in ,

ஊனும் நீ… உயிரும் நீ…❤ (சிறுகதை) – ✍ அஞ்யுகாஸ்ரீ

ஊனும் நீ... உயிரும் நீ...❤
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 6)

“அம்மா… ம்மா” என வலி நிறைந்த குரலில், எட்டு மாத கர்ப்பிணியான யுவனிகா குரல் கொடுக்க

பாத்திரம் துலக்கிய கைகளைத் துடைத்தபடி வந்த மனோகரி, “என்னடி வேணும்? எதுக்காக சும்மா சும்மா கூப்ட்டுகிட்டே இருக்க?” எனக் கேட்டார்

“வயிறு விட்டு விட்டு வலிக்குதும்மா” என அழுகையோடு யுவனி கூறவும் 

சற்று இலகுவான மனோகரி, “சூட்டு வலியா இருக்கும், இரு அம்மா கஷாயம் வச்சு தரேன்” என்றவர், அடுத்த பத்தாவது நிமிடத்தில் டம்ளருடன் வந்தவர், “இதை குடி யுவனி, வலி மட்டுப்படும்” எனக் கூறி கொடுத்தார்

கஷாயத்தைக் குடித்தவளுக்கு வலி சிறிது சிறிதாக குறைந்தது

அரை மணி நேரம் கழித்து,“இப்ப பரவாயில்லையா யுவனி?” என மனோகரி கேட்க

“வலி பரவாயில்லை ம்மா, ஆனா வயிறு ஒரு மாதிரி இருக்கு” என தன் அசௌகரியத்தை கூறினாள்

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மனோகரி, “எட்டு மாசம் முடியப் போகுதில்ல, அப்படித் தான் இருக்கும். படுத்துத் தூங்கு சரியாய்டும்” என கூறி விட்டு சென்றார்

தூங்கினால் சரியாகி விடும் என நினைத்துப் படுத்தவளுக்கு, நேரம் செல்ல செல்ல வலி அதிகமாக ஆரம்பித்தது

வலி தாங்காமல் தாயை அழைக்க, அவரோ, “போலி வலியா இருக்கும் யுவனி. கொஞ்ச நேரம் பாக்கலாம், அப்படியே இருந்தா ஹாஸ்பிட்டலுக்குப் போலாம்” என்றவர், வெளியே சென்று விட்டார்

தாயின் அலட்சியம், யுவனிக்கு கோபம், அழுகை, பயம் என அனைத்தையும் கொடுக்க, உடனடியாக கணவனுக்கு அழைத்தாள்

முதல் அழைப்பிலேயே பேசியை உயிர்பித்தவன், “என்னாச்சு யுவனி? இப்ப கால் பண்ணியிருக்க?” என படபடப்பாக கேட்க, இயலாமையிலும் கணவனின் அக்கறையிலும் யுவனிகாவுக்கு இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வந்தது

மனைவியின் அழுகையில் பயந்தவன், “யுவனி ம்மா… என்னடா ஆச்சு? நீ சொன்னா தான எனக்கு தெரியும்? அழாம சொல்லுடா” என தன்மையாக கேட்க

“ரொம்ப வலிக்குது சிவா, அம்மாகிட்ட சொன்னா சூட்டு வலியா இருக்கும்னு சொல்றாங்க” என  அழுகையுடன் கூற

“நீ அழாதடா, நான் உடனே உன் அண்ணனை வரச் சொல்றேன். பயப்படாம தைரியமா இரு, நானும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டலுக்கு வந்துடுவேன். அதுவரைக்கும் நீ படுத்து இருக்காம மெல்லமா நடந்துக்கிட்டு இருடா, அப்ப தான் கொஞ்சம் நல்லாருக்கும்” என கணவன் தைரியம் கூற

“சரிங்க… நீங்க சீக்கிரமா வாங்க” என்றவள், போனை வைத்து விட்டு கணவன் கொடுத்த தைரியத்தில் அறைக்குள்ளேயே மெல்ல நடை பயின்றாள்

சிவா உடனடியாக யுவனிகாவின் பெரியப்பா மகனுக்கு அழைத்து விஷயத்தைக் கூற, அவனும் கிளம்பி தங்கையை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்ல வந்தான்

“யுவனி… யுவனி” என்ற அழைப்பில்,  தூக்கக் கலக்கத்தில் வந்து கதவை திறந்தார் மனோகரி 

அதில் கடுப்பானவன், “இதான் நீங்க பாப்பாவ பார்த்துக்கிற லட்சணமா? உங்களால முடியலைனா பேசாம மாப்பிளைகிட்டயே விட வேண்டியது தான, ஏன் இங்க கூட்டிக்கிட்டு வந்து அவள கண்டுக்காமல் படுத்தறீங்க சித்தி?” என கோபமாக கேட்க

“என்னடா அவள கண்டுக்காம போனாங்க? கொஞ்ச நேரத்திற்கு முன்ன தான் கசாயம் வச்சு கொடுத்தேன்” என்றார் மனோகரி தானும் கோபமாய்

“கஷாயமா? அது குடிச்சா எல்லாம் சரியாகிடுமா?” என கேலியாக கேட்டவன்,“எல்லாம் தெரிஞ்ச டாக்டர் மாதிரி நீங்களே எதாவது ஏடாகூடமா பண்ணாம தூரப் போங்க சித்தி. நான் யுவனிய ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போறேன்” என்று அவன் கூற

“எட்டு மாசம் தான ஆகுது, இப்பவே எதுக்கு ஹாஸ்பிடலுக்கு? பிரசவ வலியெல்லாம் ஒண்ணும் இப்ப இருக்காது குமார்” என அவரின் பிடியிலேயே இருந்தார் மனோகரி

“அதை நீங்க சொல்லாதிங்க சித்தி, டாக்டர் சொல்லட்டும்” என்றவன், “நகருங்க மொதல்ல” என வழியை மறைத்து நின்றவரிடம் கூற

“இப்ப போனா ஆப்ரேஷன் அது இதுனு சொல்லி காசு பிடுங்கிடுவாங்கடா” என்றார் மனோகரி

“எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, முதலில் நகருங்கனு சொன்னேன்” என அழுத்தமாக கூறியவன், அவரை தள்ளிவிட்டு விட்டு உள்ளே சென்று தங்கையின் அறைக் கதவை தட்டினான்

“கதவு திறந்து தான் இருக்கு” என்றவள், தனது நடைப் பயிற்சியைத் தொடர்ந்தாள்

உள்ளே வந்த குமார், “வலிக்குதுனா பக்கத்தில் இருக்க எனக்கு கால் பண்ணியிருக்கலாமில்ல பாப்பா?” எனவும்

“வாண்ணா, நீயும் அண்ணி கூட ஊருக்கு போயிருப்பனு நெனச்சு தான் அண்ணா கால் பண்ணலை” என்றாள் யுவனி

“சரி வா நாம ஹாஸ்பிட்டலுக்கு போகலாம், சிவா மாமா நேரா அங்க வந்திடுவார்” என்றவன், சகோதரியை அழைத்துக் கொண்டு வெளியே வர

“சொன்ன பேச்ச கேளுடா குமார், இப்ப போனா பில் மேல் பில்லா போட்டு காசை தண்ணி மாதிரி கறந்திடுவானுங்க” என மனோகரி தடுக்க

ஆத்திரமடைந்த குமார், “நீங்க ஒண்ணும் பார்க்க வேண்டாம் சித்தி, எவ்வளவு செலவானாலும் நானே பாத்துக்கறேன்” என்றவன், அவரின் வரவை கூட எதிர்பார்க்காமல் தங்கையை அழைத்துக் கொண்டு வெளியேறினான்

அடுத்த பத்தாவது நிமிடம், யுவனியை மருத்துவமனையில் சேர்த்தவன், சிவாவுக்கு அழைத்தான்

“ஆச்சு குமார்… வந்துட்டே இருக்கேன்” என சிவா கூற

“மாமா… சீக்கிரமா வாங்க, இங்க டாக்டர் என்னென்னமோ சொல்றாங்க” என பயத்தில் படபடப்பாக கூறி அழைப்பை துண்டித்தான் குமார்

ஐந்தே  நிமிடத்தில் ஹாஸ்டலுக்கு வந்த சிவா, “என்ன சொல்றாங்கடா குமார்? யுவனி எப்படி இருக்கா? ரொம்ப வலியில் துடிச்சிட்டாளா?” என தவிப்பாக கேட்க

“பிபியும் சுகரும் ஜாஸ்தியாகிடுச்சாம், உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றாங்க” என்றான் வருத்தமாய்

அப்பொழுது யுவனி இருந்த அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர், சிவாவை கண்டதும், “நீங்க தான் யுவனிகாவுடைய கணவரா?” எனக் கேட்டவர், சற்றே கோபமாக, “வலி வந்ததும் கூட்டிக்கிட்டு வர மாட்டீங்களா? நீங்களா ஏதாவது ஒரு வைத்தியம் பண்ணி பிரச்சனையை பெருசாக்கிட்டு தான் வருவீங்களா? படிச்சவங்க தான சார்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?” என சிவாவையும் குமாரையும் திட்டினார்

“எங்களுக்கு இப்ப தான் தெரியும், யுவனி அம்மா தான் சாதாரண வலினு அசால்ட்டா இருந்துட்டாங்க டாக்டர். எங்களுக்கு தெரிஞ்சதும் கூட்டிக்கிட்டு வந்துட்டோம்” என விளக்கினான் சிவா

“பெரியவங்க அப்படித் தான் சார், நீங்க தான் கவனமா இருக்கணும். உங்க அலட்சியத்தால குழந்தையும் அம்மாவும் கிரிட்டிக்கல் ஸ்டேஜில் இருக்காங்க. எட்டு மாசங்கிறதால பேபிக்கு ஆபத்து இன்னும் அதிகம், நாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் ரெண்டு பேருக்கும் ஆபத்து. உடனடியா ஆபரேஷன் செய்றது தான் நல்லது” என டாக்டர் கூற

“அப்ப உடனே பண்ணுங்க டாக்டர், எனக்கு என் மனைவி நல்லபடியா வந்தா போதும்” என திடமாக கூறினான் சிவா

“கவலைப்படாதிங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்” என்றவர், தனது கடமையை ஆற்ற சென்றார்

“மாமா…” என அழைத்த குமாரை பெருமூச்சுடன் ஏறிட்டு பார்த்த சிவா

“நீ என்ன கேக்க வரேன்னு எனக்கு தெரியுதுடா, குழந்தை எப்ப வேணா பெத்துக்கலாம், ஆனா யுவனி? என் மனைவி தான் எனக்கு எல்லாம். அவளில்லைனா நானில்லை, என் ஊனும் உயிரும் அவள் தான்டா” என அழுத்தமாகத் தனது காதலைக் கூறினான்

சிறிது நேரத்தில்,  அரை மயக்க நிலையில் ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டாள் யுவனி 

மகளுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு அப்போது தான் மருத்துவமனைக்குள் நுழைந்தாள் மனோகரி

“குமார்… யுவனி எங்கடா?” எனக் கேட்க

“ஆப்ரேஷன் பண்ண கூட்டிக்கிட்டு போயிருக்காங்க சித்தி” என்றான் குமார்

அதைக் கேட்ட மனோகரி, “நான் அப்பவே சொன்னேன் கேட்டியாடா? இப்ப பார் ஆப்ரேஷன்னு சொல்லிக் கொண்டு போயிட்டாங்க” என அங்கலாய்க்க

“போதும் கொஞ்சம் நிறுத்தறிங்களா” என கோபமாய் கத்திய சிவா, “யுவனிக்கு ஆபரேஷன் பண்ண காரணமே நீங்க தான் அத்தை, நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு அவளை இங்க கொண்டு வந்திருந்தா நார்மல் டெலிவரி நடந்திருக்கும்” என்றான்

“இல்ல மாப்ள, அவங்க காசு பிடுங்க இப்படி சொல்லி நம்மை பயப்படுத்தறாங்க” என படித்த பாட்டையே படித்தார் மனோகரி

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சிவா, “என் கூட வாங்க” என்றவன்,  அவரை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றான்

அங்கே ஒரு பெண்ணின் குடும்பம் கண்ணீருடன் நின்றிருந்ததைக் கண்ட மனோகரி, புரியாமல் விழித்தார்

“புரியலையா அத்தை?” எனக் கேட்டவன், “நீங்க உங்க பொண்ணுக்கு என்ன பண்ணுனீங்களோ, அதையே தான் அந்த குடும்பமும் பண்ணாங்க, அதன் விளைவ அந்த பொண்ணு அனுபவிக்கிறா” என்றான்

“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க?” என பயத்துடன் கேட்க

“அந்த பொண்ணுக்கும் யுவனி மாதிரி பிபியும் சுகரும் இருந்திருக்கு. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு வந்தவங்க, நிலைமை புரியாமல் ஆப்ரேஷன் பண்ண விடாம தடுத்திருக்காங்க. அதில் குழந்தைக்கு நேத்து நைட் மூச்சு திணறல் வந்து வயத்திலேயே இறந்துடுச்சு. அப்பவும் அறுவை சிகிச்சை பண்ணவிடாம இவங்க பிடிவாதம் பிடிச்சுருக்காங்க.

டாக்டர் போராடி இப்படியே விட்டா அந்த பொண்ணு உயிருக்கு ஆபத்துனு சொல்லி, ஒரு வழியா இன்னிக்கு மதியமா ஆப்ரேஷன் பண்ணியிருக்காங்க. இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தா, அந்த பொண்ணும் போய் சேர்ந்திருக்கும். அந்த பொண்ணு குடும்பம் மட்டும் வந்த உடனே ஆபரேஷன் பண்ண சம்மதிச்சுருந்தா, குழந்தையும் உயிரோட இருந்திருக்கும்” என சிவா கூறவும்,  ஆடிப் போய் விட்டார் மனோகரி 

மனோகரி ஒன்றும் பணத்தாசை பிடித்தவர் அல்ல, சில மருத்துவர்களின் தவறான செயலால் மக்கள் பாதிக்கப்பட்டதைக் கண்ட சாதாரண மனுஷி

சில ஹாஸ்பிட்டல் மற்றும் டாக்டர்களின் பணத்தாசை தான் பலரின் தடுமாற்றத்திற்கு காரணம், அதனால் தான் ஆப்ரேஷன் என்றாலும் பெரிய மருத்துவமனை என்றாலும் பயப்படுகிறார்கள்

“கடவுளே, நான் எவ்வளவு பெரிய பாவம் செய்ய இருந்தேன். எங்க  பக்கத்து வீட்டு பொண்ணு பிரசவத்துக்கு சேத்த ஹாஸ்பிடல்ல காசுக்கு ஆசைப்பட்டு ஆபரேஷன் செஞ்சு தான் அந்த பொண்ணு அநியாயமா போய்டுச்சுனு சொன்னாங்க. அதுக்கு பயந்துட்டு தான் இப்படி சொன்னேன். ஆண்டவா, எப்படியாவது எம் பொண்ணையும் குழந்தையையும் நல்லபடியா எங்கிட்ட கொடுத்திடுப்பா” என நின்ற இடத்திலேயே கையெடுத்து கும்பிட்டு வேண்டிக் கொண்டார்

“சித்தி… பயப்படாதிங்க. யுவனிக்கு ஒண்ணும் ஆகாது. நல்லபடியா குழந்தையோட வந்திடுவா” என அவரை அணைத்து ஆறுதல்படுத்தினான் குமார்

“அத்தை நான் உங்களை தப்பா சொல்லலை, உங்க அறியாமையையும் வீண் பயத்தையும் தான் தேவையில்லனு சொல்றேன்” என்ற சிவா, அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்கு அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்

மனோகரியும் குமாரும் சிவாவின் அருகில் சென்று நின்று கொண்டனர்

சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வரவும், மூவரும் அவரை சூழ்ந்து கொண்டனர்

“யுவனி எப்படி இருக்கா டாக்டர்?” என சிவா நடுங்கிய குரலில் கேட்க

“நல்லா இருக்காங்க, உங்க குட்டி பொண்ணும் நல்லாருக்கா. குறை மாதங்கிறதால பேபி ஒரு வாரம் இன்குபேட்டர்ல இருக்கட்டும். குழந்தையை கிளீன் பண்ணிக்கிட்டு இருக்காங்க, கொஞ்ச நேரத்துல கொண்டு வருவாங்க பாருங்க. யாரும் பாப்பாவை தூக்காதிங்க, யுவனிய நார்மல் வார்டுக்கு மாத்த சொல்லிருக்கேன், அப்புறம் பாக்கலாம்” என கூறிச் சென்றார்

சிறிது நேரம் கழித்து குழந்தையைக் கொண்டு வந்த செவிலியர், சிவாவின் கையில் பிள்ளையை கொடுத்தார்

கண்களில் நீர் ததும்ப மகளை ஆசையாய் வாங்கியவன், மகளுக்கு முத்தமிட, தந்தையின் மீசை முடி குத்தியதில் முகத்தை சுருக்கி சிணுங்கியது பூஞ்சிட்டு

அதில் சிவாவின் முகத்தில் முறுவல் பூத்தது

“எல்லாரும் தூக்கினா தொற்று பரவ வாய்ப்பு இருக்கு சார்” என்ற செவிலியர், அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு சென்றார்

அவர் சென்றதும், “சித்தி… நம்ம பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வேற ஏதோ நடந்திருக்கு, நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்கனு நினைக்கிறன்” என குமார் கூற

“வேற ஏதோவா?” என புரியாமல் கேட்டார் மனோகரி 

“இதப் பத்தி நீங்க பாப்பாகிட்ட கேளுங்க” என்றவன், தூரப் போய் நின்று விட்டான்.

இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த மனைவியைக் காண சென்ற சிவா, அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அவளோ அவனைப் பார்த்து சோர்வாக சிரித்தாள்

“பயந்துட்டீங்களா?” என யுவனிகா கேட்க

“ரொம்ப… உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா நான் ஊனும் உயிரும் உள்ள பிணம்டி” என்றவனின் கைகளில் இதழ் பதித்து, தனது அன்பை வெளிப்படுத்தினாள் யுவனிகா  

சற்று நேரம் கழித்து மகளைக் காண வந்த மனோகரி, கண்ணீர் மல்க மகளிடம் மன்னிப்பை யாசித்தார்

“அழாதம்மா… யாரோ ஒருத்தர் செய்யற தப்பு நல்ல டாக்டர்களையும் நம்ப விடாமல் மக்களை அல்லல் பட வைக்குது. கடவுளுக்கு அப்புறம் மனுஷன் நம்புற ஒரே ஜீவன் மருத்துவர்கள் மட்டும் தான், அவங்களே தப்பு செஞ்சா யார நம்பறது? அதனால உங்களையும் தப்பு சொல்ல முடியாது, விடுங்கம்மா… நடக்கறது தான் நடக்கும்” என யுவனிகா புன்னகைக்க, அங்கு சூழல் சற்று இயல்பானது

பின், “நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு எப்படி இறந்தது பாப்பா?” என மனோகரி கேட்க

“ஒரு வகைல நீங்க நினைக்கிற மாதிரி தான் ம்மா, ஆனாலும் மொத்த பொறுப்பையும் மருத்துவர் மேல சொல்ல முடியாது, ஏன்னா முதல் தவறு அந்த வீட்டுக்காரங்ககிட்ட தான் இருக்கு. கர்ப்பிணி பெண்ணுக்கு எந்த அளவுக்கு உடற்பயிற்சி அவசியமோ அதே அளவுக்கு உடல் எடையும் சீரா இருக்கணும். அவ்வளவு ஏன்? சுகப்பிரசவம் நடக்க யோகவில் பிரத்யேக ஆசனங்கள் இருக்காம் ம்மா. 

ஏற்கனவே அந்த பொண்ணு பருமன், இதில் அவளை பொத்திப் பொத்தி பாதுகாத்து எடையை ஏத்திட்டாங்க. சரியான உடற்பயிற்சியும் இல்ல, அது போதாதுன்னு பிரசவத்தை பத்தின பயமும் சேந்துக்க, இரத்த அழுத்தம் அதிகமாகி சுகபிரசவம் ஆக வாய்ப்பில்லாம போயிடுச்சு. இவ்வளவுக்கும் இடைல, டாக்டர் பேச்சை கேக்காம நார்மல் டெலிவரிக்காக காத்திருந்திருக்காங்க. அந்த பெண்ணை செக் செஞ்ச மருத்துவர் தான் இவங்க அறியாமை கண்டு அழுத்தம் கொடுத்து ஆப்ரேஷன் பண்ணியிருக்காங்க. ஆனா சரியான டைமுக்குள்ள பண்ணாததால தாய் செய் ரெண்டு பேரையும் காப்பாத்த முடியாம போய்டுச்சு” என விலக்கினாள் யுவனிகா

“மொதல்ல டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும்னு தான நம்பிக்கை குடுத்தார், அப்ப அந்த பொண்ணு நிலை அவங்களுக்கு தெரியாதா? கடைசில வந்து ஆப்ரேஷன் பண்ணணும்னு சொன்னா யார் ஏத்துப்பாங்க?” என தன் சந்தேகத்தை மனோகரி கேட்க

“அம்மா… ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. குழந்தைய சுமக்கிற பெண்களுடைய நிலையும் குழந்தையோட நிலையும் எப்பவும் ஒரே நேர்கோட்டில் இருக்காது. அவங்க மனநிலை, உடல்நிலை பொறுத்து நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும். யாராலயும் உறுதியா எதுவும் சொல்ல முடியாது. சில இடங்கள்ல மருத்துவமனை நிர்வாகம் பணத்துக்காக தப்பு பண்றதும் நடக்கத்தான் செய்யுது, இல்லேனு சொல்லல. பாதிக்கப்பட்டவங்க எதிர்த்து கேள்வி கேட்கணும். யாராவது ஒருத்தர் துணிஞ்சு கேட்டா, மருத்துவமனை தொடர்ந்து தப்பு செய்ய யோசிப்பாங்க. அப்படி கேக்காம விடறதால தான் இப்ப பலர் பாதிக்கப் படறாங்க” என்றாள் யுவனிகா 

“கேஸ் போட்டா மட்டும் பெருசா என்ன பண்ணிட போறாங்க?”

“ஒருத்தர்கிட்ட ஏமாத்தி பணம் வாங்கினா மருத்துவமனை   நிர்வாகமும் அதற்கு உடந்தையா  இருந்த மருத்துவரும் சட்டப்படி குற்றவாளிகள். இந்திய தண்டனை சட்டம் 25/506 படி, ரெண்டு  வருஷம் முதல் ஏழு வருஷம் வரை ஜெயில் தண்டனையும் அபராதமும் கட்ட வேண்டியிருக்கும். சரியான  ப்ரூப்  இருந்தா அதிகபட்சமா அந்த ஹாஸ்பிட்டல் மற்றும் டாக்டருடைய லைசென்ஸ் கூட ரத்து செய்ய முடியும்” எனவும் 

“இவ்வளவு இருக்கா பாப்பா” என ஆச்சரியமாக கேட்டார் மனோகரி 

“நிறையா இருக்கு ம்மா, ஆனா நம்மை மாதிரி பாமர மக்களுக்கு தான் தெரியலை. அதை விட தெரிஞ்சுக்க ஆர்வமும் விருப்பமும் இல்ல, அதான் உண்மை” என நிதர்சனத்தை கூறினாள் யுவனிகா 

இப்படி போலிகளையும் மிரட்டல்களையும் பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்க, “என்னை கவனி” என கூறுவது போல் சிணுங்கினாள் குட்டி யுவனிகா 

அடுத்த சில நாட்களில் குழந்தையும் தேறி ஊனும் உயிருமாக நல்லபடியாக வீட்டிற்கு வந்தாள். இந்த சம்பவத்திற்கு பின்,  எதிலும் தானாக முடிவெடுப்பதில்லை மனோகரி, நிறைய மாறியிருந்தார். சொல்லப் போனால் தைரியமாக தவறுகளை தட்டிக் கேட்க பழகியிருந்தார்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad – தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

17 Comments

  1. அழகான கதை. ஆழமான கருத்து. சமூக நோக்குள்ள பார்வையோடு எழுத்தாளர் கையாண்டுள்ளார். தொடர்ந்து எழுதுங்கள்..!

  2. Nalla kadhai Akka. Solla vandhadhai innum azhuthama solli irukalamo nu thonuchu. Matha PADI arumaiyana kadhai. Nijama nadakuradhi sariya solli irukinga. Innum idha pathi neraiya per Ku thelivu venum. All the best Akka 🙂

  3. அருமையான கதை…. ரொம்ப அழகா இருந்திச்சு…. இந்த தெளிவு இல்லாத காரணத்தினால் சில இழுப்புகள் நேரிடுவதற்கும் வாய்ப்பு உண்டு… பல பேருக்கு இந்த தெளிவு கிடைக்க வேண்டியிருக்கிறது. அதனை அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்…. அழகான சமூக சிந்தனை … சிறப்பான கருத்து..

  4. பொதுவாக சமுதாயத்தில் நடக்கின்ற விஷயத்தை அழகாக காட்சிப்படுத்தி உள்ளீர்கள். இது இப்பொழுதும் ஒரு சில குடும்பங்களில் நடந்துதான் வருகிறது. கதையின் நகர்வு அருமை. வாழ்த்துகள் அஞ்சு ❤️❤️💐💐

  5. Nalla story. Ena dan technology muneriku manushanga muna madiri ilanu sonalum palar inum marama dan irukanga. Sila doctors nallavangalavum irukanga silar panathasai pidichavangalavum irukanga. Karuthu nalla karuthu but inum konjam force a solirikalamnu thonuchu. Inda topic la eludiyadu 👏👏👏

  6. நன்றி சிஸ் 💖…
    உண்மை தான் சிஸ்… என்ன தான் மாற்றம் நடந்தாலும் அடிமனதில் இருக்கும் பயம் மாறாமல் அப்படியே தான் இருக்கு…

  7. அருமை…!, இக்கதையின் வாயிலாக எனக்கும் விழிப்புணர்வு கிடைத்ததுள்ளது… நன்றி

  8. அருமை…!, இக்கதையின் வாயிலாக எனக்கும் விழிப்புணர்வு கிடைத்துள்ளது… நன்றி

  9. அழகான குடும்பகதை சிசேரியன் பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் நடக்காது சிவா அருமையான கணவன் ❤️❤️❤️❤️

முடியாத பாதைகள் (சிறுகதை) – ✍ வித்யசுகி, வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம்

என் பெயர் தமிழரசி (சிறுகதை) – ✍பானுமதி பார்த்தசாரதி, சென்னை