2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
சற்றுத் தொலைவில் நின்றிருந்த சுந்தரராமன் இவளைப் பார்த்ததும் வேகமாய் வந்தான்.
“வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” வித்யா கேட்க,
“நோ… நோ… ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் இருக்கும்” கேஷுவலாக பதில் சொன்னவன் முகத்தில் சிறிதும் கலக்கமில்லை.
‘என்னது ஆளு ஆப்செட் ஆகி குத்துயிரும், குலையுயுருமாய்… வருவான்னு பார்த்தா… பயல் படு நார்மலா இருக்கானே?… ஒரு வேளை லெட்டர் போய்ச் சேரலையோ?’ மூளைக்குள் யோசனைகள் முட்புதராய்.
“என்ன வித்யா!… வரச் சொல்லிட்டு சும்மா என்னையே பார்த்துட்டு நிக்குறே… உள்ளார போய் உட்கார்ற மாதிரி அபிப்பிராயமே இல்லையா?” சிரித்தபடி கேட்டான் சுந்தர்.
“ம்… போகலாமே?” என்றபடி அவள் முன்னே நடக்க, அவன் பின் தொடர்ந்தான்.
வித்யாவின் மனசுக்குள் ஒரே குழப்பம். ‘எப்படி.. எப்படி..?’
அரைமணி நேரம் அவள் டிரஸ் செலக்ட் பண்ணவும், கால்மணி நேரம் அவன் டிரஸ் செலக்ட் பண்ணவும், செலவு செய்து ஒரு வழியாய் வேலையை முடித்தனர். அதே காம்ப்ளக்ஸில் இருந்த ரெஸ்டாரெண்டிற்குச் சென்று அமர்ந்தனர்.
பிளாக் அண்ட் ஒயிட்டில் படு ஸ்மார்ட்டாக வந்து நின்ற பேரரிடம் தானே ஆர்டர் செய்த வித்யா, “ஏன் உங்க முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு?… என்னடா இவ இவ்வளவு மோசமா டிரஸ் பண்ணிட்டு ஃபேஸ் கூட வாஷ் பண்ணாம வந்திருக்காளே?”ன்னு ஃபீலிங்கா இருக்கா?” வம்புக்காகவே கேட்டாள்.
“நோ… நோ எனக்கு அப்படித் தோணவேயில்லை!…”
“வேற எப்படித் தோணுது?” எதிர்க் கேள்வியை இறக்கினாள் வித்யா.
“இவ்வளவு மட்டமான சுடிதார் போட்டும், சுத்தமா மேக்கப் பண்ணாத போதும், கூட இவ எவ்வளவு அழகா இருக்கா பாருன்னு தான் தோணுது” என்றான்.
ஆடிப் போனாள் வித்யா, ‘ஆஹா… விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டனா இருப்பான் போலிருக்கே’
ஒரு சிறிய அமைதிக்குப் பின், “வித்யா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” தயங்கினான்.
“ம்ம்ம்…. பேசுங்க சுந்தர்” என்றவள் ‘வந்துட்டான் வந்துட்டான்…. சப்ஜெக்ட்க்கு வந்துட்டான்!… படவா அந்த லெட்டரை நம்பிட்டு ஏதாவது சந்தேக கேள்வி மட்டும் கேளு… மவனே உன்னைப் பீஸ் பீஸாக்கி கொத்து பரோட்டா போட்டுடறேன்’ மனதிற்குள். சொல்லிக் கொண்டாள்.
“நேத்து என் பேருக்கு ஒரு லெட்டர் வந்துச்சு!… ஓப்பன் பண்ணி முதல் வரியை பார்த்ததுமே புரிஞ்சிடுச்சு… அது எவனோ ஒரு இடியட் எழுதுன இங்கிதம் இல்லாத லெட்டர்னு!… அவ்வளவுதான் ஒரு வரியைக் கூடப் படிக்காம… கிழிச்சு குப்பைத் தொட்டியில் போட்டுட்டேன்” என்றான்.
”ஓ மை காட்” என்று நெஞ்சில் கை வைத்து, பயந்தவளாய் நடித்தாள் வித்யா.
“நோ வித்யா!… நீ இதுக்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை!… ஒரு அழகான பெண்ணுக்கு திருமணம்ன்னா இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் வரத்தான் செய்யும்!… ஏன்னா அவளுக்கே தெரியாம அவளை எவனாவது ஃபாலோ பண்ணிட்டு கற்பனையில் மிதந்துக்கிட்டு இருப்பான். இப்பக் கல்யாணம்னு தெரிஞ்சதும்… நொந்து போய் இந்த மாதிரி ஏடாகூடமாக ஏதாவது செஞ்சு பார்ப்பான்!… இது ஒரு வகை சைக்காலஜி!” அவன் பேசிக் கொண்டே போக,
அவனையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வித்யா, “இருந்தாலும் நீங்க அந்த லெட்டரை முழுசா படிச்சு முடிச்சிருக்கலாம்!” என்றாள்.
“எதுக்கு?… அதைப் படிச்சா நமக்கு தான் வீண் மனஉளைச்சல்!… எப்படியும் அதுல இருக்க போறது பொய்தான்!னு நமக்கே தெரியும்…. அப்புறம் எதுக்குப் படிக்கணும்?”
மற்றவர்களுடைய அபத்தமான செயலுக்கும் நியாயமான காரணங்களை கற்பித்து அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளும் அவனிடம், பிறரது துன்பத்தில் இன்பம் காணும் அவளது சாடிஸ குணம் அந்த நிமிடத்தில் தோற்றுப் போனது.
ஹாலில் போன் அடித்தது.
“ஏய்… வித்யா அந்த போனைத்தான் கொஞ்சம் எடுக்கறது… எத்தனை நேரமா அடிச்சுக்கிட்டே இருக்கு பாரு?”.
உள் அறையில் இருந்து அப்பா கத்த, சலித்துக் கொண்டே வந்து எடுத்தாள் வித்யா.
“ஹலோ… யார் வித்யாவா?” எதிர்முனையில் பெண் குரல்.
“சொல்லு கோமதி நான்தான்… என்ன விஷயம்?”
“நம்ம ஜெயாவோட பாதர் எக்ஸ்பயர்ட்.”
“அடப்பாவமே… எப்போ?… எப்போ?.”
“இன்னைக்கு மார்னிங்தான்!… நாங்கெல்லாம் போயிட்டு கூட வந்துட்டோம்” என்றாள் கோமதி.
“என்ன போயிட்டு வந்திட்டீங்களா?… ஏண்டி என்னை விட்டுட்டீங்க?” கோபமாய் கேட்டாள் வித்யா.
“ஏய்… உனக்கே மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு… நீ எப்படி கண்டலன்ஸ்க்கு வருவே?… அதான் கூப்பிடலை”
“ஸ்டுப்பிட்!… இதுக்கும் அதுக்கும் என்னடி சம்பந்தம்?.. எவ்வளவு க்ளோஸ் பிரண்ட் ஜெயா… அவளோட ஃபாதர் டெத்துக்கு போகலைன்னா என்ன நினைப்பா?”
“ஒண்ணும் நினைக்க மாட்டா!… அவளுக்கும் தெரியும் நீ வரக்கூடாது உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்குதுன்னு”
“அதெல்லாம் முடியாது நான் போயே தீருவேன்” பிடிவாதமாய் பேசினாள் வித்யா.
“ஐயோ… சொன்னாக் கேக்க மாட்டியே நீ… அப்போ ஒண்ணு செய்!… எதுக்கும் வீட்டுல பெரியவங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போயிடு” என்றாள் கோமதி.
“எதுக்கு?…. எதுக்குடி கேக்கணும்?”.
“ச்சை!… உனக்கு மெசேஜ் சொன்னதே தப்பு!.. என்னமோ பண்ணு போ” எதிர்முனையில் போன் வைக்கப்பட்டது.
“என்ன வித்யா?… யார் இறந்திட்டாங்க?” கேட்டபடியே வந்தாள் அவள் தாய் பத்மாவதி.
“ம்மா… என்னோட ஃப்ரெண்ட் ஜெயா இருக்கால்ல?… அவளோட அப்பா இறந்திட்டாராம்”
“ஜெ…யா…?” பத்மாவதி யோசிக்க,
“அதான்மா… போன மாசம் காலேஜ் ஃபீஸ் கட்ட முடியாம படிப்பையே விட்டுடப் போறேன்னு சொல்லி அழுதவளுக்கு நாம ஃபீஸ் கட்டினோமே?… அந்த ஜெயாதான்”
“அடடே… என்னாவாம் அவங்க அப்பாவுக்கு?”
“ஹார்ட் அட்டாக்காம்”
“த்சொ… த்சொ… பாவம்” என்றாள் பத்மாவதி.
“ம்மா… நான் போய்த் தலையைக் காட்டிட்டு வந்திடறேன்” என்று சொல்லியவாறே வித்யா கிளம்ப,
“ஏய்…ஏய்… இரு.. இரு!… எங்கே கிளம்பிட்டே?”
“சாவு வீட்டுக்குத்தான்”
“ஏண்டி… உனக்கு மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கா?… இல்லையா?… கல்யாணம் நிச்சயமாகி… பத்திரிக்கை அடிச்சு ஊர் பூராவும் குடுத்துக்கிட்டிருக்கோம்… கல்யாணம் முடிகிற வரைக்கும்…. நம்ம குடும்பத்துல யாருமே சாவு வீட்டுக்குப் போகக் கூடாதுடி!… அப்படியிருக்கும் போது மணப்பெண்ணான நீயே சாவு விட்டுக்குப் போறேங்கறியே… தப்புடி.,.. தப்பு” ஆணித்தரமாய்ச் சொன்னாள் பத்மாவதி.
“அடப்போம்மா… அந்த கட்டுப்பாடெல்லாம் உனக்கும்.. அப்பாவுக்கும்தான்… எனக்கில்லை” தாய் சொல்லச் சொல்லக் கேட்காமல், வாசலுக்குச் சென்று கால்களில் செருப்பை அணிந்து கொண்டு படியிறங்கினாள் வித்யா. அதிர்ந்து போய் நின்றாள் பத்மாவதி.
அடுத்த பத்தாவது நிமிடம் வித்யாவின் ஸ்கூட்டி அந்த ஜெயாவின் வீட்டை நோக்கி உருண்டது. வித்யா சாவு வீட்டின் முன் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடும் போது சவ அடக்கம் முடித்து விட்டு, அந்தக் கூட்டம் திரும்பிக் கொண்டிருந்தது.
நேரே வீட்டிற்கு நுழைந்து பார்வையால் ஜெயாவை தேடினாள். ஹாலின் மூலையில் முழங்கால்களுக்கு நடுவில் முகத்தை புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஜெயாவை பார்த்ததும் அவளை நெருங்கி சென்று அருகில் அமர்ந்து தோளைத் தொட்டாள்.
யாரோ தொடுவதை உணர்ந்து தலையை தூக்கிப் பார்த்த ஜெயா வித்யாவை கண்டதும், “ஓ”வெனக் கதற ஆரம்பித்தாள். அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு, முதுகை தட்டிக் கொடுத்து சம்பிரதாயமாய் ஆறுதல் வார்த்தைகளை பேசினாள் வித்யா.
சிறிது நேரத்தில் அங்கு அடுத்த சடங்கு ஆரம்பமானது. அலங்கரிக்கப்பட்ட சுமங்கலிக் கோலத்தில், கண்ணீரும் கம்பலையுமாய் கொண்டு வரப்பட்டு நடுஹாலில் அமர்த்தி வைக்கப்பட்டாள் ஜெயாவின் தாய்.
வித்யா வினோதமாகப் பார்த்து பக்கத்திலிருந்த வேறொரு பெண்ணிடம், “என்ன இது?… என்ன பண்ணப் போறாங்க?” கேட்டாள்.
“சுமங்கலி கோலத்தை அழிச்சு.. விதவைக் கோலம் ஆக்கணுமல்ல?”
அவள் பேச்சு எரிச்சலாயிருந்தது வித்யாவுக்கு.
கூடியிருந்த பெண்கள் ஜெயாவின் தாய் நெற்றியிலிருந்த குங்குமத்தை அழித்து, தலையிலிருந்த பூவை உதிர்த்து, கழுத்தில் இருந்த தாலியையும், காதிலிருந்த மெட்டியையும் அகற்றினர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings