வணக்கம்,
ஆகஸ்ட் 14, 2022 அன்று, பெங்களூரு தமிழ் சங்கத்தில் நடந்த உலக சாதனை நிகழ்வில், எழுத்தாளர் குரு நாகராஜன் அவர்கள் எழுதிய ‘இதயக்குரல்’ மற்றும் ‘செல்லுலாய்ட் செல்வங்கள்’ என்ற இந்த இரு நூல்களும் வெளியிடப்பட்டது.
இந்த நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 7708293241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகங்கள் உங்களை வந்து சேரும். If you have any questions, we can be reached at 77082 93241. Thank you
இந்த நூல்களைப் பற்றி எழுத்தாளர் குரு நாகராஜன் அவர்கள் பதிவு செய்ததை வாசிக்கலாம் வாருங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காலத்திற்கேற்ப, சமுதாயத்தைப் பற்றிய நம் எண்ணங்களும், கண்ணோட்டங்களும் முன்னோட்டங்களும் மாறி வருகின்றன. அதன் விளைவுதான் ‘இதயக்குரல்’ என்ற இந்நூலின் உதயம்.
என் பார்வையில் சுற்றும் முற்றும் நடந்த, நடந்து கொண்டுள்ள அன்றாட நிகழ்வுகளும், பத்திரிக்கையில் படித்ததும், தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்ததும், முக்கியமாக என் வாழ்க்கையின் அனுபவ பாடங்களுமே இதயக்குரலுக்குத் தீனியாக அமைந்ததுள்ளது. உலக பொதுமறையாம் ‘திருக்குறள்’ வடிவத்தில் எழுதியுள்ள 1000 நடைமுறை கவிதைகளை உள்ளடக்கிய புதிய நூல்.
தொலைக்காட்சி பட்டிமன்ற புகழ், பேராசிரியர் ‘பத்மஸ்ரீ’ சாலமன் பாப்பையா அவர்களின் ஆசியுடனும் பாராட்டுரையுடனும் வெளி வந்துள்ள நூல். சிறியவர் பெரியவர் அனைவரும் படிக்க வேண்டிய, ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூல்.
வாங்கி படிப்பீர்! ஆனந்தம் அடைவீர்!! ஆதரவு தாரீர்!!!
குரு.நாகராஜன்
நூலாசிரியர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
‘செல்லுலாய்ட் செல்வங்கள்’ என்ற இந்நூல், ‘செல்லுலாய்ட்’ எனப்படும் ஃபில்ம் சுருள்களை உபயோகித்த காலத்தில் வெளிவந்து தனி முத்திரை பதித்த சில திரைப்படங்களையும், அவற்றை தயாரித்த முன்னோடி நிறுவனங்களையும், அதில் பணிபுரிந்த கலைஞர்களையும் குறிப்பிடும் ஒரு வித்தியாசமான படைப்பாகும்.
இப்புத்தகத்தின் முக்கிய குறிக்கோள், ரத்தினச் சுருக்கமாக திரைப்படங்கள் உருவான வரலாற்றையும், சினிமாவில் பின்பற்றும் முக்கியமான நடைமுறை மற்றும் செயல்பாடுகளையும் (செல்லுலாய்ட் to டிஜிட்டல்), சிந்தைக் கவர்ந்த சில விந்தை கலைஞர்களைப் பற்றியும் வெளிச்சம் போட்டு காட்டுவதாகும். அத்தோடு திரைப்படங்களில் தொன்று தொட்டே, தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும், நடந்து வரும் சில எசகு பிசகுகள், தப்பிவிட்ட தவறுகள், வினோதங்கள், கை மீறிப்போன குளறுபடிகள் போன்றவற்றை பற்றியும் தெரிந்துக் கொள்வோம்.
திரை உலக ஜாம்பவான்களான நடிகர், திரு. சிவகுமார் மற்றும் கதை, திரைக்கதையாசிரியர், இயக்குனர் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ள நூல் – ‘செல்லுலாய்ட் செல்வங்கள்’.
வாங்கி படிப்பீர்! ஆனந்தம் அடைவீர்!! ஆதரவு தாரீர்!!!
குரு.நாகராஜன்
நூலாசிரியர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
If you have any questions, we can be reached at 77082 93241. Thank you
என்றும் நட்புடன்,
நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்
தொடர்பு எண் : 77082 93241
மின்னஞ்சல் : srirenugapathippagam@gmail.com
GIPHY App Key not set. Please check settings