in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 18) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15   பகுதி 16   பகுதி 17

நவசேவா கஸ்டம்ஸ் கட்டிடத்திற்கு வந்திறங்கிய போது, குட்டி அரசுக்காக காத்திருந்தான்.

“என்ன குட்டி நலமா?” கைகுலுக்கியபடி கேட்டான் அரசு.

“நலத்திற்கு என்ன குறைச்சல். வேலைப்பளுதான் அதிகமாகி விட்டது. சொல் எந்த மாதிரி பிசினஸ் பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளாய்?”

“இப்படி நடுத்தெருவில் நிற்க வைத்து பேசுவாயா? இல்லை உன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வாயா?” அரசு குட்டியின் முதுகில் ஓங்கி தட்டியவாறு கேட்டான்.

“ஸாரிப்பா. வா, முதலில் சாயா குடிக்கலாம்.”

இருவரும் நவசேவா கஸ்டம்ஸ் அலுவலகத்திற்கு அருகிலிருந்த ரெஸ்டாராண்டில் அமர்ந்து டீ ஆர்டர் கொடுத்து விட்டு “சொல்லு, அப்பா அம்மாவை விட்டு விட்டு வந்து விட்டேன் என்றாய். எப்போதாவது தொடர்பு கொண்டாயா?” என்று கேட்டான் குட்டி.

“தொடர்பு கொண்டால் திரும்ப என்னை அழைப்பார்கள். பழைய குருடி கதவைத் திறடி கதையாக அப்பாவின் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டி அழச் சொல்வார்கள். சரி அந்தக் கதையெல்லாம் எதற்கு? நான் சொன்ன விஷயங்களெல்லாம் செய்தாயிற்றா?” என்றான் அரசு.

“ஆபீஸ் பார்த்தாச்சு. டெலிபோன், புக் பண்ணியாச்சு. நீ சொன்ன மாடலில் பேக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் எல்லாம் ஆர்டர் கொடுத்தாச்சு.”

“இனி நீ வந்து பார்த்து  ஓ.கே சொன்னால் சரி. மற்றபடி எல்லாம் முடிந்த மாதிரிதான். ஆமாம் மார்க்கெட்டிங் எல்லாம் எந்த வகையில் முடிவு செய்திருக்கிறாய் அரசு.?

“கப்போலி தொழிற்சாலை அருகே இறக்குமதி செய்கிற ஏற்றுமதி செய்கிற அத்தனை கம்பெனியிலும் கொஞ்சம் ஏறி இறங்கினால் வியாபாரம் வழிக்கும் வந்து விழும். அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை.”

“அப்போ சரி.” காலி டீ கப்பை மேஜையில் வைத்து விட்டு “கிளம்பலாமா?” என்றான்.

“ஓ… தாராளமாக.”

இருவரும் குட்டியின் டாட்டா சுமோவில் பயணித்து குட்டியின் அலுவலகத்திற்கு வந்தனர். எல்லோரும் அவரமாக பணியில் இருந்தது  மிகவும் வியப்பாக இருந்தது அரசுவிற்கு.

“பராவாயில்லை குட்டி. பிசினஸில் எஸ்டாபிளிஸ் ஆகிவிட்டாய் என்று நினைக்கிறேன்.”

“ஏதோ இப்போது தான் தவழ ஆரம்பித்திருகிறேன். ஒரு நிமிடம் சில இ.. மெயில்கள் அனுப்ப வேண்டும். முடித்து விட்டு இருவரும் உனக்காக பார்த்திருக்கும் ஆபீஸை பார்க்கப் போகலாம்.”

“தாராளமாக.”

குட்டியின் சிறிய சிறிய வேலைகளை முடித்து விட்டு ஆன்கரேஜ் பில்டிங்கில் மூன்றாவது மாடிக்கு அரசுவின் ஆபீஸிற்கான இடத்திற்காக வந்தார்கள்.

உள்ளே நுழைந்ததும் “வாவ்…. ரொம்ப அழகாக இருக்கிறது.” என்றான் அரசு.

“எப்படி அரசு. பிடித்திருக்கிறதா?”

“ரொம்ப பிடித்திருக்கிறது. இந்தச் சனிக்கிழமையே பூஜை போட்டு ஆரம்பித்து விடலாம். உள்ளேயிருக்கும் கேபினில் இருப்பவருக்கு ‘லாப் … டாப்’ கொடுத்து விட்டலாம். ஆமாம் ஒரு கம்ப்யூட்டர் தானே ஆர்டர் கொடுத்திருக்கிறாய்.”

“ஆமாம் அரசு.”

“இன்னும் இரண்டு கம்ப்யூட்டருக்கு ஆர்டர் கொடுத்து விடு.”

“சரி. வேறு ஏதாவது மாற்றங்கள்?”

“முதலில் ஆபீஸ் ஆரம்பிக்கட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.” அரசு சொல்லி முடிப்பதற்குள் அவன் ‘செல்’ லில் சங்கீத ஒலி ஆரம்பித்தது.

‘செல்’லில் எண்ணைப் பார்த்து விட்டு “சொல்லு திலக். எப்படி இருக்கிறாய்.” என்று கேட்டான் அரசு.

“ரொம்பா நலம். எங்கே இருகிறாய்?”

“நவ சேவா அலுவலகம் பார்த்து முடிவு செய்து கொண்டிருக்கிறேன்.”

“ஏதோ ரொம்ப ஆழக் கால் வைக்கிறாயா? அல்லது அகலக்கால் வைக்கிறாயா என்பது புரிய வில்லை. ஆனால் உன்புயல் வேகம் பிடித்திருகிறது. ஆமாம் போன வாரம் பூனே போயிருந்தாயே அலுவலகம் ஆரம்பித்து விட்டதா.”

“ஆமாம், உனக்குத்தான் அதைப்பற்றி விவரமாக இ.மெயில் போட்டிருந்தேனே. அதிலே நாசிக்கில் இன்னொருவருடன் சேர்ந்து மருந்து வியாபாரம் ஆரம்பித்த தென்றும்  குறிப்பிட்டிருந்தேனே. அந்த மெடிசினுக்கு வெளிநாட்டு ஆர்டர் கூட கிடைத்திருக்கிறது. ஏற்றுமதி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்பதையும் எழுதியிருந்தேன்.”

“அப்படியா, வெரிகுட் . இ.மெயில் பார்க்க நேரமில்லை. அடுத்து எங்கே?”என்றான் திலக்.

“சிங்கப்பூர் போகிறேன்” என்றான் அரசு.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பழனி பாத யாத்திரை அனுபவம் 1 (ஆன்மிகம்) – வைஷ்ணவி

    மாறுமா உலகம்? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்