீங்க வர்றத காவ்யா கிட்ட சொல்லலையா?”
“அவளத்தான் வாராவாரம் பாத்துக்குறோமே… நாங்க வந்தது உங்களைப் பார்க்கத்தான்”
ருக்மணி” டிபன் ரெடியா தான் இருக்கு …நான் எடுத்து வைக்கிறேன் .சாப்பிட்டுக்கிட்டே பேசுங்க” என்றவள் பார்வதியை தட்டுக்களை வைக்கச் சொன்னாள்.
சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தார் ராம்சந்த் …
” அடுத்த மாசம் 15ஆம் தேதி நம்ம பிள்ளைகளுக்கு முதல் வெட்டிங் டே வருது.. அத நல்ல கிராண்டா செலிபரேட் பண்ணனும்னு ஆசைப்படுறா மாலினி தேவி”
“ருக்குகூட சொல்லிகிட்டிருந்தா கல்யாண நாள் போது குல தெய்வத்திற்கு பூஜை எல்லாம் போடனும் பொங்கலிட்டு கடா வெட்டனும்னு ..”
“நீங்க குலதெய்வத்துக்கு நெனைச்சபடி செய்ங்க.. நல்ல விஷயம்தானே.. சீக்கிரம் அந்த சாமி நமக்கு ஒரு பேரக் குழந்தையை கொடுக்கட்டும்”
“நாங்க யோசிச்சுகிட்டிருக்கிறது ஒரு ஸ்டார் ஹோட்டலில் அன்னைக்கு சாயங்காலம் டின்னர் ஏற்பாடு பண்ணுவோம் .. எங்க பிரண்ட்ஸ் மற்றும் முக்கியமான ரிலேட்டிவ்ஸ் கூப்பிடலாம்னு இருக்கோம் ..நீங்களும் உங்க சைடுல இருந்து எவ்வளவு பேர் வருவாங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும். பைனலா பிள்ளைங்க கிட்ட கேட்டுட்டு ‘ராவ் பேலஸ்’ல ஏற்பாடு பண்ணிடலாம்.”
பரமேஸ்வரன் சந்தோஷமாக தலையசைத்தார்.” நானும் என் சைடுல பிசினஸ் சர்க்கிள் எல்லாத்தையும் லிஸ்ட் பண்ணிட்டு உங்ககிட்ட சொல்றேன். என் பி.ஏ. வந்து உங்ககிட்ட பைனல் லிஸ்ட் கொடுப்பான்.”
“காவ்யா எக்ஸாம் ஆரம்பிக்குதுன்னு சொன்னா” என்றாள் ருக்கு தயக்கத்தோடு ..
மாலினி தேவி,” நான் காவ்யா கிட்ட கேட்டுட்டேன். எக்ஸாம்ஸ் அதுக்கு அடுத்த வாரம் தான் ஆரம்பிக்குது ..”
கல்யாண நாளில் பெசன்ட் நகரில் கடற்கரை பார்த்து அவர்கள் கட்டியுள்ள புதிய பங்களாவை காவ்யாவிற்கு கல்யாண நாள் பரிசாக கொடுக்க வேண்டும் ..அப்புறம் மெதுவாக அவர்கள் இருவரையும் அந்த பங்களாவிற்கு தனியாகப் போகச் சொல்ல வேண்டும். இங்கே மாமனார், மாமியார் கூட இருந்துகிட்டு ஒரு பிரைவசியும் இல்லாம கஷ்டப்பட்டுக்கிடிருக்கா காவ்யா. அது தனி பங்களா , நானும் அடிக்கடி போய் பார்த்துக் கொள்ளலாம் ..மாலினி தேவியின் உள்ளம் குடும்பத்தை பிரிப்பதற்கு மும்மரமாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings