in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 32) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15    பகுதி 16      பகுதி 17     பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22  பகுதி 23     பகுதி 24     பகுதி 25     பகுதி 26    பகுதி 27    பகுதி 28    பகுதி 29 பகுதி 30     பகுதி 31

“காவ்யா நாளைக்கு நைட் தான் நமக்கு பிளைட். அதனால காலையில நீ இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் எல்லாம் முடிக்கலைன்னு சொன்னேல்ல. ஜெய் கூட போயிட்டு ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டு வா.. ஈவினிங் இங்க இருந்தாப் போதும். திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வந்துடு. நாம ஏர்போர்ட்டுக்கு ஒரு ஏழு மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் …”

மூவரும் கீழேயுள்ள ரெஸ்டாரண்டுக்கு டின்னர் சாப்பிடச் சென்றனர். டின்னர் முடித்ததும் ஜெய்யும், காவ்யாவும் விடைபெறும் நேரம் ருக்மணிதேவி இடமிருந்து போன் வந்தது.

 “ஹலோ! அம்மா நல்லா இருக்கீங்களா? ..”

“ஆமாம்மா எல்லா இடமும் இன்னைக்கும் சுத்திப் பார்த்தோம் ..இல்லம்மா இன்னும் படுக்கல… இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் ..”

“தம்பி காவ்யா கிட்ட இருக்காளா? அவ கிட்ட பேச முடியுமா ?”

சைகையில் காவ்யாவிடம் கேட்க ..காவ்யா போனைக் வாங்கினாள் …

“அத்தை நல்லா இருக்கீங்களா ..வரும்போது கால் வலி இருந்ததே இப்ப பரவாயில்லையா ..மாத்திரை எல்லாம் போட்டிங்களா?”

“எனக்கு கால் வலி பரவாயில்ல மா. நீங்க சிங்கப்பூர்ல எல்லா இடமும் சுத்தி பார்த்தீர்களா? உனக்கு புடிச்சிருந்ததா.. உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான் தினமும் கூப்பிடல”

“சிங்கப்பூர் புடிச்சது அத்தை.. நாங்க எல்லா இடமும் சுத்திப் பார்த்தோம் ..நாளைக்கு நைட்டு பிளைட் ஏறினதும் சொல்றோம்.மாயா எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா ..?”

“தினமும் வர்றா.. வந்து என்கிட்ட பேசிகிட்டு இருந்திட்டுத் தான் போறா ….சரி மா இன்னும் ஒருநாள் தானே நாளை கழிச்சி நேரில பாப்போம்.”

“சரிங்க அத்த உடம்ப பாத்துக்கோங்க..”ருக்மணி போனை வைத்துவிட ..போனை ஆதர்ஷிடம் கொடுத்தாள் காவ்யா.

“நேற்றும் அம்மா போன் பண்ணாங்க. உன்னை கேட்டாங்க.. நான் கீழே வாக் பண்ணிட்டிருக்கேன்னு சொல்லிட்டேன் “

ஜெய்யும், காவ்யாவும் கிளம்ப, ஆதர்ஷ் ரூமுக்கு திரும்பினான்.

மறுநாள் காவ்யாவும், ஜெய்யும் ‘கார்டன்ஸ் ஆன் தி பே’ (Gardens on the bay) பூங்காவிற்கு போனார்கள். பசுமையான அந்த பூங்காவும், இயற்கையான மரங்களும், மலர்களும், மனதிற்கு ஒரு இதத்தைக் கொடுத்தது. ஊருக்கு கிளம்ப வேண்டுமே என்ற கவலையை கூட மறக்க வைத்தது காவ்யாவிற்கு ..

“ஜெய் மிஸ் யூ டா ..உன்ன விட்டுட்டுப் போறதுக்கு மனசே இல்ல ..இந்த மூன்று நாளும் எவ்வளவு ஜாலியா இருந்தது ..நாம மெரினா பீச்சுல ஹாப்பியா இருந்த நாளுக்கு அப்புறம் இந்த மூன்று நாள் தான் ரொம்ப லைவ்லி அண்ட் லவ்லி டேஸ் ..”

சுதந்திரமாக அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்..

“ஜெய் இவ்வளவு அழகான சிங்கப்பூர் ..நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து செட்டிலாகும் போது நல்லா என்ஜாய் பண்ணுவோம். ஒவ்வொரு இடத்துக்கும் திரும்பப் போவோம்.”

“தேங்க்ஸ் டு ஆதர்ஷ்! நமக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவர் ஏற்படுத்திக் கொடுப்பார்னு நான் நினைக்கவேயில்ல. நீயும் இந்தியா வரல… உன்ன பார்த்து எட்டு மாசமாகுது. எவ்வளவு ஏங்கிப் போய்ட்டேன் தெரியுமா..லவ் யூ டா ..மிஸ் யூ டா ..”

அத்தை, மாயா ,ஆதர்ஷ் , எல்லாரும் ரொம்ப அன்பா இருக்காங்க. எனக்கு என் வீட்டைவிட ஆதர்ஷ் வீடு ரொம்பவே பிடிச்சிருக்கு. அத்தை ரொம்ப பாசமா இருக்காங்க. மாயா எனக்கு நல்ல பிரண்ட் ..

அதனாலதான் எனக்கு நீயில்லாம இவ்வளவு தூரம் வித் ஸ்டாண்ட் பண்ண முடிஞ்சுது. கல்யாணம் ஆன புதுசுல ..ஒரு வருஷம்ங்கறது ரொம்ப நீளமான பீரியட்டா தெரிஞ்சது. இப்போ கிடுகிடுன்னு ஓடிடுச்சு..என்ன மேட்டர் ஆப் த்ரீ ..போர் மன்த்ஸ்.”

“ஹேய் பேபி ..உன்னுடைய ஐஸ்கிரீம மறந்துட்டியே? இங்கே சிங்கப்பூரில் ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கும். கொஞ்ச நேரம் இரு. இது பியூட்டிஃபுல் பிளேஸ் ஒரு வாக் போயிட்டு வா ..ஆனா ரொம்ப தூரம் போயிடாதே. நான் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி விட்டு ஓடி வந்துடறேன்” என்றான் ..

அதேபோல் ஐஸ்கிரீம் ஷாப் போய் காவ்யாவிற்கு பிடித்த ரெண்டு..மூணு ப்ளேவர்களில் ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு திரும்பினான். அவள் செல்லமாக ஐஸ்க்ரீமை எடுத்து அவனுடைய இரண்டு கன்னங்களிலும் தடவினாள் ..

“ஏய் பேபி ..சென்னையில விளையாட்டுற விளையாட்ட இங்கேயும் ஆரம்பிச்சிட்டியா?” என்றான் அவளை அணைத்துக் கொண்டு.

அவன் முகத்தில் உள்ள ஐஸ்கிரீமை அப்படியே வழித்து வாயில் வைத்து..அவள் தன்னுடைய விரலால் ஐஸ்கிரீமை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காக அந்த காதல் புறாக்கள் தங்கள் கனவுகளில் ஆழ்ந்து ..பழைய இனிய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கொண்டு இருந்தார்கள். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ..நிகழ்காலத்தின் இன்ப நினைவுகளில் கனவுகளில் வாழ்ந்திருந்தார்கள் .மணி நான்காக ஜெய்யும், காவ்யாவும் அவசரமாக ரூமுக்குத் திரும்பி, சாமான்களையெல்லாம் பேக் பண்ணி கொண்டு ஆதர்ஷ் ஹோட்டலுக்கு கிளம்பினார்கள் ..

“என்ன ப்ரோ லேட்டாயிடுச்சா.. டென்ஷன் ஆயிட்டீங்களா?” என்றான் ஜெய் ..

“நோ நோ… நோ ப்ராப்ளம் நான் ரெடியாத் தான் இருக்கேன். பேக்கிங் எல்லாம் முடிச்சாச்சு.. ரூம் கூட செக் அவுட் பண்ணிட்டேன். ஆதனால நாம ரெஸ்டாரண்டில் ஏதாவது சாப்பிட்டுட்டு கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. கேப் புக் பண்ணிடுறேன். “

சாப்பிட்டுவிட்டு கேப்பில் ஏர்போர்ட் கிளம்பினார்கள் ..

“ப்ரோ நான் சொல்வத யோசிங்க… காவ்யா எக்ஸாம் முடிஞ்ச பிறகு ..எங்களுடைய முதல் அன்வர்சரி செலிப்ரேஷன்ஸ் எப்படியும் ரெண்டு குடும்பத்திலேயே பெருசா பண்ணுவாங்க. அது முடிஞ்ச பிறகு நாம ஒரு டேட்ட பிக்ஸ் பண்ணி எல்லாத்தையும் ரெடி பண்ணிடுவோம். நான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டு உங்களுக்குச் சொல்றேன்”

ஜெய் ஆதர்ஷின் கையைப் பிடித்துக்கொண்டான்.

“ப்ரோ ரொம்ப தேங்க்ஸ்.. நாங்க ரெண்டு பேரும் இந்த நாலு நாள் ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருந்தோம் .அதுக்கு காரணம் முழுக்க முழுக்க நீங்க தான். உங்கள மாதிரி ஒரு பெருந்தன்மையான மனுஷனை பார்க்கவே முடியாது”

“அதெல்லாம் இல்ல ப்ரோ.. இந்த ஹனிமூன் ஐடியாவே எங்க அம்மாவுக்குத் வந்தது தான். அதனால நான் இப்படி யோசிச்சேன் …சிங்கப்பூர் போனா காவ்யா ரொம்ப சந்தோஷமா இருப்பா உங்களைப் பார்த்தால்.. அதே போல பல மாதங்களுக்குப் பிறகு காவ்யா முகத்தில ஒரு நிம்மதியை சந்தோஷத்தை நான் பார்த்தேன்.”

அவர்களுடைய பிளைட் க்கு கால் வர.. “அப்ப வர்றோம் ஜெய் நாங்க ரெண்டு பேரும் ..டேக் கேர் ..”

காவ்யா ஜெய்யின் கையை பிடித்துக்கொண்டு,” கிளம்புறேன் பை டா ..மிஸ் யூ டா ..நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால் பண்றேன் ..”

“காவ்யா பீல் பண்ணாத.. அடுத்தது உனக்கு எக்ஸாம்ஸ் வருது .. நல்லா படி… மூணு மாசம் ஓடிப் போயிடும் அப்புறம் நான் அங்க வந்துடுவேன் ..”

“பீ ஹேப்பி.. நீ சிரிச்சுகிட்டே பாய்( Bye) சொன்னா தான் எனக்கு சந்தோஷமா இருக்கும் ..”

“பய்ய்.டா..(Bye da…)”என்று சிரித்தவாறே தலையசைத்தாள். இருவரும் பிளைட் ஏறினர் ..ஜெய்யுடன் கழித்த அந்த நாட்களில் இனிய ஞாபகம் மனதில் திம்மென்று ஏறி உட்கார, மனநிறைவோடு ஆதர்ஷைப் பார்த்து புன்னகைத்தாள்.

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெஞ்ச் டிக்கெட் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    மத்யமாவதி (பகுதி 13 – பாகேஸ்வரி) – சாய்ரேணு சங்கர்