கடைக்குயாம் செல்லும்போதினிலே
நடைபாதையில் கண்டோம்பெண்களை!
உடையோ இரவில்அணியும்நைட்டி (?)
படைத்தவனையே நொந்துகொண்டோம்
வேலைக்குச்செல்லும் இளம்பெண்களுமே
சாலையில்ஆண்உடை தரித்துசென்றார்.
வாலைக்குமரிக்கு உரியநற்பண்புகளும்
பாலைவனம்ஈர்த்த நீர்ஆயினதோ?
பாசமானஅன்னை பேணிவளர்த்து,
நேசமானவன் வியந்துபாராட்டும்
நீள்கேசமும்கூறுகி காதளவுஆனதினால்
வாசமலர்சரமும் பூவையர்க்குஇல்லை
தளர்நடைபருவத்து பாவாடைசட்டையும்
இளம்பெண்ணின் தாவணிசிற்றாடையும்
வளம்நிறை குடும்பத்தலைவியின்புடவையும்
களத்துமேட்டிலும் காணஇயலாதோ?
பண்டையகாலங்களில் நாம்கண்ட
பெண்கள்உடை மறக்கல்ஆனது
வண்ணமிகுபேரழகு பாரம்பரியம்நிறை
கண்ணியஉடைகள் எங்கேபோனது?
மண்ணுக்குஅழகு பயிரின்பச்சை !
பெண்ணுக்குஅழகு பழம்தமிழ்ஆடை !
பண்ணுக்குஇசைவுற்ற பாடல்போன்று
விண்ணுயர்மாண்பை பெறுவாய்கண்ணே !
கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
உங்களுடைய மேலான விமர்சனத்திற்கு மிகவும் நன்றி . வாழ்க வளமுடன்வாழ்த்துகள்