in

‘வாழ்த்த வாருங்கள்!’ (சுதந்திரத் திருநாளுக்காக) – ✍ வளர்கவி

‘வாழ்த்த வாருங்கள்!’

அன்னை பாரத திருநாடு

அடிமை விலங்கை நீக்கியநாள்

தன்னை உலகில் தலைநிமிர்த்தி

தகுதிகள் சேர்த்த நன்னாளாம்!

 

சின்னஞ் சிறிய சிறுவர்களின்

சிந்தை மகிழ்ந்து ஒன்றாக

வண்ணச் சீருடை அணிந்தபடி

வலம்வரும் அழகுத் திருநாளாம்!

 

தேசக் கொடியைப் பறக்கவிட்டு

தேசத் தலைவர்கள் புகழ்நினைத்து

நேசம்  மிக்க தலைவர்களை

நினைந்து துதிக்கும் ஓர்நாளாம்!

 

உண்ண இனிப்புகள் கொடுத்திடுவோம்

ஒன்றாய் கீதம் இசைத்திடுவோம்

எண்ணம் சொல்செயல் யாவிலுமே

ஒருமைப் பாட்டை வளர்த்திடுவோம்!

 

பாரத நாடு நம்நாடு!

பாரினில் இதற்கு ஈடேது?

வேரென  இதனைக் காப்பதென

வீர முழக்கம் செய்திடுவோம்!

 

வாழ்க நமது நாடென்று

வணங்கித் துதித்து தேசத்தை

வையம் தன்னில் உயர்நாட்டை

வாழ்த்த வாருங்கள் பிள்ளைகளே!

#ad

      

        

#ad

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகநூலில் முகம் தொலைத்து… (கவிதை) – ✍முகில் சிவராமன்

    என் உயிர் ஷைலு (சிறுகதை) – ✍சுஸ்ரீ