in

தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 3) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2

நந்தினி, சரண்யாவிடம் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் பாட்டு கிளாஸ் முடிந்ததும், வழக்கமாக மற்ற பிள்ளைகளுடன் கீழே ஒரு அரைமணி நேரம் விளையாடி விட்டுத்தான் மேலே வருவாள். வந்ததும் முகம் கை கால் கழுவி, சுவாமி ஸ்லோகம் சொல்லிவிட்டு படிக்க ஆரம்பிப்பாள். வீட்டுப்பாடம் செய்வது, அன்றைய பாடத்தை படிப்பது என்று அடுத்த ரெண்டு மணிநேரம் அவளுக்கு சரியாக இருக்கும்.

அன்று  டிசம்பர் 5ஆம் தேதி. பள்ளியில் நடக்கும் சில போட்டிகளுக்கு தயார் பண்ண வேண்டியிருந்தது. பாட்டு கிளாஸ் முடிந்ததும் கீழே நண்பர்களுடன் விளையாடாமல் படியேறினாள்.

“விளையாட வரலையாப்பா?” என்று சினேகா கேட்க

“வீட்டுக்கு போகணும் சினேகா, அப்பாவும் அம்மாவும் மார்க்கெட் போகணும்னு  சொன்னாங்க”

“நீயும் அவங்களோட போறயாடி?” என்று சினேகா கேட்க

“இல்லப்பா… நாளைக்கு ஜி.கே டெஸ்ட் இருக்கு, அதுக்கு  படிக்கணும். அதோட சுதந்திர தினத்தை ஒட்டி நிறைய போட்டிகள் வச்சிருக்காங்க, அதுக்கெல்லாம் தயார் பண்ணணும். நான் போகமாட்டேன், வீட்லதான் இருப்பேன்”  என்று கத்திக் கொண்டே மேலே வீட்டுக்கு வந்தாள்.

உள்ளே வந்து கைகால் முகம் கழுவி, ஸ்லோகம் சொல்லி சாமி கும்பிட்டுவிட்டு படிக்க உட்கார்ந்தாள்.

“மார்க்கெட் வரைக்கும் போணும்… அப்படியே டெய்லர் கடைக்கும் போயிட்டு வரணும். நானும் அப்பாவும் போறோம் ஸ்கூட்டரில  நீ  வர்றியா?” என்று வேதா கேட்க

“இல்லம்மா… எனக்கு நெறைய படிக்க வேண்டியிருக்கு. அதனாலதான் நான் கீழே கூட விளையாடாம வந்துட்டேன். நிறைய ஸ்கூல் இந்த குவிஸ் (Quiz)  காம்படிஷன்ல கலந்துக்கிறாங்க, முதல் பரிசு என்ன தெரியுமாம்மா? லேப்டாப் தராங்க. நிறைய பிரைஸ் இருக்குமா, நான் நிறைய படிக்கணும். தினம் ஒரு போட்டி வச்சிருக்காங்க, அதுவும் தவிர நாளைக்கு ஜி.கே. (G.k). டெஸ்ட் வேற இருக்கு… நான் வரல, நீங்க போயிட்டு வாங்க” என்றாள்.

“போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடறோம்.  வீட்ல தனியா இருக்கணுமே… பேசாம எங்க கூட வந்துடுடி. பக்கத்து வீட்ல ரஞ்சனி  ஆண்ட்டி கூட இல்ல… வெளியில போயிருக்கா. அதனால நீ தனியா இருக்க வேண்டாம், போயிட்டு சீக்கிரம்  வந்துடலாம் வா” என்றாள்.

“அம்மா நான் வரல… வரல… வரல… நீங்க மட்டும் போயிட்டு வாங்க…  நான் படிக்கப் போறேன்” என்று கத்தினாள் நந்தினி.

“அவதான் புடிச்ச பிடிய விட்டு இறங்க மாட்டேங்குறா… நீ வா  நாம போயிட்டு ஒரு மணிநேரத்துல வந்துடலாம்” என்று தியாகு கூப்பிட

“சரிடி… கதவ தாள் போட்டுக்க. யார் வந்து தட்டினாலும் கதவை திறக்காத. நாங்க வந்து கூப்பிட்டு எங்க குரல் கேட்டால் தான் நீ கதவ திறக்கணும்” என்றாள்  வேதா.

நந்தினியின் அப்பாவும், அம்மாவும் வெளியே போவதை பார்த்து விட்டு மெல்ல படியேறினான் விஜய். நந்தினி குவிஸ்புக்கை வைத்து எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தாள்.

காலிங் பெல் அடிக்க, ‘அப்பா அம்மா இப்பதானே போனாங்க… அவங்க கூப்பிடுற குரல் கூட  கேட்கலையே…  வண்டி சாவியை மறந்துட்டாங்களோ…. பர்ஸ் எடுக்க மறந்துட்டாங்களோ…’ என்று நினைத்தபடி கதவுகிட்டே வந்து “யாரு… அம்மா அப்பாவா” என்று கேட்டாள்.

வெளியே சப்தம் வராததால் சிறிது பயம் ஏற்பட, திரும்பவும்..”யாரு?” என்றாள்.

“நந்தினி… நான்தான் விஜய் அண்ணா”

“விஜய் அண்ணா…. என்ன வேணும்? நான் படிக்கப் போறேன். அப்பாவும், அம்மாவும் வெளிய போயிருக்காங்க… கதவை திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க… நீங்க போயிட்டு அப்புறமா வாங்க”

“நந்தினி நான் உனக்கு கொடுத்த சாக்லேட்டை கீழே வெச்சுட்டு வந்துட்டியே, அதை கொடுக்கத்தான் வந்தேன். கொஞ்ச கதவைத்திற, கொடுத்துட்டுப் போயிடுறேன்”

“அண்ணா…. அப்புறமா அதை வாங்கிக்கிறேன். அம்மா, அப்பா வந்ததும் நான் கீழே வந்து வாங்கிக்கிறேன். அவங்க கதவை திறக்க கூடாதுன்னு சொல்லிட்டு போயிருக்காங்க” என்றாள் மறுபடியும்.

“அது வெளிஆட்களுக்குத்தான் திறக்கக் கூடாதுன்னு சொன்னாங்க, விஜய் அண்ணாக்கு திறந்தா உங்க அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க”

‘ஆமாம்ல்ல… அது சரிதான். விஜய் அண்ணாக்கு கதவைத் திறந்தா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டா. வெளிஆட்களுக்குத் தான் திறக்க கூடாதுன்னு சொல்லியிருக்கா’ என்று நினைத்தபடி கதவை திறந்தாள்.

உள்ளே வந்த விஜய், “நந்தினி குட்டி… இந்தா சாக்லேட்” என்று நீட்டிக் கொண்டே கதவை மூடி தாழிட்டான்.

“என்னை குட்டின்னு கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அண்ணா… நான் இப்ப போர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்”

“ஓஹோ அப்படியா… சரி மேடம். இனி  உங்களை குட்டின்னு கூப்பிட மாட்டேன், நந்தினின்னே கூப்பிடுறேன் சரி தானா?” என்றவன் சுவாதீனமாக ரூமுக்குள் நுழைந்தான்.

நந்தினி சிரித்துக் கொண்டே, “அப்படி வாங்க வழிக்கு. சரி வந்தது வந்தீங்க எனக்கு கொஞ்சம் ஜி.கே கொஸ்டின் கேக்குறீங்களா? நாளைக்கு எனக்கு ஜி.கே டெஸ்ட் இருக்கு, அது போக குவிஸ் வேற இருக்கு. நிறைய படிக்கணும். நீங்க குவிஸ் கொஸ்டின் கூட  கேளுங்க, நான் பதில் சொல்றேன்” 

“கேட்டுட்டா போச்சு… புக்க கொடு நந்தினி…”

புத்தகத்தை நீட்ட, அதை கையில் வாங்கிக் கொண்டு, அவளை ஒரு கையால் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். வாய் கேள்விகளை கேட்க, கை அவள் உடலை அளைய ஆரம்பித்தது.

“விஜய் அண்ணா ஏன் சேட்ட பண்ற? என்ன விடு… எனக்கு பிடிக்கல, நான் கீழ போறேன்” என்று திமிறியவளை விடாமல் அவன் தொடர… மனஅழுத்தமும் உடல் அழுத்தமும் தாங்க முடியாமல், சொல்லவொண்ணா பயத்தில் அந்த சின்னப்பெண் பயத்தில்  மயங்கி சரிந்தாள்.

எல்லாம் முடிந்ததும்… விஜய் நிதானமாக எழுந்து போய் கதவை திறந்தான். போகிற போக்கில் வெளியே நின்று கொண்டிருந்த அவன் நண்பன் சேகரை உள்ளே அனுப்பிவிட்டு, “சீக்கிரம் வந்துடுடா…  அவங்க அப்பா அம்மா வந்துரப் போறாங்க” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெண் (சிறுகதை) – ✍ ஹேமமாலினி சுந்தரம், கோவை

    தவறுகள் (சிறுகதை) – ✍ க.வெள்ளிங்கிரி, கோயம்புத்தூர்