2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11
மறுநாள் ராம்குமாரை கம்பெனிக்கு கொண்டு போய்விட வந்த சுந்தரம், அவன் கிளம்பாமல் நைட் டிரஸ்ஸிலேயே இருப்பதைப் பார்த்தார்.
“சுந்தரம்… நான் இன்னைக்கு கம்பெனிக்கு வரலை. நீங்க என்ன செய்ங்க, ஈ.சி.ஆர் பங்களாவிற்குப் போய், அங்கே தங்கியிருக்கும் நம்ம பெங்களூர் கிளையண்ட்ஸ்ஸை இங்க கூட்டிட்டு வாங்க. அவங்க இந்த வீட்டைப் பாக்கனும்னு சொன்னாங்க. அப்படியே இங்கே ஒரு சின்ன மீட்டிங் இருக்கு. இன்னும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு போங்க. டைம் சரியா இருக்கும் அவங்க கிளம்புவதுக்கு. இத மகாகிட்ட சொல்லனும்னு அவசியமில்லை. மகா உடனே இங்க வரணும்னு சொல்லுவா. அவ ரெஸ்ட் எடுக்கப் போயிருக்கா, ரெஸ்ட் எடுக்கட்டும். இங்கே உள்ள விஷயம் எதுவும் அவளுக்குத் தெரிய வேண்டாம்” என்றான் பூடகமாக.
சுந்தரத்திற்கு திக்கென்றது. இந்த வீட்டிற்கே வந்தனாவை அழைத்து வரச் சொல்கிறான் தைரியமாக. மகாவிற்கு இது தெரிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும். எவ்வளவு பெரிய பூகம்பம் வெடிக்கும்.
எவ்வளவு உரிமை கொடுத்தாலும் தான் அந்த வீட்டில் ஒரு சாதாரண பணியாள் என்பது நினைவுக்கு வர சுந்தரம், “சரி ஐயா!” என்றவர், கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினார் .
பிறகு தங்கத்தை கூப்பிட்டான்.
“தங்கம் இன்னைக்கு வீட்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… அதனால மஸ்ரூம் பிரியாணி, ரய்த்தா.. சிப்ஸ்… மகா செய்வாளே.. அது மாதிரி செஞ்சு டேபிளில் வைச்சிட்டு கிளம்பிடு. ஒரு மணிநேரத்தில் முடிச்சுட்டு கிளம்பிடனும். நீ நாளைக்கு வேலைக்கு வந்தா போதும். மாம்பழம் இருக்கா? அது இருந்துச்சுன்னா அதையும் பிரஷ் ஜூஸ் போட்டு பிரிட்ஜில் வைச்சிடு. சுகர் ரொம்ப போட வேண்டாம், பாதி அளவு போட்டா போதும்”
வந்தனாவிற்கு மஸ்ரூம் பிரியாணி பிடிக்கும். அத்துடன் சிக்கன் 65 சிக்கன் ரோல்.. என அவளுக்குப் பிடிச்சதைக் கேட்டுகிட்டு ஆர்டர் பண்ணிக்கலாம் என்று யோசித்தான். மேங்கோ பிரஷ் ஜூஸ் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் அதிகம் சீனி போட மாட்டாள். வெயிட் போட்டுடும் என்று. சிறுபிள்ளை போல அவளுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து எடுத்து வைத்தான்.
அத்துடன் முக்கியமாக அவன் மகாவுடனிருக்கும் பெரிய சைஸ் கலர் திருமண போட்டோ மற்றும் வேறு சில படங்களை கழற்றி ரூமில் கட்டிலுக்கு அடியில் அவள் பார்வை படாத இடத்தில் வைத்தான்.
மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.. வந்தனா வருகிறாள் என்பதே அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளியே வந்த தங்கம் காரை துடைத்துக் கொண்டிருந்த சுந்தரத்தைப் பார்த்து, “அண்ணா! ரெண்டு மூணு சாமான்கள் மட்டும் வேணும். தெருமுனையில் இருக்கிற கடையில வாங்கி கொடுத்துட்டு போவீங்களா? ஒரு மணி நேரத்துக்குள்ள வேலைய முடிச்சுட்டு போகனும்னு ஐயா சொல்றாங்க.. கடைக்குப் போக நேரமில்லை” என்றாள்.
அந்த பரபரப்புக்கிடையேயும் அவரைப் பார்த்து, “ஏன் அண்ணா வர்றவங்க ரொம்ப முக்கியமான புள்ளியோ.. ஐயா ஒரே பரபரப்பா இருக்காரு..மகா அம்மா இல்லாத நேரம் அப்படி யாரு முக்கியமான புள்ளி வீட்டுக்கு வர்றாங்க. வர்றது தெரிஞ்சா அம்மா வந்துருவாங்க …அம்மா இல்லாம எனக்கு தான் கையொடிஞ்சது போல இருக்கு” என்றாள்.
“இதே பாரு தங்கம்.. நாம இந்த வீட்டில் வேலை பாக்கிறவங்க. அவங்க விஷயங்களைத் நாம ஆராய்ச்சி பண்ணக் கூடாது, நமக்கு கொடுத்த வேலையை நாம ஒழுங்கா செஞ்சிட்டு போய்கிட்டே இருக்கனும். வேண்டாத விஷயத்தில நாம தலையிடுவது ஏதாவது வம்பில் போய் முடியும். நீ பாட்டுக்கு அவர் சொன்னதை செஞ்சு மேஜையில் வைச்சிட்டு வீட்டுக்கு கிளம்பு..”
“மனசு கேட்கல அண்ணா! மகா அம்மா நம்மள ஒருநாளும் வேலை பார்க்கிறவங்களா நினைச்சதே கிடையாது. கூடப் பிறந்த பொழப்பா நினைச்சு பாசமா பழகுறாங்க. போன மாசம் பிரசவமாச்சு என் ரெண்டாவது பொண்ணுக்கு, அந்த பிரசவ செலவு எல்லாம் அம்மாதான் ஏத்துக்கிட்டாங்க. பிள்ளை பிறந்ததும் கை கொள்ளாமல் சாமான்களை வாங்கி கொடுத்தாங்க. ஏற்கனவே அவ கல்யாணத்துக்கு ஒரு ஜோடி வளையல் போட்டாங்க. பிறந்த குழந்தைக்கும் தங்கத்துல சங்கிலி வாங்கி கொடுத்தாங்க. அந்த மனசு யாருக்கு வரும்” என்றாள் ஆதங்கத்தோடு.
அவள் மனதிலும் ஏதோ நேருடுவது புரிய, சுந்தரம் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் ஈ.சி.ஆர் பங்களாவை அடைய, அங்கே வந்தனா மட்டுமே கிளம்பி ரெடியாக இருந்தாள்.
“பாப்பா மட்டும் தான் வருது.. பத்திரமா கூட்டிட்டு போ” என்றாள் வந்தனாவின் அம்மா சந்தியா.
ஈஸ்வர பவனத்திற்குள் கார் நுழைய.. வந்தனா அந்த பங்களாவை வியப்புடன் பார்த்தாள். தன்னுடைய வீடு புதுமையானது என்றால் பழைய அரண்மனை போல காட்சியளித்தது ஈஸ்வர பவனம்.
அந்த வீட்டின் கம்பீரத்தை பார்த்ததுமே மகா பெரிய பணக்காரி தான் போல, அதான் ராம்குமார் அவளுக்கு இப்படி பயந்து சாகறான்..என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டாள். இருந்தும் போர்ட்டிகோவில் நின்று வரவேற்ற ராம்குமாரைப் பார்த்ததும் அவள் மனம் முகம் தாமரையாய் மலர்ந்தது.
“வாங்க வாங்க” என்று வரவேற்றவன், “சுந்தரம் நீங்க கிளம்பலாம் சுந்தரம். அவங்க மீட்டிங் முடிஞ்சதும் கால் டாக்ஸில கிளம்பி போயிடுவாங்க. எத்தனை மணிக்கு முடியும்னு என்று தெரியாது. நீங்க வெயிட் பண்ண வேண்டாம். நீங்க நாளைக்கு காலைல எப்போதும் நான் கம்பெனிக்கு கிளம்பற நேரத்துக்கு வந்தாப் போதும்” என்று வாசலிலேயே கார் சாவியை வாங்கிக்கொண்டு, சுந்தரத்தை அனுப்பினான்.
உள்ளே வந்ததும் தங்கம் அவன் கூறியபடி கண்ணாடி குவளையில் பிரஷ் மேங்கோ ஜூசை எடுத்துவர… உதட்டில் பூசிய உதட்டுச்சாயம் அழியாமல் நாசுக்காக குடித்தாள்.
“நீதான் ஜூஸ் போட்டியா? அருமையா போட்டிருக்க! எங்க வீட்ல ஒண்ணு சமையலுக்கு இருக்கு அதுக்கு ஒழுங்கா ஒரு தண்ணிய கூட சுட வைக்க தெரியாது” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
“தங்கம் எங்களுக்கு மீட்டிங் இருக்கு நீ போய்ட்டு நாளைக்கு காலையில எப்போதும் வர்ற நேரத்துக்கு வந்தா போதும்” என்று அவளையும் அனுப்பினான்.
எல்லோரையும் அனுப்பிவிட்டு வந்தனாவிற்கு, தோட்டத்தையும், வீட்டையும் சுற்றிக் காட்டினான். அப்ப்ப்பா எவ்வளவு பெரிய இடம் .பின்னாலேயே நிறைய காலியிடம் இருக்குது. அங்கேயே ஒரு பங்களா கட்டலாம் போல.
“வா வந்தனா உள்ளே போகலாம். இது மகா வீடு.. மகா இருக்கிற இடம்.. எங்க உங்க மகா போட்டோ ஒன்னு கூட காணவில்லை” என்று சுத்திமுத்தி பார்த்தாள்.
“அது தூசி அடிக்கிறதுக்காக மகா கழற்றி வச்சிருக்கா” என்று சமாளித்தான்.
“இந்த ஈஸ்வரபவனம்னு ஏன் நினைக்கிற… இதுவும் உன்னுடைய வந்தனாபவனம்னு நெனச்சுக்கோ ..”
கடைசியாக தன்னுடைய படுக்கையறையை காண்பிக்க அதற்கு மேல் அவனால் வந்தனாவுடன் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை. அவளை அப்படியே அணைத்து கட்டிலில் சாய்ந்தான். அவனைப் பேச விடாமல் உதடுகளால் உதடுகளை மூட இருவரும் காதல் மயக்கத்தில் காமன் அரங்கத்தில் ஓடிப்பிடித்து விளையாட, களைத்துப்போன போது பசி எடுத்தது.
வகைவகையாய் அசைவ உணவுகளும் வீட்டு உணவுகளும் மேசையை அலங்கரிக்க, வந்தனா தனக்குப் பார்த்து பார்த்து செய்யும் அவனுடைய அன்பை எண்ணி கிறங்கிப் போனாள்.
சாப்பிட்டு முடிக்கும் போது போன் அடிக்க ராம்குமார் எடுத்தான். லைனில் மகா ‘சிவ பூசையில் கரடி’ என்று மனதுக்குள் சபித்து கொண்டே, “என்ன மகா எப்படி இருக்க? சித்தி வீடு புடிச்சிருக்கா? பொழுது போகுதா? சித்தி பொண்ணுங்க எல்லாம் காலேஜ் போயாச்சா?” என்று சகஜமாகப் பேச ஆரம்பித்தான்.
“இல்லைங்க நான் நம்ம வீட்டுக்கு வரனும். கொஞ்சம் சுந்தரம் அண்ணனை வீட்லயிருந்து காரை எடுத்துட்டு வரச் சொல்லுங்களேன்” என்றாள் மகா.
பதறிப் போன ராம்குமார், “சுந்தரம் இன்னைக்கு லீவு மகா, வீட்டுக்குப் போயிட்டாரு” என்றான் அவசரமாக. “டிரைவர் ஒருத்தரும் இல்ல மகா, நீ நாளைக்கு வா” என்றான்.
“இல்லைங்க… சித்தியும் சித்தப்பாவும் ஒருநாள் டிரிப்பா திருப்பதி போறாங்க. திருப்பதிக்கு வேண்டி முடிஞ்சு நேத்திக்கடன் பணம் பூஜை ரூம்ல வச்சிருக்கேன். அத நான் வந்து எடுத்து கொடுத்து விட்டு விடலாம்.. அவங்க திருப்பதி போறனால நான் இப்ப நம்ம வீட்டுக்கு வந்துட்டு அடுத்த வாரம் சித்தி வீட்டுக்கு வந்துக்கிறேன்” என்றாள்
“நான் வேணா உண்டியல் பணத்தை எங்க இருக்குன்னு பார்த்து கொண்டு வந்து தருகிறேன். நீ வர வேண்டாம்” என்றான் அவசரமாக ராம்குமார் .
“இல்லைங்க கண்டிப்பா நான் நான் வீட்டுக்கு இன்னைக்கு வந்தே ஆகணும். சரி சுந்தரம் அண்ணா வேண்டாம். சித்தியோட கார் டிரைவரை வரச் சொல்லி நான் வந்துட்றேன். எப்படியும் இன்னைக்கு அங்க இருப்பேன்” என்றபடி போனை வைத்தாள் மகா .
வெளிப்படையாக மகா ஆயிரம் காரணம் சொன்னாலும், மனதுக்குள் வாரக் கடைசியில் ராம் வீட்டில் இருக்கும்போது அவனை விட்டுவிட்டு தான் இங்கே இருக்கிறோமே என்ற எண்ணமும், அவனுடைய அன்பும் அருகாமையும் அவளுக்கு அப்போது தேவைப்பட வீட்டிற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.
ஆனால் ராம்க்கோ, அவள் பேசியது வார்த்தை… ஆனால் வீசியது அணுகுண்டு. அடப்பாவி இந்த நேரத்துல வர்றேன்னு சொல்றாளே. மலைவதான் ராம்குமார் .
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings