in

‘ஜனவரி  2021’ போட்டி முடிவுகள் 

வணக்கம்,

ஜனவரி 2021ல் இரு போட்டிகள் அறிவித்து இருந்தோம். ஒன்று “சிறந்த பதிவு போட்டி”, அடுத்து “புத்தக வாசிப்புப் போட்டி”. இரண்டிலும் வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் 

ஜனவரி முடிவுகளை அறிவிக்கும் முன், கடந்த மாத போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிசுகளை பார்ப்போம் 

2020ல் “சஹானா”வில் அதிக பதிவுகள் எழுதிய கீதா சாம்பசிவம் அவர்களுக்கான பரிசு 👇

2020ல் “சஹானா”வில் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவை எழுதிய ராணி பாலகிருஷ்ணன் அவர்களுக்கான பரிசு 👇  

டிசம்பர் 2020 சிறந்த பதிவு போட்டியில் வென்ற சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கான பரிசு 👇

   

மூவருக்கும் சான்றிதழ்கள் அனுப்ப இன்னும் சமயம் அமையவில்லை, விரைவில் அனுப்பப்படும் 

2021 ஜனவரி – சிறந்த பதிவு போட்டி முடிவுகள் 

பிரசுரிக்கப்பட்ட அனைத்தும் சிறந்த படைப்புகளே, ஆனால் பரிசு ஒருவருக்கு தானே கொடுக்க இயலும்

“சஹானா”வில் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளில் இருந்து, ஆகச் சிறந்த படைப்புகளை Short List செய்து, அவற்றில் அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்ட படைப்பை பரிசுக்குரியதாய் அறிவிக்கிறோம் 

அந்த வகையில், ஜனவரி 2021க்கான வெற்றியாளர் 👇 

ஜனவரி 2021 வெற்றியாளர்
கரோலின் மேரி
“தனிமை இனிமையா” (சிறுகதை)

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற கரோலின் மேரிக்கு சிறப்பான வாழ்த்துக்கள். பரிசும் சான்றிதழும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்

2021 ஜனவரி – “சஹானா” புத்தக வாசிப்புப் போட்டி முடிவுகள்  

ஜனவரி 2021 “புத்தக வாசிப்புப் போட்டி”யின் முடிவை, சென்ற வாரத்தில் நம் “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்” Facebook குழுமத்தில் அறிவித்து இருந்தோம், இங்கும் பகிர்வதில் மகிழ்ச்சி. பரிசும் சான்றிதழும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் 

பரிசு பெறுபவர்கள்
1. அதிக விமர்சனம் – தேவேந்திரன் ராமய்யன் 
2. சிறந்த விமர்சனம் – புவனா சந்திரசேகரன் & அரவிந்த் ராஜேந்திரன்
3. அதிக விமர்சனம் பெற்ற புத்தகத்தை எழுதியவர்பாரதிப்பிரியன் 

பிப்ரவரி 2021 ‘சிறந்த பதிவு போட்டி’ அப்டேட்

ஜனவரி மாதம் போலவே, இந்த மாதமும் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் கிடைக்கப் பெற்றோம். அனைவரும் உங்கள் படைப்புகளை “சஹானா” இதழின் போட்டிக்கு அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி 

மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பப்படும் வரிசையில் பதிவிடுவதால், பின்னர் அனுப்பப்பட்ட சில நல்ல ஆக்கங்களை இந்த மாதமும் பதிவிட இயலாத நிலை 

அதில், நிராகரிக்க இயலாத நல்ல பதிவுகள், அடுத்த மாத (மார்ச் 2021) போட்டிக்கு சேர்த்துக் கொள்ளப்படும், நன்றி 

எனது புத்தகங்கள்  

Amazonல் பிரசுரிக்கப்பட்டுள்ள என் நூல்கள் சிலதும், “சஹானா” இதழின் மாத தொகுப்புகளின் இணைப்புகளும் இங்கு பகிர்ந்துள்ளேன்👇, விருப்பமுள்ளவர்கள் பெற்று வாசிக்கலாம். நன்றி 

#ad

           

        

        

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விட்டில் பூச்சிகள்…! (சிறுகதை) எழுதியவர் : நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு (பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு)                               

    ஒளியாக நின்றாய் (சிறுகதை) – எழுதியவர் : Hilda Mary – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு