in

‘நீலாவின் அம்மா’ மற்றும் ‘கவித்துளிகள்’ Books for Sale – எழுத்தாளர் மைதிலி ராமையா

வணக்கம்,

எங்கள் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ மூலம் வடிவமைக்கப்பட்டு, ஆகஸ்ட் 14, 2022 அன்று பெங்களூரு தமிழ் சங்கத்தில் நடந்த உலக சாதனை நிகழ்வில், மைதிலி ராமையா’வின் ‘நீலாவின் அம்மா’ (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் ‘கவித்துளிகள்’ (கவிதைத் தொகுப்பு) ஆகிய இந்த இரு நூல்களும் வெளியிடப்பட்டது.

‘நீலாவின் அம்மா’ என்ற நூலில் உள்ள அனைத்து கதைகளையும் மிகவும் சுவாரஷ்யமாய் அமைத்துள்ளார் நூலாசிரியர் மைதிலி ராமையா அவர்கள். அதேப் போல் கவிதை நூலான ‘கவித்துளிகள்’ எனும் நூலில், 60க்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளை விருந்தாக்கியுள்ளார். 

இந்த புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். If you have any questions, we can be reached at 77082 93241. Thank you.

அதற்கு முன், இந்த நூலைப் பற்றி சக எழுத்தாளர்கள் பதிவு செய்த கருத்துக்களை வாசிக்கலாம் வாருங்கள். 

‘நீலாவின் அம்மா’ சிறுகதைத் தொகுப்பு பற்றி முனைவர் க.பன்னீர்செல்வம் (ஆற்காடு)

மைதிலி ராமையா அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் பதினான்கு முத்துக்களை சேர்த்துத் தொகுத்த சரமென்றால் மிகையில்லை எனலாம்.

மகள் வீட்டோடு தந்தை சென்று தங்குவதால் உள்ள சிக்கல் பற்றியும், பெண் குழந்தைகளை புறந்தள்ளிய தகப்பன், தாயாரால் அவர்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டு, நெருங்க முடியாமல் நிலை தடுமாறி நிற்பது பற்றியும், பெண்ணின் மனவலிமை, பிறர் நலம் பேணும் பாங்கு, செயல்திறன் யாவும் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது பற்றியும், பல்வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக, இயல்பாக நவின்றுள்ளதில் படைப்பாளியின் திறமை தெள்ளத் தெரிகிறது.

மொத்தத்தில் அனைத்து சிறுகதைகளுமே, சிறுகதைக்கான ஆரம்பம், அழகிய நகர்வு, உச்சம் தொடும் முடிவு என்ற இலக்கண வரம்பிற்கு உட்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இவரின் முதல் முயற்சி வெற்றி பெறவும், தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவரவும் வாழ்த்தி அணிந்துரையை நிறைவு செய்கிறேன். வாசகர்கள் நுகர்ந்து இன்புற வேண்டுகிறேன்

‘கவித்துளிகள்’ நூல் பற்றி பாவலர் அ. கமல் அவர்கள்

மைதிலி ராமையா அவர்களின் இந்த படைப்பு வாசகர்களின் கவனம் ஈர்ப்பதில் கவனம் கொண்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்தில் அடங்கும் கவிதைகள் பல பக்கங்களுக்கு சிந்திக்க வைக்கிறது. கன்னித் தமிழ் மீது ஆரம்பமான காதலைச் சொல்லி, கைம் பெண் தோழிக்கு ஒரு கண்ணீர் கடிதம் எழுதி முடிக்கும் வரை அனைத்துமே சுருக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது.

பக்கத்திற்கு ஒரு கவிதையென மிக ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்லி இருக்கும் ஆசிரியை அவர்களின் கற்பனையும், சொல்லாடலும் ரசிக்க வைக்கிறது.புதுக்கவிதையும் மரபும் சேர்ந்த ஒரு கலவையில் படைக்கப்பட்டிருக்கும் படைப்புகள் அனைத்தும் தனித்து நின்று வாசிப்போரை கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவைகள். எழுத்து எளிமை நெஞ்சார பாராட்ட வைக்கிறது. இவர் மேன்மேலும் படைப்புகள் பல படைத்து வெற்றிப் பெற வாழ்த்துகிறேன்.

என்றும் நட்புடன்,
நிறுவனர் - ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் 
தொடர்பு எண்: 77082 93241
மின்னஞ்சல்: srirenugapathippagam@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தேடி வந்த முட்கள் (சிறுகதை) – ✍ ரமணி.ச

    காக்க! காக்க! ❤ (பகுதி 8) – ✍ விபா விஷா, அமெரிக்கா