in , ,

ஃபைவ் ஸ்டார் வைத்தியம் (பகுதி 3) – சுஸ்ரீ

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அம்மாவை ஒரு சேர்ல உக்கார வச்சிட்டு நானும் ஒரு சேர்ல உக்காந்தேன். இந்த பஸ் ஸ்டாண்ட் மாதிரி விசால ஹால்ல காத்திருந்தவர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி.

அகலமான மூக்குல பேசரி,காதுல வைரத்தோடு சமேதமா அடிக்கடி தங்க ஃபிரேம் கண்ணாடியை கழட்டி கைக்குட்டையால பாலிஷ் போட்டுட்டிருந்த அந்த ஆந்திர அம்மணி, உசரமா ஒல்லியா வெள்ளை ஜிப்பா பைஜாமால இருந்த முதியவர் அடிக்கடி இப்பதான் மாட்டின பல் செட் அசெளரியமா இருக்கும் போல, விரல்களால தாடையை தொட்டு தூக்கி விட்டுட்டே இருந்தார்.

இப்படி ஒவ்வொருத்தரா பாத்ததுல முக்கால் மணி நேரம் போனது தெரியலை. டாக்டர் ஜலபதிராவ்னு பேர் பலகை இருந்த கேபினுக்குள் நாங்கள் செலுத்தப் பட்டோம்.

அழகாய் புன்முறுவலுடன் வரவேற்றார் ஜலம்,அம்மாவைப் பாத்து ”ஏமயிந்தி எதுர்ல கூசோண்டி”

“தெலுகு வஸ்ததில்லானு” எனக்கு தெரிஞ்ச தெலுகுல சொன்னேன்.

“பரவாயில்லை தமிழ் தெலுசு நாகு,என்னம்மா பண்ணுது”

அம்மா தயங்கித் தயங்கி என்னைப் பாத்த வண்ணம் “உச்சந்தலை ரொம்ப வலிக்கறது 2 நாளா, அதான் கண் செக் பண்ண வந்தோம்,அவங்க உங்ககிட்ட அனுப்பினாங்க.”

“ஓ சரி சரி, எத்தனை வயசு,71 ஆ,வயசானா ஒவ்வொண்ணா தலை காட்டும்,பயப்படாம இதைக் கடந்து வாழக் கத்துக்கணும்னு பெரிய ஓஷோ மாதிரி தத்துவம் பேசினார்.1200 ரூபா கொடுத்து அவர் தத்துவ ஞானத்தை கேக்கவா வந்தோம்,என் முகத்தைப் பாத்து என் மூளைல ஓடினதை புரிஞ்சிட்டார்னு நினைக்கிறேன்.

நான் சொல்றதை ஃபாலோ பண்ணுங்க எல்லாம் தானா சரியாப் போயிடும். முதல்ல ‘வீனஸ் ஸ்கேன்ஸ் லேப்க்கு’உடனே போங்க கம்ப்ளீட் பிளட் ரிபோர்ட்,ஒரு எம்.ஆர்.ஐ. பண்ணி ரிபோர்ட் எடுத்துட்டு காலைல வாங்க,டிரீட்மென்ட் ஆரம்பச்சிடுவோம்.

“டாக்டர் இங்கே பக்கத்துல இருக்கற என்.கே.லேப்ல போய் எடுக்கலாமா?

“நோ,வீனஸ்ல எல்லாம் லேடஸ்ட் அல்ட்ரா மாடர்ன் எக்விப்மென்ட்ஸ், அதனால லேட் ஆனாலும் அங்கேயே போங்க.இந்த ரிபோர்ட்ல என்னனென்ன டெஸ்ட் பண்ணணும்னு எழுதியிருக்கேன் அங்கே பாஸ்கர்ன்றவர் இருப்பார்,அவர் கிட்ட என் பேரை சொல்லுங்க. போய்ட்டு வாங்கம்மா எல்லாம் சரி பண்ணிடலாம்”

அந்த ஃபைலை தூக்கிட்டு வெளியே வந்தோம்.ஆஸ்பிடல் வாசல்லயே ஒரு ஆட்டோ நின்னிட்டிருந்தது. “என்ன சார் ‘வீனஸ் ஸ்கேன்ஸ் லாப்’போகணுமா?150 ரூபா ஆகும் சார்.”

அடப்பாவி இங்கே வர பேஷன்ட் எல்லாருமே வீனஸ் லாப் போறவங்கதானா,என்ன ஒரு செட்அப்!

சரி வேற வழி இல்லைனு அந்த ஆட்டோலயே போனோம்.அந்த லேப் அதுவும் ஒரு அதி நவீன மூணு மாடி கட்டிடம்.ஆட்டோமேடிக் கிளாஸ் கதவு.இங்கேயும் ரிசப்ஷனிஸ்ட் கிட்ட ஜலபதிராவ் ஃபைலைக் கொடுத்தேன்,அம்மா பயத்துடன் சுத்தி முத்திப் பாத்தா.

சிவப்பு,நீலம் கலந்த ஒரு மாதிரியான யூனிஃபார்ம் புடவைல இருந்த ரிஷப்ஷனிஸ்ட் மேடம், நீங்க உக்காருங்க மேடம்னு அம்மாவைப் பாத்து சொன்னா. அம்மா அங்கே இருந்த ஒரு சவுகரியமான சோஃபால போய் உக்காந்தவுடனே ரிஷப்ஷனிஸ்ட் ஃபைலை புரட்டிக் கொண்டே என்னைப் பார்த்தார், நான் சட்னு கார்ட்தான்னேன். அவருக்கே சிரிப்பு தாங்கலை.

“சார் பிளட் டெஸ்ட் எல்லாம் சேத்து ஃபைவ் தவுசண்ட், எம்.ஆர்.ஐ. ஃபோர்டீன் தவுசண்ட், டோடல் நய்ன்டீன் தவுசண்ட்”

எனக்கு திக்னு ஆச்சு, 19ஆயிரமா? வேற வழி இல்லை இப்ப கார்டை எடுத்து கொடுத்தேன். தேங்க் யூனு பத்தொன்பதாயிரத்தை அக்கவுன்ட்ல இருந்து முழுங்கிடுச்சு அந்த கையடக்க மெஷின்.

அந்த குளிர்சாதன அறையில்,15 நிமிஷ காத்திருப்புக்குப் பின் உள்ளே கூப்டாங்க அம்மா கைல இருந்து ரத்தம் தாராளமா எடுக்கப்பட்டது.

திரும்ப ஒரு அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் ,ஒரு யூனிஃபார்ம் ஸ்டாஃப் அம்மாவை மட்டும் எம்.ஆர்.ஐ. ரூமுக்கு கூட்டிட்டுப் போனா.

அம்மாவும் பயந்துட்டே போனா.நான் வெளியே காத்திருந்தேன் ஒரு அரை மணி நேரம் அம்மா வெளிய வர வரை. “என்னம்மா ரொம்ப பயமா இருந்ததா?”

“பின்ன என்னடா,ஒரு பெரிய மெஷினுக்குள்ள படுக்க வச்சு உள்ளே தள்ளிட்டா,ஒண்ணும் பயமில்லை கண்ணை மூடிட்டு படுனு.கடகடனு எதோ சத்தம் தலையெல்லாம் சுத்தற மாதிரி இருக்கு,இதோட நாம காலினே நினைச்சேன்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை இந்த ஊர்லயே பெஸ்ட் லாபாம் இது”

அடுத்த ஒரு அரை மணி நேரத்துல எக்ஸ்ரே ஃபில்ம் மாதிரி மூணு,பிரின்டட் ரிபோர்ட் கைல கொடுத்து அனுப்பிட்டா.பிளட் டெஸ்ட் ரிபோர்ட் மெயில்ல அனுப்பறோம்னு.ஒரு வழியா காலைல புறப்பட்டது மத்யானம் 2.30 மணிக்கு வீடு திரும்பினோம்னு வச்சிக்கங்களேன்.

வந்தவுடனே அம்மா படுத்துக்க போயிட்டா.உடனே சரோ வந்து பிடிச்சு உலுக்க ஆரம்பிச்சிட்டா,”ஏன் இவ்வளவு நேரம் ஏதாவது சினிமா,கினிமானு போயிட்டு வந்தீங்களா”

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஃபைவ் ஸ்டார் வைத்தியம் (பகுதி 2) – சுஸ்ரீ

    ஃபைவ் ஸ்டார் வைத்தியம் (இறுதி அத்தியாயம்) – சுஸ்ரீ