2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28
ஆதர்ஷ் திரும்ப கம்பெனி வேலைகளில் பிஸியானான். ஜெய்க்கு வாக்களித்திருந்தபடி நீரஜாவை வரச்சொல்லி புரோடக்க்ஷன் சைடில் வேலை போட்டுக் கொடுத்தான். மாதம் ஓரிரு முறை மட்டுமே நேருக்குநேர் சந்தித்துக் கொள்ள வேண்டியிருக்கும். நீரஜா ரொம்பவே தயங்கினாலும், ஆதர்ஷ் மற்றும் ஜெய்யின் வற்புறுத்துதலினால் சம்மதித்தாள்.
தனக்கு பர்சனல் செகரட்டரியாக இன்டர்வியூ வைத்து ஒரு ஃப்ரெஷ் கேண்டிடேட் ஐ செலக்ட் பண்ணிக் கொண்டான் .
வேண்டுமென்றே சதீஷை தவிர்த்து விட்டான். இவ்வளவு பிரச்சனைக்கும் மூலகாரணம் சதீஷ்ஷாக மட்டுமே இருக்க முடியும். இங்கு நடக்கும் விஷயங்களை அப்பாவிடம் சொல்லியது… காவ்யா அப்பாவிடம் போட்டுக் கொடுத்தது … எல்லாமே சதீஷ் வேலையாகத் தான் இருக்கும் என்று தீர்மானமாக நம்பினான். அதனால் அவனுடன் நேரடி தொடர்பில் இல்லாத வேறு இடத்துக்கு மாற்றி விட்டான்.
கம்பெனி வேலையில் முழு கவனத்தை செலுத்தினான். அவனைப் பொறுத்தவரை அவனுடைய பழைய வாழ்க்கையை அப்படியே வாழ்வது போல தோன்றியது புதிதாக முளைத்த ஓரிரு பிரச்சனைகளை தவிர பெரிதாக ஒன்றும் மாற்றமில்லை.
இந்த ஒப்பந்த திருமணத்தால் அவனுக்கு ஒருவிதமான மன அமைதி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.தன் அப்பா செய்த செயல்களுக்கு ஒரு தண்டனையாக.இது இருக்க வேண்டும் ..எந்தக் காதலை எதிர்த்து அப்பா அத்தைக்கு துரோகம் பண்ணினாரோ ..அதே காதலால் அவன் மணவாழ்க்கை முறியும் என்பது அவருக்கு புரிய வேண்டும்.
சில குழப்பங்களும், குளறுபடிகளும் இருந்தாலும் காவ்யா-ஜெய் காதல் கல்யாணத்தில் முடிந்து அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று தோன்றியது.
வெளி உலகத்திற்கு சந்தேகம் வராதபடி காவ்யாவும் ஆதர்ஷும் வாரம் ஒருமுறை காவ்யா வீட்டிற்கு போய் வருவார்கள். அந்த நேரங்களில் கூடிய வரை அவன், அவள் அப்பா அம்மாவுடன் பேசுவதை தவிர்த்து விடுவான் .வாக்கிங், ஜாக்கிங் ,பிரண்ட்ஸ்ஸை பார்க்க போறேன் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி கூடியவரை வெளியே போய் விடுவான்..
மாலினி தேவியும் மகள் சந்தோஷமாக இருப்பதால், வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஆதர்ஷுக்கும் அவளுக்கும் ஒத்து வந்ததே மிகப் பெரிய விஷயம் . மற்ற விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எந்த பிரச்சனையையும் கிளப்பாமல் இருந்தாள்.
வாரக் கடைசியில் வெளியே போகும்போது, ஹோட்டலில் சாப்பிடப் போகும்போது, காவ்யா மாயாவையும் அவர்களுடன் வருமாறு வருந்தி அழைப்பாள். சில சமயம் கூடப் போனாலும் சில சமயம் மாயா தவிர்த்து விடுவாள்.
அப்படி அவர்கள் சேர்ந்து போகும்போது காவ்யாவும், மாயாவும் அடிக்கும் லூட்டி ஆதர்ஷ்கு ஆச்சரியமாக இருக்கும். காவ்யாவின் மறுபக்கம் மாயாவுடன் அவள் இருக்கும் போதுதான் அவனுக்கு தெரிந்து கொள்ள முடிந்தது. அன்றும் அப்படி தான் கடற்கரைக்கு மூவரும் கிளம்பினார்கள் ..
“காவ்யா வா அலையில் போய் நிற்போம்” என்ற மாயா அவளை இழுத்துக் கொண்டு அலைக்கு ஓடினாள் ..
“அத்தான் நீங்களும் வாங்க ..”
“நான் வரல மாயா நான் இங்க உட்கார்ந்திருக்கேன். நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.”
“இந்த அத்தான் இப்படித்தான்.. எப்பவும் பெரிய பிகு பண்ணுவாரு.. நீ வா காவ்யா நாம ரெண்டு பேரும் போலாம்”
அலையில் காலை நனைத்துக்கொண்டு சின்ன பிள்ளை போல மாயா அவள் மேல் தண்ணீரை வாரி இறைத்தாள்.
காவ்யா அவளுக்கு பயந்து ஓட.. .மாயா அவளை துரத்திக் கொண்டு போனாள்
கடைசியில் அலுத்துப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள். அதற்குள் ஆதர்ஷ் அவர்களுக்கு ..சாப்பிட ஐஸ்கிரீம்.. மோமோ …என நிறைய வாங்கிக்கொண்டு வந்தான்.காவ்யா முகம் சற்று சோர்ந்து போக, அமைதியாக அமர்ந்திருந்தாள்.
மாயா உற்சாகத்துடன்” என்ன காவ்யா உட்கார்ந்துட்ட, ஒரு ரவுண்டு திரும்ப அலையில கால் நனைச்சிட்டு வருகிறேன்.” என்று ஆதர்ஷ் கையில் இருந்த ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு அலையின் பக்கம் ஓடினாள். மனதில் அவர்கள் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியாக இருக்கட்டும் என்ற நினைப்பும் ஓடியது.
“என்ன காவ்யா டல்லாயிட்ட..ஜெய் ஞாபகம் வந்துடுச்சா…? சாரி காவ்யா.. நான் உன்ன பீச்சுக்கு கூட்டிட்டு வந்தது நீ சந்தோஷமா இருக்கனும்னு தான். ஜெய்யின் ஞாபகம் உன்னை கஷ்டப்படுத்தும்ன்னு நான் யோசிக்க மறந்துட்டேன்”
“ஆதர்ஷ் ..நானும், ஜெய்யும் கடற்கரையில் ஒவ்வொரு தடவை மீட் பண்ணும் போதும் அவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கோம். அப்பல்லாம் இந்த காதல் கைகூடுமா அப்படிங்கிற எண்ணமோ யோசனையோ எங்களுக்கு வந்ததில்ல.. எதார்த்த வாழ்க்கை புரியாம எவ்வளவு சந்தோஷமாக அனுபவிச்ச நாட்கள் அவை. ஒரு காதலுக்கு பின்னால இவ்வளவு விஷயங்கள் இருக்கு…இரு குடும்பம்.. அந்தஸ்து ..பணம்..ஜாதி…எத்தனையோ இருக்கு . இதையெல்லாம் அப்ப யோசிச்சதேயில்லை. எங்க குடும்பத்தை பத்தி நீங்களே புரிஞ்சுகிட்டிருந்திருப்பீங்க.
அப்பாவும், அம்மாவும் என்கிட்ட ஒரு நாள் கூட உட்கார்ந்து பிரியமா பேசினதில்ல. என்ன வளர்ந்ததெல்லாம் ஒரு ஆயாதான்.. அவங்க என்கிட்ட அன்பா, பாசமா, இருப்பாங்க. இரவு சாப்பாடு ஊட்டிக் கொண்டே கதை சொல்லுவாங்க… ஸ்கூல்க்கு வர்ற பிள்ளைகளுக்கு, அவங்க அம்மா சாப்பாடு கொண்டு வந்து ஊட்டிவிடுவாங்க. நான் மட்டும்தான் தனியா சாப்பிடுவேன். இல்லைனா ஆயா ஊட்டி விடுவாங்க. அம்மா கையால சாப்பாடு ஊட்டி நான் ஒருநாள் கூட சாப்பிட்டதே இல்லை ஆதர்ஷ்.
உங்களுக்கு அந்த ஏக்கம் புரிய வாய்ப்பில்லை. ஏன்னா உங்க அம்மா ரொம்ப பாசமாவங்க. உங்களை எப்படி வளர்த்திருப்பாங்கன்னு எனக்கு புரியுது.. அப்பா பாசம் உங்களுக்கு இல்லைனாலும், அம்மா பாசம் உங்களுக்கு இருந்திருக்கும். அத்தை ஒரு நாள் பாயசம் சாப்பிட்டு கிட்டிருந்தாங்க. நான் போனதும் உடனே ஒரு ஸ்பூன் எடுத்து, எனக்கும் வாயில கொடுத்தாங்க. அன்புடன் பக்கத்துல உட்கார வச்சு என்னுடைய சின்ன வயசு கதைகள் எல்லாம் ஆர்வமா கேட்டாங்க…
பள்ளிக்கூடத்துல எனக்கு யார் பிரண்ட்ஸ்.. நான் என்ன விளையாடுவேன்.. எனக்கு என்ன புடிக்கும்.. எல்லாமே கேட்டாங்க ..இப்படி ஒரு அன்பை நான் என் அம்மாகிட்ட எங்க வீட்ல அனுபவிச்சதேயில்ல. எனக்கு எது பிடிக்கும்ன்னு இன்னை வரைக்கும் அம்மாவுக்குத் தெரியாது.
அத்தை என்கிட்ட பாசமா பேசும்போது என் மேல நம்பிக்கை வைத்து, அன்பை பொழியும் போதெல்லாம், என் மனசு குற்றவுணர்ச்சியில் தவிக்குது. இப்படிப்பட்ட ஒரு அன்பான மனுஷிய ஏமாத்திட்டு பாதியில ஓடும்போது..அவங்க என்ன பத்தி எவ்வளவு கேவலமா நெனைப்பாங்கன்னு மனசு வலிக்குது ” என்றவள் கண்கள் கண்ணீரில் குளிக்க..
“வருத்தப்படாதே காவ்யா! அம்மாவை பத்தி நீ கவலைப்பட வேண்டாம். அம்மாவுக்கு யாரையுமே வெறுக்கத் தெரியாது. நான் அவங்ககிட்ட உக்கார வச்சு பொறுமையா எல்லா விஷயத்தையும் பின்னால சொல்லும்போது அவங்க உன்னை நல்லாவே புரிஞ்சுக்குவாங்க. உனக்கு அவங்க அன்பு எப்படி பெருசா இருக்கோ.. அத மாதிரி அவங்களும் அன்புக்கு ஏங்கறவங்கதான். அதனாலதான் மாயாவ அவங்க ரொம்ப நேசிக்கிறாங்க. “
உண்மைதான் ஆதர்ஷ் .. அத்தைக்கு அன்பான மனசு ..சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த மாதிரி உண்மையான அன்பு பாசம் கிடைக்காமல் நான் ஆயாகிட்ட வளர்ந்ததால தான் எனக்கு ஸ்கூல்ல ப்ரெண்ட்ஸ்ஸும் காலேஜ் பிரெண்ட்ஸ்ஸும் ரொம்ப க்ளோசா தெரிஞ்சாங்க .
அப்படிப்பட்ட நேரத்தில் ஜெய் என்கிட்ட பாசத்தையும் அன்பையும் பொழிந்தான். மனகஷ்டத்துடன் இருக்கும் போதெல்லாம் அவன் எனக்கு ஆறுதல் சொல்லுவான். பாலைவனமாய் இருந்த என் வாழ்க்கையில அவன் சோலையா தெரிஞ்சான்.உங்க குடும்பம் மாதிரி அவன் குடும்பமும் ஒரு பாசமான குடும்பம். அவங்க அம்மா, அப்பா எல்லோரும் என்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாங்க ..
நீரஜா அப்ப அவங்க பாட்டி வீட்டில் படிச்சுகிட்டிருந்தா..சின்னவ ஷைலு ரொம்ப பிரியமா அக்கா அக்கான்னு பாசமா இருப்பா..வசதி குறைவான அவங்க வீட்டுக்கெல்லாம் போறதுக்கு எங்கம்மா விட மாட்டாங்க அதனால ஸ்பெஷல் க்ளாஸ்ன்னு சொல்லிட்டு தான் அவங்க வீட்டுக்கு போயிட்டு வருவேன். ஆதர்ஷ்… நீங்க மட்டும் எங்களுக்கு உதவி செஞ்சு ஜெய்யோட சேர்த்து வைக்கிறேன்னு சொல்லலைன்னா நான் வேற முடிவு கூட எடுத்திருப்பேன்” என்றாள் காவ்யா கண்ணீரோடு ..
“காவ்யா கண்ணீர துடைக.. ஐஸ்கிரீம் பாரு உருகுது.. மாயா சாப்பிட்டு முடிச்சிட்டு வந்துட்டிருக்கா.. நீ ஐஸ்கிரீம் ஜெய் வாங்கி கொடுத்தா தான் சாப்பிடனும்னு இல்ல.. நான் வாங்கி கொடுத்தாலும் சாப்பிடலாம். அண்ணன் வாங்கி கொடுத்த ஐஸ்கிரீம் கசக்கவா செய்யும் சாப்பிட்டு பாரு இனிக்குதா கசக்குதான்னு…”
காவ்யா புன்னகைத்தாள்
எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்கிறாள் ..பாவம் பணக்கார வீட்டில் பிறந்த.. பாசத்திற்கு ஏங்கும் குழந்தை இவள்.ஆதர்ஷ் மனம் கசிந்தது .
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings