in

வேல்… வெற்றி வேல்…! (சி. கோவிந்த்) – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

வேல்... வெற்றி வேல்...!

கலை அன்பன் அவன்
மலை அழகன் அவன்…!

தவப் புதல்வன் அவன்
தமிழ் முதல்வன் அவன்…!

ஆனந்தக் கூத்தனின் அன்பன் அவன்
பேரானந்தம் அருளும் அழகன் அவன்…!

பாராளும் நற்புகழ் சிவப் புதல்வன் அவன்
சீராளும் முத்தமிழ் தவ முதல்வன் அவன்…!

குன்றத்துக் குமரன் அவன்
திருமணக்கோலம் கொண்ட
திருப்பரங்குன்றத்துக் திருக்குமரன் அவன்…!

செந்தூர் அரசன் அவன்
செவ்வனே பிறவிப் பெருங்கடல் கடக்க அருளிடும்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி அவன்…!

நோய் தீர்க்கும் மருந்தையே மலையாக
நவபாஷண மேனியையேச் சிலையாகக் கொண்ட
புண்ணிய பூமியாம் பழனியின் பகலவன் அவன்…!

அப்பனுக்குப் பாடம் சொன்ன
அழகு சுப்பன் அவன்
பிறர் ஐயம் போக்கிடவே
பிரணவ மந்திரம் உபதேசித்த
சுவாமிமலை சிவகுருநாதன் அவன்…! 

சினங் கொண்ட வேந்தன் அவன்
சாந்தம் வேண்டி சினம் தணித்து
திருவெழில் அருளும்

திருத்தணிகை வேலன் அவன்….!

இறையருளும் மெய்யறிவும் அருளிடும்
சோலைமலை முருகன் அவன்
பழமுதிர்சோலையின் கனி கந்தன் அவன்…!

அறுபடை வீடு கொண்ட 
ஆறுமுகன் அவன்…!
பெரும்படை நாடு கொண்ட
தேவாதித் தேவன் அவன்…!

வடிவேலும் வண்ண மயிலும்
தன்னுடன் கொண்ட
அழகுத் தமிழ் முருகன் அவன்…!

தைப்பூசத் தனயன் செந்தில் அவன்
கார்த்திகை மைந்தன் கார்த்திகேயன் அவன்

கந்தசாமி அவன்
நம் சொந்த சாமி அவன்

வேறுபாடுகளைக் களைந்திடும்
வேல்முருகன் அவன்

சரவண பவ மந்திரம் ஓதிடும்
சகல மருந்தன் அவன்
அவனிருக்க பயமேன்….?!

ஞானம் தந்திட வேண்டி
ஞானவேலை வேண்டுவோம்…!

தவறாமல் தந்திடும்
தண்டபாணி அவன்…!

விரதமிருந்து வேண்டுவோம்…! 
பெருமகிழ் விருந்தினைத் தந்திடும்
சிங்கார வேலன் அவன்…!

காத்தருள்வாய் கந்தவேலே….!
தரிசனம் தந்தருள்வாய் தணிகைவேலே…!

வேல்…வேல்…சக்திவேல்…!
வேல்… வேல் ….வெற்றிவேல்…!!

Amazon தளத்தில் உள்ள ஆன்மீக நூல்கள் பெற விரும்புவோர், கீழே உள்ள புத்தக இணைப்புகளை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம் 👇

           

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ‘தப்பு’த் தாளங்கள்… (சிறுகதை) பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

    மசால் வடையும் பாயாசமும்😍 (நகைச்சுவை சிறுகதை) எழுதியவர் : லக்ஷ்மீஸ் பவன் – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு