சமையல்

Banana Walnut Cake (Mahi Arun) – December 2020 Contest Entry

தேவையான பொருட்கள்:-

  • கோதுமை மாவு – 3/4 கப் 
  • மைதா மாவு – 3/4 கப் 
  • சர்க்கரை – 1/2 கப் 
  • பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன் 
  • வெனிலா எஸ்ஸன்ஸ் -1 டீஸ்பூன் 
  • உப்பு – 1/4 டீஸ்பூன் 
  • பழுத்த வாழைப்பழம் -2
  • முட்டை – 2
  • வெண்ணெய் (அ) கனோலா ஆயில் – 2/3 கப் 
  • வால்நட் -1/4 கப்
  • சாக்லட் சிப்ஸ் -1/4 கப் 
  • பால் – 1/4 கப் 

#ad

செய்முறை:-

  • கேக் செய்வதற்கு 2 மணி நேரம் முன்னதாக பால்-முட்டை-வெண்ணெய் எல்லாம் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்
  • மாவுகள்-உப்பு-பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  • வெண்ணெய் (அ) ஆயில், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்கவும்
  • முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்
  • வெனிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து கலக்கவும்
  • வாழைப் பழங்களை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்
  • பொடித்த வால்நட்-சாக்லட் சிப்ஸுடன் 1 டேபிள்ஸ்பூன் மாவு சேர்த்து பிரட்டி வைக்கவும்
  • சர்க்கரை-முட்டை-வெண்ணெய் கலவையுடன் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்
  • பின்னர் அதனுடன் மசித்த வாழைப் பழங்களை சேர்த்து கலக்கவும்
  • தேவைக்கேற்ப பாலை சேர்த்து கலந்து கொள்ளவும். 
  • இறுதியாக நட்ஸ் மற்றும் சாக்லட் சிப்ஸ் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் மாவை மாற்றவும். 
  • Ovenஐ 350F Preheat செய்யவும்
  • Preheat செய்த Ovenல், 55 நிமிடங்கள் Bake செய்யவும்
  • பிறகு, கத்தி அல்லது ஸ்பூனால் குத்தி பார்க்கும் போது, அதில் ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம், எடுத்து விடலாம்

Similar Posts

2 thoughts on “Banana Walnut Cake (Mahi Arun) – December 2020 Contest Entry
  1. அட இதுவும் நன்றாக இருக்கும்போல உள்ளதே! என்னுடைய மருமகள்களுக்குச் சொல்கிறேன் அன்புடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: