in ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 13) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2     அத்தியாயம் 3     அத்தியாயம் 4

அத்தியாயம் 5    அத்தியாயம் 6     அத்தியாயம் 7     அத்தியாயம் 8

அத்தியாயம் 9   அத்தியாயம் 10    அத்தியாயம் 11    அத்தியாயம் 12

 அவனைக் கண்டதும் தாய் இறந்த சோகம் கூட ஒரு கணம் மறந்து போய் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.  ஆனால், அடுத்த கணமே மீண்டும் சோகத்திற்குள் புதைந்து போனது.

அவனை நெருங்கியதும், “இன்னிக்கு கடை லீவு” என்று சொல்லியவாறே தன் கையிலிருந்த சட்டையை அவனிடம் நீட்டினாள் சரஸ்வதி.

“ஓ… கடை லீவா?…” என்றான் அவன் சாத்தியிருந்த கதவைப் பார்த்தபடி.

“இருந்தாலும் நீங்க உங்க பிறந்த நாளைக் கொண்டாடணும் என்பதற்காக… நானே நேரில் கொண்டு வந்தேன்” என்று கரகரத்த குரலில் சரஸ்வதி சொல்ல,

“ஏன் இன்னிக்கு கடை லீவு?…  அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா?…” அவன் கேட்டான்.

“இல்லை….அம்மா…”என்று மேற் கொண்டு சொல்ல முடியாமல் சரஸ்வதி கண்ணீர் சிந்த,

“என்னங்க?… அம்மாவுக்கு என்ன?” அவன் சன்னக் குரலில் கேட்க,

“அம்மா… அம்மா… இறந்திட்டாங்க” சொல்லி விட்டு அவள் “ஓ”வென்று அழுதாள்.

ஆடிப் போனான் அவன்.  “என்னங்க சொல்றீங்க?… அம்மா இறந்திட்டாங்களா?”

“ஆமாம்… இன்னிக்கு காலைல”

சில நிமிட அமைதிக்குப் பின், “அப்புறம் நீங்க எப்படி இங்கே?”

“இன்னிக்கு உங்க பிறந்த நாளைக் கொண்டாட நீங்க ஆசை ஆசையாய் சட்டை தைக்கக் குடுத்தீங்க!… அப்பாவும் மற்ற வேலைகளை ஒதுக்கி வெச்சிட்டு உங்க சட்டையைத் தைச்சுக் கொண்டு வந்தார்!… நானும் ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிச்சு… பட்டன் காஜாவெல்லாம் வைத்தேன்!… எங்க அம்மாவோட சாவு உங்க சந்தோஷத்தைக் கெடுத்து விடக் கூடாது!ன்னுதான் நான் எடுத்திட்டு வந்தேன்” என்றாள்.

 “ப்ச்… அதுக்காக அங்க அம்மா இறந்து கிடக்கும் போது… நீங்க இப்படி வெளியில் வரலாமா?”

 “வரக் கூடாதுதான்… ஆனா நீங்க இங்க வந்து கடை பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து ஏமாந்து போயிடக் கூடாதல்லவா?”

 அவள் முகத்தையே உற்று நோக்கியவன், “என் மேல் உங்களுக்கு அத்தனை அன்பா?” கேட்டான்.

 “இல்லை…”

 “பின்னே?”

 “கா….த….ல்” சொல்லி விட்டு வெட்கம் தாளாமல் அங்கிருந்து ஓடினாள்.

 அவள் அங்கு வந்ததையும் அவனைச் சந்தித்ததையும், சட்டையை அவனிடம் கொடுத்ததையும், கடைசியில் எதையோ சொல்லி விட்டு அவள் வெட்கத்தோடு ஓடுவதையும், சற்று தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் சாவிற்கு வந்திருந்த சரஸ்வதியின் மாமன் மகன் வேலு..

“ஹும்.. இந்தப் பொண்ணுக்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தா… அங்க அம்மா செத்துக் கிடக்கும் போது இங்க வந்து இவனோட பேசிக்கிட்டு நிற்பாள்!… படிக்கற பொண்ணுக்கு இந்த வயசுல காதலா?… ம்ஹும்… இதை இப்படியே விட்டு விடக் கூடாது”

சரஸ்வதி வேகமாய் வந்து அதே புழற்கடை வழியாக வீட்டிற்கு புகுந்து மற்ற பெண்களோடு தன்னை இணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளைத் தொடர்ந்து வந்த மாமன் மகன் வேலு, சரஸ்வதியிம் தந்தை சோமண்ணாவிடம் சென்று தான் கண்ட காட்சியைச் சொல்ல, சோமண்ணா அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

“டேய் வேலு… இது கோபப்படற விஷயமில்லைப்பா… சந்தோஷப்பட வேண்டிய விஷயம்!…”

“என்ன மாமா சொல்றீங்க?… இது சந்தோஷப்படற விஷயமா?…” வேலு எரிச்சலுடன் கேட்டான்.

“ஆமாம்ப்பா… அந்தப் பையன் இன்னிக்குப் பிறந்த நாளைக் கொண்டாட சட்டை கொடுத்திருந்தான்… நம்ம வீட்டுல நடந்த சாவு ஒரு கஸ்டமரைப் பாதிக்கக் கூடாதுன்னு அவ சட்டையை எடுத்திட்டுப் போய்க் குடுத்திருக்கா!… வாடிக்கையாளரின் உணர்வுகளை மதிக்கும் அவளோட மனசை நாம பாராட்டணும்யா”

“ம்ஹும்… எனக்கென்னமோ இது சரியாப் படலை!… எதுக்கும் அவ மேலே ஒரு கண்ணை வைங்க மாமா!… அவன் நான் கட்டிக்கப் போற பொண்ணு” என்றான் வேலு.

“எலேய்!… போய் சவத்தை எடுக்கற ஏற்பாடுகளைப் பார்ப்பியா… இங்க வந்து கண்டதையும் பேசிட்டு நிற்கறே… போ… போ” அவனை பலவந்தமாய் அங்கிருந்து துரத்தினார் சோமண்ணா.

****

தன்னுடைய கடந்த கால வாழ்க்கைக் கதையை ஆறுமுகத்திடம் சொல்லிக் கொண்டிருந்த சரஸ்வதி, சட்டென்று அதை நிறுத்தினாள். அப்போது அவளை நோக்கி ஓடி வந்த அவள் மகன், ஆறுமுகத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட,

 “ம்ம்ம்… சரஸ்வதி… நான் ஒண்ணு கேட்பேன்… நீ தப்பா நினைக்கக் கூடாது” மெல்லக் கேட்டார் ஆறுமுகம்.

 “தெரியும் சார்… நீங்க என்ன கேட்கப் போறீங்க?ன்னு எனக்குத் தெரியும்!… இந்த ராஜாவோட அப்பா யார்?ன்னுதானே கேட்கப் போறீங்க?”

ஆறுமுகம் புன்னகையோடு தலையை மேலும், கீழும் ஆட்ட, “அவனேதான் அந்த கோபியேதான்” என்றாள் முகத்தி டன் கணக்கில் வெறுப்பை ஏந்திக் கொண்டு.

 “அப்படின்னா… உனக்கும் அவனுக்கு கல்யாணம் நடந்திருக்கு… அப்படித்தானே?”

 “ம்… நடந்திச்சு!… ஆனா அது கல்யாணமல்ல சார்!… என்னைப் பொறுத்த வரையில் அது ஒரு கருமாதி!… என்னைப் பெத்த தாயைப் பறி கொடுத்து விட்டு தந்தையோடு வாழ்ந்திட்டிருந்த நான்… காதல் மயக்கத்தில்… ஒருநாள் அவரையும் ஏமாத்தி விட்டு அந்த கோபியோடு ஓடிப் போனேன் சார்!… அவனும் என்னைக் கோயில்ல வெச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு… வயித்துல ஒரு குழந்தையைத் தந்திட்டு… என் கிட்டேயிருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கிட்டு எங்கியோ எஸ்கேப் ஆயிட்டான்!… ‘அவன் வருவான்,… வருவான்”ன்னு வயித்துப்புள்ளையோட காத்துக் கிடந்தேன் சார்!….”

“அப்புறம் என்னாச்சும்மா… அவன் வந்தானா?”

உதட்டைப் பிதுக்கினாள் சரஸ்வதி.  “ஒரு கட்டத்துல நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் நடந்ததையெல்லாம் விவரமா சொல்லி… அவனைக் கண்டுபிடிச்சுத் தரச் சொல்லிக் கெஞ்சினேன்!… அப்பத்தான் அவனோட சுயரூபம் என்ன?ன்னு எனக்குத் தெரிய வந்தது”

“என்ன?… என்ன அவனோட சுயரூபம்?” பதட்டமாய்க் கேட்டார் ஆறுமுகம்.

“அவன்… அவன்… செம்மலை என்கிற ஒரு பெரிய கட்டப் பஞ்சாயத்து தாதாவோட அடியாளாம்!… அந்த தாதாவுக்காக ஒருத்தனைக் கொலை பண்ணப் போன இடத்துல மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டானாம்” சொல்லி விட்டு அழுதாள்.

 “அடப் பாவமே?”

 “அப்புறம்… அதே போலீஸ் உதவியோட ஒரு மகளிர் காப்பகத்துல போய் இவனைப் பெத்தெடுத்தேன்!… அவங்க மூலமாய்த்தான் எனக்கு இந்த மாற்றுத் திறனாளிகள் இல்லத்துல… சமையல்கட்டுல வேலை கிடைச்சுது!… நான் என்னைப் பெத்தவங்களுக்கு செஞ துரோகத்துக்கு தண்டனையா அந்த ஆண்டவன் என் மகனுக்கு இப்படியொரு அருவருப்பான முகத்தையும்… பிளவு பட்டுப் போன உதடுகளையும் கொடுத்திட்டான்”

அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் ஆறுமுகம் அமைதி காக்க, “என் வாழ்க்கைல எவனை நான் மறுபடியும் சந்திக்கவே கூடாது!ன்னு நெனச்சேனோ… அவனை மறுபடி பார்த்ததுல எனக்குள் பெரிய அச்சம் வந்திடுச்சு!… அவன் என்னைப் பார்த்திட்டா… மறுபடியும் எனக்கு ஏதாச்சும் கெடுதல் பண்ணுவானோ?ன்னு பயமாயிருக்கு சார்” மகனைக் கட்டிக் கொண்டு பெருங் குரலில் அழுதாள் சரஸ்வதி.

 “இல்ல சரஸ்வதி… அவனால உனக்கு எந்தக் கெடுதலும் வராம நான் பார்த்துக்கறேன்… நீ தைரியமா இரு”

“நீங்க நெனைக்கற மாதிரி அவன் சாதாரண ஆள் இல்லை சார்!… அந்த எமனையே பயமுறுத்திப் பார்க்கற மாதிரி ஆள் சார் அவன்”

“இங்க பாரு சரஸ்வதி… இங்க நாங்க இத்தனை பேர் இருக்கோம்!… எங்களையெல்லாம் மீறி அவன் உன்னை என்ன பண்ணிடுவான்?… தைரியமாய்ப் போ… நான் இருக்கேன்”

ஆறுமுகம் கொடுத்த தைரிய ஊக்கம் அவளைத் தற்காலிகமாய் அமைதிப் படுத்தியதே தவிர அவளால் அச்சத்திலிருந்து முழுமையாய் விடுபட முடியவில்லை.

அதே நேரம், அந்த கோபியும், அவன் ஆட்களும் ரயில்வே தண்டவாளத்தருகே வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த குடிசை வாழ் மக்களை மீட்டு வந்து இல்லத்தில் சேர்த்தனர்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 33) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 34) – தி.வள்ளி, திருநெல்வேலி