#ads – Deals in Amazon👇
மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)
மழைக்காலதிற்கேற்ற மிளகு குழம்பு, மிளகு சீரக ரசம், வத்தக்குழம்பு, பருப்பு உசிலி இவைகளை ஐந்து நிமிடத்தில் செய்யும் இன்ஸ்டன்ட் பொடிகளை, சுலபமாய் வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். அதோடு, அந்த பொடிகளைக் கொண்டு குழம்பு, ரசம் செய்முறையும் பகிர்ந்துள்ளேன்
மிளகு குழம்பு பொடி
தேவையான பொருட்கள்
மிளகு – 50 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
புளி – எலுமிச்சை பழ அளவு (கொட்டை, நார் சுத்தம் செய்தது)
பெருங்காய தூள் – சிறிதளவு
பச்சரிசி – 1 ஸ்பூன்
பொடி செய்முறை
புளியை தவிர மற்ற அனைத்தையும் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு எண்ணெய் விட்டு புளியை வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பிறகு, மிக்சியில் எல்லாவற்றையும் நன்கு பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு Fridgeல் வைத்துக் கொண்டால், இரண்டு மாதம் வரை கெடாது
குழம்பு செய்முறை
ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் வீதம் பொடியை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிறகு கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு வெடித்ததும், கலந்து வைத்துள்ள மிளகு குழம்பு போடி கரைசலை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்தால் சுவையான மிளகு குழம்பு தயார்
வத்தக்குழம்பு பொடி
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
தனியா – 25 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
வெந்தயம் – 1 ஸ்பூன்
பச்சரிசி – 1 ஸ்பூன்
பெருங்காய தூள்- சிறிதளவு
புளி – எலுமிச்சை பழ அளவு (கொட்டை, நார் சுத்தம் செய்தது)
பொடி செய்முறை
புளியை தவிர மற்ற எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு எண்ணெய் விட்டு புளியை நன்கு வறுக்கவும். சூடு ஆறிய பிறகு, எல்லாவற்றையும் மிக்சியில் பொடி செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு Fridgeல் வைத்துக் கொண்டால், இரண்டு மாதம் வரை நன்றாக இருக்கும்
குழம்பு செய்முறை
ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் வீதம் பொடியை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொன்னிறமாக வறுபட்டவுடன், கலந்து வைத்துள்ள வத்தக்குழம்பு கரைசலை சேர்த்து, ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்தால் சுவையான வத்தக்குழம்பு தயார்
மிளகு சீரக ரசப்பொடி
தேவையான பொருட்கள்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
தனியா – 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காய தூள் – சிறிதளவு
புளி – எலுமிச்சை பழ அளவு (கொட்டை, நார் சுத்தம் செய்தது)
பொடி செய்முறை
புளியை தவிர மற்ற எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு எண்ணெய் விட்டு புளியை நன்கு வறுக்கவும். சூடு ஆறிய பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு Fridgeல் வைத்துக் கொண்டால், இரண்டு மாதம் வரை நன்றாக இருக்கும்.
ரசம் செய்முறை
ரசம் செய்யும் பாத்திரத்தில் ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் வீதம் பொடியை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து, நன்றாக கொதித்த பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு இறக்கி, நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான மிளகு சீரக ரசம் தயார்
பருப்பு உசிலி
தேவையான பொருட்கள்
பீன்ஸ் – 250 கிராம்
கடலை மாவு – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
செய்முறை
பீன்ஸை நன்கு பொடியாக நறுக்கி, சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு, கடலை மாவு சேர்க்கவும். பின் நன்கு கலந்து ஐந்து நிமிடம் கழித்து, வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அது நன்கு சிவந்ததும், கலந்து வைத்துள்ள பீன்ஸ் கலவையை அதில் சேர்க்கவும். பின் நன்கு வதக்கி, அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைத்தால், உதிர் உதிராக சுவையான பருப்பு உசிலி தயார்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings