அனைவருக்கும் வணக்கம்
பொதுவாக சோளம் வாங்கும் போது அதை அப்படியே வேகவைத்து அதனுடன் உப்பும், மிளகாய்த்தூளும் சேர்த்து தான் சுவைத்திருப்போம்
வட இந்தியாவில் குளிர் காலங்களில் சாலைகளில் ஆங்காங்கே சோளத்தை சுட்டும் தருவார்கள்.
நாம் இப்போது பார்க்கப் போவது மாலைநேரத்திற்கு சட்டுபுட்டு ஸ்நாக்ஸாக சோளத்தை எப்படி மாற்றுவது என்பதைத் தான்
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
அரிசிமாவு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை & கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
1) ஸ்வீட் கார்னை இட்லி பானையில் பத்து நிமிடம் வேக வைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.
2) உதிர்த்த சோளத்துடன், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3) அரைத்த விழுதுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
4) இந்தக் கலவையுடன் அரிசிமாவும் சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ளவும்
5) கடாயில் எண்ணெய் சூடானதும் மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
6) அல்லது மாவை பக்கோடா போல கிள்ளிப் போட்டும் எடுக்கலாம்.
7) மொறுமொறுப்பாக ஸ்வீட் கார்ன் பால்ஸ் / பக்கோடா சாப்பிடத் தயார்.
8) மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம்
இந்த ஸ்வீட் கார்ன் பால்ஸ், சாஸுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
மாலை நேரத்தில் சட்டென்று இது போன்ற ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் செய்து பாருங்களேன்.
இது போன்ற சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள் என்னுடைய ‘லாக்டவுன் ரெசிபீஸ்’ மின்னூலில் இடம் பெற்றுள்ளது.
Click here to view mouth watering recipes in Adhi’s Kitchen YouTube Channel
நட்புடன்
ஆதி வெங்கட், திருவரங்கம்
#ad
#ad