in

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் 🙏 (✍ அனுபிரேம்) – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் 🙏

மிழ்நாட்டில் இயற்கை வளம் மிக்க மலை கொல்லிமலை. 

இது இந்தியாவின் தெற்கு பகுதியில், தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும்.

கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது. 

கிழக்குத் தொடர்ச்சி மலை பெயருக்கேற்றார் போல் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கங்கே இருக்கும்

மேற்குத் தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும் அடர்ந்தும் காணப்படும். கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களைக் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லி மலை.

நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமுள்ள இம்மலை, வடக்கு தெற்காக 28 கி.மீ பரப்பளவும், கிழக்கு மேற்காக 19 கி.மீ பரப்பளவும் கொண்டுள்ளது. 

கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து, அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது.

 மலைப்பாதையின் தூரம் 26 கி.மீ செங்குத்தான இம்மலைப் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bend) உள்ளதால், அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். 

கொல்லிமலைக்குச் செல்ல முக்கியமாக இரண்டு பாதைகள் உள்ளன. நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக கோம்பை காடு என்ற ஊர் வழியாக செல்லலாம். கோம்பையிலிருந்து 12 மைல் தூரம் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம்.

மற்றொன்று கொப்பம்பட்டி வைரிசெட்டிப்பாளையம் வழியாக புளியஞ்சோலை சென்று, அங்கிருந்து 5 மைல் தூரம் சென்ற பின், மலையேறும் தரைமட்டத்தில் இருந்து 2 மைல் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம்.

இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லிமலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானளாவிய மரங்களை உடையதால், கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்வதுண்டு 

நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் வசித்தால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும் அழைக்கப்படுகிறது. (add this pic as main pic as well)

சதுரகிரி மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள ஈசன் ‘அறப்பளி மகாதேவன்’, ‘அறப்பளி உடையார்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

அறை = சிறிய மலை. 

மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி.

 இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால், இக்கோயில் ‘மீன் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.

ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில், அஷ்டலட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது.

அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது, ‘அறப்பளீஸ்வரர் சதகம்’ என்ற நூலை இயற்றியுள்ளார். பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சமயம் இங்கே ஈசனை தரிசிக்க வந்த பக்தர்கள், இந்த பஞ்ச நதியிலிருந்து மீன்களைப் பிடித்து சமைத்தனர்.  சிவபெருமானை தரிசித்து விட்டு பின்பு அவற்றை உண்ணலாம் என அதைக் கரையில் வைத்த போது, சமைத்த  மீன்கள்  அனைத்தும் உயிர் பெற்று அந்த நதியிலேயே மீண்டும் குதித்தன.

அச்சமயம், இம்மலையிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஈசனே உறைந்திருப்பதாக அசரீரி ஒலித்தது. இதனால் இத்தல பெருமானுக்கு, ‘அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

ஈசனை வணங்க வரும் பக்தர்கள், முதலில் இங்கே ஓடும் ஆற்றில் உள்ள மீன்களுக்கு உணவு அளித்த பின்பே கோயிலில் சிவபெருமானை தரிசிக்கின்றனர்.

தவிர, தினமும் காலையில் சுவாமிக்கு படைக்கும் நைவேத்தியங்களை இந்த நதியிலுள்ள மீன்களுக்கு வழங்கிய பின்பே பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

இங்கே ஈசன் அறத்தின் வடிவாக அருள்பாலிப்பதால், பிறரால் அநீதி  இழைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டிக் கொள்கிறார்கள்.

சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததால், இச்சிவலிங்கம் ‘ஆருஷலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி சன்னதியின் விமானத்தில் சித்தர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அதேப் போல், அம்பாள் சன்னதியின் சுற்றுச் சுவர்களில், சித்தர்களின் யோக முத்திரைகள் வடிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா இங்கு விசேஷம். அன்று இங்குள்ள பழங்குடி மக்களோடு பக்தர்களும் சேர்ந்து ஆற்றில் உள்ள பெரிய மீன்களைப் பிடித்து, அவற்றுக்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு, பின்பு அவற்றை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர்.

திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் இங்கு இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகில், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளது. நீர் வீழ்ச்சிக்குச் செல்ல 720 படிகட்டுகள் உள்ளன.

160 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால், பல்வேறு நோய்கள் தீர்ந்து உடல் ஆரோக்கியம் அடைகிறது. 

நீர்வீழ்ச்சியில் இருந்து வெளிவரும் நீரானது, கிழக்கு நோக்கி பாய்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை  அடைகிறது

நீங்களும் சிறப்புமிக்க இந்த மலைக்கோவிலுக்கு சென்று, அறப்பளீஸ்வரர் அருள் பெற வாழ்த்துக்கள்

#ad

Contact admin@sahanamag.com for your advertisement needs.

We do promotion ads for books on behalf of writers / publications, small business ads, home based business ads at reasonable cost. We not only promote in our website, but also in our Facebook Status,other relevant Facebook groups, Whatspp, YouTube, Instagram, Twitter, Pinterest, LinkedIn etc…

Advertise with us to increase your customer base

Take a look at the Promo Video we did for a client recently, it speaks for itself

👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. அருமையான பதிவு அறப்பளீஷ்வர் பற்றி அறிந்து கொண்டேன் . நன்றி . வாழ்த்துகள்

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 8) -✍ விபா விஷா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு                                

Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்