கடலில் மூழ்கி முத்தினை
கொண்டு வா….
கண்களில் வீழ்ந்தே
கவிதைத் தூவானம் சுமந்தே வா…
கண்ணீரில் கரைந்தே கனவுகள்
தொலைக்கும் திறவு கோல் கொண்டு வா…
இதயத்தை துளைத்து
இனிய நந்தவனம் செல்ல
கவிதைச் சிறகுகள் அள்ளி வா…
தென்றல் காற்றில் கலந்தே
சுகமான சுகந்தங்கள்
விதைத்திடவே வா….
பள்ளியில் பயிலும் கல்வியுமிங்கே
பயன்பாடு நிலை வர திட்டங்களை
செதுக்கிட வா…
இதயம் கொஞ்சும் இளமைக் கனவுகளை
இமயத்தில் ஏற்றி இல்லாமை இல்லா
இந்தியா சமைக்க வா……
உனக்கான நாளை உன்னுள்ளே
உள்ளதெனும் நம்பிக்கை தீபம் எடு….
தீச்சுடர் தன்னில் எண்ணங்களைப்
புரட்டி புரட்சி மலர்கள் கொய்திடு…
கருமை பூசிய விழியில் அன்றி
கனன்று சுடர் விடும் செவ்விழியில்
நுழைந்து உன் விடியலைத் தேடு…
உயர்ந்து உய்யட்டும் வழிகள்
உனக்கு மட்டுமல்ல
உன் தேசத்திற்கும் நேசத்திற்கும்..
இனி விழியில் நுழைந்தவரும்
விடியலைத் தேடும்
பணியைத் தொடரட்டும்….
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings