பண்பிலா பகட்டும்
உண்மையிலா உயர்வும்
பணிவிலா பதவியும்
நேசமிலா உறவுகளும்
நேர்மையிலா நீதியும்
வெட்டியோடும் நட்பும்
ஆபத்தில் உதவா மனிதனும்
வறியவனுக்கு உதவா பணக்காரனும்
நல்லவனைக் கொல்லும் பணமும்
உண்மைக்கு சாட்சியாகா கூட்டமும்
பயத்துக்கும் பணத்துக்கும் அடிமையான மனிதனும்
சாதியம் பேசும் சந்தர்ப்பவாதிகளும்
சுயவிளம்பர தர்ம சீலர்களும்
என் அகராதியில்
மனிதர்களாய் மதிக்கத் தகுதியிலாதவர்கள்!!
எனவே நான்…
திமிர்பிடித்த ஆணவக்காரி!
மதிக்கத்தெரியா சண்டைக்காரி!
மொத்தத்தில் நான்…
புறந்தள்ளப்பட்டவள் எல்லோராலும்!!
எனினும் வாழ்கிறேன் நானாக!!
விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇
Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings