in ,

வாழ்க்கைப் பயணம்💗(சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வரை வந்து மன்னிப்பு கேட்டுட்டு கூட்டிட்டு போகச் சொல்லுங்க, நான் என் மகளை அனுப்பி வைக்கிறேன்… ‘

அப்படித்தான் மாசிலாமணியிடம் சொல்லி அனுப்பியிருந்தார் சேகரின் மாமனார்.  இவரும் தனக்கு தெரிந்தவரை அதுதான் சரி என்று படுவதாயும் சொல்லிவிட்டு, நம்முடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனைவிக்காக கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால் தப்பில்லை என்றும் சொல்லிவிட்டுப் போனார்.

மாசிலாமணி, கொஞ்சம் தூரத்துச் சொந்தம், மாமா முறை. திருச்சியில் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். அவர் போன வாரம் கும்பகோணத்திற்கு வியாபார நிமித்தமாய் போகப் போகிறார் என்று அறிந்தவுடன், அவரை அப்படியே போய் ஒரு தடவை மாலதியைப் பார்த்து புத்திமதி சொல்லி வீட்டுக்கு வரச் சொல்லி சொல்லியனுப்பினான் சேகர்.

கூடவே இதை அவராகவே சொன்னதாக இருக்கட்டும் என்றும் சொல்லிருந்தான். அப்படி போனவரிடம்தான் அவனது மாமனார் அப்படி சொல்லி அனுப்பியிருந்தார்.  முதலில் ரொம்பவும் கோபம்தான் வந்தது சேகருக்கு.  ஆனாலும் மாசிலாமணி சொன்னதைக் கேட்டு அவனது கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வந்தது.

xxxxxxxxxxxxx

சேகரின் கல்யாணம் ஆனா அடுத்த வருடமே  அப்பா அம்மா இருவரும் ஒரு மாத இடைவெளியில் இறந்து போய்விட்டார்கள். அவனுடன் கூடப் பிறந்தது ராஜி மட்டுமே. அவனுடைய கல்யாணத்துக்கு இரண்டு வருடம் முன்பே அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அவளது வீட்டுக்காரர் முசிறியில் ஒரு துணிக்கடை வைத்திருக்கிறார். கொஞ்சம் பெரிய கடைதான்.

பிசினஸ் விரிவாக்கத்திற்காக பேங்கில் லோன் எடுத்திருக்கிறார்கள்.  கடை மற்றும் கடையை ஒட்டிய வீடு இரண்டையும் சேர்த்து அடமானமாக கொடுத்திருந்தார்கள். பிசினஸ் டல்லடித்து போய் பேங்கில் எடுத்த லோன் சரியாக கட்ட முடியாமல் போனது. வியாபாரத்தை தூக்கி நிறுத்த உதவுவதாகச் சொல்லி பேங்க்காரர்கள் மேலும் ஒரு டாப்பப் லோனும் கொடுத்தார்கள்.

இப்போது அந்த இரண்டு லோனையுமே அடைக்க முடியாமல் தவிக்கிறார்கள். பேங்கில் இருந்து நெருக்குகிறார்கள், இரண்டு முறை ரிஜிஸ்டர்டு நோட்டீஸ் வந்துவிட்டது.  அடுத்த நோட்டீஸ் வரும்போது அது ஜப்தி நோட்டீஸாகத்தான் இருக்கும் என்றும் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டு வேறு போயிருக்கிறார்கள். 

போன மாதம் ராஜி போனைப் போட்டுக்கொண்டு அழுதிருக்கிறாள். தங்கை அழுததில் சேகரும் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனான். ஒன்னரை லட்சத்தைக் கட்டிவிட்டால் கொஞ்சம் மூச்சு விடமுடியும். அத்துடன் முதலீடு செய்யும் தகுதியுள்ள வேறு ஒருத்தரையும் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு வியாபாரத்தை நடத்தப் போவதாக சொன்னாள்.

மாலதியிடம் சொல்லாமல் கூட, உடனே ஒன்னரை லக்ஷம் ரூபாயை அவர்களுக்கு அனுப்பி வைத்தான். அது மாலதிக்குத் தெரிய வரும்போது ஆரம்பித்தது தான் அந்தச் சண்டை.

அன்று அவன் சாப்பிட உட்கார்ந்தான். சாதம் போடும்போதும் சரி, சாம்பார் ஊற்றும்போதும் சரி, கரண்டிகளை லொட்… லொட்… டென்று போட்டாள்.  ஏதோ கடுப்பில் இருக்கிறாள் அவள் என்று மட்டும் தெரிந்தது அவனுக்கு.  ஆனாலும் அவளாகவே வாயைத் திறந்து என்னவென்று சொல்லட்டும் என்று விட்டிருந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து, அவளே ஆரம்பித்தாள்.  ‘எதற்காக  ராஜிக்கு ஒரு லட்சம் அனுப்பினீங்க… ‘ என்று கேட்டாள்.   அவளது கடுப்பிற்கு காரணம் புரிந்தது. 

‘சாப்பிட்டிட்டு சொல்றேன்… ‘ என்றான். அவளோ, ‘ நீங்க பணம் அனுப்பி பத்து நாள் கழிச்சு தான் கேட்கறேன், எனக்கு இப்பவே சொல்லுங்க ‘ என்று நிர்ப்பந்தித்தாள். 

இவன் பல தடவைகள் சொல்லியிருக்கிறான், சாப்பிடும்போது எந்த சீரியஸான விசயமும் பேசக்கூடாது என்று. 

ஆனாலும், ‘ எப்பொழுது சொன்னாலுமே மேட்டர் ஒன்னுதானே, இப்போவே  சொல்லுங்க… எதுக்கு பணம் அனுப்புனீங்க. அதுவும் ஒன்னரை லட்சம்… பணம் என்ன மரத்துலயா காய்க்குது… ‘ என்று கையை ஆட்டி ஆடி பேசினாள்.

இவன் கொஞ்சம் கோபமாக பார்த்தான்.  ‘ இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா… ‘ என்று விழிகளை உருட்டினாள்.

திடீரென்று கோபம் கொப்பளிக்க சாப்பாட்டுத் தட்டை தட்டி எரிந்தான். அது கொஞ்சம் தூரம் சுற்றிக் கொண்டு போய் சுவற்றில் முட்டி மடேர் என்று முட்டி சாப்பாடெல்லாம் சிதறின.      

இத்தனைக்கும் அவள் எந்த சலனுமும் இல்லாமல் இவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். 

‘கடைக்கு வாங்கின லோனை கட்டமுடியாததால நோட்டீஸ் வந்திடுச்சாம். கடையை ஜப்தி பண்ணப் போறாங்களாம்… அதான் பணம் அனுப்பி வச்சேன்… போதுமா… ‘ என்றான்.

‘ஆமா இப்படியே ஊர்ல உள்ள எல்லோருக்கும் பணத்தை அள்ளி அள்ளி இறைச்சுக்கிட்டே இருங்க. நாம பொழைக்கறது எப்படி. நமக்கும் குழந்தைகள் பிறக்கும்; அவங்களையும் வளர்க்கனும்… நகை நட்டு எடுக்கனும், எங்கப்பா ஒரு பிளாட் விலைக்கு வருது, வாங்கரீங்கலான்னு கேட்டார்… ஒன்னும் சொல்லலை… கடைசி வரை வாடகை வீட்டிலேயே நான் குப்பை கொட்டனுமா… ‘

அவன் போய் கைகளை கழுவிக் கொண்டு வந்தான்.

‘ இதுக்கு மேல நீங்க யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது … ‘ என்றாள்.

‘இதோ பார்… அப்பா அம்மா இல்லாதவ… நாந்தான் அவளுக்கு பாதுகாப்பு தரனும்… ஆத்திர அவசரத்திற்கு நான் உதவாம வேற யார் உதவுவா… ‘

‘கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டா புருஷன்காரன்தான் பார்த்துக்கணும். அண்ணன் கடைசி வரை ஓடி ஓடி தாங்க முடியுமா… பேங்க்ல் கடன் வாங்கினா கட்டித்தான் ஆகனும். கட்டறதுக்கு துப்பில்லைனா கடன் ஏன் வாங்கணும். கடனை கட்டலைனா வீடு ஜப்தியாகி நாடு ரோடுக்கு வந்துதான் ஆகணும்… ‘

‘ முதல்ல மனுஷத் தன்மையோட பேசு… ‘

‘ நீங்க ஒரு நல்ல புருஷனா நடந்துக்கங்க… ‘

‘இப்போ என்ன நடந்துடுச்சு… என் தங்கைக்குதான்  கொடுக்கறேன். அதை நீ கேட்கக் கூடாது… ‘ என்றான். 

‘பொண்டாட்டிங்கற முறையில  உங்க வாழ்க்கைல பாதி பங்கு எனக்கும் இருக்கு… நான் அப்படித்தான் கேப்பேன்…  இனிமே என்னை கேட்காம நீங்க யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது… ‘  என்றாள்.

கோபம் உச்சிக்கேற பளார் என அறைந்து விட்டான்.

‘கிளிப் பிள்ளைக்குச் சொல்றமாதிரி சொல்லிக்கிட்டே இருக்கேன்… ரொம்பத்தான் பேசறே… ‘

‘நீங்க ஆம்பளைனா அடிக்கனுமா.  நீங்க அடிச்சா நான் பேசாம வாங்கிக்கணுமா.  நான் உங்களை எதுவுமே கேட்காக் கூடாதா, எனக்கும் கை இருக்குது… ‘ என்றவள் மடமடவென அறைக்குள் போய்விட்டாள்.

‘ச்சே… என்ன பொழைப்பு… ‘ என்றபடி வெளியேறி போய்விட்டான் அவனும்.

 

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவனுக்கு அதிர்ச்சி.  மாலதி வீட்டில் இல்லை.  அவளது மொபைலுக்கு ரிங் விட்டான்.  அது பிஸி என்று வந்தது. மீண்டும் ரிங் விட்டான்.  இப்போது மொபைல் ஆப் ஆகி இருந்தது.

கோபித்துக் கொண்டு யாராவது சினேகிதி வீட்டிற்கு போய் இருப்பாள், கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள் என்று காத்திருந்தான். கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு பிறகு கிளம்பி கடைவீதிக்கு போனான்.  சிகரெட் புகைத்தான். டீ குடித்தான்.  

மண்டை குழம்பிக் கொண்டே இருந்தது.  அவள் போட்ட சப்தம் இன்னும் காதுக்குள் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. ரொம்ப நேரம் இங்கும் அங்குமாக  அலைந்து விட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தான்.

விளக்கு வைக்கும் நேரம் ஆகியும் அவள் வர வில்லை. கிட்டதட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாகி விட்டது.  யார் வீட்டில் போய் கேட்டாலும்  வீட்டில் சண்டை என்று அவர்களுக்கு தெரிந்து கேவலாமாகி விடும் என்று பேசாமல் இருந்து விட்டான். 

மீண்டும் ஒருமுறை போன் அடித்தான். இப்போது போனை அவனது மாமியார் எடுத்தார்கள்.

‘மாலதி குளிச்சிக்கிட்டிருக்கா தம்பி… அவ வந்ததும் பேசச் சொல்றேன்…‘ என்றுவிட்டு போனை வைத்துவிட்டார்கள்.

என்ன… ஏது… ஏன் தனியாக வந்திருக்கிறாள் என்று எதவும் கேட்கவில்லை. ஆனாலும் இப்போதைக்கு அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள் என்ற நிம்மதியான செய்தி கிடைத்து விட்டது. இதுவரை அவள் தனியாக போனதில்லை. இதுவே முதல் தடவை.  ஏதோ சண்டை அதனால் தான் தனியாக வந்திருக்கிறாள் என்று மாமியாருக்கு புரியாமல் போயிருக்குமா என்ன.

அதற்கப்புறம் இரண்டு முறை போன் அடித்தான். இரண்டு முறையும் பிசி என்றே வந்தது. அவளும்  திருப்பி பேசவில்லை.  சரி கொஞ்சம் ஆறப் போடலாம் என்று அப்போதைக்கு விட்டு விட்டான்.

xxxxxxxxxx

நான்கு நாட்களுக்கு முன்பு ஒருதடவை மாசிலாமணியை கடைவீதியில் பார்த்து பேசும்போது, வீட்டில் நடந்ததை சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு பிறகு சொல்லி முடித்தான்.

‘பெண்பிள்ளைகள் பண விஷயத்துல கொஞ்சம் கட்டுப்பாடாத்தான் இருப்பாங்க மாப்ள. இருக்கற அள்ளி கொடுத்துட்டு எதிர்காலத்தில கஷ்டப்பட்டுடக் கூடாதென்ற கவலைல சொல்லியிருப்பாங்க.  இது எல்லாரது வீட்டிலும் நடக்கரதுதானே… ‘ என்றவர், ‘ சரி… நான் ரெண்டு நாள் கழிச்சு கும்பகோணம் போற வேலை இருக்கு… அப்போ போயி சந்திச்சு பேசிப் பார்க்கறேன்… ‘  என்று சொல்லியிருந்தார்.

அவர் அங்கே போனபோதுதான் அவனது மாமனார், வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு பொண்டாட்டியை கூட்டிகொண்டு போகச் சொல்லி சொல்லி அனுப்பிருக்கிறார்.

யோசித்து பார்த்ததில் மாசிலாமணி மாமா சொன்னது போல் எல்லா வீடுகளிலும் இது போல் நடப்பதுதான், இதை பெரிது பண்ணி சாதிப்பது ஒன்றுமில்லை. அவசரப்பட்டு அறைந்திருக்கக் கூடாதுதான். ஆனாலும் அவளும் பேச்சுக்கு பேச்சு எதிர்த்து பேசி கோபத்தையும் மூட்டியிருக்கக் கூடாதுதான்.  சரி, கும்பகோணத்திருக்கு போய் வருவோம் அன்றே முடிவு செய்து கொண்டான்.

xxxxxxxxxxxx

பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொண்டு கும்பகோணத்திற்கு கிளம்பிப் போனான். தான் வருவதாய் முன்கூட்டியே எதுவும் சொல்லவில்லை.  திடீரென்று கிளம்பி விட்டான்.

வீட்டுக் கதவை தட்டியதும் மாமியார் தான் வந்து கதவைத் திறந்தார்கள்.  வாய் நிறைய வரவேற்று உள்ளே கூட்டிக் கொண்டு போனார்கள்.

அப்படியே மாலதியையும் அழைத்தார்கள். ‘தம்பி வந்திருக்கு பார்… குடிக்க தண்ணீர் கொண்டு வா…‘ என்றுவிட்டு, ‘தம்பி நான் துணி துவைச்சிக்கிட்டிருக்கேன்… நீங்க உட்கார்ந்திருங்க மாலதி வருவா… ‘ என்றுவிட்டு உள்ளே போய்விட்டார்கள்.

இவன் சட்டென சமையலறைக்குள் போனான். மாலதி தண்ணீர் செம்புடன் திரும்பவும் இவன் உள்ளே நுழையவும் சரியாக இருக்க ஒரு லேசான இடி. அவள் தடுமாறி தண்ணீர் சிந்த அதை இடது கையில் வாங்கிக்கொண்டு, தான் கொண்டு வந்திருந்த பையை அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.  

திரும்பி பார்த்தான் மாமியார் இல்லை. உடனே அவளை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

‘சாரிடி… நடந்ததையெல்லாம் கனவு போல மறந்துடு…  வீட்டுக்கு போகலாம் வா… ‘  என்று மெல்லிய குரலில் சொன்னான். அவள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. 

திரும்பி வந்து சோபாவில் உட்கார்ந்தான். கொஞ்ச நேரத்தில் டீயுடன் வந்தாள். கூடவே அவன் வாங்கிக் கொண்டு வந்திருந்த பூந்தியையும் ஸ்வீட்டையும் நான்கைந்து டீ பிஸ்கட்டுகளையும் தட்டில் போட்டு கொண்டு வந்திருந்தாள்.   அவன் அவைகளை எடுத்துக் கொள்ள மாலதி உள்ளே போய்விட்டாள்.

xxxxxxxxxxxxx

வேலைகளை முடித்து விட்டு திரும்பி வந்த மாமியார் மொபைலை எடுத்து மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்று  போனில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுமுனையில் மாமனார் என்று புரிந்து கொண்டான்.

கொஞ்ச நேரத்தில் அவரும் வந்து சேர்ந்தார், வரவேற்றார். கையில் கொண்டுவந்திருந்த பையை மாலதியிடம் கொடுத்துவிட்டு, ‘சீக்கிரம் சமைத்துப் போடுமா… ‘ என்றுவிட்டு  போய் முகம் அலம்பிக் கொண்டு வந்தவர்  துண்டில் முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்து அடுத்த சோபாவில் உட்கார்ந்தார்.  

தொண்டையை கனைத்துக் கொண்டு, ‘சவுகரியமா ‘ என்றார்.

‘சவுகரியம்தான் மாமா… ‘  என்றான்.

மாலதி இரண்டு செம்புகளில் தண்ணீருடன் வந்து சாப்பிட அழைத்தாள். கோழி குழம்பும் மட்டன் வருவலும் செய்திருந்தார்கள். சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டு வந்த மாமனார், ‘ இரண்டு மூன்று நாள் இருந்து விட்டு போங்கள்… ‘ என்றார்.

வந்தவுடன் என்ன சண்டை, நீங்கள் இப்படி செய்யக்கூடாது என்று குதிப்பாரோ என்று கொஞ்சம் பயம் கொண்டிருந்தான். அப்படி கேட்டால், இனிமேல் இப்படி நடக்காது என்று சொல்லி விடலாம் என்றும் நினைத்திருந்தான். அவரோ சண்டை பற்றி கேட்கவே இல்லை.

புல்லட் சாவியை எடுத்துக்கொண்டு, ‘கடைக்கு கிளம்புறேன்… நீங்க இங்கே இருங்க… ‘ என்றுவிட்டு நகர்ந்தார்.

மாலதி ஓடிவந்தாள். ‘அப்பா நாங்க சாயங்காலமே கிளம்பறோம்… ‘ என்றாள். மேலும் கீழும் பார்த்தவர், பாக்கட்டிலிருந்து கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவளிடம் நீட்டினார்.  எண்ணக்கூட இல்லை அவர்.

‘செலவுக்கு வச்சுக்கம்மா… ‘ என்றுவிட்டு, ‘இனிமே என்ன நடந்தாலும், நீ மட்டும் தனியா வரக்கூடாது… புரிஞ்சதா… ‘ என்று செல்லமாய் முறைத்துவிட்டு இவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு புல்லட்டில் ஏறி கிளம்பியே விட்டார்.

கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு மாலதியை கூட்டிக் கொண்டு சேகர் கிளம்பினான்.

அன்றிரவே அவன், அவளிடம் தான் மாப்பிள்ளையின் கடையில் ஒரு பங்குதாரர் என்றும், பங்குதாரர் என்ற வகையில்தான் தனது பங்கில் ஒரு பகுதியைத்தான் பண உதவியாக செய்ததாயும், அது எல்லாவற்றுக்கும் அவனும் சரி, மாப்பிள்ளையும் சரி கணக்கு வைத்திருப்பதாயும் சொல்லி ஒரு நோட்டுப் புத்தகத்தை கொண்டு வந்து நீட்டினான்.

அதைத் தட்டிவி்ட்டு, அவனைக் கட்டிக்கொண்டாள் அவள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் இன்றும் சந்தோஷமாய் தொடர்கிறது.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிரித்துச் சிரித்து (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    எனக்கு நானே பின்னிய வலை (சிறுகதை) – மைதிலி ராமையா