- மைதா மாவு – 1/2 கப் (57 கிராம்)
- கோதுமை மாவு – 3/4 கப் (106 கிராம்)
- கோக்கோ பவுடர் – 1/2 கப் (43 கிராம்)
- பொடித்த சர்க்கரை – 1 1/4 கப்
- உப்பு -1/2 டீஸ்பூன்
- வெண்ணெய் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது) – 8 டேபிள் ஸ்பூன் (113 கிராம்)
- தேன் – 2 டேபிள் ஸ்பூன்
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் -1 டீஸ்பூன்
- Ovenஐ 325 Degree Farenheit (160 Degree Centigrade) Preheat செய்து கொள்ளவும்.
- பிஸ்கட்டுகள் Bake செய்யத் தேவையான Tray & பார்ச்மெண்ட் பேப்பர் (Butter Sheet) தயாராக வைக்கவும்
- மாவுகள், உப்பு, கோக்கோ பவுடர், சர்க்கரை, பேக்கிங் பவுடர் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்
- இவற்றுடன் சிறு துண்டுகளாக்கிய வெண்ணெயையும் சேர்த்து, விரல் நுனிகளால் கலந்து கொள்ளவும்
- மாவு மணல் மணலாக ஆகும் வரை கலந்தால் போதுமானது, அதிக நேரம் பிசைந்தால் மாவு சூடாகிவிடும்
- பாலையும் தேனையும் சிறிய கிண்ணத்தில் நன்றாக கலந்து கொண்டு, மாவுக் கலவையுடன் இதனை சேர்த்து, ஒரு முள் கரண்டியால் கிளறவும்
- தேவைப்பட்டால் இன்னும் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்துக் கொள்ளலாம். (பால் குளிர்ந்த பாலாக இருக்க வேண்டும்)
- இப்போது இந்த மாவுக் கலவையை உலர்ந்த மாவு தூவிய கிச்சன் டேபிள் டாப்புக்கு மாற்றி, மென்மையாக இன்னும் சற்று நன்றாக பிசைந்து கொள்ளவும். (அதிகபட்சம் 10 முறை, மாவை திருப்பி திருப்பி மடித்தால் போதுமானது)
- மாவை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை காற்று ஒரு டப்பாவில் போட்டு புகாமல் மூடி வைக்கவும்
- அடுத்த பாதியை, Butter Sheetல் வைத்து சப்பாத்திக் கட்டையால் உருட்டி செவ்வக வடிவமாக்கவும்
- 1/16 இன்ச் அளவு திக்னஸ் இருக்குமாறு, மெல்லிய செவ்வகமாக திரட்டவும்
- கத்தியால் துண்டுகளாக்கிக் கொண்டு, முள் கரண்டியால் பிஸ்கட் பரப்பு பூராவும் குத்தி விடவும்.(படத்தில் காட்டி உள்ளது போல்)
- இதே போல் அடுத்த பகுதி மாவையும் செய்து கொள்ளவும்
- கட் செய்த பிஸ்கட்டுகளை Butter பேப்பருடன் சேர்த்து, பேக்கிங் டிரேயில் வைத்து 15 நிமிடங்கள் (சாக்லட் வாசம் நன்றாக வரும்வரை) பேக் செய்யவும்.
- பிஸ்கட்டுகளை Ovenல் இருந்து எடுத்து ஆறவிட்டு, காற்று புகாத டப்பாக்களில் வைக்கவும். ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம், அதுவரை பிஸ்கட்டுகள் காலியாகாமல் இருந்தால் 😃
மகி அருண் பற்றி:-
இந்த ரெசிபியை வழங்கியவர், கோவையில் பிறந்து, தற்போது கலிபோர்னியாவில் வசிக்கும் எனது தோழி மகி அருண். இதற்கு முன்பே தனது ரெசிபி ஒன்றை சஹானா இணைய இதழுக்கு பகிர்ந்து இருக்கிறார். 2010 முதல் தனது வலைப்பூ (Blog) மூலம், நிறைய சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார் மகி அருண்
தமிழில் உள்ள அவரது வலைதளத்தின் லிங்க் இதோ – http://mahikitchen.blogspot.com/
ஆங்கில வலைதளத்தின் லிங்க் – http://mahiarunskitchen.blogspot.com/
சஹானா இணைய இதழுக்கு இந்த இனிப்பான ரெசிபியை பகிர்ந்தமைக்கு நன்றி மகி❤🌷❤