in ,

யார் அது? (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மறுநாள் காலையில் ராஜவேலு ஆபிற்குள் நுழைந்ததும் “குமரேசன் சார் உங்களை பார்க்கணுமாம்” என்றால் டைப்பிஸ்ட் லதா.

“சரி” என்றவாறு குமரேசன் அறைக்குள் நுழைந்தான் ராஜவேலு.

“குமரேசன் என்ன விஷயம்?” என்றவாறு குமரேசனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் ராஜவேலு.

“மடையா! அந்த முகம் மாறாத இல்லை என்னவோ “மாறாத மனங்கள்” சிறுகதையை செலக்ட் பண்ணாதே என்று சொன்னேனே கேட்டாயா?”என்றான் குமரேசன்,

“என்ன! நம்ம பொன்னையன் கோபப்பட்டாரா? நான் போட்ட பிளான் நல்லா வேலை செய்யுது”

“வேலை செய்யும். மனிதன் மூஞ்சிலே எள்ளும் கொள்ளும் வெடிக்குது. போய் என்னன்னு கேள்” என்றான் குமரேசன்.

“குட்மார்னிங் சார்” என்றான் ராஜவேலு.

“குட்மார்னிங். இந்த “மாறாத மனங்கள்” கதையை செலக்ட் பண்ணியது நீ தானே?” என்று கேட்டார் கோபத்துடன்.

“ஆமாம் சார்”

“நம்முடைய பத்திரிகையில் காதல் தோல்வி அடைகிற மாதிரி கதையை எப்போதும் பிரசுரிக்க கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்”

“சார், உண்மையிலே உங்களுக்கு காதல் தோல்வி என்றால் பிடிக்காதா?”

“ம்கூம். அறவே பிடிக்காது. காதல் கதை என்றால் அது எப்போதும் காதலர்கள் சேர்வதாகத் தான் முடிய வேண்டும்”

“உண்மையிலே தானா சார்?”

“ஏம்பா அப்படி கேட்கிறாய்?”

“இல்லை மாமா, நான் உங்க மகள் இந்துவை லவ் பண்ணுகிறேன். நாங்கள் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி வாழ ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா” என்றவாறு பொன்னையன் காலில் விழுந்தான் ராஜவேலு.

அதைக் கேட்ட பத்திரிகை ஆசிரியர் பொன்னையனுக்கு மயக்கம் வந்து உலகமே சுற்ற ஆரம்பித்தது.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனிதனைத் தேடும் உலகம் !? (கவிதை) – இரஜகை நிலவன்

    நினைவுச் சின்னமாய் நிறைந்திருக்கும் புகைப்படங்களே (கவிதை) – இரஜகை நிலவன்