2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12
மகா வருகிறேன் என்று சொன்னதும் ராம்க்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவள் இந்த நேரத்தில் சித்தி வீட்டிலிருந்து வருவாள் என்று யார் எதிர்பார்த்தார்கள்.
இவள் இப்படி திடீரென வருவாள் என்று தெரிந்திருந்தால் வந்தனாவை இந்த வீட்டிற்கு கூப்பிட்டிருக்க வேண்டாம். வந்தனாவுடன் இந்த வீட்டில் ஜாலியாக கழிப்போம் என்று நினைத்ததற்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வந்துவிட்டது.
என்ன செய்வது இதையும் சமாளிக்க வேண்டியதுதான். எப்படியும் அவள் வந்து சேர ஓரிரு மணிநேரம் ஆகும்.. அதற்குள் வந்தனாவை எப்படியாவது கிளப்பி விட வேண்டும்… எப்படி அவளை வெளியேற்றுவது.? மகா வருகிறாள் என்று சொன்னால் மூட் அவுட் ஆகி விடுவாள்.
இவள் இங்கே இருக்கும் போது மகா வந்தால், மகாவுக்கு கண்டிப்பாக சந்தேகம் ஏற்படும். என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்து விடுவாள். ஏதாவது அவளாக கண்டுபிடித்து விட்டால் குடைந்தெடுத்து விடுவாள் .
வந்தனாவும் அவளைப் பார்த்து டென்ஷனாகி கத்த ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான், இன்றுடன் கதை முடிந்தது. ஒரு நாளாவது வந்தனாவுடன் நிம்மதியாக இருக்க இந்த மகா விடுகிறாளா… இப்போது என்ன அவசரம்… இத்தனை நாளும் சித்தி வீட்டில் இருந்தவள் திடீரென்று இங்கு வருவதற்கு என்ன அவசியம். எல்லாம் என் ராசி… என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டான். எங்கே போனாலும் நிம்மதியாக இருக்க முடியாது. மனதிற்குள் எரிச்சல் எரிச்சலாக வந்தது.
சாப்பிட்டு விட்டு ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த வந்தனாவுக்கு கசாட்டா ஐஸ்கிரீமை ஒரு பெரிய பௌலில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
“யாரு ராம் போன்ல?” என்று வந்தனா கேட்க
“ஒன்னும் இல்லம்மா, கம்பெனியிலிருந்து கூப்பிட்டாங்க”
‘மகா வருகிறாள் என்று தெரிந்தால் இவள் கிளம்ப மாட்டாள். இவளும் மகவும் நேரடியாக சந்தித்துக் கொண்டால் வேறு வினையே வேண்டாம். வந்தனா பொறுமையிழந்து விடுவாள்’. மண்டை வெடித்து விடும் போல இருந்தது ராம்க்கு.
அவசரமாக மேஜை மேலிருந்த அசைவ உணவு வகைகளை எடுத்து ஒரு கவருக்குள் போட்டு குப்பை கூடையில் போட போனவன்… குப்பையில் போட்டால் அந்த வாடையில் மகா கண்டுபிடித்து விடுவாள் என்று பின்பக்கம் போய் அங்கிருந்த பெரிய உரக்கிடங்கில் எறிந்துவிட்டு வந்தான். பிறகு அவசரமாக மேஜை துடைத்து சுத்தம் பண்ணி விட்டு வந்தனாவிடம் வந்தான்.
“ஏன் ஹனி வீட்டிலேயே அடைந்து கிடப்பதற்கு ஒரு லாங் டிரைவ் போயிட்டு வருவோமா?” என்றான்.
வந்தனா அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். இன்றைக்கு நாள் முழுக்க என்னுடன் இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு இப்போது திடீரென்று வெளியே கூப்பிடுகிறான்.
“எதுக்கு வெளியில போயிட்டு ராம்! எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு, இங்கேயே டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு நான் சாயங்காலத்துக்கு மேல வீட்டுக்கு போறேனே” என்றாள்.
“உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கு… எனக்கு இந்த வீடு ஜெயில் மாதிரியே இருக்கு. கொஞ்ச நேரம் வெளியில போனா நல்லா இருக்கும்னு தோணுது. ஏதாவது ஒரு தீம் பார்க் போயிட்டு கொஞ்ச நேரம் வாட்டர் கேம்ஸ் விளையாடலாம்.”
“என்ன சொல்றீங்க ராம்! என்னை இங்கே யாராவது கண்டுபிடிச்சிட்டா அவ்வளவுதான்… உடனே சூழ்ந்துக்குவாங்க. நான்தான் தமிழ் படத்திலேயும் நடிக்கிறேனே…” என்றாள்.
“சரி அப்ப நம்ம ஈ.சி.ஆர். பங்களாவிலேயே ஸ்விம்மிங் பூல்ல ரெண்டு பேரும் ஒரு மணி நேரம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு அப்படியே சாப்பிட எங்கேயாவது வெளியில போவோம். சிட்டி அவுட்டர்ல ஒரு ஹோட்டல் இருக்கு. ரொம்ப நல்லா இருக்கும். யாரும் வரமாட்டாங்க… நிம்மதியா சாப்பிடலாம். அம்மாவையும் கூட்டிட்டு போகலாம். “
அரைமனதாக சம்மதித்தாள் வந்தனா.
“கொஞ்ச நேரம் டிவி பார்த்துகிட்டிரு வந்தனா… ஒரு போன் பேசிட்டு வர்றேன்” என்று வெளியில் வந்தான் ராம்குமார். திரும்ப ஒரு தடவையும் மகாவிடம் பேசிப் பார்ப்போம், ஒருவேளை நாளை வருவதற்கு சம்மதித்தால் இன்னைக்கு நிம்மதியா இருக்கலாம் என்ற எண்ணினான். ஆனால் வீட்டுக்கு வரும் முடிவில் உறுதியாக இருந்தாள் மகா.
“ஏங்க 5 கிலோ மீட்டர் தான இருக்கு, இன்னைக்கு வந்துட்டு ரெண்டு நாள் கழிச்சு திரும்ப போனா போச்சு” என்று அவன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
“சரி மகா, அதுக்காக சொல்லல. நான் அவசரமா கிளையண்ட்டோட. வெளியில போறேன், திரும்ப வருவதற்கு நைட்டாயிடும். நீ அதுவரைக்கும் தனியா இருக்கனும். அதுக்குத் தான் சொன்னேன்.”
“நம்ம வீட்டுல நான் தனியா இருக்கறதுக்கு என்னங்க… எத்தனையோ நாள் இருக்கலையா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் பார்த்துக்குறேன்.” என்றாள் பிடிவாதமாக.
“சரி அப்படினா கொஞ்சம் வெயில் தாழ்ந்து மெல்ல வாயேன்.”
“ஏங்க! நான் என்னங்க வெயில்ல நடந்தா வரப்போறேன். ஏசி காரில் வர போறேன்” என்று சிரித்தாள் மகா.
ராம்க்கு அவள் பேச்சு காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தியது போல இருந்தது. எது சொன்னாலும் மறக்காமல் எதிர்ப்பேச்சு பேசுகிறாள் இவளை சமாளிக்கிறது பெரும்பாடு தான் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான்.
மகாவை மாற்ற முடியாது. வந்தனாவை மெல்ல கிளப்பினான். அவளை பேசவிடாமல்.. வீட்டைப் பூட்டிக் கொண்டு காரில் ஏறியவன், அவள் மேற்கொண்டு எதையும் கேட்கும் முன் அவன் வீட்டின் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அந்த நகைக்கடை முன் காரை நிறுத்தினான்.
“வந்தனா ஒரு முத்துமாலை பார்த்து வச்சேன். உனக்கு ரொம்ப அழகா இருக்கும். நீ சென்னைக்கு வந்த ஞாபகமா உனக்கு அந்த முத்துமாலையை வாங்கி கொடுக்கனும்னு நினைக்கிறேன். உனக்கு புடிக்குதான்னு சொல்லு. இல்ல உனக்கு பிடிச்ச ஏதாவது ஒரு நகையை எடுத்துக்கோ” என்று கடைக்குள் கூட்டி வந்தான்.
அவனுடைய அன்பில் கரைந்து போன வந்தனா மற்ற எல்லா விஷயங்களை மறந்து… பார்த்து பார்த்து செய்கிறான் என்ற எண்ணத்தில்… மனதில் இருந்த அதிருப்தி மறைய அவனை நோக்கி புன்னகைத்தாள்.
அதேநேரம் மகாவின் கார் ஈஸ்வர பவனத்தின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings