நெழிவுசுளிவில்லாத விரிந்த
நெஞ்சமிருக்குத் தெளிவாக….
நெசவு செய்திட எண்ணங்கள் இருக்கு
இங்கே அழகாக…
நெற்றிப் பொட்டு தொட்டிட
நன்னெறி யுண்டு விரிவாக…
நெறஞ்ச மனசிலே பணிவுண்டு
வெண்ணிலாவைப் பழிக்கும்
பனிப் பாறையாக…
முன்னின்று வழி நடத்திட
முரணில்லா வீறு கொண்ட
படையுண்டு முயற்சியின் முப்படையாக..
வீணர்களை வெட்டி வீழ்த்தி
வெற்றி கொள்ள
செருக்கு முண்டு வீரமான
மனசுக்குள்ளே…
பகலிரவாய் உழைத்திட எக்கணமும்
கனவுண்டு உயர்வுக்கு வழி தேடிட….
அலை கடல் ஓயாது
கரை தொடும் நுரையோடு
காற்றின் வழியே காவியம் வாசிப்பது போல
இரகசிய இதயத்தில் வெற்றியின் வேள்விகள்
உயர்ந்திருக்கும் இமயம் போல் அமர்ந்திருக்க…
அச்சமென்னும் எச்சத்தை உதறித் தள்ளி
உச்சத்தை எட்டி நிற்போம்!
சிதையா நெஞ்சத்தில்
சிங்கத்தின் குகையில் நிற்கும்
சீறிய வீரம் சுமந்து கொண்டு
சிதையாத நெஞ்சத்தால்
அச்சம் அறுப்போம்!
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings