தேவையான பொருள்கள்
- ஜவ்வரிசி – 4 குழிக்கரண்டி அல்லது ஒரு டம்ளர்
- மீடியம் சைஸ் உருளைக் கிழங்கு – 2
- பச்சை மிளகாய் – 3
- தக்காளி – 1
- உப்பு – 1 1/4 ஸ்பூன்
- தோலுரித்த நிலக்கடலை – 1 மேஜைக்கரண்டி
தாளிக்க
- எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
- கடுகு அல்லது சீரகம் – 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
- சாபுதானா கிச்சடி செய்வதற்கு ஜவ்வரிசி நன்றாக ஊறியிருக்க வேண்டும், அதே சமயத்தில் நீர் இருக்கவே கூடாது.
- எனவே இரவு ஏழு மணிக்கு சாபுதானா கிச்சடி செய்ய வேண்டும் என்றால் காலை ஏழு மணிக்கே ஜவ்வரிசியை களைந்து ஊற வைத்து விட வேண்டும்
- மூன்று மணி நேரம் ஊறிய பிறகு அதை வடி கட்டி, பின்னர் ஒரு மெல்லிய துணியில் முடிந்து வைத்தால் தண்ணீர் வற்றி விடும்.
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவைகளை பொடியாக அரிந்து கொள்ளவும்
- வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்க்கவும்
- வெங்காயத்தை வதக்கி விட்டு பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் உருளைக் கிழங்கு ஆகியவற்றை சேர்க்கவும்
- உருளைக்கிழங்கு கொஞ்சம் வெந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி அதன் பிறகு ஊறி, வடிகட்டிய ஜவ்வரிசியை சேர்க்கவும்
- அதில் உப்பு, மஞ்சள் பொடி, இவைகளையும் சேர்த்து வதக்கவும்
- பின்னர் தோலுரித்த கடலையை அப்படியே முழுதாகவோ அல்லது மிக்சியில் ஒன்றிரெண்டாக பொடி செய்தோ சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடலாம்
- சாபுதானா என்னும் ஜவ்வரிசி கிச்சடி தயார்
- இதை தேங்காய், கொத்துமல்லி சட்னியோடு சாப்பிட நன்றாக இருக்கும்
குறிப்பு:
ஊறிய ஜவ்வரிசியை நன்றாக வடிகட்டாவிட்டால் கிச்சடி உதிர் உதிராக வராது. வாணலியில் ஈஷிக்கொள்ளும். வடி கட்டிய பின் சற்று நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்தால் கூட, ஈரப்பசை இல்லாததால் உதிர் உதிர் கிச்சடி கிடைக்கும்
#ad
ஆதி வெங்கட் எழுதிய சமையல் புத்தகங்கள்👇
English Cook Books 👇
Very nice 👌👌