2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30
காவ்யா சந்தோஷமாக சிங்கப்பூர் கிளம்பவே இரண்டு வீட்டுப் பெற்றோர்களும் மிகவும் நிம்மதி. இத்தனை நாள் இந்த யோசனை தோன்றவில்லையே என்று நினைத்துக் கொண்டார்கள் …சீக்கிரம் நல்ல செய்தி வந்தால் சரி என்று ருக்மிணி தேவி வேண்டிக் கொண்டாள்.
சிங்கப்பூரில் அவர்களை வரவேற்க, ஜெய் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தான். அவனைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டி அணைத்துக் கொண்டாள் காவ்யா .அந்த எட்டு மாத பிரிவு அவனைப் பார்க்காமல் மனதிற்குள் மிகவும் ஏங்கிப் போயிருந்தாள் ..
“ஹலோ ப்ரோ.. சிஸ்…. நாங்களும் இருக்கோம்” என்று சிரித்தான் ஆதர்ஷ்.
“சாரி ஆதர்ஷ்! வெகு நாளைக்கு பிறகு பார்த்ததும் என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை “என்றாள் காவ்யா.. கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
மூவரும் காரில் பேசிக் கொண்டே சென்றார்கள். ஏற்கனவே ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருந்தான். காவ்யா, ஆதர்ஷ் நீங்க ரெண்டு பேரும் ரூமுக்கு போய் ரெடியாயிட்டு வாங்க.. நாம இன்னைக்கு ஜாலியா யுனிவர்சல் ஸ்டுடியோ சுற்றி பார்க்கலாம் என்றான் ..எங்கெங்கே செல்ல வேண்டும் என்ற ப்ரோகிராமையும் கூறினான்.
“ப்ரோ..நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.நான் ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கிறேன். உங்களோடது சர்வீஸ் அபார்ட்மெண்ட் தானே அதுல காவ்யா உங்களோட தங்கட்டும். ..எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் ரெடியாயிட்டு வந்திடறேன்.. அப்படியே நாம சுத்திப் பாக்க கிளம்புவோம்” என்றான் ஆதர்ஷ் ..
ஜெய் சற்று சங்கடத்துடன் காவ்யாவைப் பார்க்க காவ்யா சந்தோஷமாய் தலையசைத்தாள்..
ஆதர்ஷ் ஹோட்டலில் இறங்கிக் கொள்ள, அவர்கள் இருவரும் ஜெய் இருக்கும் வீட்டிற்குச் சென்றார்கள். ரூமிற்கு போய் குளித்து ப்ரஷ்ஷான பிறகு ஜெய் இருப்பிடத்திற்கு ஆதர்ஷ் வர ,மூவரும் அன்று முழுக்க நிறைய இடங்களை சுற்றிப் பார்த்தனர். காவ்யா முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
முக்கியமாக யுனிவர்சல் ஸ்டுடியோவில் நிறைய நேரம் எடுத்துக் கொண்டார்கள். காவ்யா..சிறு பிள்ளை போல் எல்லா ரய்ட்டிலும் (Ride) ஏறி இறங்கினாள் .சில பெரிய ரய்ட்களில் மூவரும் ஏறினார்கள்.
‘பாவம் இவள் ஜெய்யை பார்க்காமல் இத்தனை நாள் ஏங்கி இருப்பாள்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். தன்னை இவ்வளவு தூரம் நேசிக்கும் ஒரு பெண் கிடைப்பதற்கு ஜெய்யும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
மறுநாள் ஜெய் என்னென்ன இடங்கள் சுற்றி பார்க்கலாம் என்று பிளான் பண்ண.. ஆதர்ஷ் “ப்ரோ! நீங்களும் காவ்யாவும் போயிட்டு வாங்க! எனக்கு என்னுடைய ஃப்ரெண்டு ஒருத்தன் இங்க சிங்கப்பூர்ல இருக்கான். அவங்க வீட்டுக்கு போயிட்டு அவங்க ஃபேமிலியோட இன்னைக்கு டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு இருக்கிறேன். அவன் என்கூட காலேஜ்ல படிச்சவன்..”
“நீங்களும் வாங்களேன் ஆதர்ஷ் நாம மூணு பேரும் சுத்தி பார்த்தா நல்லா இருக்கும்” என்றாள் காவ்யா,
“இல்ல காவ்யா… இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க ..நான் அவனைப் பார்க்க வர்றதா ஏற்கனவே சொல்லிட்டேன்” என்றான்.
அரைமனதாக சம்மதித்தார்கள் ..ஆதர்ஷ் ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்து புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான். இல்லாத பிரண்டை எங்கே போய் சிங்கப்பூரில் தேடுவான்? காவ்யாவும், ஜெய்க்கும் தனியாக இருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் .. சிங்கப்பூரை சுற்றி பார்த்துவிட்டு வரட்டும்.. அந்தத் தனிமையை அவர்களுக்கு கொடுக்கத் தான் இப்படி ஒரு கற்பனை நண்பனை உருவாக்க வேண்டியதாகிப் போனது… புன்னகைத்துக் கொண்டான்…
மூன்றாம் நாளும் போக வேண்டிய இடங்களை பிளான் பண்ண … காவ்யா “இன்னைக்கு ஷாப்பிங் போகனும்” என்றாள் ஜெய்யிடம்.
“ப்ரோ நீங்க ரெண்டு பேரும் ஷாப்பிங் போயிட்டு கொஞ்சம் என் ரூமுக்கு வாங்க.. நாம சில விஷயங்கள் பேசணும்” என்றான் ஆதர்ஷ்
இருவரும் ஷாப்பிங் போய்விட்டு, கைநிறைய சாமான் களோடு வந்தார்கள். காவ்யா ஒவ்வொன்றையும் ஆவலாக எடுத்துக் காண்பித்தாள். இந்த ஹேண்ட் பேக், இந்த ஓவர் கோட், இந்த டிரஸ்.. எல்லாமே மாயாவுக்கு ..மாயாவுக்கு இது ரொம்ப நல்ல சூட்டாகும். இது அத்தைக்கு மெடிசின் எல்லாம் வைக்கிற மாதிரி இந்த பேக் வாங்கினேன் …பாருவுக்கு இந்த பேன்ஸி பேக் வாங்கினேன் ..சாரதா பெரியம்மாவுக்கு பர்ஸ். அப்புறம் ஜெய் சொன்னதாலே எங்க அப்பா அம்மாக்கு போனா போகுதுன்னு ஒரு பேர் வாட்ச் வாங்கினேன்.”
“ப்ரோ உங்களுக்கு இந்த கோட் வாங்கினோம் உங்களுக்கு இது ரொம்ப நல்ல சூட் ஆகும்னு காவ்யாவும் பீல் பண்ணா.. எங்களுடைய அன்பு பரிசு “என்று இருவரும் அந்த கோட்டை அவன் கையில் கொடுத்தனர்.
” ஏதோ பேசனும்னு சொன்னிங்களே..என்ன விஷயம் ப்ரோ?”
“கொஞ்சம் சீரியஸ்ஸான விஷயம் . ஆனால் ரெண்டு பேரும் முதல்ல உட்காருங்க.. எக்சைட்மென்ட் எல்லாம் விட்டுட்டு சொல்றத கவனமா கேளுங்க. ஜெய் எங்களுக்கு மேரேஜ் முடிஞ்சு எட்டு மாசம் ஆகுது. மேரேஜ் முடிஞ்சு உடனேயே நாங்க டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டோம். அதனால இன்னும் கரெக்டா நாலு மாதத்தில் டைவர்ஸ் கிடைச்சிடும். அப்புறம் நீங்க இந்தியாவுக்கு எப்ப வருவீங்க ஜெய்.?”
“ப்ரோ நீங்க எப்ப சொல்றீங்களோ.. அப்ப நான் வர்றேன். நீங்க செஞ்சிருக்கறது மிகப்பெரிய உதவி. இத நானும் காவ்யாவும் எங்களுடைய ஆயுள் உள்ளவரைக்கும் மறக்க மாட்டோம்.”
‘பார்மாலிட்டி எதுக்கு ப்ரோ.. நாம் அடுத்து செய்ய வேண்டியத யோசிப்போம். இவ்வளவு நாளும் பாதி கிணறு தான் தாண்டி இருக்கிறோம். இனிமேதான் கவனமா மீதி பிளானை கரெக்டா சரியானபடி எக்சீக்யூட் பண்ணனும். இதுல எதுவும் குழப்பம் வந்தால், இவ்வளவு நாளும் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போயிடும்.”
“என்னுடைய பிளான் என்னன்னா .. காவ்யாவுடைய எக்ஸாம்ஸ் மூணு மாசத்துல முடிஞ்சிடும் .அதுக்கப்புறம் ரிசல்ட்ஸ் வருகிறதோ.. அவ கேம்பஸில் செலக்ட் ஆயி வேலையில சேர்ப்போறாளா என்பதெல்லாம் இரண்டாம் பட்ச கவலைகள். அதை பத்தி அதிகம் கவலைப் பட வேண்டாம். நீங்க இந்தியா வந்தீங்கன்னா நம்ம ஒருநாள் பிக்ஸ் பண்ணி.. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கல்யாணத்தை முடிச்சுக்கோங்க. அது எங்க…எப்படி… அப்படிங்கறதெல்லாம் நான் ப்ளான் பண்ணிட்டு சொல்றேன். அதற்கப்புறம் ரெண்டு வீட்டுக்கும் தெரியும் முன் நீங்க கிளம்பி சிங்கப்பூர் வந்துடனும் ..அதுக்கு பாஸ்போர்ட் விசா டிக்கெட் எல்லாம் ரெடியா வைச்சிட்டு தான் நாம கல்யாணத்துக்கு நாள் குறிக்கனும். கல்யாணம் முடிஞ்ச கையோடு நீங்க இந்தியால இருக்கக்கூடாது ..”
“உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் பெரிய சண்டை வருமே.. நாங்க வந்துட்டோம்ன்னா நீங்க எப்படி எல்லாத்தையும் சமாளிப்பீங்க?” என்றாள் காவ்யா .
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல காவ்யா… எனக்கு தெரியாம கல்யாணத்தைப் பண்ணிட்டுப் ஜெய் கூட போய்ட்டான்னு முடிச்சிடுவேன். அதனால எங்கப்பாவும், காவ்யா அப்பாவும், சண்டை போடுவாங்க , சண்டை போட்டாலும் அவங்களால ஒன்னும் செய்ய முடியாது. எங்கம்மா ஒரு மூணு மாசம் அழுதுட்டு அடுத்தது எனக்கு ஒரு பொண்ணை பாக்க ஆரம்பிப்பாங்க…எங்கப்பா அடுத்தது ஒரு பெரிய பணக்காரரோட பொண்ணா… பிசினஸ்மேன் பொண்ணா வலை வீசுவாரு..” என்று சிரித்தான் ..
எப்படி இவ்வளவு எளிதாக யோசிக்கிறான் என்று இருவரும் வியந்தனர். அவர்கள் திட்டமிட்டபடி நடக்குமா ..விடை அவர்கள் கையில் இல்லையே…
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings