சஹானா
ஆன்மீகம்

சிவனடி போற்றி….! 🙏 (கவிதை) -✍ சி. கோவிந்த் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

சிதம்பர ஈசனே
சிற்றம்பல வாசனே

அன்பினால் வசப்படுத்தும்
அம்மையப்பனே

அரிதாரமாய் சாம்பல் பூசிய
அம்பலவாணனே

ஆரவார திருநடம் புரியும்
ஆதிரை அழகனே

சுயமாய் உதித்திட்ட
சுயம்பு லிங்கனே

மும்மூர்த்தியாய் அமைந்த
முக்கண் அரசனே

ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய‌
ஆதி மூலனே

ஐயங்கள் போக்கிடும்
கைலாய நாதனே

அகந்தையை அழித்திடும்
கங்கை நாயகனே

வேதத்தின் சாரமாய் திகழும்
வேத வித்தகனே

பால்பாகுபாடு பாராத
சமத்துவம் உணர்த்திட
சிவமும் சக்தியுமாய் ஆன
அர்த்த நாரீஸ்வரனே

பரம்பொருளாய் விளங்கிடும்
பரமேஸ்வரனே

மகிழ்ச்சியை அருளும்

மகேஸ்வரனே

நலங்கள் பயத்திடும்
நந்தி வாகனனே

புவனமெலாம் காத்திடும் புனிதனே
புலித்தோல் நின் புத்தாடை
புனைவோம் நின் பாமாலை!

நின்னருளே ஆனந்தம்!
சிவசிவ எனும் நாமம்!

நல்லருள் தந்திடும் 
நமச் சிவாயமே!

சிந்தையைச் சீராக்கிடும்
சித்தன் சிவமயமே!

விந்தையை நிகழ்த்திடும்
வித்தக நாயகனே!

போற்றி போற்றி சிவனடி போற்றி!!!

போற்றி போற்றி இறைவா போற்றி!!!

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: