in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 20) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15  பகுதி 16   பகுதி 17   பகுதி 18   பகுதி 19

மறுநாள் காலை ராம் கம்பெனிக்கு கிளம்பினான். கம்பெனிக்கு போன சற்று நேரத்தில் வந்தனா அம்மாவிடமிருந்து அழைப்பு வர, ஈ.சி.ஆர் பங்களாவை நோக்கி கிளம்பினான். அன்று மாலை பிளைட்டில் வந்தனாவும், சந்தியாவும் கிளம்புகிறார்கள்.

######

அந்த கேரளா மாந்திரீகன் தயங்கித், தயங்கி ஈ.சி.ஆர். பங்களாவுக்குள் நுழைய செக்யூரிட்டி தடுத்தார் …

“யோவ் !யாருய்யா நீ? நீ பாட்டுக்கு உள்ள நுழையிற …உன்ன பாத்தாலே சரியில்லையே ..உனக்கு இங்கே என்ன வேலை போய்யா வெளியில” என்றார் .

“பெங்களூர் அம்மா தான் வரச் சொன்னாங்க நீங்க வேணா போன் போட்டு கேளுங்க அவங்க வரச்சொல்லி தான் நான் வந்திருக்கேன் “

அதற்குள் அவனை பார்த்துவிட்ட சந்தியா “செக்யூரிட்டி அவரை உள்ள விடுய்யா” என்றாள்.

உள்ளே வந்த மாந்திரீகன், பெரிய கும்பிடு போட்டு “அம்மா… கோமளவல்லி அம்மா… நல்லா இருக்கீகளா? உங்ககிட்டயிருந்து போன் வந்ததும் போட்டது போட்டபடி ஓடியாறேன்” என்றான் .

“யோவ் கோமளவல்லின்னு பழைய பெயரை சொல்லி கூப்பிடாதே… எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. இப்ப என் பேரு சந்தியா… சினிமா உலகத்தில் இருந்துட்டு கோமளவல்லின்னு பேரு நல்லா இருக்குமா? அது சரி நான் கேட்ட ஐட்டத்தை கொண்டு வந்திருக்கியா?”

 “உங்க கிட்டயிருந்து போன் வந்ததும் , அதை எடுத்துகிட்டு ஓடியாறேன் “

அதற்குள் ராம்குமார் கார் உள்ளே நுழைய… “சரி சரி கொஞ்ச நேரம் பேசாம இரு.. அந்த ஐயா வந்ததும் நான் பேசுறேன் .அதுக்கப்புறம் நீ பேசினா போதும் “என்று அவன் வாயை அடைத்தாள் சந்தியா.

ராம்குமார் பங்களாவை அடைந்தபோது அவனை வரவேற்ற சந்தியா…” தம்பி வாங்க உங்களை எதிர்பார்த்து தான் காத்துகிட்டிருக்கேன் ! “

இவர் யாரு என்று பார்வையில் ராம்குமார் கேட்க.. அவனை சந்தியா அறிமுகப்படுத்தினாள்.

” தம்பி இவர்தான் நான் சொன்ன கேரள மாந்திரீகர்…மருந்து தயாரிக்கிறதுல்ல ரொம்ப கெட்டிக்காரர்… நமக்கு வேண்டப்பட்டவர் தான்.. நிறைய தடவ எனக்கு உதவி பண்ணி இருக்காரு…இக்கட்டான நேரத்தில் இவருடைய உதவி நமக்கு பெரிய பலம். நான் உங்ககிட்ட நேத்து பேசினதுமே இவருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி மருந்து எடுத்துட்டு வரச் சொன்னேன். காலையில கரெக்ட்டா வந்துட்டாரு.”

“மருந்த உங்ககிட்ட ஒப்படைச்சா தான், இன்னைக்கு மத்தியானம் பிளைட்டில் போலாம், இல்லைனா நாளைக்கு தான் போகணும்னு பாப்பாகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன்.”

“வந்தனா எங்கம்மா? ஆள காணும்” என்றான் ராம்குமார் ..

“பாப்பா குளிச்சிகிட்டிக்குது. அதுக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம். நம்ம காரியத்தை முடிச்ச பொறவு அவளுக்கு தெரிஞ்சாப் போதும்.”

“ஐயா …சார்கிட்ட மருந்தை கொடுங்க” என்றாள் சந்தியா.

“சாருக்குத் தான் மருந்து தேவைப்படுதா?.இவருக்குத்தான் கொண்டுவரச் சொன்னீங்களா?”

” இவருக்கு இல்லைய்யா.. வேற ஒருத்தருக்கு ..அந்த கதையெல்லாம் உங்களுக்கு எதுக்கு ?உங்களுக்கு தேவை பணம். நீங்க மருந்து கொடுத்தா அடுத்த நிமிஷம் உங்க அக்கவுண்ட்ல அஞ்சு லட்ச ரூபா போட்டுடுவாரு சார்.”

பிளாஸ்டிக் டப்பாவில் வெள்ளைப் பொடியாய் இருந்த மருந்தை மாந்திரீகர் ராம்குமார் கையில் கொடுத்தான்.

“ஐயா! இது ரொம்ப சக்தி வாய்ந்த மருந்து. கையால தொடாதீங்க .தண்ணியோ.. சூரிய வெளிச்சமோ.. படக்கூடாது. ஈரமில்லாத மர டீஸ்பூன் போட்டு எடுங்கோ ஒரு கால் டீஸ்பூன் எடுத்து பாலிலேயோ. ஜூஸிலேயோ போட்டு கலக்கி குடுங்க. எந்த வேளை வேணாலும் குடுங்க. எந்த நேரம் வேணாலும் குடுங்க ஆனா கண்டிப்பா ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்துடனும். “

“பத்து நாள் விடாமல் தொடர்ந்து கொடுத்தா…இந்த மருந்து நல்ல வீரீயமானது… உடனே பலன் கிடைக்கும். முதல்ல நரம்புத்தளர்ச்சி வரும்.. கை கால்கள் தடுமாறும்…பத்தாம் நாள் ஆள சாச்சிடும்… உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராது… ஆனா படுக்கையில தள்ளிடும்.. அதனால கொடுக்கும் முன்ன நல்லா யோசிச்சுக்கோங்க… மருந்து கொடுத்தாச்சுன்னா அதுக்கப்புறம் கை கால் இழுத்துக்கும்…பேச்சு போயிடும்.. வேற எந்த மருத்துவ சிகிச்சையும் பலன் கொடுக்காது .அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது. அதான் கையால தொடாதீங்கன்னு சொல்றேன்”

“ஒரு சந்தேகம் வயிற்றில குழந்தை இருந்துச்சுன்னா”

“பெரிய உசுரே இந்த மருந்துக்கு தாக்குப்பிடிக்க முடியாது அப்படின்னு போது சின்ன உசுரு எப்படித் தாங்குமய்யா,..”

“இந்த மருந்து சாப்பிட்டும் எதுவும் ஆகாம இருக்காதே”

“100% பலன் இருக்கும் .நான் பல பேருக்கு கொடுத்திருக்கேன். பத்தாம் நாள் அல்லது 12ஆம் நாள் முழுக்க கை கால்கள் விழுந்துடும் ..”ராம்குமார் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்தான் .

“சரி சந்தியாம்மா நான் உத்தரவு வாங்கிக்கிறேன். எனக்கு சேர வேண்டிய பணத்தை அக்கவுண்ட்ல போட்டுடுங்க.”

“இருங்க .. நான் உங்களை காரில கொண்டு போய் பஸ் ஸ்டாண்டில் விடச் சொல்றேன். நீங்க இங்க வந்துட்டுப் போனது யாருக்கும் தெரியக்கூடாது. இந்த நாலு சுவத்துக்குள்ள நாம பேசினது இருக்கணும். இத பத்தி நீங்க யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது. நீங்க கேட்ட தொகையை ஒரு பைசா குறைக்காமல் கொடுத்திருக்கோம். ஞாபகம் வச்சுக்கோங்க இது பெரிய இடத்து விஷயம் வெளியில விஷயம் கசிஞ்சா மாட்ட போறது நாங்க மட்டும் இல்ல நீங்களும் தான்”.

“என்னம்மா… நீங்க சொல்லித்தான் தெரியனுமா? இதெல்லாம் தொழில் தர்மம். உங்களுக்கு கொடுத்தாச்சுன்னு சொன்னால் அடுத்த கணமே மறந்திடுவேன். நீங்களா என்கிட்ட பேசினாயொழிய நான் திரும்ப பேச மாட்டேன். எப்போதுமே ஒரு கஸ்டமருக்கு ஒரு சிம் கார்டு தான். அவங்க விஷயம் முடிஞ்சதும் அந்த சிம்கார்டை தூக்கி போட்டுடுவேன்.”

“நீர் கெட்டிக்காரர்தான்ய்யா ஆனா எங்ககிட்ட அந்த கெட்டிக்காரத்தனத்தை காண்பிக்க வேண்டாம்” என்றாள் சிரித்தபடியே…”ஐயாகிட்ட பாப்பா அக்கவுண்ட் நம்பரை கொடுத்துடும். ஐயா உடனே உங்க அக்கவுண்ட்ல பணத்தை போட்டுருவாங்க” என்றாள் சந்தியா .

“அதை நான் கேட்கவே இல்லையேம்மா.. நீங்க தான் எப்போதுமே கரெக்டா சொன்னபடி பணம் கொடுத்திடுவீங்களே. நான் எதுக்கு உங்ககிட்ட பணத்தைப் பத்தி பேசப் போறேன்” என்றான் பெருந்தன்மையாக.

சந்தியா வெளியே வந்து கார் டிரைவர் முருகனைக் கூப்பிட்டு “முருகா… இவரைக் கொண்டு போய் பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வா”

முருகன் கார் டிரைவர் மட்டுமல்லாமல் அந்த பங்களாவில் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா. ராம்குமார் அவர்கள் உதவிக்காக பிரத்யோகமாக ஏற்பாடு பண்ணி இருந்த ஒரு ஆள். முருகனை ஏற்பாடு பண்ணியது போல அவர்களுக்கென்று ஒரு காரையும் நிறுத்தி வைத்திருந்தான் ராம்குமார்.

மாந்திரீகன் கிளம்ப.. சந்தியா உள்ளே வந்தாள். ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்த ராம்குமாரைப் பார்த்தாள். பையன் ரொம்ப தான் ஆடிப்போய் இருக்கிறான். என்ன இருந்தாலும் பொண்டாட்டி பாசம் கொஞ்சம் இருக்கத்தானே செய்யும். வரட்டும் இது ஒர்க்கவுட் ஆச்சுன்னா இவன்… இல்லாவிட்டால் வேற யாராவது ..இந்த வந்தனா தான் இவனை பிடிச்சு தொங்கிகிட்டிருக்காள்.

உள்ளே வந்தவள் ராம் குமாரைப் பார்த்து ,”தம்பி கொஞ்சம் காபி சூடா சாப்பிடுங்க. மனசை போட்டு குழப்பிக்காதீங்க. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வாழ்க்கையில எவ்வளவோ செய்ய வேண்டியது இருக்குது .கால்ல ஒரு முள்ளு குத்துச்சுன்னா முள்ள எடுக்காம அதோடயேவா நடக்கிறோம். அது மாதிரிதான் இதுவும். வழியில இடர்ற கல்லை தூக்கிப் போட்டுட்டு நடக்கனும். நாம நல்லா இருப்பதற்காக எந்த பாவத்தை வேணாலும் செய்யலாம்”

“அவளை என்ன அப்படியேவா விட்டுடப் போகிறோம்.. கை கால்கள் இழுத்துக்கிச்சுன்னா… வந்த பங்களாவிலேயே ஒரு நல்ல ஆளப்போட்டு ஆயுசு பூரா கவனிச்சுக்கப் போறோம். அதனால நீங்க அத நினைச்சு குற்ற உணர்ச்சியில எதுவும் தவிக்க வேண்டாம். நீங்களும், வந்தனாவும் சந்தோஷமாக நிம்மதியாக வாழனும்…அவளுடைய தொந்தரவில்லாமல்…” சாத்தான் வேதம் ஓதியது ..

“5 லட்சம் கொடுத்து, இந்த மருந்த வாங்கியிருக்கோம். பத்திரம்” என்று சொல்லி அவன் கையில் சந்தியா கொடுத்தாள். “எப்படியாவது இத மகாவுக்கு கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு”

கையில் இருந்த சின்ன பாட்டிலில் இருந்த வெள்ளை பொடி அவனை பார்த்து சிரித்தது. இந்த பாட்டிலின் சிகப்பு மூடி அவனுக்குள் ஒரு அபாய எச்சரிக்கை மணியை அடித்தது ..ஆயுள் பூராவும் மகாவை முடக்கிப் போடும் மருந்து மகாவின் நிலைமை.. ..ஏனோ ராம்குமார் கை நடுங்கியது ..

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வயது கடந்த காதல் (சிறுகதை) – வித்யாஸ்ரீ. S

    பதின்மம் – அத்தியாயம் 5 – வயதுக்குத் தகாதது – ஜெ.சா