in ,

மசால் வடையும் பாயாசமும்😍 (நகைச்சுவை சிறுகதை) எழுதியவர் : லக்ஷ்மீஸ் பவன் – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

மசால் வடையும் பாயாசமும்😍 (நகைச்சுவை சிறுகதை)

“உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு … பாரு

என்ன கண்டேன் நானும் உனக்குள்ள”

ரிங் டோன் பாட்டின் அடுத்த வரி போக விடாமல் மொபைலை எடுத்தான் மிதுன்.

“அப்பா சொல்லுங்க”

“….”

“இல்ல அப்போவே எந்திரிச்சிட்டேன்”

“….”

“ஆமாம் பா,இன்னிக்கு லீவு தான்”

“….”

“அம்மா காலைல பேசிச்சுப்பா”

“….”

“இல்லையே.. அத பத்தி ஒண்ணும் சொல்லலையே”

“….”

“என்னது ? இங்கயா ? சிங்கப்பூரிலயா?”

“….”

“இப்போ என்ன அவசரம்? அடுத்த வாட்டி ஊருக்கு வரும்போது பாத்துக்கலாம்பா”

“….”

“இ….”

“….”

“அப்பா நான் என்ன சொல்லறேன் னா…”

“….”

“அப்…”

“….”

“ஹூம் சரி… பொண்ணு போன் நம்பர் சொல்லுங்க”

“….”

“சரி, போய் பாத்து பேசறேன்”

“….”

“ஆனா பிடிக்கலைனா, விட்டுருங்க”

ஏதோ சொல்லி, மறுமுனை துண்டிக்கப்பட்டது.

“மீரா…” அவனையும் அறியாமல் இந்த பேரை உச்சரித்தான் மிதுன்

அப்பா வாட்ஸ் அப் அனுப்பிய நம்பருக்கு டயல் செய்தான்

மறுமுனையில் நல்ல தமிழ் பேசும் குரல்

(டேய் குரல கேட்டு மயங்கிடாதே. நேர்ல பாத்திட்டு அப்புறம் கல்யாணத்துக்கு ஓ. கே சொல்லுடா – குரல் கொடுத்தது  மனசாட்சி)

தொண்டையை செருமிக் கொண்டு,

“ஹலோ…நான் மிதுன்…”

“….”

“அப்பா உங்க … உன் நம்பர் குடுத்தாரு”

“….”

“இன்னிக்கு ஈவினிங்கா? ஓ.கே”

“….”

“எங்க? செராங்கூன் ரோடா?” 

“….”

“சரவணபவன், ஆமா முஸ்தபா எதிரில இருக்கே… ஓ. கே”

“….”

“6.30 க்கு மீட் பண்ணலாம்”

“….”

அன்றிரவு 8.00 மணி

“ஹலோ அப்பா, அம்மா எங்க?”

“….”

“அ்.. அம்மா, அந்த பொண்ண பாத்து பேசிட்டேன்”

“….”

“எனக்கு செட் ஆவாது”

“….”

“அம்மா கொஞ்சம் சொன்னா புரிஞ்சிக்கோ”

“….”

“பிடிக்கலனு இல்ல, ஆனால் பிடிச்சும் இல்ல”

“….”

“ரெண்டு பேரும் பாத்தோம், சும்மா பேசிக்கிட்டோம், அப்படியே ஆளுக்கு ஒரு மசால் வட சாப்டோம். அப்படியே கிளம்பியாச்சு”

“….”    

“அப்பாகிட்ட ஏதாவது சொல்லி சமாளி”

“….”

“நமக்கு இதெல்லாம் சரி வராது, நான் ஊருக்கு வந்தப்புறம் பாத்துக்கலாம்”

நண்பர்களோடு உரையாடி உறங்கிப் போனான் மிதுன்.

மறுநாள் திங்கட் கிழமை காலை

கீரல் விழுந்த ரெகார்ட் போல, மிதுனின் மனம் மீராவை  சுற்றியே வந்தது

மீரா, 

கூர்மையான கண்கள்

பேசும் போது என்ன ஒரு தெளிவு

மசால் வடை சாப்பிடும் நேர்த்தி

Ofcourseனு சொல்ற ஸ்டைல்….

அப்படியே எண்ண ஓட்டத்தில் சிக்கினான் மிதுன்.

மாலையில் மனம் சரவண பவனுக்கு போகச் சொல்ல, சென்றான் மிதுன்

நேற்று மீராவுடன் அமர்ந்த அதே டேபிள். தன்னையும் அறியாமல், ஒரு மசால் வடை ஆர்டர் செய்தான்

மசால் வடையை சாப்பிடும் போதே, நேற்று மீராவுடன் சாப்பிட்ட வடை மாதிரி இந்த வடை சுவை இல்லை என்பது புரிந்து,

“தம்பி, வடை நேத்து நல்ல இருந்தச்சே. இன்னிக்கி ஏன் அப்படி இல்ல?” என வெயிட்டரிடம் கேட்டான்.

“சார்… பத்து வருஷமா ஒரே மாஸ்டர் தான், எப்பவும் வடை ஒரே டேஸ்ட் தான் சார். நீங்க நேத்து அந்த அக்கா கூட வந்தீங்க, இன்னிக்கு தனியா வந்துருக்கீங்க, அதான் மாறுதல்”

அட எவ்வளவு ஈஸியா சொல்லிட்டான்

“அப்போ மீரா என்கூட இருந்தா தான், எனக்கு எல்லாமே பிடிக்குமா? அப்போ, அது தானா , அதே தானா”

அப்போது பக்கத்து டேபிளில் ஒருவர் போனில், “ஏய் மக்கு முண்டமே, வேற யாராவது புக் பண்றதுக்குள்ள நீ புக் பண்றா” என்றார்

இவனுக்கே வந்த வசை போல பாவித்து….

“ஹலோ அம்மா”

“….”

“அந்த பொண்ணு வீட்டுல நீங்க எதுவும் சொல்லீரலையே…”

“….”

அப்பறம் என்ன வடை பாயாசம் தான்!

இல்ல இல்ல மசால் வடையும் பாயாசமும் தான் ஹி ஹி ஹி

#ad

           

        

        

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வேல்… வெற்றி வேல்…! (சி. கோவிந்த்) – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

    சாபுதானா கிச்சடி (பானுமதி வெங்கடேஸ்வரன்) – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு