2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தலை வாரி பின்னல் போட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்து ஒரு பாட்டு காற்றோடு வந்து என் செவிக்குள் புகுந்து மனதை தூண்டியது அதை பார்க்க வேண்டும் என்று.
வேகமாக வந்து டிவியை ஆன் செய்து அமர்ந்தேன். வீட்டில் யாரும் இல்லை நிம்மதியாக பார்க்கலாம்.
எனக்கு பிடித்த பாடகி பாடும் பாடல் எனக்கு பிடித்த நடிகை அதில் நடிக்கும் பாடல். கதாநாயகனும் கதாநாயகியும் பசுமை நிறைந்த மலைப்பிரதேசத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் கவிஞனின் அழகான வரிகளில்.
பாடல் பார்த்துக் கொண்டிருந்த போதே, என் மனமும் அங்கே சென்றது. மலையின் மேலிருந்த மேகத்தில் என்னவனின் புன்னகை முகம் தெரிந்தது . சில்லென்ற மழை சாரல் என்னுள் தெறித்தது போல இருந்தது.
ரோஜாவின் மணமும் தேனின் மணமும் நிறைந்த காற்று என் தாவணியில் தவழ்ந்து என் உடலெங்கும் பரவியது . நானும் சேர்ந்து பாடினேன்.
அவன் மேல் தனக்கிருக்கும் அன்பை எடுத்து சொல்லும் வரிகளில் மனம் கரைந்து கண்களில் கண்ணீர் துளிர்த்தது. கதாநாயகி உடுத்திருந்த நாகரீக உடையை தானும் அணிய வேண்டுமென்று மனம் ஏங்கியது.
வரும் தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் ட்ரெண்ட் என்று தோழிகள் பேசிக் கொண்டார்கள். கதாநாயகி அணிந்திருக்கும் ஹை ஹீல் ஷூ வையும் அவள் அணிந்திருக்கும் காதணி டிசைனையும் விமர்சனம் செய்தார்கள்.
காதலன் நினைவோடு இந்த பாட்டை ரசிக்கலாம் என்றால் விட மாட்டார்களே.! பாடல் முடிந்தது.
ஃபோன் அழைத்தது.
‘அம்மா’,…. “இன்னிக்கு செமினார் க்ளாஸ் இருக்கு….., வர கொஞ்சம் லேட் ஆகும். காலைல சொல்ல மறந்துட்டேன்”.
என் பெண்ணின் குரல் கேட்டதும், நான் உருமாறினேன், டீன் ஏஜிலிருந்து, என் நாற்பது வயதிற்கு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings